நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கற்றதென்ன? பெற்றதென்ன?



கடந்த வருட நாட்கள்
கண்மூடி திறப்பதற்குள்
உருண்டோடி விட்டது
அதில் நீ
கற்றதென்ன?
பெற்றதென்ன?

இவ் வருடமேனும்
இதைச் செய்யனும்
அதைச் செய்யனுமென்ற
சபதத்தில் ஏதேனும்
செய்ததுண்டா?

உனக்கு நீயே
கேட்டுக்கொள்
எடுத்த சபதம்
கிடப்பில் கிடந்தால்
அடுத்த சபதத்தை
ஆரம்பித்து விடாதே!

வருடங்களோ
நாட்களோ
நாளிகைகளோ
நம் எண்ணங்களையும்
நம் செயல்களையும்
சீர்திருத்துமென்றால்
அந்நாளிலோ
அந்நாளிகையிலோ
அதனை செயல்படுத்தலாம்

ஆனால்
இதெல்லாம் செய்வதற்கு
ஒன்றுமில்லை

உன்மனதில் இருக்கு
உனக்கான உளி
அதனைக்கொண்டு
உன்னை செதுக்கு
மனதளவில்
தடுக்கவேண்டியதை தடுத்து
செயலளவில்
விலகவேண்டியதிலிருந்து விலகு
செய்யவேண்டியவைகளை
சிறப்புடன் செய்வதற்கு

உறுதியும் முயற்சியும்
உன்னிடமே இருக்கு
கூடவே
இறை நம்பிக்கையையும் பொருத்து
அதைக் கொண்டு
உன்னை நீயே
உருவாக்கு
உலகம் உன்னைக்கண்டு
வியாப்பிக்கும்
உன்னிடமும்
உளிகேட்டு யாசிக்கும்...


 கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                                                            இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது