நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணத்தருவாயிலும்!

 
 
எனது கம்பீரம்
மரணத் தருவாயிலும்
மனிதருக்காக மண்டியிடாது
எனது தலை!
 
என் தீண்டலில்
உயிர்பிக்கும் ஜோதி
என் தீயில்
உருக்குலையும் பல ஆவி!
 
எனது தலைகவசமே
என்னை அழிக்கும் ஆயுதம்
அதனால் நான்
என்றுமே நிராயுதம். 
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

”ப்பூ”




நிலவுமில்லாமல் ஒளியுமில்லாமல்
இருள் இரவை கவ்விக்கொண்டிருந்த நேரம்
நடுநிசியில் நாயொன்று ஊலையிட
நெடுநெடுயென வளர்ந்திருந்த
தென்னை கீற்றுக்கிடையிலிருந்த
தேவாங்குகள் திருத்திருவென விழித்திருக்க

ஊரடங்கிடந்த வேளையில்
உரத்த குரலெழுப்பி
உளறத் தொடங்கியபடியே
ஊரை வலம் வந்தது ஒரு உருவம்

கேட்பாரற்று பார்ப்பாற்று கிடக்கிறேன்
கேடுகெட்ட இம்மனிதர்களுக்கிடையில்
நாதியற்று நான் தங்கிட வீடற்று
நடுவீதிகளில்  நிற்க்கிறேன்

கந்தல் துணி அணிந்ததினால்
காரித் துப்பப்படுகிறேன்
நாலுகாசு இல்லையென்று
நாயைபோல நடத்தப்படுகிறேன்.

வேடிக்கையான உலகினிலே-பல
வேடிக்கைகள் காண்கிறேன்
வேசம் கண்டும் மோசம் கண்டும்
வெடுக்குச் சிரிப்பு சிரிக்கிறேன்

வேசிகளும் தாசிகளும்
வீட்டுத் தலைவியாக
வேசம் கட்டி நடிக்கிறார்
ஊரையடிச்சி உலையில்போட்டு
வட்டியோடும் குட்டியோடும்
வீட்டுதலைவனென்று  நடக்கிறார்

நாலுகாசு கையிலிருந்தா
நாயைக்கூட மதிகிறார்
நாறிப்போன மனிதரெனத்தெரிந்தும்
நட்புகொண்டு  அலைகிறார்

உள்ளே அழுக்கு வெளியே மினுக்கி
உலகிற்காக வாழ்கிறார்
நாளும் வேசம் பொழுதும் மோசம்
நாணிக்கோனி நடிக்கிறார்

வீதியிலிருக்கும் என்னைப்பார்த்து
விதியே வேதனையே என்கிறார்
வீட்டுக்குள்ளே இருந்தபோதும்
வீட்டுக்கு விலக்காய் கிடக்கிறார்

புத்தி சரி யில்லையென்று
என்னைக் கண்டு
பயந்து விலகி போகிறார்

பாவம் புரியவில்லை
புத்தியே அவருக்கில்லையென்பதை
புரிந்துகொள்ள மறுகிறார்
இந்த பூமி உருண்டை என்பதை மறக்கிறார்

“ப்பூ”

இந்த வாழ்க்கை
போலியென்பதையும் உணராது தவிக்கிறார்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

ஜாக்பாட் அடித்த கவிதை

 

அன்பின் நெஞ்சங்களுக்கு. 
எனது கவிதை ஒன்று ஜாக்பாட்டில் படிக்கப்பட்டு படிக்கப்பட்டுக்கவிதையின் படிவத்தில் நடிகை சிம்ரனின் ஆட்டோகிராப்பும் வாங்கியதாம்.. சந்தோஷம்..


 இதனை ஜாக்பாட்டில் வாசித்த திருமதி சித்ரா தினாகரன் இன்றுகாலை போன் செய்து சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

எனது கவிதையான “முதியோர் இல்லம்” 9-2-2009 அன்று தமிழ்குடும்பம் டாட்காம்மில் வெளிவந்திருந்தது. அதை திருமதி சித்ரா தினகரன் போனமாதம் படித்துவிட்டு. அதனை தான் கலந்துகொண்ட ஜெயா டிவி யில் ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வாசித்துள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது என சிம்ரன் உள்பட அங்கிருந்தவர்களும் பாராட்டினார்களாம்

கடந்த ஞாயிறு அன்று ஒளிப்பரபானதில் [நாந்தான் பார்க்கமுடியவில்லை கடை திறப்பு அன்றுதானே] அவர்களின் அப்பார்மெண்டில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்டியதாக சித்ரா சொல்லி சந்தோஷப்பட்டார்கள். அதனோடு தான் கொண்டு சென்றிருந்த கவிதை பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கி லாமினேஷ்ன் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார்கள்..


//மல்லிகா மேடம்  முதியோர் இல்லம் கவிதை   பேப்பர் மேலே சிம்ரன்  ஆடோக்ஹ்ரப் வாங்கி அதை லாமினட்சியன் செய்துவிட்தின்  பயனாக என்றும் யாபகம் இருக்கும் .நீங்கள் அவசியம் ஜாக்பாட் 513 எபிசொட் பாருங்கள்

//மேடம் நான் உங்கள் கவிதை ஒன்றை ஜெயா T V  ஜாக்பாட் ப்ரோக்ராமில் படித்தின் சிம்ரன் சொன்னார் மிகவும் நன்றாக இருக்கு என்றர். நான் தமிழ்குடும்பம்.காம் இல் இருந்து எடுத்தது என்று கூறினேன் .NEENGAL  ஜாக்பாட் ஜெயா T V 9.9.12 TIME  8.9P.M.PARUNGAL  ///



இது சித்ராவின் மகள் ஐஸ்வரியா வரைந்த டிராயிங்


எனது கவிதை அவருக்கும் பிடித்து அதனை பலருக்கும் பிடிக்கும்படி செய்த சித்ரா தினகரன் அவர்களுக்கும் எனது கவிதையின் தாயிடமான தமிழ்குடும்பத்திற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

உங்களுக்கான சேவையில் நாங்கள்.



அன்பு நிறைந்த நெஞ்சங்கள் அனைவர்களுக்கும் நேசம் நிறைந்த மனதுடன் உங்கள் அன்புடன் மலிக்காவின்  அழைப்பிதல்

வரும் 9-9-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில்எங்கள் ஊர் முத்துப்பேட்டை திருத்துரைப்பூண்டி ரோட்டில் அமைந்துள்ள
மரூஃப் காம்ப்ளக்ஸில்   ”பிஸ்மி” ஆன்லைன் சென்டர்  என்ற நிறுவனத்தின் திறப்புக்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம். இதனை நாங்கள் நேரில்வந்து தந்ததுபோல் நினைத்துக்கொண்டு  தங்களின் அன்பான வருகைதனையும். துஆக்களையும் பிராத்தனைகளையும்  எந்நாளும் எதிர்பார்க்கிறோம்..

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வருக! 
வாருங்கள் வரவேற்கிறோம்!
வாழ்த்துங்கள் வளர்கிறோம்!
தேவையை சொல்லுங்கள்!
சேவை செய்யக் காத்திருக்கிறோம்!...

என்றும் உங்கள்
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
மற்றும்
முகமது ஃபாரூக்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சிந்திக்க சில நொடிகள்




உள்மெளனங்களை 
உதறிக்கொண்டே 
மெல்லிய புன்னகை பூத்தபடி 
மெல்ல அன்னார்ந்து பார்க்கிறேன்!
சூழ்ந்திருந்த மேகங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாய் நகர 
ஒளிந்திருந்த நிலவின் வெளியே 
ஒரு ஒளிவட்டம் தெரிகிறது!

வானத்தை  நிறைத்திருந்த 
விடிவெள்ளிகள் 
மின்னி மின்னி கண்களுக்கு 
மகிழ்ச்சி விருந்தளிக்கிறது!

விருட்டென்று ஒரு வெள்ளி 
வானத்தைவிட்டு வெளியேறி 
பூமியை நோக்கி  
பொசுகென்று விழுகிறது!
ஒற்றை நிலவுக்கு  
இடைவெளிவிட்டு  
கொஞ்சம் தள்ளி ஒரு வெள்ளி 
நிலவை ரசித்தபடி தொடர்கிறது!
தூண்களே இல்லாமல்  
ஒரு வானம் 
தூய்மையாக காட்சி தந்து-பற்பல 
புதுமைச் செய்திகள் அளிக்கிறது!
அந்தரத்தில் வசப்படுத்தப்பட்ட 
புவியீர்ப்பு சக்திகளை 
பூமிக்கும் அளித்தபடி 
கோல்களும் சுழல்கிறது!
எத்தனை எத்தனை விந்தைகள் 
அத்தனையும் வியக்குபடி 
அகிலமுழுவதும் அருளாளனின்  
அருள்கொடைகள் நிறைந்தபடி!
எல்லாம் கண்டு களிக்க 
ஏகனின் அற்புதம் கண்டு வியக்க 
எனக்கிரு கண்கள் படைத்த 
இறைவனே உனை போற்றுகிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது