நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”வாய்ப்பும் வியப்பும்”

வியப்பு வியப்பு

விண்கண்டு,
விண்ணில் உலவும் வினோதங்கள் கண்டு
மண்கண்டு,
மண்ணில் உலவும் மனிதர்கள் கண்டு
வான்கண்டு,
வான்தூவும் மழைகண்டு
வனம்கண்டு,
வனத்திலும் இனம்கண்டு

பூக்கும் பூமிகண்டு,
பெண்மையும் பூப்பது கண்டு
பூவைவண்டு உண்பது கண்டு
பூவைக்குள் பூகம்பம் வெடிப்பது கண்டு

உச்சியிலெழும் அருவிகண்டு
உருண்டுவிழும் அழகுகண்டு
உடலில் ஓடும் உயிர்கண்டு
ஊடுருவிப்பாயும் குருதிகண்டு
ஊர்ந்துசெல்லும் உயிரினம் கண்டு

மூச்சிகாற்று சுழல்வது கண்டு,
மூங்கிலில் இசை வருவதுகண்டு
முற்றத்தில் குருவி வந்தமர்ந்து,
முனங்கும் பாடல் கண்டு

ஆணும் பெண்ணும் இணைவதுகண்டு,
அதிலுருவாகும் உயிர்கள் கண்டு
அழிந்துவிடும் எனத்தெரிந்தும்,
ஆட்டம்போடும் உடல்கள் கண்டு

காகிதம் மனிதனை ஆள்வது கண்டு,
கானல் தண்ணீராய் தெரிவது கண்டு
காதல் காதல் காதலென்று,
கலங்கித் தவிக்கும் மனங்கள் கண்டு

பாசங்கள் மறந்து பணத்தின் பின்னே
பேயாய் அலையும் மனிதர்கள் கண்டு
பொய்முகம் புனைந்து வாழ்வது கண்டு,
பண்புகள் நாளும் குறைவதுகண்டு
பிறப்பும் இறப்பும் கண்டு,
பயப்படாமல் பாவம் செய்வது கண்டு

இறுதியாய்

என்வீட்டுக்கு கண்ணாடியில்
என்னைக்கண்டு, என்விழிகள் கண்டு
எனக்குள் எழுந்தடங்கும்
எண்ணங்கள் பலகண்டு

வியப்பு வியப்பு
இருவிழியும் மனவிழியும்
விரியும் வியப்பு
வியப்பால் வியக்க வைத்து
வித விதமானவைகளையும்
வினோதங்களையும்,
வியப்போடு அறியத் தந்த - ஏக

இறைவனை
வணங்க கிடைத்திருக்கும்
இந்த அரிய வாய்ப்பு
இவ்வுலகில் எனக்குக் கிடைத்த
இன்றியமையா இப்பிறப்பு....

டிஸ்கி// இது ஒரு கவிதைபோட்டி, இந்த தலைப்பை தந்து எழுதச்சொன்னார்கள் எழுதிவிட்டேன்.

நம்ம கிறுக்கள் பாசையில். வரும் 24 நாளாந்தேதி முடிவாம்,
ஏதாவது தேறுமா? நீங்களும் சொல்லுங்களேன் எப்டிக்கீதுன்னு.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

30 கருத்துகள்:

  1. சூப்பர் கவிதை மலிக்கா..நிச்சயம் வெல்லும்....மனதை கொல்லும் கண்கள் (பார்வை).....(வொய்ஃப்-ட கம்யூட்டர் ரிப்பேர் அயிடிச்சி எப்படி வேண்டுமேனாலும் கமெண்ட் பண்ணலாம் இன்னும் 3 நாள்களுக்கு )

    பதிலளிநீக்கு
  2. கண்ணதாசனின் பெண் வடிவமோ, கவிதையை வடித்தது. எல்லாம் கண்டு, உண்டு, கொண்டு, மொண்டு என்று எழுதி இருக்கின்றீர்கள். கவிதை எனக்கு பிடிச்சிருக்கு, புரியமாதிரியும் எளிமையாக இருக்கு.

    //காகிதம் மனிதனை ஆழ்வது கண்டு,//

    ஆழ்வது அல்ல தோழி ஆள்வது - எழுத்துப் பிழையை திருத்திடுங்க

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் வியப்பு தாங்க பலவற்றின் மேல்..உங்கள் கவிதையை போல்..

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நல்லாருக்கு மலிக்கா. வெற்றி பெற வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  5. அடேங்கப்பா!! இதில் எத்தனை "கண்டு" என "கண்டு"பிடிக்கும் போட்டியே வைக்கலாம் போல :))

    பதிலளிநீக்கு
  6. வியப்பு தான்...எனக்கும் இத்தனை வியப்புகளை உள்ளடக்கிய கவிதையை கண்டு...

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள்! முன்பே சொல்லிகிடறேன்

    பதிலளிநீக்கு
  8. வாய்ப்பும்-வியப்பில்
    வரிகளால்
    வியக்க வைத்து... என் கண்களை
    வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்ற
    வியப்புக் கவிதை...!

    வாழ்த்துக்கள்...!

    வியப்புடன்... காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  9. ///ஏதாவது தேறுமா? ///

    ஆயிரம் பொன்னாச்சே....!
    ஆயிரம் பொன்னாச்சே....!

    பதிலளிநீக்கு
  10. நல்லா கவிதையை எழுதி விட்டு, இது தேறுமா என்று கேட்டு இருப்பது, வியப்பு!
    வெற்றி பெறும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மலிக்காவின் கவிதை கண்டு
    எனக்கு வியப்பு ஏற்படுவது உண்டு..
    அந்த வகையில் இந்த ஒன்று
    எப்போதும் போலவே நன்று.
    பரிசை வென்று.,
    வாங்கிடுக பூச்செண்டு..

    கவிதைக்கு இனி கவிதையாகத்தான் பின்னூட்டம் என்று..........

    போதும் போதும் இன்று..,

    பதிலளிநீக்கு
  12. வியப்பு அருமை.. நம்ம ஊட்டு பக்கம் வர மாட்டீங்களா

    பதிலளிநீக்கு
  13. வியப்பில் இத்தனை வியப்பா? அருமை அருமை மலிகாக்கா.

    பதிலளிநீக்கு
  14. கவிதை அருமையாய் இருப்பது கண்டு, அதை நான் படித்தது கண்டு, எங்க "தங்ஸ்" அதை கண்டு, மலர் செண்டு கொடுத்து வாழ்த்திட்டு வந்திடுங்க என்று ........ வாழ்த்துகள் மல்லிகாக்கா!

    பதிலளிநீக்கு
  15. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.. வெற்றிப் பெற‌ வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  16. அதிசயித்தேன் நீங்கள் மூச்சு விடாமல் பாட்டிய கவிகண்டு..வாழ்த்துக்கள் மலிக்கா!பரிசு கிடைத்த சந்தோஷத்தைப்பகிர்ந்து கொள்ளுங்கள் விரைவில்.

    பதிலளிநீக்கு
  17. கவியரசு கண்ணதாசனின் தேன்,தேன்
    கவிதையைப்போல தாங்கள் கண்டு,கண்டு,
    வார்த்தைகள் கொண்டு அமைத்த விதம் அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  18. என்னா ஒரு கவிதை. மிகவும் அழகாக அருமையாக அடுக்கடுக்காய் எடுதியிருக்கீங்க
    இறுதியில் சபாஷ் மலிக்கா

    நீங்க . இறைவனை நேசிப்பவர் என்பது உண்மையிலும் உண்மைதான் பெருமையாக இருக்குப்பா உங்களைப்பார்த்து..


    வாழ்த்தும் பாராட்டும் கொட்டட்டும் உங்களின் கவிதைக்கு. உங்களுக்கும் சேர்த்தே!
    நட்புடன் சொர்ணா

    பதிலளிநீக்கு
  19. Yasir கூறியது...
    சூப்பர் கவிதை மலிக்கா..நிச்சயம் வெல்லும்....மனதை கொல்லும் கண்கள் (பார்வை).....(வொய்ஃப்-ட கம்யூட்டர் ரிப்பேர் அயிடிச்சி எப்படி வேண்டுமேனாலும் கமெண்ட் பண்ணலாம் இன்னும் 3 நாள்களுக்கு//

    ஆக மச்சிக்கு பயம் அந்த பயம் இருக்கட்டும். அப்புறம் கண்ணை நோண்டிடுவாங்க. இதையல்ல உங்கண்ணை..

    நன்றி யாசிர்காக்கா..

    பதிலளிநீக்கு
  20. சூப்பர் கவிதை மலிக்கா..நிச்சயம் வெல்லும்....மனதை கொல்லும் கண்கள் (பார்வை).....(வொய்ஃப்-ட கம்யூட்டர் ரிப்பேர் அயிடிச்சி எப்படி வேண்டுமேனாலும் கமெண்ட் பண்ணலாம் இன்னும் 3 நாள்களுக்கு )

    20 செப்டெம்ப்ர், 2010 12:21 pm

    என்னது நானு யாரா? கூறியது...
    கண்ணதாசனின் பெண் வடிவமோ, கவிதையை வடித்தது. எல்லாம் கண்டு, உண்டு, கொண்டு, மொண்டு என்று எழுதி இருக்கின்றீர்கள். கவிதை எனக்கு பிடிச்சிருக்கு, புரியமாதிரியும் எளிமையாக இருக்கு..//

    அச்சோ அப்படியெல்லாமில்லைங்கோ. அவரெங்கே நானெங்கே.

    தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி


    //காகிதம் மனிதனை ஆழ்வது கண்டு,//

    ஆழ்வது அல்ல தோழி ஆள்வது - எழுத்துப் பிழையை திருத்திடுங்க//

    திருத்திவிட்டேன் தோழா. நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  21. வினோ கூறியது...
    எனக்கும் வியப்பு தாங்க பலவற்றின் மேல்..உங்கள் கவிதையை போல்../

    மிகுந்த மகிழ்ச்சி வினோ மிக்க நன்றி..



    ஹுஸைனம்மா கூறியது...
    ரொம்ப நல்லாருக்கு மலிக்கா. வெற்றி பெற வாழ்த்துகள்!!

    வாழ்த்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி ஹுஸைனம்மா..

    பதிலளிநீக்கு
  22. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    அடேங்கப்பா!! இதில் எத்தனை "கண்டு" என "கண்டு"பிடிக்கும் போட்டியே வைக்கலாம் போல :))//

    மூக்குபொடி டப்பா[இது அடேங்கப்பாவுக்கு எதிர்பதமாம்]

    ஓ வைக்கலாமே சைகோ பா.
    நன்றிங்கோ..


    /வெறும்பய கூறியது...
    வியப்பு தான்...எனக்கும் இத்தனை வியப்புகளை உள்ளடக்கிய கவிதையை கண்டு...//


    நன்றி நன்றி வெறும்பயங்க. [அச்சோ]
    பேரமாத்தச்சொன்னா கேட்க்கமாட்டேங்குறீங்களே வெறும்பயங்கண்ணா..



    //நட்புடன் ஜமால் கூறியது...
    வாழ்த்துகள்! முன்பே சொல்லிகிடறேன்.//

    ஒரேகல்லில் ரெண்டுமாங்கான்னு. ஒரே கருத்தில் ரெண்டு வாழ்த்தா அப்பாடி அதிரைக்காரங்களாச்சே.. ஹி ஹி. நன்றி ஜமால்காக்கா..

    பதிலளிநீக்கு
  23. காஞ்சி முரளி கூறியது...
    வாய்ப்பும்-வியப்பில்
    வரிகளால்
    வியக்க வைத்து... என் கண்களை
    வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்ற
    வியப்புக் கவிதை...!

    வாழ்த்துக்கள்...!

    வியப்புடன்... காஞ்சி முரளி...//

    மிக்க நன்றி சகோ. வியப்புக்கும் வாழ்த்துக்கும்.. மிக்க மகிழ்ச்சி..

    //காஞ்சி முரளி கூறியது...
    ///ஏதாவது தேறுமா? ///

    ஆயிரம் பொன்னாச்சே....!
    ஆயிரம் பொன்னாச்சே....//

    எங்கே எங்கே. பொன்னெங்கே. அப்படின்னு அண்ணாத்தே ஓடிவரமாட்டாகளே! ஏன்னா அவுக ரொம்ப பிஸியாம்.. வலைக்குள் விழுந்துகெடகாகளாம்..


    ஆயிரம் பொன்னா நெஜமா தேறுமா..
    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  24. //Chitra கூறியது...
    நல்லா கவிதையை எழுதி விட்டு, இது தேறுமா என்று கேட்டு இருப்பது, வியப்பு!
    வெற்றி பெறும். வாழ்த்துக்கள்!

    ஆகா சித்துக்கு எப்படியெல்லாம் வியப்பு வருது பாருங்கோ..

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா அக்கா மேடம் டீச்சர் மேம் இதெல்லாம் சொல்லமாட்டேனே..

    பதிலளிநீக்கு
  25. இப்படிக்கு நிஜாம் ..., கூறியது...
    மலிக்காவின் கவிதை கண்டு
    எனக்கு வியப்பு ஏற்படுவது உண்டு..
    அந்த வகையில் இந்த ஒன்று
    எப்போதும் போலவே நன்று.
    பரிசை வென்று.,
    வாங்கிடுக பூச்செண்டு..

    கவிதைக்கு இனி கவிதையாகத்தான் பின்னூட்டம் என்று..........

    போதும் போதும் இன்று..,//

    என்னமா கவித கொட்டுது நிஜாமுக்கு அசத்துங்கோ அசத்துங்கோ.

    ரொம்ப நன்றி நிஜாம். இனி கவிபின்னூட்டம் தொடருமுன்னு நெனக்கிறேன் ஹைய்யா ஜாலிதான்..


    //LK கூறியது...
    வியப்பு அருமை.. நம்ம ஊட்டு பக்கம் வர மாட்டீங்களா.//
    அருமைக்கு நன்றி கார்த்திக்.

    ஏன் மாட்டோம் கொஞ்சநாளா பிஸியில்லாத பிஸி அதான் வரமுடியலை. நாங்க கூப்பிடமலே வருவோமுல்ல

    அழைத்தமைக்கு மகிழ்ச்சி கார்த்தி..

    பதிலளிநீக்கு
  26. சூப்பர் கவிதை.

    விரைவில் பரிசு கிடைத்த சந்தோஷத்தைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. நல்ல கவிதை வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது