நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கறுத்த மச்சான்..


ஆயிரங் கனவுகளோடு
அடியெடுத்து வைக்கவில்லை
உன்னைக் கைப்பிடிக்கையில்
”ஆனால்”

ஆயிரத்தை தாண்டியும்
என் ஆழ்மனக் கனவுகளும்
அழகாய் நிறைவேற்றி வரும்
ஆருயிரானவன்

பதிமூன்றாம் அகவையில்
பதியமிடப்பட்ட வாழ்க்கை விதை
பனிவிழும் மலர்வனமாய்
பத்தொன்பதாம் வருடத்திலும்
பூத்துக் குலுங்கச் செய்யும்
புதுமையானவன்!

பாலைவன வாழ்க்கையில்
பலசிரமங்களுக்கு நடுவிலும்
பலவருடம் தன்னுடனே வைத்து
பசுமையை மட்டுமே எனக்கு
பகிர்ந்தளித்த பண்புள்ளவன்!

எத்தவறையும் மன்னிப்பவள்
பெற்றதாய் மட்டுமே என்பதை
பொய்யாக்கியவன்
என் குற்றங்குறைகளையும்
குறைசொல்லாமல் மன்னித்த
புண்ணியமனம் கொண்டவன்!

பிள்ளைகளின் தேவையறிந்து
கடமைசெய்பவன் தந்தை-ஆனால்
என் தேவைகளை நான்
உணரத்தொடங்கையிலே
உணர்ந்து செயல்படுபவன்
உணர்ப்பூர்வமானவன்!

ஆணாதிக்கம் என்பதை
அறிந்ததில்லை நான் உன்னிடம்
அன்பாதிக்கத்தையே அளவில்லாமல்
அள்ளிதருவதில் நீதான் முதலிடம்!

கொண்டவளை
அடக்கியாள்வோர் மத்தியில்
என் எண்ணங்களுக்கூட மதிப்பளித்து
எழுதவும் விட்டதோடு
என்னை மேடையேற்றி அழகுபார்க்கும்
மதிப்புக்குறியவன்!

உன் சிலநேர சினத்தில்
நானும் சிணிங்கியதுண்டு
சிந்தி அழுததில்லை
ஊடலில்லாமல் கூடலில்லை-அதை
அறியாதோர் வாழ்க்கையில்
உயிர்ப்பூக்கள் பூப்பதில்லை

கறுத்த மச்சானே-உன்
கார்கால அன்பில் நான்
கரைந்து போகவில்லை
கனிந்து போகிறேன்

இறைவன்
எனக்கு அனுமதிக்கவில்லை
”இல்லையெனில்”
நான்வாழும் காலந்தோரும்
உன் காலடி தொழுவேன்
என் இதயதுடிப்பு இருக்கும்வரை..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

42 கருத்துகள்:

  1. என்ன ஒரு அபரிமிதமான காதல் உங்களுக்கு உங்களவர்மீது. எனக்கு பொறாமையாக இருக்கு மலிக்காக்கா உங்களவரிப்போல் எனக்கும் கணவர் அமைய வேண்டுங்கள்

    பதிலளிநீக்கு
  2. உன் சிலநேர சினத்தில்
    நானும் சிணிங்கியதுண்டு
    சிந்தி அழுததில்லை
    ஊடலில்லாமல் கூடலில்லை-அதை
    அறியாதோர் வாழ்க்கையில்
    உயிர்ப்பூக்கள் பூப்பதில்லை.//

    அருமையோ அருமை..

    பதிலளிநீக்கு
  3. எதை சொல்ல எதைவிட. ஒவ்வொரு மனைவியும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும். ஏக்கம் கொள்ளுதே என்மனம் என்னளும் இப்படியிருக்கவேண்டுமென.. நானும் அப்படிருக்கவேண்டுமென.

    வாழ்த்துகள் மாலிக்கா உங்கள் அன்புக்கு தலைவணங்குறேன்..

    பதிலளிநீக்கு
  4. ம்..ம்...ம்..வைர நெக்லஸ் வேண்டும் என்றால் மச்சானிடம் நேரிடையாக கேட்டு விட வேண்டியதுதானே அதுக்கு இந்த சுத்து சுத்தனுமாக்கும்......

    எப்படி..எப்படி..

    ஆணாதிக்கம் என்பதை
    அறிந்ததில்லை நான் உன்னிடம்
    அன்பாதிக்கத்தையே அளவில்லாமல்
    அள்ளிதருவதில் நீதான் முதலிடம்!

    ரூம் போட்டு யோசிச்சாலும் இந்த மாதிரி எழுத முடியாதுக்கோய்..

    மச்சான் கருப்பா இருந்தாலும் பொறுப்பாத்தான் இருக்கார்.

    பதிலளிநீக்கு
  5. இப்படியொரு இல்லாளை
    இணையாக பெற்ற
    கறுத்தவரல்லர் மச்சான்
    கறுத்ததெல்லாம் மச்சம்!

    தாதா பாட்டி யென்ற
    தோதான அழைப்பிலும்
    போபோ என்றல்லாமல்
    வாவா என்றே வாழ வாழ்த்துகள்

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. அழகு கவிதை!
    இன்று தான் முதன் முதலாக உங்கள் நீரோடையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.
    அருமை!
    உங்கள் வலைப்பூ மிக அழகாக இருக்கிறது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
    அது வாக்கினில் உண்டாம்- என்ற கவிதைக்கு
    உங்கள் கவிதையே நல்ல விளக்கம்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. "மச்சான்.." கறுப்போ சிகப்போ அல்லது எந்த நிறமோ மயக்கம் தருவது மச்சான்தான் .மச்சானைக் கண்டால் ஒரு மகிழ்வுதான். மச்சானை கவிதையாக்கி மனம் மயங்க வைக்கும் உங்களுக்கு பாராட்டுகள் தெரிவிப்பது நானும் என் துணைவியும் (காரணம் நானும் ஒரு மா நிறம்தான்) .

    பதிலளிநீக்கு
  9. மச்சானிடமிருந்து வேண்டுவது பெற ஒரு கவிதையும் உதவும் .

    பதிலளிநீக்கு
  10. "இது என்னுடைய சொந்த ஆக்கம் என் அனுமதியின்றி யாரும் என்படைப்புகளை எடுக்கவேண்டாம்"
    அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா! கறுத்த மச்சான்..மீது கொள்ளை ஆசை .
    ஆனால் ஒரு குறை ஒரு போதும் மச்சானோ அல்லது மற்றவரோ தாய்க்கு மேலானவர் யாருமில்லை. தாயின் மடியில் சுவனமே உள்ளது என்பது நபி மொழி. கவனம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அக்கா...
    உங்கள் அன்பு இங்கே அழகான கவிதையாய்...
    வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் இருவருக்கும்...

    பதிலளிநீக்கு
  12. kavi nila கூறியது...

    என்ன ஒரு அபரிமிதமான காதல் உங்களுக்கு உங்களவர்மீது. எனக்கு பொறாமையாக இருக்கு மலிக்காக்கா உங்களவரிப்போல் எனக்கும் கணவர் அமைய வேண்டுங்கள்

    15 ஜூலை, 2011 5:26 pm
    நீக்கு
    பெயரில்லா kavi nila கூறியது...

    உன் சிலநேர சினத்தில்
    நானும் சிணிங்கியதுண்டு
    சிந்தி அழுததில்லை
    ஊடலில்லாமல் கூடலில்லை-அதை
    அறியாதோர் வாழ்க்கையில்
    உயிர்ப்பூக்கள் பூப்பதில்லை.//

    அருமையோ அருமை..//


    நிச்சயம் அமையும் நிலா. இறைவனிடம் இடைவிடாது வேண்டுங்கள். நிறைவேரும்..

    தங்களின் அன்பான கருதுக்கு மிக நன்றி..

    பதிலளிநீக்கு
  13. சிவா.. கூறியது...

    எதை சொல்ல எதைவிட. ஒவ்வொரு மனைவியும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும். ஏக்கம் கொள்ளுதே என்மனம் என்னளும் இப்படியிருக்கவேண்டுமென.. நானும் அப்படிருக்கவேண்டுமென.

    வாழ்த்துகள் மாலிக்கா உங்கள் அன்புக்கு தலைவணங்குறேன்..//

    சொல்லிட்டேன் சிவா ரோகிணிகிட்ட நீங்கலும் மச்சான்போல் நடங்க ஏக்கம் வராம ரோகிணி பாத்துப்பாங்க ..சரிதானே..

    ரொம்ப சந்தோஷம் சிவா மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. அந்நியனே சின்ன வைர நெக்லஸ் மட்டும் எனக்கெதுக்கு, வைரக்கிடங்கே என்னிடம் இருக்கையில்..

    ரூம்போட்டுயில்ல கார்போட்டு..

    இன்றுகாலையில் பயணங்களும் பாதைகளும் கவிதை வாசிக்க சென்றுவிட்டு வரும்போது காரில் யோசித்துக்கொண்டே வந்தது வீடு வந்ததும் உடனே எழுதியாச்சி அவ்வளவுதான்..

    ரொம்ப நன்றிங்கோ அய்யூஃப்.

    பதிலளிநீக்கு
  15. sabeer.abushahruk கூறியது...

    இப்படியொரு இல்லாளை
    இணையாக பெற்ற
    கறுத்தவரல்லர் மச்சான்
    கறுத்ததெல்லாம் மச்சம்!

    தாதா பாட்டி யென்ற
    தோதான அழைப்பிலும்
    போபோ என்றல்லாமல்
    வாவா என்றே வாழ வாழ்த்துகள்

    வாழ்க வளமுடன்!//

    கொடுத்துவைத்தவள் நாந்தான். காக்கா. தள்ளாடும் வயதிலும் தாத்தா பாட்டியானபோதும் தாங்கிபிடிக்க தோள்கொடுக்க. துணையாக ஒருவருக்கொருவர் இருக்கும் வரத்தை இறைவனிடம் எந்நேரமும் கேட்கிறேன். போ போ என்ற சொல்லேயில்லை எங்கள் வாழ்க்கையில் .. தாங்களின் வாழ்த்துகளும் நிறைவேற இறைவன் அருளட்டும். நன்றி காக்கா..

    பதிலளிநீக்கு
  16. DRபாலா கூறியது...

    அழகு கவிதை!
    இன்று தான் முதன் முதலாக உங்கள் நீரோடையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.
    அருமை!
    உங்கள் வலைப்பூ மிக அழகாக இருக்கிறது.
    வாழ்த்துகள்.//

    வாங்க சகோ பாலா. தங்களின் வரவு நல்வரவாகட்டும். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம்நிறைந்த மகிழ்ச்சி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  17. Ramani கூறியது...

    உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
    அது வாக்கினில் உண்டாம்- என்ற கவிதைக்கு
    உங்கள் கவிதையே நல்ல விளக்கம்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்//

    தங்களின் தொடர்கருத்துகள் ஊக்கம்தரும் பாசமாய்.. மிக்க நன்றி அய்யா தங்களின் அன்புக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. nidurali கூறியது...

    "மச்சான்.." கறுப்போ சிகப்போ அல்லது எந்த நிறமோ மயக்கம் தருவது மச்சான்தான் .மச்சானைக் கண்டால் ஒரு மகிழ்வுதான். மச்சானை கவிதையாக்கி மனம் மயங்க வைக்கும் உங்களுக்கு பாராட்டுகள் தெரிவிப்பது நானும் என் துணைவியும் (காரணம் நானும் ஒரு மா நிறம்தான்) .//

    தந்தையே நிறத்தில் இல்லை நிம்மதி அது மனதில்தான் இருக்கிறது. உள்ள்த்தால் பாலின் வென்மையைக்கொண்டவர் மச்சான். மயக்கம் மச்சாந்தான் சரியாக சொன்னீர்கள்..

    ஆகா நீங்களும் அப்படித்தானா. உங்கலைபற்றி கிலீயனூர் இஸ்மத் அண்ணன் எழுதியதை படித்தபோதே புரிந்துகொண்டேன்.. வாழ்க பல்லாண்டு உங்களைபோல் நாங்களும் வாழ துஆச்செய்யுங்கள்..

    பதிலளிநீக்கு
  19. nidurali கூறியது...

    மச்சானிடமிருந்து வேண்டுவது பெற ஒரு கவிதையும் உதவும்//

    ஹா ஹா வேண்டாமலே அனைத்தும் கிடைத்துவிடுவதால் வேண்டிக்கேட்க்க ஒன்றுமேயில்லையே.

    பதிலளிநீக்கு
  20. nidurali கூறியது...

    "இது என்னுடைய சொந்த ஆக்கம் என் அனுமதியின்றி யாரும் என்படைப்புகளை எடுக்கவேண்டாம்"
    அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா! கறுத்த மச்சான்..மீது கொள்ளை ஆசை .
    ஆனால் ஒரு குறை ஒரு போதும் மச்சானோ அல்லது மற்றவரோ தாய்க்கு மேலானவர் யாருமில்லை. தாயின் மடியில் சுவனமே உள்ளது என்பது நபி மொழி. கவனம் வேண்டும்.//

    தாய்தந்தையின் அன்பை ஒருசேரக்காண்கிறேன் என்னவனிடம் அதனால் எழுந்த ப்ரியத்தின் வெளிப்பாடாய் வரிகள் என்னையுமறியாமல் வந்துவிழுந்துவிட்டது மாற்றியெழுதிவிட்டேன் தந்தையே.

    இறைவன் என்னை பொருந்திக்கொள்வானாக..

    தாங்களுக்கு என் நன்றிகள்.

    நாளை போட்டோவிலுள்ளஹையும் மாற்றியபின் தாளாரமாக எடுத்துக்கொள்ளுங்கள் கவிதையை..

    பதிலளிநீக்கு
  21. சே.குமார் கூறியது...

    அக்கா...
    உங்கள் அன்பு இங்கே அழகான கவிதையாய்...
    வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் இருவருக்கும்...//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் குமார்.மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. கறுத்த மச்சானின் இனிப்பான நினைவுகளை உங்கள் கவிதை தாங்கி வந்துள்ளது.
    கறுத்த மச்சானின் மனசிற்குப் பிடித்தமான ஒவ்வோர் பண்புகளையும் அழகாக வர்ணித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. கறுத்த மச்சானே-உன்
    கார்கால அன்பில் நான்
    கரைந்து போகவில்லை
    கனிந்து போகிறேன்


    அழகு கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. காலில் விழுவது "காக்கா" பிடிக்க .அது உண்மையின் வெளிப்பாடல்ல இப்பொழுது இது ஒரு சிலருக்கு காரியம் சாதிக்க மனிதன் காலில் விழும் காலம்.
    இறைவனை மிகவும் நேசிப்பவர் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டி அவனை வேண்டுவர். நாம் தொழுவது (இறைவனுக்கு,ஆண்டவனுக்கு,)அல்லாஹ்வுக்கு மட்டும்தான். நமது நெற்றி தொழ வேண்டி தரையில் படுவது (சஜ்தா)அல்லாஹ்வுக்கு மட்டும்தான். இதுதான் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை.

    பதிலளிநீக்கு
  25. சும்மா ஒருரூஊஊஊஊஊஊஉ ....!

    ஏண்டா இப்படி...!

    கருப்பா இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டா..!

    பொய் சொல்றவன்ல... கருப்பென்ன... செகப்பென்ன....!
    எப்புடி....?

    ஹா....! ஹா....! ஹா....!

    பதிலளிநீக்கு
  26. கறுத்த மச்சா...!
    கண்ணுக்குள்ள உங்கள வைச்சா..!

    ஹி....! ஹி.....! ஹி......!

    உங்க மச்சான நெனச்சா பாவமா இருக்கு....!
    ஐயோஓஓஓஒ....! ஐயோ....!

    பதிலளிநீக்கு
  27. மலிக்கா அருமை,அருமை..
    உங்க கணவரின் மீது உங்களுக்குள்ள அன்பை மிக அழகாக கவிதையில் சொல்லியிருக்கீங்க..அருமை...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. nidurali கூறியது...

    காலில் விழுவது "காக்கா" பிடிக்க .அது உண்மையின் வெளிப்பாடல்ல இப்பொழுது இது ஒரு சிலருக்கு காரியம் சாதிக்க மனிதன் காலில் விழும் காலம்.
    இறைவனை மிகவும் நேசிப்பவர் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டி அவனை வேண்டுவர். நாம் தொழுவது (இறைவனுக்கு,ஆண்டவனுக்கு,)அல்லாஹ்வுக்கு மட்டும்தான். நமது நெற்றி தொழ வேண்டி தரையில் படுவது (சஜ்தா)அல்லாஹ்வுக்கு மட்டும்தான். இதுதான் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை.//

    அதற்குதான் சொல்லிவிட்டேனே தந்தையே இறைவன் ”இறைவன் அனுமதித்திருந்தால்”. தான் அவன் அனுமதிக்கத ஒன்றை செய்வேன் என்றல்ல..

    கால்பிடித்து காக்கா பிடிப்பது மற்றவரின் தேவைகளுக்காக வேண்டுமெனில் இருக்கலாம் . நான் தொழுவது என்னவனுக்காகவே என் இறைவனை வேண்டிதான்..

    பதிலளிநீக்கு
  29. நிரூபன் கூறியது...

    கறுத்த மச்சானின் இனிப்பான நினைவுகளை உங்கள் கவிதை தாங்கி வந்துள்ளது.
    கறுத்த மச்சானின் மனசிற்குப் பிடித்தமான ஒவ்வோர் பண்புகளையும் அழகாக வர்ணித்துள்ளீர்கள்.//

    வாங்க சகோ தங்களின் அன்பான கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  30. Rathnavel கூறியது...

    கறுத்த மச்சானே-உன்
    கார்கால அன்பில் நான்
    கரைந்து போகவில்லை
    கனிந்து போகிறேன்


    அழகு கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    வாங்க அய்யா தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  31. காஞ்சி முரளி கூறியது...

    சும்மா ஒருரூஊஊஊஊஊஊஉ ....!

    ஏண்டா இப்படி...!

    கருப்பா இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டா..!

    பொய் சொல்றவன்ல... கருப்பென்ன... செகப்பென்ன....!
    எப்புடி....?

    ஹா....! ஹா....! ஹா....!//

    என்னாதிது. அப்ப சிகப்பாஉள்ளவங்க பொய் சொல்லுவாளா இருங்க இருங்க அண்ணிகிட்ட மாட்டிவிடுறேன்..அப்பதான் சரிவரும்..

    பதிலளிநீக்கு
  32. காஞ்சி முரளி கூறியது...

    கறுத்த மச்சா...!
    கண்ணுக்குள்ள உங்கள வைச்சா..!

    ஹி....! ஹி.....! ஹி......!

    உங்க மச்சான நெனச்சா பாவமா இருக்கு....!
    ஐயோஓஓஓஒ....! ஐயோ....//

    ஏன்சாமி மச்சான் பாவம். அவ்வளவு கொடுமையா பண்ணுறேன் அவுகளை. கொஞ்சமாத்தானே செய்வதா நெனக்கிறேன்.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  33. RAMVI கூறியது...

    மலிக்கா அருமை,அருமை..
    உங்க கணவரின் மீது உங்களுக்குள்ள அன்பை மிக அழகாக கவிதையில் சொல்லியிருக்கீங்க..அருமை...வாழ்த்துக்கள்..//

    வாங்க ராம்வி. வெளிபடுத்தும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது வெளிபடுத்திவிட்டால் இருவருக்கும் மனநிறைவாகுமில்லையா. ரொம்ப சந்தோஷம் தங்களின் அன்பான கருத்துக்கு..மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  34. அதெப்படித் தங்கச்சி? நீ அடுத்தத் தலைப்பு “மச்சான் மீது மயக்கம்” என்று தான் கவிதை யாத்திடுவாய் என்றே நினைத்தேன்; சத்தியமாக அது நிறைவேறியது கண்டு திகைத்தேன். உன் ஒவ்வொரு மன அசைவுகளும் எனக்குள் அறிய முடிகின்றது அன்புத் தங்கையே. நீ தாயகம் செல்வதால் இனி மச்சான் நினைவுகள் உன்னை வாட்டும் என்றும் அதனால் அடுத்து மச்சான் நினைப்பில் தான் கவிதைகள் புனைவாயோ என்று உன்னிடம் வினவலாம் என்று என் மனதில் தோன்றியதும் அதன்படியே மச்சானிடம் நீ கொண்டுள்ள மாறாத அன்பை மிகவும் உணர்வு பூர்வமாக வடித்து விட்டாய்; இக்கவிதைகளை மணம்கள் மற்றும் மனைவிகட்கு நகல் எடுத்து விநியோகித்தால் என்ன என்றும் எனக்கு ஓர் அவா; உன்னைப் போலவே எல்லா மனைவிகளும் தங்கள் கணவர்களுடன் மாறாத அன்புடன் ஆயுள் முழுவதும் இருக்க ஆளும் இறைவனிடம் என் துஆ


    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

    பதிலளிநீக்கு
  35. நிறைவான வாழ்வு என்றும் தொடர இறைவன் அருள்புரியட்டும்.

    //ஆயிரங் கனவுகளோடு
    அடியெடுத்து வைக்கவில்லை
    உன்னைக் கைப்பிடிக்கையில்//

    இதிலேதான் உங்கள் வாழ்க்கையின் வெற்றி இருப்பதாக நான் நினைக்கிறேன் மலிக்கா. எதிர்பார்ப்புகள் கூடும்போதுதான், ஏமாற்றங்களும் வரும். இல்லையா மலிக்கா?

    உங்களின் ‘போதுமென்ற மனமும்’ உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமே மலிக்கா இறைவன் அருள் நிலைக்கட்டும், இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  36. உங்கள் பதிவுகள் வார்த்தெடுத்த வரிகளாய் நிறைந்துள்ளது. என் பதிவின் பக்கம் வருவீர்களா?நேரமிருப்பின்..

    பதிலளிநீக்கு
  37. நீங்கள் கவிதை எழுதுவதிலும் கருத்துரைக்கு பண்போடு பதில் தருவதிலும் பார்க்கும்போது, உங்கள் பணிவும் பெருந்தன்மையும் காண்கிறேன் .உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்
    அல்ஹம்துலில்லாஹ்!
    The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
    Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

    பதிலளிநீக்கு
  38. அருமை அருமை

    பதிலளிநீக்கு
  39. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    கவிஞர் மலிக்காவுக்கு...!

    படித்தேன்...!
    படிக்கிறேன்.....!
    படித்துக்கொண்டே இருக்கிறேன்...!
    படிப்பேன்...!

    இப்படி...
    இக்கவிதையில்
    வரிகளின் வடிவங்களும்
    வார்த்தைகளின் கோர்வைகளும்
    வர்ணஜாலாமாய் கண்களுக்கும்
    வார்த்தைஜாலமாய் படிக்கும் மனதிற்கும் தெரிகிறது...!

    முற்றிலும்
    அமைதியாய் படித்துவிட்டு
    ஓர் நீண்ட கருத்துரை வரும்...!

    பணிச்சுமை...!
    மனச்சுமை.......!
    காலச்சுமை...........!
    காரணமாய்
    என் கருத்துரையை

    எனக்குளேயே
    என் மனதுக்குள்ளேயே
    கூட்டுப் புழுவைப் போல
    பின்னிக்கொண்டுள்ளேன்....!

    வண்ணதுப்பூச்சியாய்
    வானில்
    வட்டமடிக்க
    வெளிவருவேன் ஓர் நாள்...!
    அதுவரை
    நான் கூட்டுப்புழுவாய்தான்....!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  40. மாஷா அல்லாஹ்..!!
    இதேப்போல காலம் முழுவதும் இனைப்பிரியாமல் (மனதளவிலும்) வாழ வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!!வாழ்த்துக்கள்..!!வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
  41. இறைவன்
    எனக்கு அனுமதிக்கவில்லை
    ”இல்லையெனில்”
    நான்வாழும் காலந்தோரும்
    உன் காலடி தொழுவேன்
    என் இதயதுடிப்பு இருக்கும்வரை.


    awesome...! asalamu alaikkum..!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது