நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..
முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

38 கருத்துகள்:

 1. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  வலையுலக கவியுலகில் மட்டுமல்ல...!

  தமிழ்க் கவியுலகில்...!

  நீடுபுகழ் பெற்றிட...
  என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப சந்தோஷமாக இருக்கு மலிக்கா.இது போல் என்றென்றும் முதலிடத்தில் இருக்க அக்காவின் வாழ்த்துக்களுடன்,மனபூர்வமான துஆக்களும்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள்.2ம் இடம்,3ம் இடம் பற்றி சொல்லி உங்கள் பெருந்தன்மையை உயர்த்திக்கொண்டீர்கள்

  பதிலளிநீக்கு
 4. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  இன்னும் பல பரிசையும். முதலிடமும் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 5. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!மல்லி..

  சந்தோஷம் மிக ஆனந்தமாக இருக்குமா. இன்னுமின்னும் பல வெற்றிகளைக்குவிக்க இந்த நட்பின் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு


 6. கவிதையே ! இன்னொரு கவிதையை காதலிக்கறதே !!!!!!!!!!!

  வாவ்! சூப்பர்! ஹ்ம் நேக்குதான் காதல் வல்லை! நீங்களாவது காதலிக்கறேளே!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 8. கனவில் கருகொண்டு...
  நினைவில் நிலைகொண்டு....
  நெஞ்சத்தில்
  நீங்காயிடங்கொண்டு... எனை
  நிலைகுலையச் செய்யும்
  கவிதையே.... உன்னைக்
  காதலிக்கிறேன்...!


  ....superb!

  பதிலளிநீக்கு
 9. வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ரொம்ப சந்தோஷமா இருக்கு மலிக்கா! அப்படியே ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிடுங்க. செலவெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்ன... நீங்க டிக்கெட் மட்டும் அனுப்பினா போதும் :-)

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 10. நீங்க கவிதையை பதிவு செய்த உடனேயே சொன்னேன்..முதல் பரிசு உங்களுக்குதான்னு.. அதே மாதிரி கிடைத்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி....!! .

  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. !!

  வரும் வார உங்க பிறந்த நாள் கிஃப்டாக இந்த பரிசை நினைத்துக் கொள்ளவும் ...!!
  :-)

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் என்றும் கவிமழை பொழிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் மலிக்கா.
  மிக்க மகிழ்ச்சியா இருக்கு.என்ன மலிக்கா நம்ம பக்கம் வருவதே இல்லை. இந்த் விஜியை மறந்திட்டிங்களா?

  பதிலளிநீக்கு
 13. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள் மலிக்கா, உங்களோடு நானும் மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. asiya omar கூறியது...
  congrats malikka.
  நன்றி ஆசியாக்கா..

  காஞ்சி முரளி கூறியது...
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  வலையுலக கவியுலகில் மட்டுமல்ல...!

  தமிழ்க் கவியுலகில்...!

  நீடுபுகழ் பெற்றிட...
  என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...


  இதயமார்ந்த நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 17. //ஸாதிகா கூறியது...
  ரொம்ப சந்தோஷமாக இருக்கு மலிக்கா.இது போல் என்றென்றும் முதலிடத்தில் இருக்க அக்காவின் வாழ்த்துக்களுடன்,மனபூர்வமான துஆக்களும்.
  //

  எனதன்பு அக்காவின் வாழ்த்துக்களுக்கும் துஆக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸாதிக்காக்கா..

  /அஹமது இர்ஷாத் கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா.

  மிக்க நன்றி இர்ஷாத்

  பதிலளிநீக்கு
 18. சி.பி.செந்தில்குமார் கூறியது...
  வாழ்த்துக்கள்.2ம் இடம்,3ம் இடம் பற்றி சொல்லி உங்கள் பெருந்தன்மையை உயர்த்திக்கொண்டீர்கள்.//

  ரொம்ப சந்தோஷம் செந்தில் மிக்க நன்றி..

  ஆனந்தி அருள் கூறியது...
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  இன்னும் பல பரிசையும். முதலிடமும் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!//

  சந்தோஷம் தாங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக நன்றி ஆனந்தி..  //ஜெயதேவ் கூறியது...
  எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!மல்லி..

  சந்தோஷம் மிக ஆனந்தமாக இருக்குமா. இன்னுமின்னும் பல வெற்றிகளைக்குவிக்க இந்த நட்பின் வாழ்த்துக்கள்..//

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்..

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள், வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. அக்டோபர், 2010 2:14 pm

  mohana ravi கூறியது...


  கவிதையே ! இன்னொரு கவிதையை காதலிக்கறதே !!!!!!!!!!!

  வாவ்! சூப்பர்! ஹ்ம் நேக்குதான் காதல் வல்லை! நீங்களாவது காதலிக்கறேளே!//

  வாங்க மாமி. வாங்க..
  ஒன்னும் கவைப்படாதேள் காதலிக்க நான் சொல்லிதருகிறேன். அச்சோ மாமி அடிக்கவந்துடாதேள். கவிதையைச் சொன்னேன்..  எஸ்.கே கூறியது...
  சிறப்பாக உள்ளது! வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
  எஸ் கே..

  பதிலளிநீக்கு
 21. Chitra கூறியது...
  கனவில் கருகொண்டு...
  நினைவில் நிலைகொண்டு....
  நெஞ்சத்தில்
  நீங்காயிடங்கொண்டு... எனை
  நிலைகுலையச் செய்யும்
  கவிதையே.... உன்னைக்
  காதலிக்கிறேன்...!


  ....superb!//
  மிக்க நன்றி சித்ரா [அக்காமேடம்] சும்மா லோலாயி....


  //அமைதிச்சாரல் கூறியது...
  வாழ்த்துக்கள் மல்லி...//
  மிக்க நன்றி சாரல்..

  //amuthan.. கூறியது...
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள் மலிக்கா.//


  மிக்க நன்றி அமுதன்.

  பதிலளிநீக்கு
 22. அஸ்மா கூறியது...
  வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ரொம்ப சந்தோஷமா இருக்கு மலிக்கா! அப்படியே ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிடுங்க. செலவெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்ன... நீங்க டிக்கெட் மட்டும் அனுப்பினா போதும் :-).//

  ஆகா எப்புடியெல்லாம் பிளான்பண்ணுராங்கப்பூ. ஓகே ஓகே. டிக்கட்மட்டுதானே தோழி அனுப்பிச்சி 3 நாளாச்சி இன்னும் நீங்க வந்துசேரலை. உங்களுக்காக செய்த ட்ரீடெல்லாம் காத்துக்கிடக்கு. எப்போ வருவீங்கன்னு..

  //வாழ்த்துக்கள் தோழி!//

  வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..  //வினோ கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா...//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வினோ..

  பதிலளிநீக்கு
 23. இவ்விடம்
  கவிதை வாசிக்கும் இடமா
  கவிஞர்கள் வசிக்கும் இடமா?

  வென்ற கவிதையை வாசித்தேன்.
  பாராட்டாமல் போனால் திருட்டு வி சி டியில் படம் பார்த்ததுபோன்ற குற்ற உணர்வு கொல்லும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள் கவியரசி-மல்லிகா.......

  பதிலளிநீக்கு
 25. முதல் பரிசெனும் வாய்ப்பு
  கிட்டியதில் இல்லை வியப்பு
  இது வாடிக்கைதானே மல்லிப்பூவிற்கு!!

  (எப்பூடி, நம்ம கவித(ன்னு சொல்லிக்கிறேன், ப்ளீஸ்!)) :-))))

  பதிலளிநீக்கு
 26. வென்ற கவிதை
  நன்றா யிருந்ததென
  சொல்ல வந்த இடத்தில்
  சொக்கிப் போனேன்.

  மேய்ச்சல் நிலத்தில்
  பசுவென...
  நல்ல கவிதை வேட்டை!

  கவிதை நேசர்கள்
  வசித்து வாசிக்குமளவுக்கு
  செழுமையாய் இருக்கு நீரோடை.

  வாழ்த்துக்கள்
  -சபீர்

  பதிலளிநீக்கு
 27. ஜெய்லானி கூறியது...
  நீங்க கவிதையை பதிவு செய்த உடனேயே சொன்னேன்..முதல் பரிசு உங்களுக்குதான்னு.. அதே மாதிரி கிடைத்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி....!! .

  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. !!//

  ஆமாம் அண்ணாத்தே! பின்னே இருக்காதா அண்ணாத்தேயின் வாழ்த்தாச்சே.
  அண்ணாத்தேயின் வாழ்த்துக்கும் கருத்துகும் மிக்க மகிழ்ச்சி
  கலந்த நன்றி..

  வரும் வார உங்க பிறந்த நாள் கிஃப்டாக இந்த பரிசை நினைத்துக் கொள்ளவும் ...!!//

  அண்ணாத்தே சந்தடிசாக்கில் பப்ளிசிட்டி பண்ணீயாச்சா.ஹோ ஹோ.
  :-)  //நிலாமதி கூறியது...
  வாழ்த்துக்கள் என்றும் கவிமழை பொழிய வேண்டும்.
  //

  மிகுந்த மகிழ்ச்சி நிலா தங்களின் கருத்துக்குளுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 28. Kousalya கூறியது...
  கவிதையே வாழ்த்துக்கள்...!!//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கெளசல்யா..  //Vijiskitchen கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா.
  மிக்க மகிழ்ச்சியா இருக்கு.என்ன மலிக்கா நம்ம பக்கம் வருவதே இல்லை. இந்த் விஜியை மறந்திட்டிங்களா?//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி விஜி
  என்ன விஜி இப்படி கேட்டுபுட்டீங்க. உங்களைபோய் மறப்பேனா. கொஞ்சம் வேலைகள் அதான் அடிக்கடி வந்து கருத்துக்கள் வந்திபோடமுடிவத்தில்லை இன்னு 2 வாரத்துக்கு அப்படிதானிருக்கும்போல் விஜி இருந்தாலும் இடையிடையே வந்துபோகிறேன் .
  நிறைய பேர்கேட்கிறாங்க விஜி உங்களைபோல். எவ்வளவு சந்தோஷமாக இருக்குதெரியுமா. என்னைத்தேடும் அன்பு நெஞ்சங்களை நினைத்து.

  மிக நன்றி விஜி விரைவில் வருகிறேன்..

  /
  // Eeva கூறியது...
  நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம்.//

  மிக்க நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 29. சுல்தான் கூறியது...
  வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா

  15 அக்டோபர், 2010 7:23 am

  சுல்தான் கூறியது...
  வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதர் அவர்களே..  தமிழ்க் காதலன். கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா, உங்களோடு நானும் மகிழ்கிறேன்.//

  வாழ்த்துக்களுக்கும் என்மகிழ்வோடு பங்கொண்டமைக்கு மிக நன்றி தமிழே..

  பதிலளிநீக்கு
 30. Jaleela Kamal கூறியது...
  வாழ்த்துக்கள், வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜலீக்கா..

  பதிலளிநீக்கு
 31. // முதல் பரிசெனும் வாய்ப்பு
  கிட்டியதில் இல்லை வியப்பு
  இது வாடிக்கைதானே மல்லிப்பூவிற்கு!!

  (எப்பூடி, நம்ம கவித(ன்னு சொல்லிக்கிறேன், ப்ளீஸ்!)) :-))))//

  மல்லிகாக்கா உங்கள் கவிதையும், மேற்படி கவிதையும் 'ப்ளீஸ்'ன்னு
  'கெஞ்சுரதால' நல்லா இருக்குதுங்க. ஹி ..ஹி .. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது