நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
புகைப்பட கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்பட கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாறுவது முகமல்ல!



பொய்வேசங்கள் புனைய!
பாசாங்குகள் காட்ட!
கள்ளத்தனம் புரிய!
கருணைபோல் நடிக்க!

இன்னும்
மண்ணுக்குள் செல்லும்வரை
பலவகை நாடங்கள் நடத்த
மனிதமுகங்களுக்குதேவை
தினம் ஒரு முகமூடி!

தன்னை 
தற்காத்து கொள்வதாய் எண்ணி
இயற்கை குணத்தை மறைத்து
செயற்கை மூடிகளை மாற்றுவதால்

தன் இயல்பான குணமும் மனமும்
இருளடைவதை அறிவதற்கு 
வாய்ப்பில்லாமல் போவதை
உணர்வதில் தடுமாற்றம்.
எதற்குதான் இப்படியான
தினம் ஒரு மாற்றம்

உண்மையும் பொய்மையும்
ஒருபோதும்ஒற்றுமையாது
உள்ளமறிந்தபோதும்
ஒத்துக்கொள்வதில்லையே
நிலை மாறும் மனது..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கற்றுக்கொள்ளுங்கள் நாகரீகத்தை...




கோடிகளில் புரண்டும்
மானம் மறைக்கும் ஆடைதன்னை
மேம்போக்குக்காக போட்டுக்கொண்டு
கிழித்[ந்]தலைவதை நாகரீகமென
சொல்லித்திரியும்
மானாக்களுக்கு மத்தியில்,

தெருக்கோடியில் கிடந்தபோதும்
கிடைத்த உடை
கிழிந்த உடையானபோதுமதனை
தைத்துபோட்டு மானம்காக்க நினைக்கும்
இவனல்லவோ மானஸ்தன்
இல்லையில்லை
வருங்கால நாகரீகத்தின்
மானமுள்ள திரு உருவம்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தலையணையென்பது!



பஞ்சுமெத்தைக் குழந்தை! 
பதைபதைக்கும் மனதிற்க்கு
பக்கத்துணை!

கரையும் கண்ணீருக்கு
ஒத்தட ஆறுதல்!

மனக் குமுறலுக்கு
மறைமுக தேறுதல்!

தனிமையை போக்கும் தோழமை
தவிப்புகளை உள்ளடக்கும் ஆளுமை

இருதலை நான்கு கண்களை
ஒன்றிணைக்கும் சங்கமம்!

இணையில்லா நேரத்தில்
இன்னல்களையும் ஏற்கும் இலவம்!

தலையணை மந்திரம் திடமானால் 
துணைகள் இன்பத்தோனியில்!

தலையணையில் வேறுதலை மாறினால்
துணைகள் துன்பக்கேணியில்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கொடூரத்தின் விளிம்பில்!



மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!

தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி கழுக்கைகண்டு

பிஞ்சுள்ளம் அஞ்சவில்லை
தன்னை 

பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு முன்னால்!

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாடம்சொல்லும் புகைப்படங்கள்!

புகைப்படங்களின்மேல் கிளிக்கவும்.


எழுதத் தூண்டிய  முகநூல் சகோ றாபி அவர்களுக்கு நன்றி!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது