நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
பதிவுலகமும்.நானும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகமும்.நானும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தற்பெருமையில்லை பேரானந்தம்.



சந்தோஷம், மகிழ்ச்சி இரண்டுக்கும் வழிவகுத்த இறைவனுக்கே புகழனைத்தும்.

எனது எழுத்துகளுக்கு கிடைக்கும் எந்த ஒரு நன்மையான விசயமானாலும் அது இறைவனைச்சார்ந்ததே, அப்படியான சந்தோஷங்கலையும் மகிழ்ச்சியையும் தரும் இறைவனை நேசிப்பதில் பெருமிதம்கொள்கிறேன்.

தடாகம் நடத்திய சர்வதேசபோட்டியில் முதன்மைக்கு கிடைத்த கவியருவி பட்டம். இலங்கையிலிருந்து கூரியரில் வந்தது. அளவில்லா மகிழ்ச்சி, இந்த பட்டத்தை அளித்த தடாகம் வட்டத்திற்க்கும் அதன் தலைவி
கலைமகள் ஹிதாயாரிஸ்வி ராத்தா  அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

மேலும்

முகநூலில் கவிதை வயலின் 100 வது கவிதையான எனது கவிதை சிறப்பு பாராட்டுப்பெற்றது சந்தோஷத்தை தந்தது. கவிதை வயலை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் சகோ றாபி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சந்தோஷம் மகிழ்ச்சி இரண்டும் கலந்த கலவையாக அதே நேரத்தில் நெகிழக்கூடிய விசயமாக என்னைப்பற்றிய சிலவரிகள்
அதிரை அருட்கவி தாஹா அவர்கள் அதிரை நியூஸ் பேட்டியில் என்னைப்பற்றி  ”பிறை”யெனசொல்லியிருப்பது  நெகிழ்வைத் தருகிறது.
அதிரை திரு கவிஞர் தாஹா [மாமா] அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்.

அதுமட்டுமல்லாது, என்வலைதளைங்களை அன்றாடம் பார்வையிட்டு நான் எழுதுபவைகளை ரசிப்பதோடுமட்டும் நின்றுவிடாது அதனை உள்வாங்கி. என்னை பலதளங்களின் அறிமுகப்படுத்துவது, குறிப்பாக வலைச்சரம் என்ற வலைதளத்தில் , அடிக்கடி  பிற உறவுகளால்,பிறமக்களுக்கு  நான் அறிமுகப்படுத்தப்படுவதுகண்டு ஆனந்தப்படுகிறேன். என் எழுத்துகளுக்கு மூலமே என்னை யாரென்று அறியாமலே என் எழுத்துகளை உள்வாங்கி என்னை ஊக்கப்படுத்தும் இணையதள நெஞ்சகள்தான் அதிகம்.

என்னைப்பலருக்கு தெரியப்படுதியிருக்கு எனது எழுத்து அதை அறியும்போது அழுதேவிடுகிறேன், அப்படியான பலநிகழ்வுகளில் ஒன்று கீழக்கரை
தாசீம்பீவி மகளீர் கல்லூரி சுமையா தாவுத் அவர்களை நான் சந்தித்தபோது ஏற்ப்பட்டது, அதேபோன்று கடந்த 20 நாளைக்கு முன்பு  எதாச்சையாக அறிமுகமானபோது பேசிகொண்டேயிருக்கையில் புத்தக ÷செல்பில் ஜின்னாஹ் வாப்பாவின் புத்தகம் இருப்பதுகண்டு இது காப்பியக்கோ புத்தகமாச்சேனு எடுத்தப்ப. உங்களுக்கு தெரியுமா இவர்களை என அவர்கள் வியக்க, ம் தெரியுமேன்னு சொன்னப்ப, அட நீங்கதான் அந்த நீரோடை மலிக்காவா, நீங்கதானா அதுன்னு ஆச்சர்யத்தோடு சந்தோஷம் கலந்து  உங்களைதான் பார்க்கனுமுன்னு இருந்தேன்மா, ஜின்னா வாப்பா சொல்லியிருக்காங்க என்று ,எனது அண்ணனிடமும் மச்சானிடம் என்னமா எழுதுறாங்கன்னு என்னைப்பற்றியே வியந்து  கூறியது சந்தோஷத்திலும் சந்தோஷத்தை தந்தது
அப்படியான சந்தோஷத்தை தந்தவங்க வேற யாருமில்லை,
சென்னை நியூகாலேஜ் Associate professor, தமிழ்மாமணி, செந்தமிழ் செம்மல்,கவிச்சுடர், Dr, முகம்மது மரைக்காயர் அவர்கள்தான், ஆக என் எழுத்துகளால் எனக்கு நிறைய சொந்தங்களும், நட்புகளும், கிடைக்கின்றன

இப்படியான ஓர் உன்னத எழுத்தை வழங்கிய இறைவனுக்கு எனது சிரம் பணிந்த வணக்கங்கள் எந்நாளும்.
எல்லாம் வல்ல இறைவனின் விதிமீறல்கள் தாண்டாது அதிரைக்கும் முத்துவிற்க்கும் பெருமை சேர்க்கும்விதமாகவும், எனது எண்ணங்களை தெளிவாக்கி அதனை பிறர் தெளியும்வண்ணமாகவும் எடுத்துரைக்கவும் எனது எழுத்துகள் நீரோடையாய் ஓட எல்லாம் வல்ல இறைவனை மனமுருகிவேண்டுகிறேன்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

போங்கப்பா நீங்களும் உங்க ஓட்டும்.



என்ன இப்படி சொல்றேனு பார்க்கிறீங்களா! ஆமாப்பா பலயிடங்களில் பலரின் ஆதங்கப் பதிவைப் பார்த்தேன். சிறந்த எழுதுக்களுக்கு மதிப்பில்லாததுபோல் அங்கே கருத்துக்களோ ஓட்டுக்களோ பதிவாவதில்லை. ஆங்காங்கே ஓடி ஓடி பலருக்கு கருதிட்டால் சிலர் போய் கருத்திடுகிறார்கள் என்ற ஆதங்கமும். பதிவுலகில் தங்களுக்குள் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்குள் மட்டுமே ஓட்டையும் கருத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையாவும் இருக்கலாம்.

தன் உணர்வுகளையும். சோகம் சந்தோஷம் குடும்பம் நட்பு. என அனைத்தையும் பகிருமிடமாக பதிவுலகமிருப்பதால் இங்கும் ஓர் பலத்த எதிர்பார்ப்பு இருகிறது.நம் எண்ணங்களுக்கு கருத்துக்கள். மற்றும் ஓட்டுக்கள் மூலம் அங்கீகரிக்கபட்ட வேண்டுமென நினைக்கிறோம். அது தவறில்லை. ஆனால் ஓட்டும் கருத்தும் மட்டுமே அதை தீர்மானிப்பதில்லை என்பதையும் உணரவேண்டும்.அப்படிப்பார்தால் பலபலருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவேயில்லை.நேரம்கிடைதால் பட்டியலிடப்பார்கிறேன்.

கூகில் மூலம் நிறைய தளங்களுக்கு சென்றுள்ளேன். அப்பப்பா என்ன அருமையான கவிதைகள்.மற்றும் படைப்புகள் பலயிடங்களில் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா? ஆனால் அங்கே ஓட்டுபெட்டியும் கருத்துப்பெட்டியும் காலியாகவேயிருக்கின்றன. சிலதுகளில் ஒன்றிரண்டு கருத்தும் ஓட்டும் உள்ளன. அதற்காக அதெல்லாம் நன்றாகவேயில்லை அவைகளெல்லாம் படைப்புகளேயில்லையென ஆகுமா?

ஓட்டும் கருத்தும்   படைப்பவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்காகதானே. இவைகள் மட்டுமே படைப்பாளர்களை உருக்குவாக்குவதில்லை.
அதையுணர்ந்து படைப்பவர்கள் தங்கள் படைப்புகளை தொடருங்கள்.ஒரே ஒருவருடைய கருத்தும்கூட நம் படைப்பவைகளுக்கு பலத்தை தரலாம். அல்லது கருத்துக்களோ ஓட்டுக்களோ இல்லையென்றாலும் என்றாவது நம் எழுத்துகள் பிறரைச் சென்றடையும் என்று நம்பிக்கையோடு எழுதுங்கள்.

ஓட்டுகளும்.கருத்துகள் குவியும் அனைத்தும் நல்லபடைப்புகள்தான் என்பதல்ல. ஓட்டுகளும் கருத்துகளே இல்லாத படைப்புகளும் நன்றாக இல்லையென்றும் அர்த்தமல்ல.ஆகவே. படைப்புகள் நம் எண்ணத்தில் உருவாகி நம் எழுதுகளில் உயிர் பெறுகிறது.அதை இப்பூமியில் உலாவவிடுங்கள் நிச்சயம் அது வளர்ந்து ஆளாகி சிலரையாவது சென்றடைந்து நமக்கு சிறப்பைத் தேடித்தரும்..

முடிந்தவரை அனைவருக்கும் நமது ஊக்கனமென்னும் கருத்துக்களை தரமுயல்வோம்.

என்னங்கப்பு நான் சொல்வது சரிதானே?.......................

டிஸ்கி// அதிகபட்சம் எல்லார் பதிவிலும். வந்துபோகும் வாசிக்கும் பெருமக்களே வாசித்துவிட்டு மறக்கம ஓட்டையும் போட்டுவிட்டுபோங்கன்னு இங்கேயும் ஓட்டுகேட்கும் மக்கள். ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வலையுலகத்தில் நான்.


பதிவெழுத வந்ததால் கிடைத்த நிகழ்வுகளும் சில நெகிழ்வுகளும், காலங்கள் கடந்துவிட்டபோதும் மனதில் கிடக்கும் சந்தோஷ தருணங்கள்.அதை பகிர்வதில் மகிழ்ச்சியே!
தனக்குள் உதிக்கும் அத்தனையும் எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கவே நானும் பதிவர்களில் ஒருத்தியாக வலம்வர நினைத்து. ஏதோ எனக்கு தெரிந்தவைகளை கவிதைகளென்னும் பெயரில் கிறுக்கிவருகிறேன்.
என் எழுத்துக்கள்கூட சிலருக்கு பிடித்திருக்கிறது எனநினைக்கும்போது மனது சந்தோதங்களை உணர்கிறது. அப்படி எழுத தொடங்கியதின் விளைவு. பல நல்ல உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுதந்தது என்றால் அதுமிகையாகது.வலையுலகத்தில் நானுமிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே

கடந்த 28-8-2010. அன்று எங்கள் வீட்டில் விசேசத்திற்காக 15 நாள் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சில நல்ல உள்ளங்களையும் காணவும்
அன்பு பொங்கிய மனங்களிடம் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அன்பு சாரதாம்மாவிடம் பேசியனேன். போனிலேயே பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டார்கள். தாய்மையின் அன்பும் பேச்சும் என்னை நெகிழவைத்தது அவர்களால் வரயிலாது கன்னியாகுமரியில் இருக்காங்க நானும் போகமுடியாச்சுழல். அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.
சாராதாம்மா நிச்சயமாக வருவேம்மா.அடுத்த லீவில் உங்களைபார்க்க!

அப்புறம் நேரில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திய சகோதரர் காஞ்சி முரளியென்னும் முரளிதரன் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வீட்டின் விசேசமன்று வந்திருந்தார்கள். நெடுந்தூரம் என்றபோதும் உடல்நிலை சற்று ஒத்துழைக்காபோதும். என் எழுத்துக்களின் வாசகராய். விமர்சகராய். பிழைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராய். எங்கள்சகோதரராய்.தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு. என் அன்னையிடம் என்னைபற்றி இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை இப்படியொருமகளை பெற்றெடுக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவரின் எழுத்துக்கள் பலரையும் சென்றடைந்துள்ளது என சிலபல நல்லவாக்கியங்கள் சொல்லியபோது, பொறுப்பாலும். மனதாலும்.வயதாலும்.எவ்வளளோ பெரியவங்க சிரமம் பாராமல் எங்களைக் காணவந்ததே சந்தோஷத்தை தந்தது.அதுவும் அன்பு மனைவி, அருமை மகள், பாசமான அக்கா பசங்கள் ஆகியோரோடு வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது.அண்ணி வசந்தியையும். மருமகள் சாருவையும் எனக்கும் என்வீட்டாருக்கும் ரொம்ப பிடித்துபோனது.

அடுத்து கோலங்கள் சாரூக்காவிடம் போனில் பேசினேன் மிகக்குறுகிய காலமாக இருந்ததால் அக்காவால் எங்க ஊருக்கு வரவோ நான் கும்பகோணம் செல்லவோ நேரில் சந்திக்க முடியாமல்போனது மனதுக்கு வருத்தம்தான்.அக்காவிடம் பேசும்போதே நேரில் சந்தித்த திருப்தி குட்டிச்செல்லங்களிடம்தான் பேசமுடியவில்லை. அக்காவின் அம்மா ஊர் தஞ்சையென்றாலும் அக்கா இருப்பதோ கும்பகோணம் என்ன செய்ய நான் இருப்பதோ மு. அ. வில் இன்ஷா அல்லாஹ் வரும் லீவில் கண்டிபாக சந்திக்கனும்.யக்கோவ் தேடுதா? .

அடுத்து சுஜி, அவரிடமும் போனில் பேசினேன்.அன்போடு அழகாய் பேசிய சுஜி,  அக்கா உங்கள் கவிதைகளை புக்காக தொகுத்து வெளியிடுங்களேன் என்று தன் விருப்பதைசொன்னார் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும் சுஜி.
அடுத்து. என்தந்தையின் ஊரான அதிரை யுனிக்கோட்
”தேனி”திரு உமர்தம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.தேனி உமர்தம்பி அவர்களின் கணினி சேவையை பாராட்டி அவர்கள் பெயரில் கோவை செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என அமைத்து அவர்களை  கவுரவித்தது தமிழக அரசு.அதற்கு சில முயற்சிகள் செய்தது நானும் என்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்களும்[இங்கு கிளிகினால் முழுவிபரம்] எங்கள் தெருவுக்கு முதல் தெருவு அதுவும் என் தந்தையின் மிக நெருங்கிய பால்ய சினேகிதரின் உறவுக்காரர்தான் என எனக்கு அங்கு அவர்களின் வீட்டில் பேசியபோதுதான் தெரிந்தது.

தந்தை ”தேனி”உமர்தம்பியின் மனைவி அவர்களிடமும்,மற்றும் மருமகள் அவர்களிடமும் பேசினேன்.
தற்போது உயிரோடு இருந்திருந்தால் இவ்விருது கிடைத்தமைக்கு எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் என மனமுடைந்து அவர்களின் மனைவி கூறியபோது எனக்குள் இனம்புரியாத வருத்தம் இறுக்கிப்பிடித்தது. எந்த ஓர் ஆத்மாவுக்கு அது செய்த நன்மையின் பலனை எவ்வழியிலாவது வழங்கிவிடுவான் இறைவன்.அதோடு மறுமையிலும் நற்பாக்கியதை வழங்குவான் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு நோன்புக்காலம் என்பதால்,நிறையநேரம் இருக்கமுடியாததால் கிளம்பினேன் 10.நிமிடந்தான் என்றபோதும் மனநிறைவாக இருந்தது.என் எழுத்துக்களால் இன்னும் நிறைய நல்லவைகள் செய்யவேண்டுமென மனதுக்குள் நினைத்தவன்னம் வெளியேறினேன்.

நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுதும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வலைதளத்தின் மூலம் கிடைக்கபெற்ற சந்தோஷ தருணங்களை மனதில் நிலைநிறுதியவளாய் இன்னும் கிடைக்கபோகும் பாச நேசங்களையும். அன்பு அறிவுரைகளையும் எதிர்நோக்கியவளாக!
என் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் தோழமைகளாக. உங்களின் பாசத்தை என்றும் விரும்புபவளாக.என் எழுதுப்பயணத்தை தொடரவிரும்பும்
என்றுமே மாறா அன்புடன்

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

 கலைச்சாரலில் இப்படியும் ”கடி”நோய்கள் 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது