நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலுவிழந்த எந்திரங்கள்!..

ஆளவரமில்லா
அடிமரத்தில் அமர்ந்தபடி
ஆண்ட நினைவுகளை
அடிபிரளாமல்
அசைபோடக் கற்றுக் கொடுத்த
சந்ததிகளை நினைத்துக் கொண்டு
சிதைந்துபோன நாட்களை
சிலிர்ப்போடு
சீண்டிப் பார்க்கும் உள்ளங்கள்

ஆலமர விழுதைப் பார்த்து
அதிசயிக்க முடியவில்லை
அதேபோல் தானிருந்தும்
அதிலிருந்து உதிரும்
இலைகளைபோல்
இன்றைய நிலையானதே யென
இடித்துரைத்த மனச் சோகங்கள்

எண்ணிலடங்கா துன்பச் சுமைகளின்
எல்லைகளைக் கடந்து
இயன்றைவரை
இயந்திரங்கள் போலிருந்து
இளைத்து உழைத்தவர்களையின்று
ஏறெடுத்து பார்ப்பதற்கோ
ஏதென்று கேட்பதற்கோ
இருந்தும் ஆளில்லாத
இன்னல்கள் கொல்லும் ஏக்கங்கள்

ஆட்டம் முடிந்ததும்
கூட்டம் கலைந்ததால்
அதிரும் மனதுக்குள்
ஆயிரம் வருத்தங்கள்
அடுத்தடுத்து சிந்தனைகளென
ஆட்க்கொள்ளும் மனக்கவலைகள்

சுறுங்கிய தோல்களும்
சுறுக்கமில்லா நினைவுகளும்
சுமைகளாய் கூடிநின்று
வெளிறிக் கிடந்த
வெற்றுப் பார்வையில்
வெளிச்சமிடும் வேதனைகள்

தழைக்க வைக்கும் வாழைமரம்
தன்னுயிரை தந்துவிட்டு
தானறுந்து கிடப்பதுபோல்
தன்னந் தனிமையின் தாக்கங்களால்
தனலில் வேகும் தவிப்புகள்

பச்சை புல்வெளிக்கெல்லாம்
பனித்துளிகளின் பிரவேசங்கள்
பாவம் இவர்களுக்கோ
பாடுபடுத்தும் முதுமையின்
ஆசுவாசுவாசங்கள்

வசந்தம் தொலைந்து வலுவுமிழந்து
வயது கடந்து வழுக்கை வந்து
வாழ்க்கையை கழி[ளி]த்து
வாஞ்சை தேடும் மனங்கள்-இனி
வரபோவதையும் வரவேற்க
விதிவிட்ட வழியென
விரக்தியோடு காத்திருக்கும்
வலுவிழந்த எந்திரங்கள்..

டிஸ்கி// என்னுடைய இக்கவிதை  திண்ணை.காம் மில் வெளியாகியுள்ளது..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

33 கருத்துகள்:

 1. பச்சை புல்வெளிக்கெல்லாம்
  பனித்துளிகளின் பிரவேசங்கள்]]

  அழகான உணர்வுகள்

  அடுத்த வரிகளோ :(

  பதிலளிநீக்கு
 2. நட்புடன் ஜமால் கூறியது...
  பச்சை புல்வெளிக்கெல்லாம்
  பனித்துளிகளின் பிரவேசங்கள்]]

  அழகான உணர்வுகள்

  அடுத்த வரிகளோ :(//

  என்ன செய்ய காக்கா. உண்மைகள் பலநேரம் விசும்ப வைக்கிறது

  பதிலளிநீக்கு
 3. திண்ணையில் வெளி வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்!

  இந்த கவிதையில் இருக்கும் சுடும் உண்மைகள், தவிர்க்க முடியாத எதார்த்தங்கள்...... அப்பப்பா.....எல்லாமே!

  பதிலளிநீக்கு
 4. திண்ணையில் படித்தேன் வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 5. நல்ல... அருமையான கவிதை...!

  வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 6. //தழைக்க வைக்கும் வாழைமரம்
  தன்னுயிரை தந்துவிட்டு
  தானறுந்து கிடப்பதுபோல்
  தன்னந் தனிமையின் தாக்கங்களால்
  தனலில் வேகும் தவிப்புகள்//

  பிள்ளை வரம் கேட்டு கோயில் கோயிலாக ஏறி இறங்கும் எந்த பெண்ணும்,பிரசவத்தின் போது தம் சிசுவை தழைக்க வைத்து, தன்னுயிரை நீக்க நேரிட்டால் அந்த சிசு வம்சமே வேணாம் என்பாள்.
  ஆனால் இந்த வாழை மரமோ பெண்ணை விட ஒரு படிமேலே.

  வாழ்த்துக்கள் மலிக்கா.

  அய்யய்யோ .ஊருக்கு போயிட்டு வந்து பழசெல்லாம் மறந்து போச்சே ...
  சாரி அக்காள்.மெமோரி கார்டை போட்டுபார்த்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. உணர்வுள்ள கவிதை.
  மிக அருமையாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. தன்னந் தனிமையின் தாக்கங்களால்
  தனலில் வேகும் தவிப்புகள்

  பச்சை புல்வெளிக்கெல்லாம்
  பனித்துளிகளின் பிரவேசங்கள்//

  contrasting truth. appreciative.

  பதிலளிநீக்கு
 9. ரெம்ப‌ அழ‌கா வ‌ந்திருக்குங்க‌..

  திண்னையில் வெளிவ‌ந்த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான கவிதை மலிக்கா. திண்ணையிலேயே வாசித்து விட்டேன்:)! வாழ்த்துக்கள். தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்க்கையை கழி[ளி]த்து
  வாஞ்சை தேடும் மனங்கள்//

  vaarthaigalin vilayattu aruputham.

  பதிலளிநீக்கு
 12. இப்போதே வயதாகி போன மாதிரி ஆகிவிட்டது சகோ உங்கள் கவிதையை படித்த பின்பு

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்

  நான் உங்கள் பதிவுக்கு புதியவன்
  முதியோர்களின் வாழ்வு பற்றிய அறிய ஒரு கவிதை தொகுப்பு அருமையாக இருக்கிறது சகோதரி

  http://marumlogam.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. ஜெயந்தி மார்க்கண்டேயன்19 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 11:40

  என்னை வளர்த்த அப்பாவும் இப்படிதான் பாடாய்பட்டு ஓடாய் தேய்ந்திருக்கிறார். பெற்றமக்கள் திறும்பிபார்க்க கூசுகிறார்கள்.

  இந்த 5 வர்டமாக நான் அவரோடுஇருந்து சேவைசெய்துவருகிறேன். நல்ல மனிதர்..

  பதிலளிநீக்கு
 15. என் தளத்திற்க்கு வருகை தந்திருக்கும் புதிய அறிமுகங்களுக்கும். அவர்கள் எனகவிதைகளுக்கு தந்த கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல பல தொடர்ந்து வாருங்கள் ஊக்கம் என்ற உற்சாகத்தை தாருங்கள்.

  அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 16. என் தளத்துக்கு தொடர்ந்து வந்து நல்லாதரவு தந்துகொண்டிருக்கும் அன்பார்ந்த நெஞ்சகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல்லாயிரம்..

  பதிலளிநீக்கு
 17. ஆகா அய்யூப் வந்துட்டீங்களா வீட்டில் அனைவரும் நலமா நல்ல ஊர் சுற்றினீங்களா ஆடுமாடு கோழி குருவி எல்லாம் நல்லயிருக்கா.

  முக்கியமாக நம்ம மண்வாசம் எப்படியிருக்கு..

  பதிலளிநீக்கு
 18. நான் ரசித்த வரிகள் ...அருமை மல்லிகா...வாழ்த்துக்கள் //தழைக்க வைக்கும் வாழைமரம்
  தன்னுயிரை தந்துவிட்டு
  தானறுந்து கிடப்பதுபோல்
  தன்னந் தனிமையின் தாக்கங்களால்
  தனலில் வேகும் தவிப்புகள்//

  பதிலளிநீக்கு
 19. " சுறுங்கிய தோல்களும்
  சுறுக்கமில்லா நினைவுகளும்
  சுமைகளாய் கூடிநின்று
  வெளிறிக் கிடந்த
  வெற்றுப் பார்வையில்
  வெளிச்சமிடும் வேதனைகள் "

  நெஞ்சை பிசைந்த வரிகள்.
  கவிதை அருமை !

  பதிலளிநீக்கு
 20. //ஆகா அய்யூப் வந்துட்டீங்களா வீட்டில் அனைவரும் நலமா நல்ல ஊர் சுற்றினீங்களா ஆடுமாடு கோழி குருவி எல்லாம் நல்லயிருக்கா.

  முக்கியமாக நம்ம மண்வாசம் எப்படியிருக்கு.//  அனைவரும் நலம் நான் ஊரில் இருக்கும் வரை.

  ஊரே சுற்றவில்லை சென்னை சிட்டியைத்தான் சுத்தினேன் பத்துநாளா.

  நான் இங்கு வந்து விட்டதால் அதுகல்லாம்(ஆடு,மாடுகள்) நிம்மதியா இருக்கு.

  பசுமை நிறைந்த மண் அன்னையை பாவிகள் பிளாட்டு போட்டு விக்கிறார்கள்.

  கவிதைகள் தூள்பரக்குது எழுதிக் கொண்டே இருங்கள் ஆமா நீங்க வேலைக்கு எதுவும் போகிறீர்களா இல்லை வீட்டிலியே பொழுதை போக்கிரீர்களா அக்காள் ?ஏன் கேக்குறேன் என்றால், மூன்று இணைய தளத்தை வைத்துக் கொண்டு சாதிக்கிறிர்களே அதான் கேட்டேன்.

  மச்சான்கிட்டே சொல்லி முர்த்தபா போன்ற உணவுகளை போடச் சொல்லுங்கள் மலைசியாவில் அதை சாப்பிட்டதும் இன்னும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கணும் போலத் தோனுது.

  பதிலளிநீக்கு
 21. அருமையான கவிதை...!

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 22. மிக நன்றி யாசிர்காக்கா.என் பெயர் மலிக்கா காக்கா..

  மிக நன்றி .abul bazar/அபுல் பசர்

  மிக நன்றி .Mohamed Ayoub K ..

  மிக நன்றி ஜெய்லானி அண்ணாத்தே

  மிக நன்றி தியாவின் பேனா

  மிக நன்றி சே.குமார்

  பதிலளிநீக்கு
 23. //கவிதைகள் தூள்பரக்குது எழுதிக் கொண்டே இருங்கள் ஆமா நீங்க வேலைக்கு எதுவும் போகிறீர்களா இல்லை வீட்டிலியே பொழுதை போக்கிரீர்களா அக்காள் ?ஏன் கேக்குறேன் என்றால், மூன்று இணைய தளத்தை வைத்துக் கொண்டு சாதிக்கிறிர்களே அதான் கேட்டேன்.//

  வேலைகெல்லாம் போறதில்லை அய்யூப். இருக்கும் வேலைகளைபார்க்கவே நேரமில்லை இதில் இதுவேறயா. நம்ம மச்சான் சம்பாதிக்கிறது நமக்கும் நம்ம குழந்தைகளுக்கும் போதுமுங்க.

  அதிலேயே இறைவனின் அருள் அளவில்லமல் தருகிறான் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக்கிகொள்வோம் அதுபோதும்.

  வேலைகள் முடிந்த நேரம்
  இறைவனை வணங்கிய நேரம்
  போக மீதமிருக்கும்நேரங்களில்தான் இப்படி கவிதை, கட்டுரை, கலையென. சும்மாச்சிக்கும் வலம்வருகிறேன் அவ்வளவுதான்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது