என்ன என்ன சந்தேகம் அப்படின்னு கேக்குகிறீர்களா? ஒன்னுமில்லை சும்மாதாங்கோ ஒரு மாற்றம் வேணுமுன்னுல்ல.
எப்பபாத்தாலும் நாமளே பதில் சொல்லிகிட்டு இருக்கோமே ஒரு தபாவாச்சி நாம கேள்வி கேட்போமேன்னுதான், என்ன கேட்கலாம்தானே! இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்
உங்ககிட்டேர்ந்து நான் அறியாதவைகளை அறிந்துகொண்டு
நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்.அதோடு அனைவருக்கும் அறியப்படுத்தவும்தான்
ஓகே ஸ்டாட் ரெடி.
1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?
3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?
4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?
5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?
டிஸ்கி//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒருவழியா கேள்விகளை கேட்டுட்டேன். இதற்கு விதண்டாவாதமாகவோ. சும்மாவாச்சிக்குமோ
பதில் தராமல் உளப்பூர்வமாக, உண்மையான பதில்கள் தரவேண்டும். இது நான் மட்டும் அறிந்துகொள்ளவல்ல, நம் அனைவருமே அறியத்தான். அறிய அறியத்தானே அறிதலில் ஓர் தெளிவு உண்டாகும்.[ஆத்தி,,,, அதுக்குமீறி சேட்டைபண்ண வாரவுகளுக்கு இங்கே இடமில்லை சொல்லிபுட்டேன் ஆமா ஓகேவா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இந்த ஆட்டைக்கு நான் வரலை. இப்பதான் ஒரு பதிவ போட்டு எல்லாரும் கொலை வெறில இருக்காங்க என் மேல.
பதிலளிநீக்குஆத்தீ.. ரெண்டு கண்ணுல எது நல்ல கண்ணுன்னு கேட்டா எப்படிம்மா :-))))
பதிலளிநீக்குLK கூறியது...
பதிலளிநீக்குஇந்த ஆட்டைக்கு நான் வரலை. இப்பதான் ஒரு பதிவ போட்டு எல்லாரும் கொலை வெறில இருக்காங்க என் மேல
//
என்ன கார்த்தி இப்படி சொல்லிபுட்டீக.
கொலவெறியா யாரு யாரு எங்கே
தோ வரேன்..
//அமைதிச்சாரல் கூறியது...
பதிலளிநீக்குஆத்தீ.. ரெண்டு கண்ணுல எது நல்ல கண்ணுன்னு கேட்டா எப்படிம்மா :-))))
//
ஹை இப்படிச்சொன்னா எப்படி பெண்ணே! ஒரு கேள்விக்காவது பதில் சொல்லாமில்லையா? ஏன் நம்மள அறிவாளியாக்கூடாதாம்மா..
இப்ப நானும் ஜகா வாங்கிக்கிறேன்....
பதிலளிநீக்குஅப்பால அல்லாரும் வந்து கருத்தை சொன்ன பின்னே வாரேன்...
வரட்டாக்கா...
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குஇப்ப நானும் ஜகா வாங்கிக்கிறேன்....
அப்பால அல்லாரும் வந்து கருத்தை சொன்ன பின்னே வாரேன்...
வரட்டாக்கா...//
இப்படி ஜகா வாங்கினா எப்படி குமார்? அதென்ன அல்லாரும் வந்தொ சொன்னபின்னே! நமக்குளிருக்கும் கருத்தை பகிர்வதில் என்ன தாமதம்..ஓகே ஓகே பின்னே வாங்கோ..
எல்லாமே சிந்திக்கக்கூடிய கேள்விகள் தான்
பதிலளிநீக்கு2க்கும் 4க்கும் குரான் சிறப்பாய் பதில் சொல்லும்
சுதந்திரம் என்பது ஜோடிகளுக்கேற்ப அவர்களின் சந்தர்ப்பத்திர்கேற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும்.
ஒரு முடிவை எடுத்து கொண்டு எதையும் அனுகினால் எந்த பதிலும் கிடைக்காது, குறிப்பாய் துணைகளுக்குள் விட்டுகொடுத்தலில் போட்டி இருக்க வேண்டும் அதுவே சிறந்து இருக்குமென்பது எனது நம்பிக்கை
//நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குஎல்லாமே சிந்திக்கக்கூடிய கேள்விகள் தான்.//
சந்தோஷம்.
//2க்கும் 4க்கும் குரான் சிறப்பாய் பதில் சொல்லும்.//
நன்றி காக்கா
/சுதந்திரம் என்பது ஜோடிகளுக்கேற்ப.
//அவர்களின் சந்தர்ப்பத்திர்கேற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும்.//
புரியலைக் காக்கா
/ஒரு முடிவை எடுத்து கொண்டு எதையும் அனுகினால் எந்த பதிலும் கிடைக்காது,//
நிச்சயமாக முடிவை நாமே எடுத்துக்கொண்டு பதில் கிடைக்கவில்லையே என புலம்புவது சரியல்ல
//குறிப்பாய் துணைகளுக்குள் விட்டுகொடுத்தலில் போட்டி இருக்க வேண்டும் அதுவே சிறந்து இருக்குமென்பது எனது நம்பிக்கை//
விட்டுக்கொடுத்தலில் ஒருவருக்கொருவர் போட்டிபோடவேண்டும் அருமை.
மிக்க நன்றி காக்கா
.
//1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
பதிலளிநீக்குஅந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?//---துணி உடுத்தி முழுக்கனப்போர்த்தி நடிப்பதைவிட ஒரு பெண் நிர்வாணமாக சினிமாவில் நடித்தால் அதிக சம்பளம் என்றால் அப்படியும் நடிக்க தயார். இது பெண் சுதந்திரம். அதை பார்க்க ஓர் ஆண் பிளாக்கில் டிக்கட் எடுத்தாவது கண்டுகளிக்க முண்டியடித்தால் அது ஆணின் சுதந்திரம். மேற்படி சுதந்திரத்தால் பெண்ணுக்கு மட்டும் பலன். ஆணுக்கு டிக்கட் காசு அவுட். ஆனால், அதே பெண் ரோட்டில் இலவசமாக திறந்து போட்டு நடந்தால் கண்டு ரசிக்கும் ஆணுக்கு மட்டும் பலன். இதுதான் இருவருக்குமான சுதந்திரம்.
//2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த சமத்தால் பலமா? பலவீனமா?
அல்லது அதனால் அடையும் பலன்கள் என்னென்ன.?//----சமமில்லை. ஒரு பெண் தன் உடலை மட்டுமே மூலதனமாய் வைத்து சம்பாரிக்க முடிகிறது. ஓர் ஆணுடனான அந்த 'உடல் விற்பனை' வியாபாரத்தில் தனக்கு சுகமும் கிடைக்கிறது பணமும் கிடைக்கிறது. ஆனால், அந்த ஆணுக்கு எதுவுமில்லை... சுகத்துக்கு பதிலாய்த்தான் பணம் போய்விடுகிறதே.
//3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?//---இளக வைக்கக்கூடியவர்...பெண். இளகிவிடுவது...எப்போதுமே ஆண். இது திருமணத்துக்கு முன். ஆனால்.... திருமணத்துக்குப்பின் அப்படியே உல்ட்டா.
//4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?//---நஷ்டம் ஏற்படுத்தும் 'வரையறை உண்டு' என்ற ஒரே காரணத்துக்காகத்தான் 'எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாம்' என்று பின்நவீனத்துவமும் பன்னாட்டு முதாலாளித்துவமும் கைகோர்த்து உலகை தனக்கு லாபமாக மூளைச்சலவை செய்து வெற்றிகரமாக நடத்தி சென்று கொண்டிருக்கிறது.
//5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?//---என்றென்றும் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழத்தான்.
அட..! இப்படியெல்லாம் கேள்வி கேட்டா உண்மையை உணர்ந்துருவாகளா... தப்ப ஒத்துக்கிருவாகளா? பத்தாயம் காலியா ஈக்கிதுன்னு துணிமணியா அடுக்கி வெப்பாக..?
அடப்போங்க ராத்தா...
வாப்ச்சா இல்லேன்னா உம்மம்மா தேத்தண்ணி போட்டு வெச்சி ஈந்தா அப்படியே மெத்தையிலே ஏறி காத்து வாங்கிகிட்டே குடிச்சிகிட்டே... சாச்சிய மருவண்டி எட்டுஉட சொல்லுங்க ராத்தா... பகடி பண்ணாதிக...
1)ஆணோ பெண்ணோ தனக்கென்ற கட்டுப்பாட்டோடு வாழ்வதே சுதந்திரம்.அளவோடு இருந்தால் பலன் தான்.
பதிலளிநீக்கு2)உடலால் சமமற்றிருந்தாலும் மனதால் சமம்தான் இருவரும்.பலன் தான்.
3)பெண்தான் இளகிவிடுவதும் இளக வைப்பதும்.இதுதான் பலஹீனம்.
4)சில வரைமுறைகளுக்குள் இருப்பது இருபாலருக்குமே பாதுகாப்பும் சந்தோஷமான வாழ்வும்.
5)வரப்போகும் துணை நல்ல குணம்,மனம் கொண்டவராய் மிச்ச ஆசைகள் அவரவர் குணங்களுக்கேற்றமாதிரி மாறுபடும்.
அப்பாடா...மல்லிக்கா.இந்த 5 கேள்விகளிக்கும் பதில் நிறைவாக எழுதுவாதானால் நிறைய எழுதலாம்.
எனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்த எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் சூப்பரான பதில்கள் இருக்கும் என்று..(எப்படி சிக்க மாட்டோமில்லா)..
பதிலளிநீக்குநீங்க ஏதோ பிளானோடத்தான் இப்படி கேள்விகளைக் கேக்குறீங்கன்னு தெரியுது. என்னா ப்ளானுன்னு சீக்கிரம் சொல்லிடுங்க.
பதிலளிநீக்குஎன்னோட பதில்கள்: எதுக்கும் ஒரு அளவுகோல் வச்சுகிட்டு இப்பிடித்தான் இருக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தா கவைக்குதவாது. சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளுக்கேற்றபடி இருவருமே அவரவர் சுதந்திரம், பலம், இளக்கம், போன்ற வரையறைகள் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
ஹேமா கூறியது...
பதிலளிநீக்கு1)ஆணோ பெண்ணோ தனக்கென்ற கட்டுப்பாட்டோடு வாழ்வதே சுதந்திரம்.அளவோடு இருந்தால் பலன் தான்.//
நிச்சயமாக நிச்சயமாக தனக்கென்ற கட்டுப்பாடு வேணும் சூப்பர்..
2)உடலால் சமமற்றிருந்தாலும் மனதால் சமம்தான் இருவரும்.பலன் தான்.//
அனைத்துமே சரியென்றால்தானே சமம். இல்லையெனில் எப்படி சமம்.
எப்படி பலன்.
3)பெண்தான் இளகிவிடுவதும் இளக வைப்பதும்.இதுதான் பலஹீனம்.//
உண்மை
4)சில வரைமுறைகளுக்குள் இருப்பது இருபாலருக்குமே பாதுகாப்பும் சந்தோஷமான வாழ்வும்./
தோழி..
5)வரப்போகும் துணை நல்ல குணம்,மனம் கொண்டவராய் மிச்ச ஆசைகள் அவரவர் குணங்களுக்கேற்றமாதிரி மாறுபடும்.
அப்பாடா...மல்லிக்கா.இந்த 5 கேள்விகளிக்கும் பதில் நிறைவாக எழுதுவாதானால் நிறைய எழுதலாம்.//
தோழி சின்ன கருத்திலும் அன்பான பதில். எனக்கு உங்ககிட்ட பிடித்ததே பிறரிடம் பழகும் விதம் உங்க கவியும் பண்பும்தான்.நன்றி தோழி. .
//அப்பாடா...மல்லிக்கா.இந்த 5 கேள்விகளிக்கும் பதில் நிறைவாக எழுதுவாதானால் நிறைய எழுதலாம்.//
பதிலளிநீக்குநிஜமாலுமே ஹேமா நிறைய எழுதலாம் ..
நாடோடி கூறியது...
பதிலளிநீக்குஎனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்த எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் சூப்பரான பதில்கள் இருக்கும் என்று..(எப்படி சிக்க மாட்டோமில்லா)..
//
அடியாத்தி எப்படியெல்லாம் சிக்கிவிடுறாங்கபாருங்கப்பா. நமக்கு தெரியலையே சொன்னாலாவது தெரிஞ்சிகலாமுன்னு பாத்தா
இப்படியெல்லாம் நழுவிட்டா எப்படி. நமக்குள்ளும் சில கருத்துகள் இருக்காமலிருக்குமா? அதையேன் வெளிப்படுத்த தயங்கவேண்டும்.
அன்புடன் மலிக்கா கூறியது...
பதிலளிநீக்குஹுஸைனம்மா கூறியது...
நீங்க ஏதோ பிளானோடத்தான் இப்படி கேள்விகளைக் கேக்குறீங்கன்னு தெரியுது. என்னா ப்ளானுன்னு சீக்கிரம் சொல்லிடுங்க.//
ப்ளானா ஏன் ஹுசைன்னமா இப்புடி.
உங்களைபோலெல்லாம் நான் நாழெத்து படிச்சி நாளு எடங்களுக்குபோய் அறிவை வளத்துக்கொள்ளவில்லையே.ஏதோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா இந்த வலையுலகம் வந்து கத்துகீனு இருக்கேன் அது பொறுக்கலையா.
அறியாததை அறிந்துகொள்ள நினைப்பது குத்தமாம்மா. [பாவம் பச்சபுள்ள எங்காவது பச்சபுள்ள ப்ளான் பண்ணுமா]
//என்னோட பதில்கள்: எதுக்கும் ஒரு அளவுகோல் வச்சுகிட்டு இப்பிடித்தான் இருக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தா கவைக்குதவாது. சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளுக்கேற்றபடி இருவருமே அவரவர் சுதந்திரம், பலம், இளக்கம், போன்ற வரையறைகள் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.//
ஓஅப்படியா . ஆக வரையறைக்குள் வாழ்வது கதைக்குதவாது. சந்தர்பங்களுக்கு தகுந்தார்போல் நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படிதானே சரிங்கம்மா.
நன்றி ஹுஸைனம்மா..
சரி....சரி....சீக்கிரம் பதிலை போடுங்க :))
பதிலளிநீக்குஅட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.. நல்ல 5 விசயம் தெரிஞ்சுது..
பதிலளிநீக்குஅக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மணசு கட்டு பாட இருந்தா எல்லாமே பலன்தான்...சரி இப்போ நான் எந்த கேள்விக்கு பதில் சொன்னேன் கண்டு பிடிங்க பாப்போம்...
பதிலளிநீக்கு1 இது போன்ற வினாக்கள் கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பாதிப்பு பலன் பற்றிய கவலை தேவையில்லை. குட்டையைக் குழப்பினால்தானே மீன் பிடிக்கலாம் !
பதிலளிநீக்கு2 இந்த ஒப்பீடு தேவை இல்லாதது. இருவரும் சமம் என்ற காலந்தொட்டு வரும் பதிலை நான் கொடுக்க மாட்டேன். சில விஷயங்களில் ஆண் பெண்ணை விடப் பலசாலி, சில விஷயங்களில் பெண் ஆணை விடப் பலசாலி. They complement and supplement each other. That's the beauty of life. அதுதான் படைப்பின் தத்துவம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. எனவே இந்த ஒப்பீடு தேவையில்லை.
3 பொத்தாம் பொதுவான பதில் தர முடியாது. சில ஆண்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிலர் கல்லுளி மங்கனாக உள்ளனர். அதே போல் உள்ள பெண்களும் (இளகிய மனம் கொண்டவர்கள், கல்லுளி மனம் கொண்டவர்கள்) உண்டு.
4 இதற்காகத்தான் நமக்கு இறைவன் ஆறாம் அறிவைக் கொடுத்திருப்பதாக நான் நம்புகிறேன். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற சந்தேகம் வரும் நேரங்களில் பெரியவர்களைக் கேட்கலாம்.
5 இது ஆறாவது அறிவு இருப்பதாலேயே தோன்றக்கூடிய விஷயம்.
குட் கொஸ்டீன்ஸ்...!
பதிலளிநீக்கு/////நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்////
நாங்க அறிவாளியில்லைங்கோ...!
நீங்களே பதில் சொல்லிடுங்கோ மலிக்கா...!
ஜஸ்ட் மிஸ்ஸு...!
கிரேட்...ஸ்ஸ்....ஸ்...... எஸ்கேப்!
நட்புடன்....
காஞ்சி முரளி...
சம்பந்தி! என்னோட பதில்கள்:
பதிலளிநீக்கு1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?
ஒருத்தரை ஒருத்தர் ஏதோ பொருளைப் சொந்தம் கொண்டாடுவதுப் போல, ஆக்கரமிப்பு இல்லாத மாதிரி, எல்லோருடைய வெளி (Space)-ஐயும் மதிக்க தெரிந்தால் அது பலனா இருக்கும். இருவருடைய சுந்திரம் குடும்பத்தையோ, பொருளாதாரத்தையோ, சமூகத்தையோ சீரழிக்கிற மாதிரி இருக்கக் கூடாது.
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
பதிலளிநீக்குஅந்த சமத்தால் பலமா? பலவீனமா?
அல்லது அதனால் அடையும் பலன்கள் என்னென்ன.?
சமமென்றால் வீம்புக்கு நீ சிகரெட் பிடிக்கிறாயா நானும் பிடிப்பேன். நீ தண்ணி அடிக்கின்றாயா நானும் அந்த மாதிரி தண்ணி அடிப்பேன்னு சொல்றது சமமான சுதந்திரம் இல்ல. ஆணும் பெண்ணும் இயற்கையா அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை சரியாக செய்தால் வேறு வேறு தளங்களில் ஒன்றாக கைக்கோர்த்து நிற்க முடியும்.
ஆன்மீகம் இந்த நிலைக்கு மிகவும் பய்ன்படும். புரிந்துக்கொண்டால் போதும். இந்த போட்டாபோட்டி எல்லாம் இருக்காது.
3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?
பதிலளிநீக்குஇதிலென்ன சம்பந்திக் குழப்பம்! பெண்கள் தான் இளகிய மனம் படைத்தவர்கள். அதேப்போல பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சொல்லி இருக்காங்க இல்ல?
4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
பதிலளிநீக்குஇப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?
இதற்கு பதில் மேல இருக்கிற கேள்விக்கே சொல்லிட்டேன். மத்தவங்க நலனை பாதிக்காத விதமா தங்களோட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளணும். அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி!
5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?
பதிலளிநீக்குஇது உங்களுக்கு தெரியாதா? நம்ப முடியலையே!
ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும், உண்மையானவரா, ஒழுக்க சீலராகவும், சிம்பிளாகவும், பொறுப்புணர்ச்சியை உணர்ந்தாவராகவும் இருக்கறது தான் சரி! அதை தான் எல்லா ஆண்களும் பெண்களும் விருப்புவாங்க!
அருமையான கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியையும் விவரிச்சி, ஒரு நல்ல விளக்கப் பதிவா போடுங்க. எல்லோருக்குமே பயனா இருக்கும். செய்வீங்க இல்ல சம்பந்தி?
சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குசரி....சரி....சீக்கிரம் பதிலை போடுங்க :))//
அட என்னங்கப்பா. தெரியாதத தெரிஞ்சிக்கலாமுன்னுதானே நானே கேள்வி கேட்டுயிருக்கேன் என்னையப்போய் பதில் போடுங்க அதுவும் சீக்கிரம் ஏஏஏஏஎன்.
சை கோ பா.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்தான் மலிக்கா.
பதிலளிநீக்குமனதுகுள் தோன்ருவதெல்லாம் வார்தைகளாய் இங்க கொட்ட துடிக்கிறது ஆனால் உடல் நிலை அதைதடுக்கிறது. நேரம் கிடைக்கும்போது இதுக்கு நிச்சயம் என்னாளான விளக்கம் தருவேன்.
கணினிபக்கம் போகக்கூடாதுன்னார் டாக்டர் நமக்குதான் உன்பக்கம் பார்க்காமல் நாட்கள் நகராதே1 அதான்..
நட்புடன்
s.சொர்ணா
வினோ கூறியது...
பதிலளிநீக்குஅட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.. நல்ல 5 விசயம் தெரிஞ்சுது..//
அச்சோ 5 நல்ல விசயமும் உங்களுக்கு தெரிஞ்சிடுத்தா வினோ சொல்லுங்க சொல்லுங்க..
சீமான்கனி கூறியது...
பதிலளிநீக்குஅக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மணசு கட்டு பாட இருந்தா எல்லாமே பலன்தான்...சரி இப்போ நான் எந்த கேள்விக்கு பதில் சொன்னேன் கண்டு பிடிங்க பாப்போம்...//
கனிப்புள்ள கண்டுபிடி போட்டியா வச்சிருக்கோம் ஏன்புள்ள இந்த லொள்ளு..
அது 2 கேள்வின்னு நெனக்கிறேன் சரியா..
Gopi Ramamoorthy கூறியது...
பதிலளிநீக்கு1 இது போன்ற வினாக்கள் கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பாதிப்பு பலன் பற்றிய கவலை தேவையில்லை. குட்டையைக் குழப்பினால்தானே மீன் பிடிக்கலாம் !//
வாங்க வாங்க கோபி. எனக்கு கேள்விகூட கேட்கத்தெரியலைபாருங்க அப்ப பதில் எப்படிதெரியும். அதான் குட்டைய குழப்பியும் மீன் பிடிக்கமுடியலையே!
2 இந்த ஒப்பீடு தேவை இல்லாதது. இருவரும் சமம் என்ற காலந்தொட்டு வரும் பதிலை நான் கொடுக்க மாட்டேன். சில விஷயங்களில் ஆண் பெண்ணை விடப் பலசாலி, சில விஷயங்களில் பெண் ஆணை விடப் பலசாலி. They complement and supplement each other. That's the beauty of life. அதுதான் படைப்பின் தத்துவம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. எனவே இந்த ஒப்பீடு தேவையில்லை.//
ஓகே
3 பொத்தாம் பொதுவான பதில் தர முடியாது. சில ஆண்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிலர் கல்லுளி மங்கனாக உள்ளனர். அதே போல் உள்ள பெண்களும் (இளகிய மனம் கொண்டவர்கள், கல்லுளி மனம் கொண்டவர்கள்) உண்டு./
சரியே!
4 இதற்காகத்தான் நமக்கு இறைவன் ஆறாம் அறிவைக் கொடுத்திருப்பதாக நான் நம்புகிறேன். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற சந்தேகம் வரும் நேரங்களில் பெரியவர்களைக் கேட்கலாம்.//
நிச்சியமாக தந்திருக்கும் அறிவையும்
நம்மைவிட அனுபவத்திலும் வயதிலும் பெரியவங்களிடம் கேட்பது நல்லதே
//5 இது ஆறாவது அறிவு இருப்பதாலேயே தோன்றக்கூடிய விஷயம்.//
நல்லதொரு விளக்கம்.
வருகைக்கும் அன்பான கருத்துக்கும்
மிக்க நன்றி கோபி.
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குகுட் கொஸ்டீன்ஸ்...!
ஓ அப்படியா
/////நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்////
நாங்க அறிவாளியில்லைங்கோ...!//
அத நாங்கச்சொல்லனும்.
//நீங்களே பதில் சொல்லிடுங்கோ மலிக்கா...!//
வச்சிக்கிடா இல்லேங்றோம்
//ஜஸ்ட் மிஸ்ஸு...!
கிரேட்...ஸ்ஸ்....ஸ்...... எஸ்கேப்!
நட்புடன்....
காஞ்சி முரளி...//
அய்யா பெரியவுகளே நீங்களே இப்படி நழுவிட்ட எப்படி? உங்களுக்கு எவ்வளவோ இருக்கு அனுபவங்களும்
எண்ணங்களும் அதையேன் சொல்லதயக்கம்.
சிறியவளான எனக்கு பெரியவர்களின் உதவிதேவை. மேலே கோபி சொன்னதுபோல் உங்களை பெரியவாளிடம் அறிந்துகொள்ள கேட்பது தவறா?
இந்த எஸ்கேப்பல்லாம் இங்கே வேணாம் அப்புறம் நானும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் ஆயிடவேண்டியதுதான் இப்படியே அல்லாரும் எஸ்கேபானா.. ஹி ஹி ஹி
என்னது நானு யாரா? கூறியது...
பதிலளிநீக்கு//இது உங்களுக்கு தெரியாதா? நம்ப முடியலையே!//
எனக்கு தெரிந்தது வேறு மாதரியிருக்கலாம் உங்ககிட்டேர்ந்து தார பதிலை வச்சி ஓ அப்படியும் இருக்கோன்னு நல்லவைகளை மேலும் அறிந்துக் கொண்டால் நல்லதுதானே சம்மந்தி!
/அருமையான கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியையும் விவரிச்சி, ஒரு நல்ல விளக்கப் பதிவா போடுங்க. எல்லோருக்குமே பயனா இருக்கும். செய்வீங்க இல்ல சம்பந்தி?//
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சம்பந்தி. உங்களின் பதில் ஒவ்வொன்றும் நல்லாயிருக்கு. நம்முடைய அனுபவமோ அல்லது நாம் அறிந்துகொண்ட அனுபவமோ அதை தெளிவாக உணர்ந்து அதை பிறருக்கும் உணர்த்துவது எல்லோராலும் முடியாது என நினைக்கிறார்கள். முடியும் என நினைத்தால் முடிக்கலாம் எனத்தெரியாமல்.
நல்லதோ கெட்டதோ மனதில் தோன்றுவதை பிறர் மனம் நோகமால் அதை வெளிப்படுத்துவது சிறந்தது என்பது என் கருத்து.
சம்பந்தி உங்கள் பதில் மிகவும் அருமை.
நிச்சயம் நான் அறிந்ததும்
எனக்கு தெரிந்த வகையில் நான் பதிவிடுவேன்.
மிக்க நன்றி சம்பந்தி..
என்னது நானு யாரா? கூறியது...
பதிலளிநீக்கு3. ?
//இதிலென்ன சம்பந்திக் குழப்பம்! பெண்கள் தான் இளகிய மனம் படைத்தவர்கள். அதேப்போல பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சொல்லி இருக்காங்க இல்ல?//
என்னது பேயா!:{ அம்மாடியோஓஓஓஓஒ அப்ப சரிதான்..
//ஆன்மீகம் இந்த நிலைக்கு மிகவும் பயன்படும். புரிந்துக்கொண்டால் போதும். இந்த போட்டாபோட்டி எல்லாம் இருக்காது.//
மிக மிகச்சரியே!
நன்றி சம்பந்தி
////அய்யா பெரியவுகளே நீங்களே இப்படி நழுவிட்ட எப்படி? உங்களுக்கு எவ்வளவோ இருக்கு அனுபவங்களும்
பதிலளிநீக்குஎண்ணங்களும் அதையேன் சொல்லதயக்கம்.////
நான்லா... பெரியவுகன்னு யார் சொன்னது...!
நீங்க சொன்னா... நாங்க ஏத்துக்கணுமா...!
நீங்க எவ்வளவு பெரியவுகன்னு எனக்குத்தான் தெரியுமே..!
வலைதளத்தில் கவிதையில் ஓர் சர்வதிகாரியாய் (சர்வதிகாரிணி) வலம்வரும் "கவிதாயினி", "கவியரசி" கவிஞர் மலிக்கா பெரியவுகளா...!
இல்ல நானா..!
நீங்க யார்ன்னு எனக்குத்தான் நல்லத் தெரியுமே..!
எதையாச்சும் சொல்லி...
உசுப்பேத்தி... உசுப்பேத்தி...என் வாயப்புடுக்கலாம்ன்னு பார்க்கறீங்க...!
சிக்குமா... இந்த
சிங்கம்...!
சிக்காது...!
அவ்வ... வவ்...வவ்...
அருமையான பகிர்வு ...
பதிலளிநீக்குஎனக்கு தெறியும் ஆனா சொல்லமாட்டேன் ஏன்னா? நான் எல்லா விசயத்திலும் சீக்ரட்ட இருப்பேன்!!!
பதிலளிநீக்கு(இது ஒருவகை எஸ்கேப்)
சாரி ஃபார் தி லேட் :-(
பதிலளிநீக்குஇதில உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் சின்ன பதில் போட முடியாது தனி பதிவே போட வேண்டி வரும் . ஏதாவது ஒரு கேள்வி குடுங்க அதை என் பிளாக்கில போடரேன் முடிந்தால் :-)))
ஒவ்வொன்னும் சூப்பர் கேள்விகள்...!!
நட்புடன் ஜமால் சொன்னது…
பதிலளிநீக்குகுறிப்பாய் துணைகளுக்குள் விட்டுகொடுத்தலில் போட்டி இருக்க வேண்டும் அதுவே சிறந்து இருக்குமென்பது எனது நம்பிக்கை
- ஜமாலின் கருத்தே என் கருத்தும்!
பிரியமுடன்
திருச்சி சையது