நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
என் உயிரின் ஆவல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் உயிரின் ஆவல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கறுத்த மச்சான்..


ஆயிரங் கனவுகளோடு
அடியெடுத்து வைக்கவில்லை
உன்னைக் கைப்பிடிக்கையில்
”ஆனால்”

ஆயிரத்தை தாண்டியும்
என் ஆழ்மனக் கனவுகளும்
அழகாய் நிறைவேற்றி வரும்
ஆருயிரானவன்

பதிமூன்றாம் அகவையில்
பதியமிடப்பட்ட வாழ்க்கை விதை
பனிவிழும் மலர்வனமாய்
பத்தொன்பதாம் வருடத்திலும்
பூத்துக் குலுங்கச் செய்யும்
புதுமையானவன்!

பாலைவன வாழ்க்கையில்
பலசிரமங்களுக்கு நடுவிலும்
பலவருடம் தன்னுடனே வைத்து
பசுமையை மட்டுமே எனக்கு
பகிர்ந்தளித்த பண்புள்ளவன்!

எத்தவறையும் மன்னிப்பவள்
பெற்றதாய் மட்டுமே என்பதை
பொய்யாக்கியவன்
என் குற்றங்குறைகளையும்
குறைசொல்லாமல் மன்னித்த
புண்ணியமனம் கொண்டவன்!

பிள்ளைகளின் தேவையறிந்து
கடமைசெய்பவன் தந்தை-ஆனால்
என் தேவைகளை நான்
உணரத்தொடங்கையிலே
உணர்ந்து செயல்படுபவன்
உணர்ப்பூர்வமானவன்!

ஆணாதிக்கம் என்பதை
அறிந்ததில்லை நான் உன்னிடம்
அன்பாதிக்கத்தையே அளவில்லாமல்
அள்ளிதருவதில் நீதான் முதலிடம்!

கொண்டவளை
அடக்கியாள்வோர் மத்தியில்
என் எண்ணங்களுக்கூட மதிப்பளித்து
எழுதவும் விட்டதோடு
என்னை மேடையேற்றி அழகுபார்க்கும்
மதிப்புக்குறியவன்!

உன் சிலநேர சினத்தில்
நானும் சிணிங்கியதுண்டு
சிந்தி அழுததில்லை
ஊடலில்லாமல் கூடலில்லை-அதை
அறியாதோர் வாழ்க்கையில்
உயிர்ப்பூக்கள் பூப்பதில்லை

கறுத்த மச்சானே-உன்
கார்கால அன்பில் நான்
கரைந்து போகவில்லை
கனிந்து போகிறேன்

இறைவன்
எனக்கு அனுமதிக்கவில்லை
”இல்லையெனில்”
நான்வாழும் காலந்தோரும்
உன் காலடி தொழுவேன்
என் இதயதுடிப்பு இருக்கும்வரை..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முழுவதும் பொக்கிஷமாய்...


கிளிக் கிளிக்
இக்கவிதை முதுகுளத்தூர் .காம்மில் வெளியாகியுள்ளது.

நன்றி முதுகுளத்தூர் .காம்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பொக்கிஷ தேவதை..

படத்தின்மேல் டபுள் கிளிக்செய்து  பெரிதாக்கிப் படிக்கவும்


டிஸ்கி// பஞ்சுக்குவியல்போலிருக்கும் இந்த பசுங்கொழுந்து
என் அன்புத்தங்கையின் ஆருயிர் மகள் ஐனுல் ஆதிரா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இசையும் பாடலும்…..



உன் பார்வை
உன் வார்த்தை

உன் ஸ்பரிசம்
உன் சில்மிஷம்

உன் புன்னகை
உன் கோபம்

உன் மென்மை
உன் மெளனம்

உன் ஊடல்
உன் கூடல்

உன் பேச்சு
உன் மூச்சு

எல்லாமே

இசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்

உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...


[தமிழ்தேர் இதழின்   இம்மாத தலைப்பான இசையும் பாடலும் என்ற தலைப்பிற்காக எழுதி வெளியான கவிதை]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஒரு அடி வேண்டும்




நினைத்தவைகள் அத்தனையும்
நினைத்தடங்குமுன் என்கண்ணெதிரில்
நிறுத்தும் என்னவனே

நினைத்து நினைத்துதான் கரைகிறேன்
நிகழவில்லையே உன்னால் அந்த
ஒன்றுமட்டும்

அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
ஆனால்

என்னையாளும் உன்கையால்
என்றாவது விழவேண்டுமே
ஒரு அடி

அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
அகிலம்விட்டு போனபின்னும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மரணிக்கும்போது

                                               [உரையாடல் கவிதைப்போட்டிக்காக]


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...



அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது