நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாங்க வாங்க விருந்து களிக்க வாங்க.

[நம்மவீட்டு ஹீரோ மரூஃபும். என்தோழியின் மகள் ஜுல்பியாவும்.]

[காஞ்சி முரளி கூறியது...

ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!
atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!
நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!
அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க.]

அப்படின்னு பிரியாணியும் நோன்பு கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.
அதில் பங்குகேட்ட ஜெய்லானி அண்ணாத்தேக்கு மற்றும் நாடோடியால் வந்த விருந்துதான் இது..

நீரோடையில் கண்களால் கவிதை நீராடி
களைத்தும் களைக்காமலும் -கண்
கலங்கியும் கலங்காமலும்-உதடு
சிரித்தும் சிரிக்காமலும்-மனம்
மகிழ்ந்தும் மகிழாமலும் -நெஞ்சம்
நிறைவடைந்து நிறைவடையாமலும்
எல்லாவற்றுக்கும் மேலாக
பொறுமையாய் படித்து
பொறுப்பாய் கருத்திட்டு - என்னை
பூரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்.

என் அருமை தமிழ்மக்களே! உங்கள் அன்பிற்குறிய மலிக்கா
[நிறுத்து என்னது பாரதிராஜா ஸ்டைலில்தான் இத நாங்க படிக்கனுமா அப்படினெல்லாம் கேட்காம படிங்கப்பூ] அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது
தர்பூசணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ்.
அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..[ஆனா தர்பூசணி நான் கட்பண்ணியது எவ்வளவு கஷ்டமான வேலை அதை என்னிடம் விட்டதுதான் கொடுமை அதை செய்து முடிப்பதற்குள் அப்பப்பா ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]
இது முட்டை, மட்டன்கீமா. லாப்பா.

லாப்பா. வாழைக்காய் பச்சி. பெங்களூர் பக்கோடா.
வெள்ளரிமற்றும் பழங்கள். சைடிஸ் வருவதற்குள் கிளிக்.

நோன்புக்கஞ்சி. இது நான் செய்தது அதுவும் ஓட்ஸில் மட்டன்போட்டு.
என்னது குடிக்கிறமாதரி இருந்ததாவா? கோப்பையும் சேர்த்து காணோம் கடைசியில் கச்சடா சுருட்டும்போது சுருட்டியிருப்பாக! அவ்வளவு நல்லாவாஆஆஆ இருந்துச்சி. [முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]

நோன்புக்கஞ்சி. சிக்கன்கட்லெட். உளுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு.

இது உருளைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட்.

இது எங்க அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான் எதார்த்தமாக செய்த கிளிக்.
இது கீமா மற்றும் ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ்.
இது ஒரு தனி டேஸ்ட்.
என்னதிது. ஏன் யாருக்கும் தெரியாதோ இதுதாங்கோ சிக்கன். இல்லயில்ல கோழி. ஓ அதுதான் இதா நாங்களும் என்னமோன்னு நெனச்சோம் அப்படின்னு பெருமூச்சி. காக்கா அதுவும் வெள்ளக்காக்கவை  இரவில் தின்னவங்க விடுவதுபோல் தெரியுது.
இத நாங்க கிரிளரில் சுட்டு. கப்சா சோறு செய்து. அதுமேல உக்காத்தி வச்சிருக்கோம். கோழி சோறை சாப்பிட்டுவிட்டு குண்டானதும்,
நாங்க சாப்பிட.

சரி சரி நீ கோழியைபார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டுதான் இருக்கேன்னு
அல்லாரும் நம்பிட்டாங்க! கண்ணு.
போங்க மம்மிஇன்னும் மீதியெல்லாம் எங்கே மம்மி.
 அதுவா வந்துகிட்டேயிருக்கு இதுகே கண்ணு போட்டுருவாங்கோ ன்னுதானே  சைடில் நின்னு கிளிக் செய்தேன் மரூஃப்கண்ணு.
ஓகே மம்மி
பாருங்க மம்மி ஜெய்லானி அங்கிளும். முரளி அங்கிளும். ஸ்டீபன் அங்கிளும். கூடவே இப்ப வந்திருக்கிற அய்யூஃப் அங்கிளும் குறு குறுன்னு என்னையே பார்க்கிறாங்க.
அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு சரியா!
ஓகே மம்மி வெவ்வெவெவே..

தாயகத்திலிருந்து வந்தபின் எங்கள் வீட்டில் செய்த சில [ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்] உணவு வகைகளை உங்களுக்கு விருந்தளிக்க இங்கே கொடுத்துள்ளேன். என்ன ஒன்னு வாசனை பிடிக்க முடியாது [அப்படாஆஆஆஆஆ தப்பிச்சேன்] கண்ணெதிரில் இருந்தும் கைதொட்டும் இடையில் கண்ணாடி [அதாங்கோ மானிட்டர் கண்ணாடி]தடுத்துக்கொண்டு வாயில் வைக்க முடியாமல் போகும் அவ்வளவுதான்.

இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள் [எங்கே மகிழ்வது வயிறு எரியுது அப்படின்னு எல்லாம் கோரசாக சொல்வதுபோல் கேட்குது] என்ன செய்ய என்னால் தற்போது இப்படிதான் விருந்து கொடுக்க முடியும். அனைவருக்கும் சேர்த்து கொடுக்க முடியாட்டியும் நிச்சயம் ஒருநாள் அனைவருக்கும் விருந்துகொடுக்க இறைவன் அருளட்டும். அருள் புரிவான்.

என்ன எல்லாரும் பெருநாள் துணியெல்லாம் எடுத்தாச்சா..
உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி// மூன்று மாதமுன்பே டிக்கெட் புக்பண்ணிவைத்திருக்கும் கலாம்காக்காவுக்கு ஸ்பெசல் விருந்து பெருநாளைக்கு கொடுத்துட வேண்டியதுதான். [டிக்கெட்காலாவதி யானாலும் நாங்க விடமாட்டோமுல்ல அப்படின்னு அய்யூஃபிடம், கலாம்காக்கா அபுதாபியிலேர்ந்து சொல்லுறது கேட்குறதுபோல தெரியுது?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

44 கருத்துகள்:

  1. ஒரு நாளைக்கு இவ்வளவு கொஞ்சமாவா

    ------------

    அனைவருக்கும் ஈகை திரு நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ஆத்தாடி ரொம்ப கொஞ்சமாக தான் சாப்பிடுவீங்களா அயிட்டமெல்லாம் நாவில் நீரை ஊறவக்கிறது அசத்துறீங்க கவிதையைப்போல் சமையலிலும்..

    பதிலளிநீக்கு
  3. நோன்பு பெருநாள் வந்திருச்சு .
    அக்காவும் பண்டாரம் செய்திருச்சு.
    படத்தை பாரு ஜோரு.
    இதை படைத்ததெல்லாம் யாரு?
    என்ன மச்சான் பேரு ?
    பரிசாக் கொடுக்கணும் காரு.(டாய்ஸ்)

    சிரமெடுத்தாய் தர்பூசை உடைக்க .
    புண்ணாகியது உன் கைகள் ரெண்டும் !
    பேனா பிடிக்கும் உனதுக் கைகள்.
    வீணா ஏன் கோடாலியைப் பிடிக்கணும் ?
    எந்திரம் போல் மச்சான் இருக்க.
    தந்திரம் செய்து அதையும் கொடுக்க வேண்டியதுதானே.!

    வாழ்க்கையென்றால் இதுவல்லவா வாழ்க்கை.
    என்னவள் என்னிடம் முன்னாடி சொன்னாள்.
    நீ எனக்கு புருசனா வந்தால், காப்பியில் விஷம் தருவேன் என்று.
    அதுக்கு நான் சொன்னதோ...
    நீ மட்டும் எனக்கு பொண்டாட்டியா வந்தால் ...
    சத்தியமா நான் அதைக் குடிச்சுடுவேன் என்று.
    உண்மையில் இல்லை, பள்ளியில்.

    மருமகனே மரூப், மாமன் கண்ணுப் படாது.
    ஆனால் நப்பாசை மட்டும்,எனக்கு விடாது.
    மிச்சம் இருந்தால் அனுப்பு பார்சலில்.
    இல்லாவிட்டால் எட்டிப் பாரு வாசலில்.
    மாமன் நின்னுருப்பான் .......................கம்போடு.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அக்கா...இப்படி எல்லாம் கண்களுக்கு மட்டும் விருந்து என்று எல்லாம் சொல்ல கூடாதாக்கும்...சீக்கிரம் டிக்கட் எடுத்து அனுப்புங்க...பறந்து வந்துவிடுகிறேன்....ஆஹா...எப்படி எல்லாத்தையும் ஒரே நாளில் செய்கின்றிங்க...கலக்கல் விருந்து...இரண்டு குட்டிஸும் படு cute....

    பதிலளிநீக்கு
  5. விருந்துக்கு நன்றி .. என்ன சைவம் கம்மியா இருக்கு பரவாயில்லை....

    பதிலளிநீக்கு
  6. மலிக்கா!! அயிட்டம்ஸ் ஜாஸ்தியா இருக்கு..ஆனா ஆளு கம்மியா தெரியுதே! இன்ஷா அல்லாஹ் ரம்ஜானுக்கு ஒரு ஸ்பெசல் கவித எழுதுங்க..இதுவரை படிக்காத மாதிரி புதுசா..

    பதிலளிநீக்கு
  7. காலையில் ஆபிஸ் வ‌ந்து பிளாக்கை திற‌ந்தால் உங்க‌ள் விருந்து சாப்பாடு தான் க‌ண்ணுக்கு முத‌லில் புல‌ப்ப‌ட்ட‌து....... என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா காலையிலேயே நாக்குல‌ நீர் வ‌ர‌ வ‌ச்சீட்டீங்க‌னு... :)

    பதிலளிநீக்கு
  8. //ஒருநாள் அனைவருக்கும் விருந்துகொடுக்க இறைவன் அருளட்டும். அருள் புரிவான்.//

    அந்த‌ நாளை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  9. முத‌லில் இந்த‌ விருந்தை ஏற்பாடு செய்த‌ காஞ்சி முர‌ளி அண்ண‌னுக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. (என‌க்கு தெரியும் அண்ணே, உங்க‌ பிளானு என்ன‌னு ப‌க்க‌த்து இலைக்கு பாய‌ச‌ம் தானே!!!!! அவ்வ்வ்வ்)

    பதிலளிநீக்கு
  10. உங்க‌ள் குடும்ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ருக்கும் என்னுடைய‌ ம‌ன‌மார்ந்த‌ அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு
  11. ////அப்படின்னு பிரியாணியும் நோன்புக்கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.///

    அதெல்லாம் ஒன்னும் வேணாம்....! எங்களுக்கு...
    ஏற்கெனவே வந்து சாப்ட்டாச்சு....!
    நாங்க.. என்னைக்கு கருத்துரை போட்டோமோ... அன்னைக்கே நோன்பு கஞ்சிய குடிச்சிட்டுத்தான் கருத்துரை போட்டோம்...!
    you are too late...?
    அவ்.... வவ்... வ்வ்வ்...!

    ///அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..////
    நல்ல ஆளு மாட்னாருப்பா மலிக்காவுக்கு....!
    பாவம்...! உங்க மச்சான்...!
    அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...!

    ////[முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]///
    சாப்டாச்சு... சாப்டாச்சு...
    நாங்க... ஏற்கனவே சாப்டாச்சு...!

    ////பதார்த்தங்களை நான் எதார்த்தமாக////

    இங்கேயும் எதுகைமோனையுமா...!
    எதார்த்தமாக...
    பக்கத்துவீட்டு
    பாதார்த்தமா...!

    ///[ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்]////
    இது... கொஞ்சம் ஓவர் இல்ல...!
    நீங்க... ஏழையின்னா...!
    நாங்க என்ன கோடீஸ்வரரா...?
    ஏரோபிளன.. வானத்துல கீழ இருந்து வேடிக்கை பார்க்கற ஆளு நாங்க!
    நீங்க அதுல குடும்பத்தோட வந்து போற ஆளு...

    அது சரி...! ஏழைங்க வீட்லதான் இவ்வளவு வெரைடீசா...!
    (உங்க மைன்ட் வாய்ஸ் இங்கே கேட்குது.. "ஏன்னா ஒரு நக்கலு" ன்னு)

    (பாருங்க...
    மக்களே...
    மக்களுக்கு மக்களே...!
    இவங்க கேட்டாதான் விருந்து கொடுப்பாங்க போலிருக்கு..!)

    anyhave ...
    நான் கேட்ட பிறகாவது விருந்து அளித்தீர்களே...!
    நன்றி...! நன்றி..! நன்றி..!

    நல்ல.... அருமையான... பதிவு சகோதரி...!
    நான் மதியம் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போகல...!
    இவ்வளவு வெரைடீச பார்த்துமே.. வயிறும் நிரம்பிடிச்சி...!
    தங்கள் வார்த்தைகளின் உபசரிப்பால்.. மனதும் நிரம்பிடிச்சி.!

    THANKS....!

    ரமலான் பெருநாள் கொண்டாடும்....
    அனைத்து நண்பர்களுக்கும்...
    Advance Wishes...
    "அனைவரும் இன்புற்று வாழ்கவே... எந்நாளும்.."
    "என் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"


    நட்புடன்....
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  12. காஞ்சி முரளி அண்ணாவுக்கு மற்றும் எல்லாருக்கும் (இப்படியா மக்களே கிளப்புறது) நல்ல விருந்து கொடுத்திங்க..... இனிய நோன்பு திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. malli virunthu balama irukku , sapida mudiyala unga anbu malaila nanachutom , ramalan vazthukkal

    பதிலளிநீக்கு
  14. கண்களுக்கு செம விருந்து கொடுத்திட்டீங்க மலிக்கா.அதிலும் அனைத்தையும் டிஸ்போஸபிள் பிளேட்டுகளில் அடுக்கி வைத்திருக்கும் உங்கள் சாமர்த்தியத்தை மெச்ச வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. ஆகா இத்தனை அயிட்டமா அம்மாடியோ ஏங்க துபை அட்ரஸ்கொஞ்சம் கொடுங்கலேன் இதுக்குன்னாவது ஏரோபிளேன் ஏரி வந்து ஒரு புடி பிடிச்சுடுறேன்.
    கொடுதுவச்சமகராசங்க.. ஹூஊஊஊஊஊஊஊஉம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

    பதிலளிநீக்கு
  16. அருமை!!

    எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. ////அப்படின்னு பிரியாணியும் நோன்புக்கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.///
    ஏங்க... ஒரு வீட்ல விஷேசம்னா....
    வாங்க... அப்படீன்னு உபசரிச்சு விருதளிப்பதுதான் தமிழ்நாட்டுப் பண்பாடு...
    நான் வெளிப்படையா நோன்பு கஞ்சி கொடுங்கன்னு கேட்டு...
    அதுவும் நாலு நாள் கழிச்சு... இப்போ.. ஓவரா பில்டப்பல்லாம் பண்ணி...
    என்னதிது...!

    //// [முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]////
    என்ன நாலு நாள் கழிச்சா...!
    நாங்க... உங்களிடம் கேட்டன்னிக்கே "மட்டன் கைமா"வுல பண்ணின... நோன்பு கஞ்சி குடிச்சிட்டுத்தான் உங்களிடம் கேட்டோம்...!

    ////அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..//////
    மலிக்காவுக்கு நல்ல மச்சான் கிடைசிருக்காருப்பா...! பாவம்... அந்த மனுஷ!
    இந்த வெரைட்டி ஐட்டம் செஞ்சதல்லாம் அவரு... பேரு மலிக்காவுக்கா...? இது கொஞ்சம் ஓவர்தான்...!

    /////இது எங்க அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான் எதார்த்தமாக////
    இதுலேயும்... எதுகைமோனையா...! /// பதார்த்தங்களை நான் எதார்த்தமாக///
    எதார்த்தமாக
    பக்கத்துவீட்டு
    பதார்த்தமுமா...!

    //// எங்கள் வீட்டில் செய்த சில [ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்] உணவு வகைகளை உங்களுக்கு விருந்தளிக்க இங்கே கொடுத்துள்ளேன். /////

    த... பாருங்க...!
    மக்களே... மக்களுக்கு மக்களே...!
    இவங்க "ஏழை"யாமா?

    ஏரோப்பிளேனை நாங்க வானத்துல அண்ணாந்து பாத்து... இதுதான் " ஏரோபிளேன்" ன்னு பாக்குற நாங்க கோடீஸ்வரங்க...!

    ஏரோப்பிளேனிலேயே குடும்பத்தோட காலையில தமிழ்நாட்டுக்கு வந்து... மாலையில் துபாய் செல்லும்
    இவங்க "ஏழை"யாமா?

    அதவிடுங்க...!
    ///தர்பூதணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ், முட்டை, மட்டன்கீமா. லாப்பா, லாப்பா. வாழைக்காய் பச்சி. பெங்களூர் பக்கோடா. வெள்ளரி மற்றும் பழங்கள், ஓட்ஸில் மட்டன்போட்டு நோன்புகஞ்சி, சிக்கன்கட்லெட். உழுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு, உருலைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட், கீமா மற்றும் ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ், சிக்கன். இல்லயில்ல கோழி..................

    ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா...! சொல்லி முடிப்பதற்குள் கண்ணக் கட்டுதே... !///

    எந்த ஏழையோட வீட்ல... இத்தனை வெரைட்டி ஐட்டம்...

    இவங்க... ஏழையாமா..?

    நல்லா இருக்கு... துபாய் நாட்டு நியாயம்...!

    அங்க இருக்கிற அரபு மாமன்னர் வீட்லகூட இவ்வளவு வெரைட்டி ஐட்டம் இருக்காது போலிருக்கே...!

    நீங்க... ஏழை..?
    இத... நாங்க நம்பனும்....!

    anyhave...
    நான் கேட்ட நோன்பு கஞ்சி லேட்டா கொடுத்தாலும்... லேட்டஸ்டா "ரமலான் விருந்தே" அளித்த...
    அதுவும்.../////இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள்///// என அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ள மலிக்காவுக்கு நன்றி...! நன்றி....! நன்றி...!

    இப்பதிவும் அருமை..! போடோக்களும் அருமை...!

    அதோடு...
    advance wishes...
    புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும்...
    இனிய நண்பர்களுக்கும்... அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்...

    இனிமை பெருகட்டும்....
    இனி எந்நாளும் தங்கள் வாழ்க்கையில்....எனும்
    advance "இனிய ரமலான்

    பதிலளிநீக்கு
  18. சூப்பர்ர் விருந்து மலிக்கா..படங்களும்,குட்டீஸ்களும் சூப்ப்ர்ர்..அப்படிய்யே எனக்கும் பார்சல் போடுங்க...இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  19. மச்சான் அக்காவைப் பார்த்துப் பாடும் பாடல்.

    சோதனை மேல் சோதனை போதுமட சாமி

    வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி


    சோதனை மேல் சோதனை போதுமட சாமி

    வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி


    படையல் ..சாதமென்று என்று...... நீப்....... போட்டது.(உத்தரவு)

    அதில் பம்பரமாய் சுத்தி வந்தேன்........ வடை போட்டது.

    கால் வலிக்க நின்னுருந்தேன் கை தாங்குமா .அ.. அ

    தோல் வலித்து சாஞ்சிருந்தேன் இது... நியாயமா ?


    சோதனை மேல் சோதனை போதுமட சாமி

    வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி


    அன்போர்கள் இல்லையம்மா ஆறுதல் சொல்ல.அ ..அ .

    பன்போர்கள் இல்லையம்மா பக்குவம் சொல்ல.

    பக்குவமா ஆக்கி வைத்தேன் பணியாரத்தை..

    தத்துவமா அடக்கி வைத்தே என் அதிகாரத்தை.

    எனக்காக வருவீரா...சத்தியம் சொல்ல.

    ஒரு நாளும் இது போல ஆனதும் இல்லை.


    சோதனை மேல் சோதனை போதுமட சாமி

    வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி


    அக்காள் பேசுகிறார்கள் :

    மச்சான்.. காஞ்சு போன பாத்திரங்கலல்லாம் உம்மைப் பார்த்ததுதான்

    ஆறுதல் அடையும், அப்பேர்ப் பட்ட நீங்களே வாடி வதைங்கி விட்டால்

    அப்புறம் அந்த பாத்திரத்தை யார் கழுவுவா மச்சான் ?

    பிரியாணியை ஆக்கித் தந்த நீங்கள் இப்படி வாய் விட்டு அழுவுலாமா?

    அப்புறம் பிரியாணியை தின்றவருக்கு யார் ஆறுதல் சொல்லுவா?


    பிரியாணி இல்லையம்மா... சரியாக.....நீ

    என்னைக் கட்டி போட்டு..வைத்து விட்டாய் பசியாற நீ.

    அடி தாங்கும் உடம்பு இது இடி தாங்குமா.அ... அ......

    இடி போல ஆணை வந்தால் மடி தாங்குமா?

    அடுக்கி வைத்த பண்டாரம் ...பறை சாற்றுது.

    முடங்கிப் போன..... என் அதிகாரம் யார் மீட்பது ?


    சோதனை மேல் சோதனை போதுமட சாமி

    வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது..... பூமி



    .// டிஸ்க்கி // மனைவியின் ஆக்கிரமப்பிற்கு முதலில் நான்

    பலியானேன்,இப்போது மச்சான்,நாளைக்கி ஏன் நீங்கலாக இருக்கக்

    கூடாது ?

    அவர்களை நாம் கொடுமை படுத்தினால் ஆறுதலுக்கு மகளிர் மன்றம்

    இருக்கு. ஆனால் நமக்கு ஒரு இள நீர் மன்றமாவது இருக்கா ?

    தோழர்களே ஒன்றிணையுங்கள் ஒடுக்கப் பட்ட ஆண் சமுதாயத்தைக்

    காக்க.சமைத்துக் கொடுப்பது மட்டும் உதவி என்றால் தாரளாமாக

    செய்யலாம் ஆனால் இவர்கள் நம்மை ஒரு இயந்திரமாகவே பயன்

    படுத்துகிறார்கள்,இதற்க்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆகணும்

    எல்லோரும் அணி சேர்ந்து திடலுக்கு வாருங்கள்.

    நான் சமையல் வேலைகளை முடித்து விட்டு அஞ்சு கொடம் தண்ணீர்

    அள்ளி வச்சுட்டு அம்மணிகிட்டே அனுமதி வாங்கிக் கொண்டு நேரே

    திடலுக்கு வந்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. துபாய் அட்ரெஸ் சும்மா ஜாலிக்குதான்

    நம்பர் 6, விவேகாநந்தர் தெரு,
    விவேகாநந்தர் குறுக்கு சந்து ,
    துபாய் மெயின் ரோடு-
    துபாய்.

    பதிலளிநீக்கு
  21. //அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது //

    இப்பிடி சொல்லி தப்பிச்சிட முடியுமா ...

    தனியா சாப்பிட்டா அப்புறம் வயித்த வலிக்கும் ..இப்பவே சொல்லிட்டென்

    பதிலளிநீக்கு
  22. @@@நாடோடி--//முத‌லில் இந்த‌ விருந்தை ஏற்பாடு செய்த‌ காஞ்சி முர‌ளி அண்ண‌னுக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. (என‌க்கு தெரியும் அண்ணே, உங்க‌ பிளானு என்ன‌னு ப‌க்க‌த்து இலைக்கு பாய‌ச‌ம் தானே!!!!! அவ்வ்வ்வ்)///

    என்னங்க வெள்ளை காக்காவை ஃபிரை போட்டதால பாயாசம் ரேஞ்சிக்கி கீழே இறங்கிட்டீங்க



    ஹா..ஹா.. நம்மளை மீறி குயில் , புறா, காக்கா ஒன்னு கூட அந்த பக்கம் பறந்துடாது.. உப்பு தண்ணீல முக்கி அப்படியே டீப் ஃபிரைதான் .. :-))

    பதிலளிநீக்கு
  23. //அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு சரியா!
    ஓகே மம்மி வெவ்வெவெவே.//

    அப்போ இன்னும் எத்தனை வெள்ளை காக்க மீதி இருக்கு (( இந்த தடவையும் தப்பிச்சிடாம எதுக்கும் உஷரா இருக்கோனும்))

    பதிலளிநீக்கு
  24. //அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் //

    Wishing you and your family EID MUBARAK with prayers for a long , happy and healthy life filled with success and blessings.

    பதிலளிநீக்கு
  25. அப்பா பலமான விருந்து தான் .மசாலா ஹரீஸ், கல்சா, கோழி கிறில், என்னது லாப்பாவா, அதான் முர்தபாவா எல்லாம் சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  26. விருந்தை கண்டுகளித்து கருத்திட்ட. மற்றும் பெருமூச்சிட்ட
    அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல. கண்களால் கண்டுகளித்த இவ்விருந்தை இறைவன் நாடினால் அனைவருக்கும் வாய்க்கு தருகிறேன்.

    நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்..

    என்றும் உங்கள்
    அன்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  27. ஹலோ ஹலோ யாரங்கே! இது அனைத்தும் ஒரே நாளில் செய்ததுன்னு யார் சொன்னது நல்ல படிங்கோப்பூ. 5 5 ஐடிட்டம் மட்டுதான் ஒருநாளைக்கு இது அப்பப்ப எடுத கிளிக்.

    மரூஃபும். ஜுல்பியாவும்.இருக்கும்போட்டோவில் இருக்குதே அதுபோல்தான் ஒவ்வுநாளும் இருக்கும் அவ்வளவுதான்..

    ஏழைகளுக்கு இதற்குமேல்தாங்காதுங்கோ [என்ன முரளியண்ணா முறைக்கிறீங்கோ சரி சரி இதெல்லாம் பிளாக்கில் சாதாரணப்பா..]

    பதிலளிநீக்கு
  28. அய்யூஃப் .அங்கேயும் அப்படித்தானா! ஓகே ஓகே.

    சோதனைமேல் சோதனை
    போதுமடி[டா] பெண்களே! இல்லயில்லை ஆண்களே!

    எல்லாவேலையும் முடிச்சிட்டு சங்கத்துக்கு சீக்கிரம் வந்துடுங்கோ அங்கே ஏற்கனவே சீட்டு ஃபுல்லு. தரை சீட்டுகூட கிடைக்காது சொல்லிப்புட்டேன்..

    பதிலளிநீக்கு
  29. முரளியண்ணா. லேட்டா விருந்து அதுவும் கேட்டு கொடுத்தமைக்கு வருதம்தான் இருந்தாலும்,

    சகோதரியிடம் சகோதரன் கேட்டு பெருவதில் தப்பில்லையே! அதுதானே பாசம். [மல்லி எப்படியெல்லாம் சமாளிக்கிறாபாருங்க அப்படின்னு அண்ணி பக்கத்தில் இருந்து சொல்வது எனக்கு இங்கே நல்லாவே கேட்குதே!]

    மச்சான் பாவமா? ஏன் அண்ணா! நீங்களே இப்படி மச்சான் பக்கம் போனா தங்கை நான் பாவமில்லையா. ஹூம் ஹூம்ம்..

    பதிலளிநீக்கு
  30. நிச்சியமாக என்னால் முடிந்த வரை. நல்ல கவிதைதர முயற்சிக்கிறேன்.நன்றி நிஜாம்..

    பதிலளிநீக்கு
  31. டிக்கெட் கேட்டவங்களுக்கெல்லாம். டிக்கெட்டை டிஜிட்டல் ஏரோபினில் அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொண்டு அனைவரும் [ஈதுக்கு] பெருநாளைக்கு வந்துவிடவும் ஜமாய்ச்சிடலாம்..

    பதிலளிநீக்கு
  32. /////நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்./////

    ஏன்...! சாப்பிட நேரம் வேணுமா...!

    நோன்புன்னா... இதுபோல நிறையை item கிடைக்கும்னா... மலிக்கா வீட்டுக்கு பக்கத்திலேயே குடிபோயிடலாம்... குடும்பத்தோட....!

    பதிலளிநீக்கு
  33. காஞ்சி முரளி கூறியது...
    /////நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்./////

    ஏன்...! சாப்பிட நேரம் வேணுமா...!//

    என்ன ஒரு நக்கலு .

    //நோன்புன்னா... இதுபோல நிறையை item கிடைக்கும்னா... மலிக்கா வீட்டுக்கு பக்கத்திலேயே குடிபோயிடலாம்... குடும்பத்தோட.//

    தாளாரமாக வாங்கோ. பக்கத்து போர்ஷன் காலியாதான் இருக்கு முரளியண்ணா நோன்புக்கு மட்டுமல்ல எப்போதும் எங்களால் இயன்ற [அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]ஓகேவா...

    பதிலளிநீக்கு
  34. ////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]////

    இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....

    நீங்க இன்னடாயின்னா.... அந்த வார்த்தய
    திரும்ப... திரும்ப...!
    திரும்ப... திரும்ப...!
    திரும்ப... திரும்ப...!

    பதிலளிநீக்கு
  35. ////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]////

    இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....

    நீங்க இன்னடாயின்னா.... அந்த வார்த்தய
    திரும்ப... திரும்ப...!
    திரும்ப... திரும்ப...!
    திரும்ப... திரும்ப...!

    பதிலளிநீக்கு
  36. பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.

    கன்னே பட்டுடும் போல இருக்கு. ஆ
    ஆ... .............வாயே மூடவில்ல்லை.

    பதிலளிநீக்கு
  37. விஜி வாயில் காக்கா போகுது பாருங்க.. ஹி ஹி ஹி. நன்றிவிஜி..

    பதிலளிநீக்கு
  38. இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....

    நீங்க இன்னடாயின்னா..//

    சரி சரி இனி பணக்காரவுகளுக்கு தகுந்த பன்னு டீயும். ஓகேவா. அச்சோ முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.அண்ணாவின் அலறல்.

    பதிலளிநீக்கு
  39. கம கமக்க கருத்துசொன்ன அண்ணன் ஜமால் அவர்களுக்கும்.
    வாழ்த்துமை தந்த அன்பு அண்ணன் கலாநேசன் அவர்களுக்கும் .
    நாவில் நீரை உமிழிய அன்பு அக்காள் சொர்ணா அவர்களுக்கும் .
    வெட்டிகவி எழுதி, பொழுதை போக்கும் அய்யா நாட்டாமை அவர்களுக்கும் .
    விழி வைத்து வழிமேல் காத்திருக்கும் ஆசை தங்கை கீதா அச்சல் அவர்களுக்கும் .
    சிறிய உரையில் நன்றி நவிழ்ந்த மேதகு எல்.கே.அவர்களுக்கும்.
    ஸ்பெசல் கவிதை எழுதத் தூண்டும் அண்ணன் நிஜாம் அவர்களுக்கும்.
    உமிழ் நீர் சுரந்த நாடோடி மன்னன் எனது அண்ணன் அவர்களுக்கும்.
    காஞ்சியிலிருந்து லாஞ்சி நிறையா கருத்து தந்த அண்ணன் முரளி அவர்களுக்கும்.
    வாழ்த்துச் சொன்ன எனது அன்பு நெஞ்சம் திரு எம்.கே.ஆர்.அவர்களுக்கும் .
    தவிப்போடு புன்னகை பூக்கும் என் அன்பு தங்கை சித்ரா அவர்களுக்கும்.
    அன்பு மழையில் நனைந்த திருமதி சாறு ஸ்ரீ ராஜ் சகோதரி அவர்களுக்கும்.
    கண்ணில் சாடை காட்டி கண்ணால் பேசிய அன்பு அக்காள் சாதிக்கா அவர்களுக்கும்.
    மழலையில் பேசி மகிழ்வித்த அன்புத் தம்பி சே.குமார் அவர்களுக்கும்.
    கப்பல் ஏறி கரை சேரத் துடிக்கும் அன்பு அண்ணன் ஆழ்வார் அவர்களுக்கும்.
    ஈகை வாழ்த்துச்சொன்ன அன்புக்குரிய அண்ணன் எம். அப்துல் காதர் அவர்களுக்கும்.
    ரமலான் வாழ்த்துச்சொன்ன திருமதி மேனகா சத்தியா சகோதரி அவர்களுக்கும்.
    துபாய் முகவரி தந்த சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கும்.
    பாசத்திற்குரிய காக்கா ! மறைக்கையர் ஜெய்லானி அவர்களுக்கும்.
    எனது இதயத்தின் கண்ணாடி அக்காள் ஜலீலா கமால் அவர்களுக்கும்.
    அன்பு சிறுவன் அப்துல் மாலிக் அவர்களுக்கும்.
    பாசத்தோடு இன்டலி ஒட்டு இட்ட என் அன்பு நெஞ்சங்களுக்கும்.
    விருந்தினரா வந்து கருத்துரை தராது போன செல்வங்களுக்கும்.
    மற்றும் ஏனைய பதிவாசியர் அனைவருக்கும்.
    எனது அன்பு கனிந்த நன்றியையையும்.
    மற்றும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும்.
    என் குடும்பத்தின் சார்பாக நீரோடை மூலமாக சமர்ப்பிக்கிறேன்.
    அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !

    அக்காள், இதை நீங்கள் சொல்றதுப் போல் சொல்லவும். எனது முகவரியை நீக்கிவிடவும்

    பதிலளிநீக்கு
  40. அனைத்தும் அருமை.இனிய பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது