நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாடமானவன்!


படைத்தவனை பழித்துவிட்டு
தான்தான் படைத்தவனென்று
பறையடித்து திரிந்தவன்!

தன்னைவிட
பலசாலியே இல்லையென்று
தான்தோன்றியாய் நடந்தவன்!

அறிவற்ற எச்சமிவன்
ஆணவத்தின் உச்சமிவன்!

பேரழிவுகளை உண்டாக்கி
பேரானந்தம் கொண்டவன்!

மரணமே வராதென்று
மார்தட்டி அலைந்தவன்!

கொடுங்கோலின் மன்னனிவன்
கொடூரனின் பெயரோ ஃப்ரவுன்!

இவனின் கொட்டமடக்க எண்ணியே
இருகடலுக்கிடையில் - கோடு
உண்டாக்கினான் இறைவன்!

இவ்வுல மனிதர்களுக்கு
எச்சரிக்கை செய்யவே
இவனையே  பதப்படுத்தி பாடமாக்கினான்!

இவனின்  அட்டூளியங்கள் இவ்வுலமறியவே
இறந்தபின்பும்
இவனுடலழியாது பாதுகாக்கிறான்…அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

 1. அநியாக்காரர்கள் அழிந்தேபோவார்கள். இவன் அழிக்கப்படும் நமக்கு பாடமாய்.

  மிக அருமையாய் சொல்லியிருக்கீங்க சகோதரி மாசால்லாஹ்..

  ஹிதாய்த்துல்லா.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கவிதை நன்றாக உள்ளது.

  ஆஷூரா ஞாபகமாக நானெழுதிய கவிதை இங்கே.
  http://www.satyamargam.com/2049

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நினைவூட்டலுக்கு மிக்க நன்றி சகோ.

  இறையச்சமூட்டும் இது ஒரு நிறைவான கவிதை. வாழ்க்கையும் பாடமானது ஃபிர் அவுனின் உடலும் பாடமானது. படிப்பினை பெற்றோர் எத்தனை பேர்?

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. பாடமானான். மிக அருமையான கவிதை,சொல்லாடல் சிறப்பு வாழ்த்துக்கள் மலிக்கா........
  சேக்கனா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது