நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஊளையிடும் சோதனைகள்இறை சோதனையின்
இடிபாடுகளுக் கிடையில்
அகப்படாதோர் யாருமுண்டோ!

எலும்பும் சதையும் போர்த்திய
எந்தவோர் மனிதனையும்
விட்டு வைக்காமல்

அச்சமூட்டி எச்சரிக்கும்
இறை சோதனைக்கு
உட்படாதோர் யாருமுண்டோ?

பனிப் புயலென்றும்
சூராவளிக் காற்றென்றும்
கடலின் கொந்தளிப்பென்றும்
எரிமலை குமுறலென்றும்,

புதிது புதிதாய் பெயர்வைத்தபடி
சுற்றும் பூமியையே சூரையாடுதடி
இயற்கையும் இயற்கையெய்தபடி
இவைகள் இறைசோதனையின் சாகுபடி!

சாகவரங்கள் பெற்றோர்
இப்புவியில் உண்டோ
சாதனை பட்டியலில்
சாவற்றவறென்ற முத்திரையுமுண்டோ!

எழும்புப் பிண்டங்களை எச்சரிக்கவே
எதிர்பாரா விதமாய் நிலைகுலையும்படி
உச்சரித்து செல்கிறது
ஊளையிடும் சோதனைகள் போதனைகளாய்!

இருந்துமேனோ -இவ்வுலக
மாயையில் மவுண்டுகொண்டே
மனிதக் கூட்டங்கள்
உயிரிருந்தும் ஜடங்களாய்...

-----------------------------------

கவிதை வயல் - 27

  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

8 கருத்துகள்:

 1. சோதனைகள் போதனைகளாய்...

  அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களின் தொடர் வருகைக்கு நெஞ்சம் நெகிழ்கிறேன். மன்னிக்கவும் என்னால்தான் எங்கும்போகமுடியவில்லை, உடனுக்குடன் பதிலும் தரயிலவில்லை, இந்தியா வந்ததிலிருந்து அதற்காக வாய்ப்புகள் குறைந்தேபோச்சி, இனி அதுபோலில்லாமல் முடிந்தவரை முயற்சிக்கிறேன் பிறர் தளங்களுக்கு செல்ல.

   மிக்க நன்றி சகோ..

   நீக்கு
 2. வித்தியாசமான சிநதனை, நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா இன்ப அதர்ச்சி வாங்க தியா எப்படி இருக்கீங்க நலமா, மழைச்சாரல் சுகமா.

   தங்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் உண்டான வருகை மகிழ்வைத் தருகிறது

   மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி..

   நீக்கு
 3. வணக்கம்

  கவிதையில் கருத்தாடல் சிறப்பு.... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்,
   தங்களின் தொடர் வருகையும் கருத்தும்
   சகோதர நேசத்தை அதிகப்படுத்துகிறது.
   நெஞ்சார்ந்த நன்றிகள்..

   நீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது