நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மல்லியின் காதலுடன்..என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் நீயும்!

நிறைகுடமாய் தளும்புகிறது நெஞ்சம்
நினைவோ உன் நிழல்சார்ந்து புகுந்துகொண்டது உனக்குள் தஞ்சம்!

தென்றலால் தலைகோதிக்கொள்ளும்
தென்னங் குருத்தோலையாய்
உன்னிருப்பை என்னுள் சாட்டினாய்..

நீயற்ற தருணத்தை
காற்றற்ற நிமிடங்களின்
அழுத்தத்தை உணர்த்தும்
வலியாக்கிக் காட்டினாய்..

காளைவால் கடிப்பட்டோடும் வேகத்தை நெஞ்சாங்கூடும்
கடும் வறட்சிகொண்ட பாலைதாகத்தை
தொண்டைக் குழியுமடைய

பாவையுள்ளத்தை பதம்பார்த்து
கனவுப்போருக்குள் கண்கத்திகொண்டு
பார்வை யுத்தம் புரிகிறாய்....

கள்ளிக்காட்டு
கருவேலங்குயிலின் ஏக்கமும்
கார்காலமேகத்தைத் தேடும்
கானமயிலின் எதிர்பார்ப்புமாய்

நித்தம் நித்தம் நெஞ்சோடு
நீங்காதிருக்கிறாயென் கண்ணோடு
என்றும் என் நினைவில் நீ என்னோடு
விட்டுத்தரமாட்டேன் எதற்கும் யாரோடும்...
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

போட்டிக்கவிதையில் வென்ற
#மல்லி
பெற்றாள் காதல் ராணி..பட்டம்

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

 1. பாரூக் அண்ணன் மேன்லியாக இருக்கிறார். நீங்கள் என்றும் ஒன்றாய் உயிராய் வாழ துவாவுடன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஒரு பாட்டியின் காதல்...

  காதலுக்கு...
  வயதின் வரைமுறையும்,
  அன்பின் எல்லையும்
  கிடையாதல்லவா...

  கவிஞரே...?

  வாழ்த்துக்கள்...

  தங்களுக்கும்...
  தங்கள் ஆரூயிர் மச்சானுக்கும்....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது