நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நான் அவளின் பிரதிநிதி ...
உன்னை ஒருபோதும் நான்
மறக்கப் போவதில்லை
வெருக்கப் போவதுமில்லை

என் வாழ்வின்
திசையையே திருப்பியதும் நீ
திக்கற்று நிற்கவைத்ததும் நீ

உன்மூலம்தான்
அடுத்து கெடுக்கும் நரிதனத்தை
உள்ளம் அறிந்துகொண்டது!

உன்மூலம்தான்
பொய்மையின் கயமைத்தனம்
நெஞ்சதிற்கு புலப்பட்டது!

உன்மூலம்தான்
நல்லுள்ளத்திலும் தீயவை
ஒளிந்திருக்குமென்பது உணர்வுக்கெட்டியது!

உன்னால்தான்
உயிருடன் புதைவதெப்படியென்பது
உணர்த்தப்பட்டது!

உன்னால்தான்
ஊனமான உள்ளமும்
உருப்பெற கற்றுத்தரப்பட்டது!

அத்தனைக்கும் மேலாய்,,,,,

உன்னால்தான்
வழி தவறயிருந்த என் பயணம்
நேர்வழி பெற்றது

அப்படியிருக்க!
எப்படி மறப்பேன் உன்னை
உன் சொல்லை உன் செயலை!

உன்னை என்று மனம்
மறக்கிறதோ
அன்றே என் சுயம் செத்து மடியும்,

சுயமற்று வாழ்வது கோழையன்றோ
அஃதே மறவேன் மறவேன்
மரணத் தருவாயிலும் உனைமறவேன்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. Nenjaththu kumuralkal. Mina neryhiyay.valthukaneryhiyay.valthukal malika..

  பதிலளிநீக்கு
 2. அழுக்கு மனம் கொண்டவர்களால் நம்மனது வெளுத்தெடுக்கப்படுவது அருமையான சொல்லாடலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  (உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது