நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாரடா நீ...

 
அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எங்கிருந்து வந்தாய்
என்னில் வந்து நுழைந்தாய்
என் தொப்புள்கொடி பந்தமா?-இல்லை
என் தூராத்து சொந்தமா?

எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
எனக்காக துவழ்கிறாய்
என்னிலிருந்து யோசிக்கிறாய்
என்னைமட்டும் நேசிக்கிறாய்

எது நம்மை இணைத்ததென்று
இன்றளவும் யோசிக்கிறேன்
இணைத்தது எதுவென்றபோதும்
நம்மை பிரிக்காத
வரமொன்றை யாசிக்கிறேன்

என்னை நீ நேசிக்க
உன்னை நான் சுவாசிக்க
ஒட்டும் உறவும் இல்லாமலே
ஒன்றாகி போனோம்
ஒளிவீசும் ஒளியாகி
உயிர் நட்பாக ஆனோம்...

முக்கியசெய்தி
இன்று மாலை 6.30 மணிக்கு
துபையில் தந்தை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின்
தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டுவிழா
சிவ் ஸ்டார் பவன்.கராமாவில் நடைபெற இருக்கிறது
அனைவரும் வருக
கவிநயம் பருகுக.. 

அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க.. அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

27 கருத்துகள்:

 1. அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க..


  ....எனக்கு முன்பு ஒரு முறை, அப்படி காணாமல் போய் விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வந்தது. அதே போல் தான் உங்களுக்கும் நடந்து இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியல. :-(

  பதிலளிநீக்கு
 2. கவிதைகள் அழகா படங்கள் அழகா? இல்லை, எழுதுபவரின் மனசு அழகு எனும் சான்றளிக்கும் படைப்புக்கள் மலிக்கா.., இன்னும் நிறைய உண்டு நீங்கள் சாதிக்க, இன்னும் நிறைய நற்பேறுகளை அடைவீர்கள்.. இனிய வாழ்த்துக்களும் அன்பும்!!

  வித்யாசாகர்

  பதிலளிநீக்கு
 3. அக்கா உங்க பாலோயர் பட்டியலை நான் எடுக்கல நான் பாக்கவேயில்ல நானே இப்பதான் வந்தேன்... ஹிஹி

  பதிலளிநீக்கு
 4. வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள் அக்கா

  பதிலளிநீக்கு
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 6. கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி செளந்தர்..

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள்..

  14 ஏப்ரல், 2011 9:17 am
  நீக்கு
  பிளாகர் Chitra கூறியது...

  அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க..


  ....எனக்கு முன்பு ஒரு முறை, அப்படி காணாமல் போய் விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வந்தது. அதே போல் தான் உங்களுக்கும் நடந்து இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியல. :-(//

  அப்படியா ஆனா நாளைந்து நாளாவுல்ல காணோம் என்னான்னே புரியலையே

  கணினிப் புலி யாராவது சொன்னாதேவலை..

  நன்றி சித்ரா

  பதிலளிநீக்கு
 8. //வித்யாசாகரின் எழுத்துப் பயணம் கூறியது...

  கவிதைகள் அழகா படங்கள் அழகா? இல்லை, எழுதுபவரின் மனசு அழகு எனும் சான்றளிக்கும் படைப்புக்கள் மலிக்கா.., இன்னும் நிறைய உண்டு நீங்கள் சாதிக்க, இன்னும் நிறைய நற்பேறுகளை அடைவீர்கள்.. இனிய வாழ்த்துக்களும் அன்பும்!!

  வித்யாசாகர்//

  வாங்க வித்யாசாகர். தங்களின் எழுத்துநடைக்குமுன்னால் இதெல்லாம் சாதாரணம்.

  தங்களின் அன்பிற்கினிய வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நெஞ்சார்ந்த நன்றிகள் மகிழ்வோடு..

  பதிலளிநீக்கு
 9. // isaianban கூறியது...

  அக்கா உங்க பாலோயர் பட்டியலை நான் எடுக்கல நான் பாக்கவேயில்ல நானே இப்பதான் வந்தேன்... ஹிஹி//

  இதுக்குமுன்னால வந்தப்ப ஆட்டபோட்டுவிட்டு போயிட்டீகளோன்னு நெசச்சேன்.

  ஆனா ஒரு ஆளுமேல டவுட்டா இருக்கு அவா ஊருக்கு போயிருக்கா வந்துகிடட்டும்..

  பதிலளிநீக்கு
 10. // ராமலக்ஷ்மி கூறியது...

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா.

  மிக்க நன்றி மேடம்
  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள்.

  //எது நம்மை இணைத்ததென்று
  இன்றளவும் யோசிக்கிறேன்
  இணைத்தது எதுவென்றபோதும்
  நம்மை பிரிக்காத
  வரமொன்றை யாசிக்கிறேன்//

  கவிதையில் உணர்வினைப் பிரதிபலிப்பதோடு, காரணமேதுமின்றிப்(தன்னலமற்று) பழகும் நட்பினை அழகாக வெளிப்படுத்தும் வண்ணமும் இவ் வரிகள் அமைந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  நேற்றைய தினம் கூகிள் செய்த திருவிளையாடல் தான் இது. எனக்கும் என் பாலோவர்ஸ் நேற்று காணாமற் போய் விட்டது. மீண்டும் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது..

  dashboard இற்கு சென்று Design இனை அழுத்தி அதில் உங்கள் இடது கைப் பக்கத்தில் தெரியும் Add a gadget இனுள் நுழைந்து Followers இனை இணைத்தால் சரியாகி விடும்.

  பதிலளிநீக்கு
 13. அக்கா என் வலையிலும் பாலோயர்ஸ் லிஸ்ட் காணோம் :((
  என்ன பண்றதுன்னு தெரியலையே

  சித்ரா சகோ சொன்ன மாதிரி ரெண்டு நாள் கழித்து வந்திடுமா வந்திடுமா..??!!!

  பதிலளிநீக்கு
 14. என்ன பாலோவர்ஸையுமா காககா தூக்குது...

  என்ன சதியோ தெரியலை ,இருங்க ஒருக்க என் பிளாக்க பார்த்துட்டு வாரேன்

  ஆ இருக்கு , ஏதாவது இடம் பத்தாம போயிருக்கும் வந்துடும்

  கவிதை யும் படத்துடன் அசத்தல்
  புத்தக வெளிய்யீடா, ம்ம் என்ன செய்ய.. முடியுமா?

  பதிலளிநீக்கு
 15. கவிதை அசத்தல்....

  பாலோவர் பிராப்ளம் நிரூபன் சொன்னது போல செய்யுங்கள்...

  புத்தாண்டு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 16. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  அழகான கவிதைக்கும், அருமையான படத்திற்கும் பராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துக்கள்..அக்கா.. கவிதை வரிகளும் படமும் அருமை

  பதிலளிநீக்கு
 18. எங்கிருந்தோ வந்தாய்!
  காற்றாய் வந்து கலந்தாய்!
  என்னை தொரத்தாத சொந்தமாய் என்னை தொடர்ந்து வந்தாய்!
  எந்த தொடர்பும் இல்லாத எனக்கு தொடர்பாக வந்தாய்!
  என் எண்ணம் காட்டும் கண்ணாடி நீ!
  ஆமாம் என்னை எனக்கு காட்டிய மாய கண்ணாடி!
  நம்மை இணைத்த பொழுதுகளே என் வாழ்வின் மிகமிக அதிர்ஸ்டமானவை.
  நாம் இப்படியே உனக்கு நான்
  எனக்கு நீ நட்பே உறவாய் சாகும் வரை இருந்திட இறைவன் வரம் தரனும்.

  பதிலளிநீக்கு
 19. இனிய தமிழ் புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்..

  சங்கர்.

  பதிலளிநீக்கு
 20. பதிவுல உறவைச் சொன்னதுபோலத்தான்
  நான் புரிந்துகொண்டேன்
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. என்னது ஃபால்லோவரை காணவில்லையா?

  காவல் துறையிடம் புகார் கொடுத்திர்களா?

  கண்டு பிடித்து தர லஞ்சம் எதுவும் கேட்டார்களா?

  எஃப் ஆர் ஐ.பதிவு செய்யும் போது நல்ல நினைவுடன் போலிசார் இருந்தார்களா?

  கலக்கல் கவிதை வாழ்த்துக்கள்.

  எனது வாகனம் எருமை மாட்டைக் கானோம் கொஞ்சம் இருங்கள் போலிஸ் ஸ்ட்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துட்றேன்.

  பதிலளிநீக்கு
 22. மலிக்காக்கா,

  நட்பைப் பற்றிய அழகான கவிதை. அல்ஹம்துலில்லாஹ். நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. :(

  பதிலளிநீக்கு
 23. ///எந்தத் தொடர்புமில்லாமலே
  எனக்குள் உறைந்துள்ளாய்
  எனக்காக துவழ்கிறாய்
  என்னிலிருந்து யோசிக்கிறாய்
  என்னைமட்டும் நேசிக்கிறாய்/////

  கவிதை நல்லாத்தான் இருக்கு...!

  யாருங்க அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது????????

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள்.

  //எது நம்மை இணைத்ததென்று
  இன்றளவும் யோசிக்கிறேன்
  இணைத்தது எதுவென்றபோதும்
  நம்மை பிரிக்காத
  வரமொன்றை யாசிக்கிறேன்//

  கவிதையில் உணர்வினைப் பிரதிபலிப்பதோடு, காரணமேதுமின்றிப்(தன்னலமற்று) பழகும் நட்பினை அழகாக வெளிப்படுத்தும் வண்ணமும் இவ் வரிகள் அமைந்துள்ளது.

  14 ஏப்ரல், 2011 11:09 am
  நீக்கு
  பிளாகர் நிரூபன் கூறியது...

  உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  நேற்றைய தினம் கூகிள் செய்த திருவிளையாடல் தான் இது. எனக்கும் என் பாலோவர்ஸ் நேற்று காணாமற் போய் விட்டது. மீண்டும் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது..

  dashboard இற்கு சென்று Design இனை அழுத்தி அதில் உங்கள் இடது கைப் பக்கத்தில் தெரியும் Add a gadget இனுள் நுழைந்து Followers இனை இணைத்தால் சரியாகி விடும்.//

  முதலில் தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

  தாங்கள் சொன்னதுபோல் செய்து பார்த்துவிட்டேன் நிரூபன் வரவில்லையே.

  ஏற்கனவே காணமல் போய் சுமஜ்லாக்கா கூகிள்மூலம் எடுத்து அதை ஹெச் டி எம்ல் கோடாகத்தான் இதுநாள்வரை வைத்திருந்தேன் அதையும் தற்போது காணோம்.
  ஹெச் டி எம் எல் கோடு இருக்கு ஆனா அது வேளைசெய்யவில்லை இப்ப என்ன செய்வதுன்னே புரியலையே..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது