நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எப்பொழுதெனில்!


மெய்மறப்பது 
எப்பொழுதெனில்?
மெய்யுருகி மனமினைகையில்!

தன்னிலை மறப்பது 
எப்பொழுதெனில்?
தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!

நெஞ்சங்கள் சிலிர்ப்பது 
எப்பொழுதெனில்?
நினைவுகளிலும் சங்கமிக்கையில்!

இரத்த நாளங்கள் குளிர்வது  
எப்பொழுதெனில்?
இணைகள் ஒருவருக்கொருவர் 
ஆறுதலலிக்கையில்!

முழுமனமுடல் மூச்சில் கலப்பது 
எப்பொழுதெனில்?
முதுமையிலும் ஈருடல் 
ஓருயிராய் உருகுகையில்!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் அருமை...

    /// முதுமையிலும் ஈருடல்
    ஓருயிராய் உருகுகையில்! ///

    பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. முழுமனமுடல் மூச்சில் கலப்பது
    எப்பொழுதெனில்?
    முதுமையிலும் ஈருடல்
    ஓருயிராய் உருகுகையில்!

    ஃபென்டாஸ்டிக் மேம்

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தன்னிலை மறப்பது
    எப்பொழுதெனில்?
    தன்னிணையுடன் தஞ்சம் புகுகையில்!//

    வெகு அருமையான வரிகள் மலிக்கா
    நல்ல சிந்தனை..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது