நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காரணத்தைத்தேடி..

ரைபுரண்டு ஓடும் எண்ணங்களையெல்லாம்
கடல் நீரில் கரைத்தபடி
கால்கடுக்க காத்திருப்பதின்
காரணங்கள் புரியவில்லை

ன்புகொண்ட
ஆன்மாவின் மனமுடுக்குகள்
அழுது புலம்புவதின்
அர்த்தங்கள் விளங்கவில்லை

நினைவுகளை சுமத்திச்சென்ற
நீ வருவாயென
நீரில் உலவியபடி
நெடுநேரம் காத்திருந்தபொழுதுட்டிப்பார்த்த நிலவிடம்
ஏதேனும் தூதுசெய்தியுள்ளதாயென
ஏக்கத்தோடு கேட்டுப் புலம்பும்
புலம்பல்கள் புரியவில்லை

இப்படி
அர்த்தங்கள் புரியாத
அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதிலில்லாது

சைந்தாடும் கடலலையோடு
அசையாத கால்களிரண்டும்
அடிமனதில் நினைவுகளைமட்டும்
அசைபோட்டபடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

20 கருத்துகள்:

 1. பாலோவர்ஸ் வந்துவிட்டதா அப்பாடா மூச்ச்சு வந்ததா?
  மெயிலுக்கு பதில் போட்டுடுங்க

  பதிலளிநீக்கு
 2. டிசைன் கலர் அழகாக இருக்கு, கவிதையும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. டெம்பிளேட் மாற்றியதால். வாக்குப் பட்டைகள் காணாமற் போய்விட்டனவோ?

  பதிலளிநீக்கு
 4. காதலில் பதிலில்லாத நினைவுகளை அழகான கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. //அர்த்தங்கள் புரியாத
  அடுக்கடுக்கான
  கேள்விகளுக்கு பதிலில்லாது...////

  புரியாத புதிர்தான் வாழ்க்கை...!
  புரிந்துவிட்டால்
  அப்புறம் நீங்களெல்லாம் "படைப்பவர்" ஆகிவிடுவீரே...!

  பதிலளிநீக்கு
 6. நல்ல நளினமான கவிதை..வாழ்த்துக்கள் கவியரசியாரே

  பதிலளிநீக்கு
 7. //அசைந்தாடும் கடலலையோடு
  அசையாத கால்களிரண்டும்
  அடிமனதில் நினைவுகளைமட்டும்
  அசைபோட்டபடி..//
  நான் ரசித்த வரிகள். ந்ன்றாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 8. // Jaleela Kamal கூறியது...

  பாலோவர்ஸ் வந்துவிட்டதா அப்பாடா மூச்ச்சு வந்ததா?
  மெயிலுக்கு பதில் போட்டுடுங்க//

  ஆமாக்கா பலநாள்போராட்டத்திற்கப்பும் நேற்றுதான் எடுதுவைத்தேன். அப்பாடா. அதுவும் டெம்பிளேட் மாற்றியதுதான் வந்தது..

  //Jaleela Kamal கூறியது...

  டிசைன் கலர் அழகாக இருக்கு, கவிதையும் சூப்பர்.//

  நிஜமாலுமா. எல்லாம் நம்மளோடதுதான் பேக்ரவுண்ட்கூட நானாக டிசைன் செய்தேன்க்கா. .

  ரொம்ப நன்றிக்கா.

  மெயில்போட்டுவிட்டேன் பாருங்க..

  பதிலளிநீக்கு
 9. // நிரூபன் கூறியது...

  டெம்பிளேட் மாற்றியதால். வாக்குப் பட்டைகள் காணாமற் போய்விட்டனவோ?//
  ஆமாம் நிரூபன். இதோ இபோது எடுதுவைதுவிட்டேன். ரொம்ப சிரமம்பா. இந்த பிளாக்கோட..

  // நிரூபன் கூறியது...

  காதலில் பதிலில்லாத நினைவுகளை அழகான கவிதையாக வடித்திருக்கிறீர்கள்./

  ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி நிரூபன்..

  பதிலளிநீக்கு
 10. // Rathnavel கூறியது...

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.//

  வாங்க வாங்க . தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 11. //காஞ்சி முரளி கூறியது...

  //அர்த்தங்கள் புரியாத
  அடுக்கடுக்கான
  கேள்விகளுக்கு பதிலில்லாது...////

  புரியாத புதிர்தான் வாழ்க்கை...!
  புரிந்துவிட்டால்
  அப்புறம் நீங்களெல்லாம் "படைப்பவர்" ஆகிவிடுவீரே...!//

  அதுவும் நிசந்தேன்.
  எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்திடம் நான் வாதாடயியலுமா:{{{{{{{{{

  பதிலளிநீக்கு
 12. ///Chitra கூறியது...

  New template is beautiful! :-)//

  ஹை அப்படியா சந்தோஷத்தில் இல்லாத காலரை தூக்கிவிட்டுகிட்டாங்களாம் மல்லி..

  மிக்க நன்றி சித்ரா க்கா..

  பதிலளிநீக்கு
 13. //Yasir கூறியது...

  நல்ல நளினமான கவிதை..வாழ்த்துக்கள் கவியரசியாரே//

  வாங்க காக்கா எங்கே ஆளையே காணோம் ஊருக்கு போயிட்டீங்களோன்னு நெனச்சேன்..

  மிக்க நன்றி காக்கா..

  பதிலளிநீக்கு
 14. // FOOD கூறியது...

  //அசைந்தாடும் கடலலையோடு
  அசையாத கால்களிரண்டும்
  அடிமனதில் நினைவுகளைமட்டும்
  அசைபோட்டபடி..//
  நான் ரசித்த வரிகள். ந்ன்றாய் இருக்கின்றன

  அருமைமிகு கவிதைகள்.//


  ரசித்து படித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி..மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. கவலைகூட
  கலையாய் வாய்ப்பது
  கவிஞர்களுக்கு மட்டும்தான்.

  எண்ண அலைகளை
  என்ன செய்துவிடும்
  சின்ன அலைகள்...
  கால் கழுவி
  காலடியில் நழுவி
  கரைந்து செல்வதைத்தவிர?

  வாழ்த்துகள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 16. உதயம் முதல் அந்தி சாயும் பொழுதுவரை காத்திருந்து, காத்திருந்து
  நிலவில் வழியாவது நம் நம்பிக்கை ஒளிகிடைக்குமா? என இருளில் துருவித்துருவித்தேடியும்
  ஒரு பதிலும் வராமல் இன்னும்

  அசைந்தாடும் கடலலையோடு
  அசையாத கால்களிரண்டும்
  அடிமனதில் நினைவுகளைமட்டும்
  அசைபோட்டபடி.. காத்திருபப்பது....
  கொஞ்சம் உள்ள நம்பிக்கையும் ,அவன் மேல் உள்ள ஆலாதியான காதலுமே!
  (ஒரு முடிவு வரும் என ஏங்கி காத்திருப்பு எல்லா காதலர் இடத்திலும் நடப்பதுவே)!
  நெஞ்சை அள்ளும் அழகிய வரிகளின் வசிகரிப்பில் முழ்கி நல்ல கவி முத்தாய் நான் கண்டேன் இதை . வாழ்துக்கள் கவி அரசியே!

  பதிலளிநீக்கு
 17. அருமையான கவி வரிகள் பாராட்டுக்கள் மல்லிக்கா அக்கா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது