நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சரணடைந்தேன்!..


நின்னைச் சரணடைந்தேன்
என்னுயிரே!- உன்
நினைவோடு இருக்கும்
என்மனதே!

நிறைவு பெற்றதாக்குவேன்
என் வாழ்வை-அது
உன் நினைவுகள்
எனக்குள் இருக்கும்வரை!

வாழும் தருணங்களின்
நொடிக் கொடி
வசந்தங்கள்
நடனமாடும் நம்மிடையில்

காலந்தோறும்
உன்னருகில்
கண்மூடிட வேண்டும்
உன்மடியில்

வாழ்ந்திட வேண்டும்
உன் நிழல்தன்னில்
வாழ்வு கழிந்திட வேண்டும்
உன் நினைவில்

நாளைப் பொழுதை
அறிவதில்லை
நம்முணர்வுக்கு என்றுமே
பிரிவுமில்லை..

டிஸ்கி// என்ன படிச்சாச்சா!அப்படியே இதையும் கிளிக் செய்துபாருங்கள். என் செல்லம் என்ன செய்துன்னு.. அப்படியே போயிடாம வந்து கருத்தும் சொல்லிட்டுபோங்க..
.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

23 கருத்துகள்:

 1. தங்கள்
  உயிராய் ...
  உள்ளமுமாய்...
  உடலுமாய்....!
  உடலூயிராய் இருக்கும்...!
  குட்டி மரூப்பின் போட்டோஸ்...!

  தங்கள் உள்ளத்தில் எழுந்த உயிர்க்கவிதை வரிகள்...

  அருமை...! அற்புதம்...!

  வாழ்க...!
  வளமுடன்...!
  நலமுடன்... பல்லாண்டு...! மரூப்..!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 2. ///காலந்தோறும்.... உன்னருகில்
  கண்மூடிட வேண்டும்... உன்மடியில்///

  இந்த வரிகளும்....

  ///நம்முணர்வுக்கு என்றுமே... பிரிவுமில்லை..///

  இந்த வரிகளும்...

  Highlightடான வரிகள்...
  உணர்வின் உச்சத்தின் வரிகள்...
  இக்கவிதையில்...

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 3. youtube பார்த்தேன்..... அன்னையின் அன்பில் நானும் நனைந்தேன். அழகு.

  பதிலளிநீக்கு
 4. மலிக்கா உங்களின் உள்ளத்தின் உயர்வு கவிதையில் தெரிகிறது அருமை

  பதிலளிநீக்கு
 5. மக்ரூஃப் பற்றிய கவிதையும் போட்டோக்களும் யுட்யூபில் அருமை.

  பதிலளிநீக்கு
 6. கவிதையும் அருமை, விடியோவும் அருமை. உங்கள் தாயன்புக்கு வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 7. //வாழ்ந்திட வேண்டும்
  உன் நிழல்தன்னில்
  வாழ்வு கழிந்திட வேண்டும்
  உன் நினைவில்

  நாளைப் பொழுதை
  அறிவதில்லை
  நம்முணர்வுக்கு என்றுமே
  பிரிவுமில்லை..//

  சரணடைந்த கவிதைக்கு
  சத்தான வரிகளில்
  சளைக்காமல் கவியெழுதும்
  சகோதரியே...
  சாதனை படைக்க
  சகோதரனின் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 8. நல்லா இருக்குங்க...., எழுத்தும்.., ஏக்கமும்.., குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. காஞ்சி முரளி கூறியது...
  ஹய்..
  நான் 1stடா...

  ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ட்

  /காஞ்சி முரளி கூறியது...
  தங்கள்
  உயிராய் ...
  உள்ளமுமாய்...
  உடலுமாய்....!
  உடலூயிராய் இருக்கும்...!
  குட்டி மரூப்பின் போட்டோஸ்...!

  தங்கள் உள்ளத்தில் எழுந்த உயிர்க்கவிதை வரிகள்...

  அருமை...! அற்புதம்...!

  வாழ்க...!
  வளமுடன்...!
  நலமுடன்... பல்லாண்டு...! மரூப்..!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...//

  வாழ்த்திய வாழ்த்துக்கும் அனபான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 10. காஞ்சி முரளி கூறியது...
  ///காலந்தோறும்.... உன்னருகில்
  கண்மூடிட வேண்டும்... உன்மடியில்///

  இந்த வரிகளும்....

  ///நம்முணர்வுக்கு என்றுமே... பிரிவுமில்லை..///

  இந்த வரிகளும்...

  Highlightடான வரிகள்...
  உணர்வின் உச்சத்தின் வரிகள்...
  இக்கவிதையில்...

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி...//

  வரிகளின் விதங்களை அழகியமுரையில் விவரிப்பரிப்பது சகோவிற்க்கு
  கைவந்த கலை நன்றி நன்றி நன்றி சகோதரா..

  பதிலளிநீக்கு
 11. Chitra கூறியது...
  youtube பார்த்தேன்..... அன்னையின் அன்பில் நானும் நனைந்தேன். அழகு.//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் சித்ரா மேடமக்கா..


  /யாதவன் கூறியது...
  கலக்கிடிங்க போங்க.//

  நன்றி யாதவா..

  அதுசரி எங்கேபோக யாதவா..

  பதிலளிநீக்கு
 12. //தியாவின் பேனா கூறியது...
  மலிக்கா உங்களின் உள்ளத்தின் உயர்வு கவிதையில் தெரிகிறது அருமை.//

  என்னவனிடம் நான் கொண்டுள்ள அன்பு இதையெல்லாம்விட மேலானது. எடுத்துச்சொல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்

  மனம்நிறைந்த மகிழ்ச்சி தியா தங்களின் அன்பான கருத்துக்கு
  மிக்க நன்றி.

  //சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  கவிதை நல்லா இருக்கு///

  மிக்க நன்றி.சைவகொத்துப்பரோட்டா..

  பதிலளிநீக்கு
 13. எஸ்.கே கூறியது...
  கவிதையும் அருமை, விடியோவும் அருமை. உங்கள் தாயன்புக்கு வணக்கங்கள்!//

  வாங்க எஸ் கே. தாங்களின் வருகைக்கும் அன்புமிகு கருத்துக்கும் என்மனமார்ந்த நன்றி..

  //asiya omar கூறியது...
  மக்ரூஃப் பற்றிய கவிதையும் போட்டோக்களும் யுட்யூபில் அருமை./

  ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா..

  பதிலளிநீக்கு
 14. சீமான்கனி கூறியது...
  //வாழ்ந்திட வேண்டும்
  உன் நிழல்தன்னில்
  வாழ்வு கழிந்திட வேண்டும்
  உன் நினைவில்

  நாளைப் பொழுதை
  அறிவதில்லை
  நம்முணர்வுக்கு என்றுமே
  பிரிவுமில்லை..//

  சரணடைந்த கவிதைக்கு
  சத்தான வரிகளில்
  சளைக்காமல் கவியெழுதும்
  சகோதரியே...
  சாதனை படைக்க
  சகோதரனின் வாழ்த்துகள்..//


  சகோதரனின் வாழ்த்துக்களின்
  சாந்தம் கண்டேன்.
  சரணடைந்த கவிதையினால்
  சந்தோஷம் கொண்டேன்.

  மிக்க நன்றி கனி......

  பதிலளிநீக்கு
 15. வினோ கூறியது...
  நல்லா இருக்குங்க.. youtube video அருமை.//

  மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி வினோ..

  பதிலளிநீக்கு
 16. தமிழ்க் காதலன். கூறியது...
  நல்லா இருக்குங்க...., எழுத்தும்.., ஏக்கமும்.., குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்.//

  வாங்க தமிழ்க் காதலன் தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், என்மனமார்ந்த நன்றி....

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப நல்லாயிருக்குக்கா கவிதை.
  இப்பல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லையே...
  வேலை அதிகமா...

  பதிலளிநீக்கு
 18. சே.குமார் கூறியது...
  ரொம்ப நல்லாயிருக்குக்கா கவிதை.
  இப்பல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லையே...
  வேலை அதிகமா...
  //

  ரொம்ப சந்தோஷம் குமார்..

  நான் எத்தனைமுறை வந்து திறும்பியிருக்கேன் தெரியுமா. அனைத்தையும் மனசு க்கு மாற்றியிருக்கீங்க மனசு திறக்கவேமாட்டேங்கிறது. ஏன்னே தெரியலையே..

  பதிலளிநீக்கு
 19. உன்
  நினைவோடு இருக்கும்
  என்மனதே!//


  இக்கவிதையின் நினைவோடு இன்று தூங்க செல்கிறது என் மனதே!!!! நன்றாக இருந்தது.

  The youtube video was a beautifully made one. especially the transitions between sentences/words was beautiful. who designed the video madam?

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது