நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இவைகளின் காரணகர்த்தா எது!‏




தரணியில் பலயிடங்களில்
தலைவிரித்தாடுகிறது காமக்களியாட்டம்
களியாட்டத்திற்க்கு பலியாகிறது
தளிர்களின் உடல்களும் உயிர்களும்
பெண்மைகளின் மானங்களும் மென்மைகளும்

இளம் பிஞ்சுகள்
இளமை மொட்டுகள்
கன்னியர்கள்
கண்ணகிகள்
வயது வித்தியாசமில்லாமல்
வல்லூருகளின்  விளையாட்டில்
மானமும் உயிரும் மல்லுக்கு நிற்கிறது

நித்தம் நித்தம்
மோகத்தீயிற்க்கு இரையாகி
காமக்கொடுர கண்களில் சிக்கி
சிக்கிமுக்கி கல்லாய் கைகளின் மாட்டி
சின்னாப்பின்னாமாகி சிதைகிறார்கள்
சிலபல வேளை சின்னா பிணமாகிறார்கள்

கண்டனங்களும் போராட்டங்களும் 
நடந்துகொண்டேதானிருக்கிறது
ஆனால்
பெண்கள் காமத்தால் சுட்டெரிக்கபடுவதும்
பெண்மைகள் சூரையாடப்படுவதும் 
நாள்தோறும் நடந்தேறிக்கொண்டேதானிருக்கிறது

போர்களத்தில்கூட பூக்கள் அழிந்துவிடுகிறது
போரின் முடிவில் சில புதைந்துவிடுகிறது 
ஆனாலிந்த காமக்களத்தில் பெண்பூக்கள் 
பூக்கவும் முடியாமல் புதையும் முடியாமல்
புழுவாய் துடிக்கிறது,
துடிப்பது பொருக்காமல் சில துடிப்பும் அடக்குகிறது

இவைகளின் காரணகர்த்தா எது?
அதனை கண்டெறிந்து அறுத்தெறி!
அதனினும் மேலாக
இக்காரியம் செய்வோரின் உயிரை பறித்தெறி!
இனியும் இதுபோல் நடவாதிருக்க 
இதுவே சிறந்தவழி...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

3 கருத்துகள்:

  1. 10 நாளைக்கு முன் இதை தமிழ்குறிஞ்சியில் படித்தேன். உடன் வந்து உங்கலை பாராட்டனும் என்றிருந்தேன் சகோதரி. தங்களின் எழுத்தாற்றல் மிக அருமை. சிலருக்கே இது கைவந்த கலையாகும். இங்குவந்து பார்த்ததில் உங்கலுகு நிகர் நீங்கலாக இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்மா நெஞ்சார வாழ்த்துகிறேன்..


    தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எண்ணங்கள் ஊற்றாகட்டும்

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும் மேலுள்ளவைகளில் கொஞ்சம் எழுத்துப்பிழை. இப்போதுதான் தமிழெழுதிப்பலகுகிறேன்.

    --------------------------

    10 நாளைக்கு முன் இதை தமிழ்குறிஞ்சியில் படித்தேன். உடன் வந்து உங்களை பாராட்டனும் என்றிருந்தேன் சகோதரி.

    தங்களின் எழுத்தாற்றல் மிக அருமை. சிலருக்கே இது கைவந்த கலையாகும் இங்குவந்து பார்த்ததில் உங்களுக்கு நிகர் நீங்களாக இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்மா நெஞ்சார வாழ்த்துகிறேன்..


    தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எண்ணங்கள் ஊற்றாகட்டும்

    பதிலளிநீக்கு
  3. கவிதையில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையே...

    ஆனா...

    யார் கேக்குறாக...?


    இப்பல்லாம்...
    சேற்றில் புரளும்
    எரும மாடுமேலே மழை பொழிஞ்ச மாதிரி...
    என் மனமும்...

    அசிங்கங்களுடனே...

    ஓடிக்கொண்டிருக்கிறது... வாழ்க்கை...

    இன்றைய நாட்களை நினைத்தால்...

    பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

    “நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த
    நிலைக்கெட்ட மனிதர்களை
    நினைத்துவிட்டால்....” என்ற வரிகள்தான்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது