நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
காதல் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மல்லியின் காதலுடன்..



என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் நீயும்!

நிறைகுடமாய் தளும்புகிறது நெஞ்சம்
நினைவோ உன் நிழல்சார்ந்து புகுந்துகொண்டது உனக்குள் தஞ்சம்!

தென்றலால் தலைகோதிக்கொள்ளும்
தென்னங் குருத்தோலையாய்
உன்னிருப்பை என்னுள் சாட்டினாய்..

நீயற்ற தருணத்தை
காற்றற்ற நிமிடங்களின்
அழுத்தத்தை உணர்த்தும்
வலியாக்கிக் காட்டினாய்..

காளைவால் கடிப்பட்டோடும் வேகத்தை நெஞ்சாங்கூடும்
கடும் வறட்சிகொண்ட பாலைதாகத்தை
தொண்டைக் குழியுமடைய

பாவையுள்ளத்தை பதம்பார்த்து
கனவுப்போருக்குள் கண்கத்திகொண்டு
பார்வை யுத்தம் புரிகிறாய்....

கள்ளிக்காட்டு
கருவேலங்குயிலின் ஏக்கமும்
கார்காலமேகத்தைத் தேடும்
கானமயிலின் எதிர்பார்ப்புமாய்

நித்தம் நித்தம் நெஞ்சோடு
நீங்காதிருக்கிறாயென் கண்ணோடு
என்றும் என் நினைவில் நீ என்னோடு
விட்டுத்தரமாட்டேன் எதற்கும் யாரோடும்...
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

போட்டிக்கவிதையில் வென்ற
#மல்லி
பெற்றாள் காதல் ராணி..பட்டம்

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காதலின் கதறல்!

 

கண்டபடி அலைவதெல்லாம்
என் பேரச் சொல்லி அலையுது
கழிசடைங்க கூட்டமெல்லாம்
என்பேரச் சொல்லி திரியுது

காமபோர்வை போத்திக்கிட்டு
கண்ணியமுன்னு பேசுது
காமமோகம் தீர்ந்த பின்னே
கலட்டிவிட்டு போகுது

நேற்றுப் பார்த்த பார்வையில
இன்று காதல் தொடங்குது
நெற்றி வியர்வை அடங்கியதும்
இனி அடுத்ததுன்னு நகருது

காதல் காதல் என்றுசொல்லி
களியாட்டம் புரியுது
அமுதமான எனது பெயரில்
அமில வீச்சும் நடக்குது

காதலுன்னு பெயர வச்சி
கள்ளக்காதலும் தொடருது
காதலோட சிறப்பையெல்லாம்
காலில்போட்டு மிதிக்குது

காலந்தொட்டு காலமாக
கடந்துவரும் என்னிடம்
கனிவு கொண்டு வாழ்ந்துவரும்
காதலரும் உண்டுங்கோ

காதல்கொண்டு கூடிவிட்டு
காசுயில்லையென்றது
கண்ணெதிரே தெரியும்
கானலாவதும் உண்டுங்கோ

மொத்ததில என்னை வைத்து
மோசடிகளே நிறைய நடக்குது
மொத்து மட்டும்
மொத்தமாக எனக்கு மட்டுமே கிடைக்குது

அன்பான காதலான என் பேரச் சொல்லியே
ஆகாதா செயல்புரியும் கேடுகெட்ட ஆட்களால்!
ஆதங்கம்கொண்டு ஆத்திரங்கொண்டு
ஆன்மாவுக்குள்ளே அழுகிறேன்


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காதலைத்தேடி...





கால்குளம்பில்
அடிக்கப்பட்ட ஆணிகளால்
காயம் ஏற்பட்டபோதும்
கணப் பொழுதேனும்  யோசிக்காது

என்
கனவுக்குதிரை
காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது

காதலனைத் தேடியல்ல
என்னிதயத்தை
களவாடிச்சென்ற
காதலைதேடி...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

பார்வையின் பதியல்

svr.pamini 



புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது

உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது

உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது

பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது

பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
 இமையசைக்காது இருவிழிகளை
 நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சஞ்சாரமிடும் நினைவுகள்.



வான நிலப்பரப்பில்
மின்னல் கீற்றில்
முடைந்த பாயொன்றை
மெல்ல விரித்து
மெளனப் புன்னகை பூத்தபடி
முகங் கவிழ்ந்து கிடக்கிறேன்

ஒவ்வொரு நட்சத்திரங்களும்
ஒளிக் கதிர்களை பாய்ச்சிட
உன்பார்வை தந்த ஸ்பரிசங்கள்
உள்நெஞ்சில் ஊஞ்சலாட
உள்ரங்க அறைகளெல்லாம்
ஒளிவெள்ளம் பரவக் காண்கிறேன்

வனாந்திரக் காட்டில்
வாகை சூடிய மேகங்கள்
வலம் வரும் வேளையில்
வண்ண மயிலொன்று
தோகை விரித்தாடும் நிலையில்
துள்ளியாடி மகிழ்கின்றேன்

மெளனங்கள் மேடையமைத்து
மொழிபெயர்த்து வாசிப்பதை
முற்றத்து நிலவாகி பார்த்து
மூங்கில் காதுகொண்டு கேட்டு
மெல்ல மெல்ல ரசித்து
மெய்மறந்து சிரிக்கின்றேன்

வளமில்லா வயல்கள்
வாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்

சஞ்சாரமிடும் நினைவுகளில்
சல்லடையாக்கி போகின்றேன்
சாரல்கொண்ட தூறலிலும்
சந்தோஷமாய் நனைகின்றேன்
சருகுகளின் சத்ததிலும்
சங்கீத ஒலி கேட்கின்றேன்

இவையத்தனையும் உணருகின்றேன்
இரவில் கனவுக்குள் உலவுகின்றேன்
இடையில் கற்பனைகள் புகுந்தாலும்
இதயக்கூட்டுக்குள் இன்புருகின்றேன்
எனக்குள் உன்னைக் காண்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாகிப் போகின்றேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தந்திடவா!...

                                                                                 கிளிக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

காரணத்தைத்தேடி..

ரைபுரண்டு ஓடும் எண்ணங்களையெல்லாம்
கடல் நீரில் கரைத்தபடி
கால்கடுக்க காத்திருப்பதின்
காரணங்கள் புரியவில்லை

ன்புகொண்ட
ஆன்மாவின் மனமுடுக்குகள்
அழுது புலம்புவதின்
அர்த்தங்கள் விளங்கவில்லை

நினைவுகளை சுமத்திச்சென்ற
நீ வருவாயென
நீரில் உலவியபடி
நெடுநேரம் காத்திருந்தபொழுது



ட்டிப்பார்த்த நிலவிடம்
ஏதேனும் தூதுசெய்தியுள்ளதாயென
ஏக்கத்தோடு கேட்டுப் புலம்பும்
புலம்பல்கள் புரியவில்லை

இப்படி
அர்த்தங்கள் புரியாத
அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதிலில்லாது

சைந்தாடும் கடலலையோடு
அசையாத கால்களிரண்டும்
அடிமனதில் நினைவுகளைமட்டும்
அசைபோட்டபடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அன்பே!..

 நீ கொடுத்த
அழகிய மலரை
ஆத்மார்த்தமாய் நுகர்ந்தேன்
அதில்
உன்னுயிரின் வாசம் வீசியது
அது
என்னுயிரில் கலந்தது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உன்னாலே! உன்னாலே!.

chez



யிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
அருகில் நீயில்லாததால்
ஆளவரமற்றிருப்பது போன்று
அடிமனதிலொரு உணர்வு

ன இறுக்கத்தை மண்டியிட வைத்து
மயிலிறகாய் மனதினை வருடும்
வித்தையைக்கற்ற உன்
வார்த்தைகளின் வலிமை

சொட்ட சொட்ட -உன்
நினைவுகளால் நனைந்தபோதும்
செப்படி வித்தையாய்
நீருக்குள்  நனையாமலே நான்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது