நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துரோகியாகும் தோழமைகள்..

[யாரோ]

---------------------------------------------
காதலை
சேர்த்துவைப்பதாய் எண்ணி
கழிசடைக் காதலர்களை
கைகோத்துவிடும் தோழமைகள்

தாங்கள் செய்வது
சரியா தவறாவென
உணர்வதில்லை
சேருமின சொந்தங்களின்
உணர்வுகள் செத்துமடிவதையும்
அறிவதில்லை
புரிந்தும் பலர்
பொருட்படுத்துவதேயில்லை

தோழன் வாழ உதவுகிறான்
தோழன்-தன்
தோழனின் தாய் தந்தைகளுக்கு
துரோகமிழைத்து-அவர்களின்
பாசத்திற்க்கு பங்கமிழைவித்து

தோழமைக்கு
உதவுவது குற்றமில்லை
உதவினோரின் குடியின்
உயிர் குடிக்கும் உபத்திர
உதவிகள்  புரிவது சரியில்லை

காதலைசேர்ப்பது பாவமில்லை-அது
கழிவுக் காதலென அறிந்தும்
கூட்டுக் குடும்பத்தை
குலைக்க நினைப்பது
கொஞ்சமும் நியாயமில்லை

காதல்களில் பல
பொய்களின் பிறப்பிடம்-மன
நோய்களின் கூடாரம்
உயிர் உருஞ்சம் பிசாசினம்-அதற்கு
துணைபோகும் தோழமைகள்
துரோகங்களின் பங்காளியினம்..


 "கவியருவி
 அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

7 கருத்துகள்:

 1. இப்படியானவர்கள்தான் மலிக்கா., இப்பவெல்லாம் நிறைபேர் சுத்துறாங்க. என்னதான் இவர்களுக்கு ஆதாயமோ தெரியவில்லை,

  சாபெமென்றே வைத்துகொள்ளட்டடும் இப்படியானவர்களின் போக்கு நிச்சயம் அவர்களின் வாழ்க்கையிலும் வந்து இவர்களை சீரழிக்கட்டும்.

  இப்படி
  நொந்து நூலானவன்
  காசி கந்தப்பன்..

  பதிலளிநீக்கு
 2. செம செருப்படிங்க, காதலெல்லாம் இப்ப சுத்த பேத்தல்ங்க. எல்லாம் காசுக்காக சுத்தும் பேய்ங்க..

  ரொம்ப நாளைக்கப்புறம் இந்தபக்கம் வந்தேனுங்க. அசத்திக்கிட்டேத்தான் இருக்கீங்க வாழ்க வளமுடன் நலமுடன்..

  என்றும் நட்போடு
  உங்கள் நண்பன்
  மகேந்திர ராஜ்...

  பதிலளிநீக்கு
 3. இந்த மன நோய் தான் இன்றைக்கு அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது கொடுமை...

  பதிலளிநீக்கு
 4. kadavul nam mel vaiththa anbai unarnthu ellavatrikkum mela avara nesikkum pothu vara sugame thani athu nammala thooki vaikkum paarunga simmasanaththula.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது