நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்தேக"தீ"”தீ”க்குச்சி யில்லாமல்
”தீ”மூட்டி எரிக்கும்
தீபங்களைக் கூட
”தீ”பந்தங்களாய் மாற்றும்

தேள்கொடுக்கும் சொல்லால்
தினந்தோறும் விசமேற்றும்
கொடுஞ் செயல் புரிந்து
கருநாகத் தீண்டலுண்டாக்கும்

சந்தோஷ சாம்ராஜ்ஜியத்தை
சந்தி சிரிக்க வைக்கும்
சம்சார சந்தனத்தை
சாக்கடையிலிறக்கி மகிழும்

இனிவைகளை இழவுகளாக்கி
ஈனங்களை துணைக்கு அழைக்கும்
பூச்சியும் புழுவாகி
புண் நோண்டித்தின்று பிழைக்கும்

தேகம்
சந்தேக தீயில் வேகும்
சந்தோஷம்
சந்தேக தனலில் கருகும்

தன்
வீட்டையேக் கொளுத்தி
வெளிச்சம் கிடைத்ததென
வெற்றிக் களிப்பில் மிதக்கும்

வெற்றியின் கூலி -
தன் குடும்பமெரிந்த சாம்பலே
என்றுணரும் வேளையில்
சாம்பலும் காற்றில் கலக்கும்

சந்தேக நோயால்
தனக்கே பித்து பிடிக்கும்
மனமுரண்டுக்குமுண்டு
மருந்து

இல்லையே

இழிந்து வருத்தும் சந்தேகத்திற்கு
எதுவும்
வேண்டாம[டி]டா சந்தேகம்-அதில்
இழந்திடுவாய் உன்னையும்..

”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:


 1. தேகம்
  சந்தேக தீயில் வேகும்
  சந்தோஷம்
  சந்தேக தனலில் கருகும்//

  Super malikka, santhega noy sakadiththuvidum manathai.

  பதிலளிநீக்கு
 2. தோழிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மானாபிமானந்தன்னை மறைவாக்கும்...
  நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்...
  மனித மானாபிமானந்தன்னை மறைவாக்கும்...
  நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்...
  வீணான யோசனைக்கே இடமாக்கும்...
  வீணான யோசனைக்கே இடமாக்கும்...
  பல விபரீத செயல்களை விளைவாக்கும்...
  தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் ..
  சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்...
  தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
  சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்...
  தானே நம்பாதது சந்தேகம்...!

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது