நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதலின் கதறல்!

 

கண்டபடி அலைவதெல்லாம்
என் பேரச் சொல்லி அலையுது
கழிசடைங்க கூட்டமெல்லாம்
என்பேரச் சொல்லி திரியுது

காமபோர்வை போத்திக்கிட்டு
கண்ணியமுன்னு பேசுது
காமமோகம் தீர்ந்த பின்னே
கலட்டிவிட்டு போகுது

நேற்றுப் பார்த்த பார்வையில
இன்று காதல் தொடங்குது
நெற்றி வியர்வை அடங்கியதும்
இனி அடுத்ததுன்னு நகருது

காதல் காதல் என்றுசொல்லி
களியாட்டம் புரியுது
அமுதமான எனது பெயரில்
அமில வீச்சும் நடக்குது

காதலுன்னு பெயர வச்சி
கள்ளக்காதலும் தொடருது
காதலோட சிறப்பையெல்லாம்
காலில்போட்டு மிதிக்குது

காலந்தொட்டு காலமாக
கடந்துவரும் என்னிடம்
கனிவு கொண்டு வாழ்ந்துவரும்
காதலரும் உண்டுங்கோ

காதல்கொண்டு கூடிவிட்டு
காசுயில்லையென்றது
கண்ணெதிரே தெரியும்
கானலாவதும் உண்டுங்கோ

மொத்ததில என்னை வைத்து
மோசடிகளே நிறைய நடக்குது
மொத்து மட்டும்
மொத்தமாக எனக்கு மட்டுமே கிடைக்குது

அன்பான காதலான என் பேரச் சொல்லியே
ஆகாதா செயல்புரியும் கேடுகெட்ட ஆட்களால்!
ஆதங்கம்கொண்டு ஆத்திரங்கொண்டு
ஆன்மாவுக்குள்ளே அழுகிறேன்


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. செம சூப்பர்ங்க. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!

  ரொம்ப சரியான வார்த்தைகள் நாட்டுப்புற ஸ்டைலில் அசத்துறீங்க மல்லி

  பதிலளிநீக்கு

 2. செம சூப்பர்ங்க. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!

  ரொம்ப சரியான வார்த்தைகள் நாட்டுப்புற ஸ்டைலில் அசத்துறீங்க மல்லி

  பதிலளிநீக்கு
 3. நல்ல நெத்தியடிக்கவிதை.

  காதல் பெயரில் நடகும் அட்டகாசங்கள் நிறையங்க.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது