நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முடவனா? முயற்சிப்பவனா?
மின்மினிகளென்றும்
விண்மீன்களாகப் போவதில்லை
இருந்தபோதும்

இருளைக் கீறி சிறு
வெளிச்சம் தரமாலது வீழ்வதில்லை

எட்டு நாட்களென்றபோதும்
பட்டுபூச்சி
சிறகடிக்காமல் சாவதில்லை
தன்னிறப்பில் பிறர் சிறக்க
வழிசெய்யாமல் போவதில்லை

அறிவிலொன்று குறைந்தவைகளே
ஆகாசம் தொட எண்ணுகையில்
ஆறறிவு பெற்ற நாமக்கேன்
அசதி வெல்ல முயற்சியில்லை

அலைவதிலும் திரிவதிலும்
அர்த்தமில்லை-வீணாக
பொழுதை கழிப்பதிலும்-பிறருக்கு
பொதியாய் கிடப்பதிலும் பெருமையில்லை

தெருவினைகள் ஊர்வினைகள்
மனிதருக்கு அழகில்லை
பொறாமைகள் பெருந்தீவினைகள்
வாழ்வுக்கு சிறந்ததில்லை

திருவினைகள்
ஏற்படவே முயற்சிக்கனும்
தீவிர முயற்சிகள்தான்
ஏக திருப்பங்களையும் உண்டாக்கும்

சோர்வுகொண்டு வீழ்ந்து கிடந்தால்
சுறுசுறுப்பு எங்கே யிருந்துவரும்
முடங்கிக் கொண்டே
முத்தெடுக்க ஆசைக்கொண்டால்
மூச்சல்லவோ மூர்ச்சையாகும்

முயற்சிக்க முயற்சிக்க
முட்பாதைகளும் பழகிப்போகும்
நடக்க நடக்க
நாளடைவில் முள்ளும் கல்லும்
முருங்கைப் பூவாக மாறும்...


”கவியருவி”
அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. முயற்சி + பயிற்சி = என்றும் வெற்றி...

  அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான கவிதை
  கவியருவி என்பது மிகப் பொருத்தமான பட்டமே
  பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  சிறப்பான கருத்தாடல் மிக்க கவிதை வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அருமையான வாழ்த்துக்கள்.
  அக்கா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது