நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
நட்பே நட்பே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பே நட்பே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உறவில்லா ஒரு உறவு!


உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள்கொடி வழி வந்தல்ல
நட்புக் கிளையில் வளர்ந்தது
உறவில்லாமல் உருவான
ஒரு உன்னத உறவு

அக்கொடி வெட்டியபின்பே
வளர்கிறது அளவுகடந்த பாசம்
இக்கொடி வளர்வதிலேதான்
உயிர் உருகித்தொடர்கிறது  நேசம் 

பள்ளியில் உருவானாலும்
பாதையில் உருவானாலும்
தொண்டு தொட்டு நீளவே
நீயும் நானும் விரும்புகிறோம்

இடையில் இடைவெளியோ
எப்போதாவது இடைவெளியோ
அதை விரும்புவதில்லை
ஒருபோதும் நீயும் நானும்!

காற்றடிக்கும் திசைகளில்
மண்மணக்கபெய்யும் மழைகளில்
உனக்கும் எனக்குமான நட்பினை
ஒரு நொடியாவது நினைவில்
வந்துபோகமலிருப்பதில்லை!

காலசூழலில் காணமல்போகும் சில 
கனவுகளைப்போல்
கண்காணா தூரங்களில்
மறைந்துவாழ்கிறோம் அதுதானே தவிர 
மறந்து வாழ்வதில்லை!

வாழை !
வாழையடி வாழையாக
வாழாமல் வீழ்வதில்லை..




அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

யாரடா நீ...

 
அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எங்கிருந்து வந்தாய்
என்னில் வந்து நுழைந்தாய்
என் தொப்புள்கொடி பந்தமா?-இல்லை
என் தூராத்து சொந்தமா?

எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
எனக்காக துவழ்கிறாய்
என்னிலிருந்து யோசிக்கிறாய்
என்னைமட்டும் நேசிக்கிறாய்

எது நம்மை இணைத்ததென்று
இன்றளவும் யோசிக்கிறேன்
இணைத்தது எதுவென்றபோதும்
நம்மை பிரிக்காத
வரமொன்றை யாசிக்கிறேன்

என்னை நீ நேசிக்க
உன்னை நான் சுவாசிக்க
ஒட்டும் உறவும் இல்லாமலே
ஒன்றாகி போனோம்
ஒளிவீசும் ஒளியாகி
உயிர் நட்பாக ஆனோம்...

முக்கியசெய்தி
இன்று மாலை 6.30 மணிக்கு
துபையில் தந்தை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின்
தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டுவிழா
சிவ் ஸ்டார் பவன்.கராமாவில் நடைபெற இருக்கிறது
அனைவரும் வருக
கவிநயம் பருகுக.. 

அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க.. 



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நட்பென்பது


வலுவான நட்பு
விலகிநிற்குமா
பிரியமான நட்பு
பிரியத்துணியுமா

வார்த்தையென்னும்
நூலெடுத்து
அன்பெனும் பந்தம்கோர்த்து
நட்பாய் நுழைந்த பாசம்

நூல்கட்டிய பட்டமாய்
வான்நோக்கிப்போகுமா -இல்லை
வார்த்தைகளை மரணிக்கசெய்து
மனம் மெளனமாகுமா

நட்பென்பது கலங்கமில்லாதது
கலங்கியப்பின் அது நட்பாகாது

உண்மை நட்பென்றும்
ஊமையாகிப்போகாது
உயிர் விலகும்வரை
நட்பைவிட்டு விலகாது..
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காற்றோடு கலந்து





அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே
காற்றா”டி”நீ இத்தனை சுகந்தம் உனக்குள் என்று

இதோ கடல்கடந்துவந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
சுற்றிவரும்காற்றை சுவாசித்தபின்
நீவிடும்மூச்சுக்காற்று எனைவந்து சேர்வதால்

பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்பட்டுத்தோள்களை உரசும்போது நீ
என் தோளில் சாய்வதுபோல் உணர்கிறேன் –இதே
நிலையில்தான்  நீயும் எனை  நினைப்பாய் என்று நம்புகிறேன்

குளிர்காற்று என் கைகளுக்குள் குளிரூட்டும்போது
நீ என் கைகோர்த்து நடக்கிறாய்என்றெண்ணி என்கைகளை
இயல்பாகவே இறுக்கிக்கொள்கிறேன் -இதே
உணர்வைதான் நீயும் உணர்வாய் என நினைக்கிறேன்

அனல்காற்று அடிக்கும்போது நீ என்மேல்
கொஞ்சம் கோபம் படுகிறாய் என
நானும் முகத்தை திருப்புகிறேன் கொஞ்சும் கோபமாய்-இதே
நிலமைதான் அங்கும் என எண்ணிக்கொள்கிறேன்

சூராவளிக்காற்று சுழண்டு வீசும்போது
நான் தவறு செய்துவிட்டேனோ
என நினைத்துக்கொள்கிறேன்-இதே
நிலவரம்தான் அங்கும் என எண்ணம் கொள்கிறேன்

துள்ளித்திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே அயல்நாட்டில் வசிக்கிறேன்

ஆன்மாவிற்குள் ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே அருகே நீ இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு ஆறுதல்சொல்கிறேன்

எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்
அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி
சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்

காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..

நட்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நட்பான உறவு

Free Myspace Glitters @ GlitterUniverse.com


தோழமையே தோழமையே
தோள்கொடுக்கும்
தோழமையே
உனைபார்த்து நாளாச்சி
அதனால மனபாரம்
கூடிப்போச்சி

ராக்கால வானமாய்
மனம் மூட
கறுத்தமேகமாய்
முகம் சோம்ப

இடிசத்தம்போல்
இதயத்திற்க்குள் இன்னல்
மின்னல்வந்து கண்ணுக்குள்
மின்ன
வான்மழையை எதிர்பார்த்த
வாடிய பயிராய்
உன்வரவை
எண்ணி எதிர்பார்த்திருக்கிறேன்

கறுத்தமேகம் கொட்டிடுமா
மழையை
மூடியவானம் தூறிடுமா
தூறலை

மனதிற்குள்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து
தாகித்து நிற்கிறேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் கொஞ்சம் தருவாயா..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பறந்தன பறவைகள்




ஒரு மரத்துக்கிளிகளாய்
ஒரே கூரையின்கீழ் வாழ்ந்த எங்களை

ஒரே ஒரு நாளின் மின்சாரத்துண்டிப்பு
ஒவ்வொரு மூளையில் தள்ளிவிட்டது

பாரதவிலாஸாய் கூடியிருந்த நாங்கள்
இப்பொழுது ஆளுக்கொகொரு
பக்கமாய் பிரிந்துவிட்டோம்.

கடல்கள் கடந்துவந்த எங்களுக்குள் ஓர்
பாசப்பிணைப்புகள் கண்கள் பார்த்து வார்த்தைகள் கோர்த்து-
மனங்களை இணைந்த மகத்தான நட்புகள்

சிலநேரங்களில் பாஷைகள் புரியாதபோதும்
அகிலத்துக்கே புரிந்த பாஷையான- சிரிப்பும்
சைகைகளும் எங்களை இறுக்கி பிணைத்தன

பாலைவன ரோஜாக்களாய் பகிர்ந்துகொண்ட
பதிவுகள்தான் எத்தனை எத்தனை

சட்டென்று துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால்
மனங்கள் சஞ்சலங்களுக்கு ஆளானது

திசைகள் மாறியபோதும் எங்களின்
நினைவுகள் மாறிடாது

நேரங்கள் கிடைக்கும்போது ஒருநொடியாவது
கண்டுவந்துவிடனும் என எங்களுக்குள் கண்டிசன்

காலங்கள் தரும் எத்தனையோ மாற்றங்கள்
அதில் மாறாதது மாற்றம் என்ற ஒன்றுமட்டுமே

அந்த மாற்றம்போல்தான் ”நட்பும்”


அன்புடன் மலிக்கா



இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது