நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முன்னெச்சரிக்கை!

இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.
ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]


உன்


ஓரவிழிப் பார்வைக்குள்
ஒளிந்துகிடக்கும் ரகசியம்
கசியும் மெளனத்தில்
கரையத் தொடங்கியபோது
காதல் கைகூடியதோ

அதனால்தான்

அக்கரையில் நானும்
இக்கரையில் நீயும்
அலைபாயும் நெஞ்சத்தை
அங்குமிங்கும் அசையாது
அணைப்போட முடிந்ததோ

வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல
காதல்மட்டும் போதாதென்பதால்
காசைத்தேட கடல்தாண்டி நானும்
கானகத்தில்!

கண்ணுக்குள் தோன்றிய காதல்
கண்ணீரோடு கரைந்துவிடாமல்
காலமுழுதும் காதலுடன் வாழ
கண்மணியே!

காத்திருப்பாயா!சிலகாலம்
காசோடு சேர்த்து
காதலுடன் வருகிறேன்
கைகோத்து இருவரும்
கலங்காமல் வாழ்ந்திட.....



அன்பான இர்ஷாத் கதை கட்டுரை கவிதைக்காக!
கொடுத்த இந்தவிருதை பாசதோடு ஏற்றுக்கொண்டு அதை நானும்
பகிர்ந்தளிக்கிறேன்.

புதுமுகம் ரியாஸ்

புதுமுகம் செந்தில்குமார்

பனிதுளி சங்கர் பல அறியாத விசயங்கள் இங்கே சென்றால் அறியலாம்!

செ.சரவணக்குமார்.  நல்ல எழுத்துநடை..

என் அன்புத்தோழி ஹேமா கவிதை எழுத அசத்தல் ஆளு..

அப்புறம் நம்ம கனி சீமாங்கனி கவிதையிலேயே தொடர்கவிதை எழுதி கலக்கும் ஆளு!

டிஸ்கி//பட்டியல் நீண்டுகொண்டே போக ஆசைதான் அல்லாரும் வாங்கின்னா அப்புறம் வாங்க ஆளேயிருக்காது நான் மறுதபா கொடுக்கோனுமுல்ல!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

30 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி மலிக்கா... தங்களின் விருதுக்கு,,,,

    நான் இன்னும் தொடங்கவே அதற்குல் நான்காவது விருது வாங்கிவிட்டேன்..

    அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..

    பதிலளிநீக்கு
  2. விருதுக்கு வாழ்த்துக்கள்!
    ரொம்ப பொறாமையா இருகுங்கோ!
    அதெப்டி நாங்க தேடினா மட்டும் கூகுளே ஆண்டவர் இந்த மாதிரி
    படம் தர மாட்டேன் என்கிறர்.

    பதிலளிநீக்கு
  3. Riyas கூறியது...
    மிக்க மகிழ்ச்சி மலிக்கா... தங்களின் விருதுக்கு,,,,

    நான் இன்னும் தொடங்கவே அதற்குல் நான்காவது விருது வாங்கிவிட்டேன்..

    அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..

    ஓகோ அப்படியா. செய்திட்டாப்போச்சி அதுக்கு முன்னாடி எனக்கு சிபாரிசு செய்யுங்க ரியாஸ். மிக்க நன்றிமா..

    பதிலளிநீக்கு
  4. S Maharajan கூறியது...
    விருதுக்கு வாழ்த்துக்கள்!
    ரொம்ப பொறாமையா இருகுங்கோ!
    அதெப்டி நாங்க தேடினா மட்டும் கூகுளே ஆண்டவர் இந்த மாதிரி
    படம் தர மாட்டேன் என்கிறர்.//

    கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..
    ஒன்னு தெரியுமா கவிதை 3. அல்லது5 நிமிசத்தில் எழுதிவிடுகிறேன். ஆனா இந்த போட்டோக்களை தேட குறைஞ்சது 1 மணிநேரங்கூட ஆகிவிடுகிறது சிலப்பதேடும்போது கிடைக்கிறதையும் அப்படியே சுட்டு சேத்து வச்சிக்கிறது ..

    ரொம்ப மகிழ்ச்சி மகராஜன்.. மிக்க நன்றிமா.

    பதிலளிநீக்கு
  5. //S Maharajan கூறியது...
    ஐ நான் தான் பர்ஸ்ட்//

    இல்லையே இல்லையே!

    பதிலளிநீக்கு
  6. //அன்புடன் மலிக்கா கூறியது...
    //S Maharajan கூறியது...
    ஐ நான் தான் பர்ஸ்ட்//

    இல்லையே இல்லையே!//


    வடை போச்சே

    பதிலளிநீக்கு
  7. //கண்ணுக்குள் தோன்றிய காதல்
    கண்ணீரோடு கரைந்துவிடாமல்
    காலமுழுதும் காதலுடன் வாழ//

    மனசுக்குள்ள மருகிகிட்டு இருக்குறத அப்புடியே கவிதைல சொல்லிபுட்டீங்க!!!
    மல்லி அக்கா...கவிதைக்கு லீட் மச்சான் கொடுத்தாகளா...!!
    எனக்கும் அன்போடு விருது கொடுத்து இருக்கீங்க...நன்றி மல்லி கா...

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கலக்குங்க.உங்கள் திறமைக்குக் கிடைத்த் பரிசு இது.

    நன்றி நன்றி விருதுக்கு.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் விருது கொடுத்த உங்களுக்கும் அதை பெற்ற வர்களுக்கும்.

    கவிதையுடன் விருது அருமை..

    பதிலளிநீக்கு
  11. //கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..
    ஒன்னு தெரியுமா கவிதை 3. அல்லது5 நிமிசத்தில் எழுதிவிடுகிறேன். ஆனா இந்த போட்டோக்களை தேட குறைஞ்சது 1 மணிநேரங்கூட ஆகிவிடுகிறது //

    இதுக்குதான் நான் யாராவது சுட்டதை சுட்டு பிரி சூடு பன்னிக்கிறது . இப்ப உங்க முகப்பு படத்தையும் சுட்டுட்டேன்.ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  12. //அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..

    ஓகோ அப்படியா. செய்திட்டாப்போச்சி அதுக்கு முன்னாடி எனக்கு சிபாரிசு செய்யுங்க //

    அடுத்த சொந்த விருது பிராசஸ்ல இருக்கு . குடுத்துட்டா போச்சி.

    பதிலளிநீக்கு
  13. முதலில் "விருது"க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    அதனை உள்ளன்போடு மற்றவர்க்கு தாங்கள் வழங்கியமைக்கும்...

    தாங்கள் வழங்கி.. விருது பெற்றவர்க்கும் பாராட்டுக்கள்....

    ////வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல... காதல்மட்டும் போதாதென்பதால்.... காசைத்தேட கடல்தாண்டி நானும்.... கானகத்தில்!
    கண்ணுக்குள் தோன்றிய காதல்... கண்ணீரோடு கரைந்துவிடாமல்... காலமுழுதும் காதலுடன் வாழ.... கண்மணியே!////

    "நான் பொய் சொல்லமாட்டேன் முடிந்தவரை..." என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக நினைவு... அது உண்மை என்பதை மேலே குறிப்பிட்ட வரிகளில் சொல்லிவிட்டீர்கள்...

    வாழ்வியலில் காதலுக்கு காதல் மட்டும் போதாது... காசும் வேண்டும் எனும் எதார்த்தத்தை சொல்லி...

    "///காத்திருப்பாயா! சிலகாலம்.... காசோடு சேர்த்து.....காதலுடன் வருகிறேன்/// காலமுழுதும் காதலுடன் வாழ காத்திருத்தல்... அதுவும் காசுக்காக... கலங்காமல்.. அதாவது இன்பமாய் வாழ....

    யதார்த்தமான...
    அழகான....
    நிழலுடன் நிஜம் கலந்த
    அருமையான கவிதை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  14. கவிதையும் விருதும் அழகுற அம்சம். மலிக்காவுக்கும் விருதுபெற்றோருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. //இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம்//

    நா அப்பவே லிங்குடன் கமெண்ட் போட்டேனே பாக்கலியா !!
    http://niroodai.blogspot.com/2010/05/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  16. விருது பெற்றதற்கும், பகிர்ந்தளித்ததுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. //சி. கருணாகரசு கூறியது...
    கவிதை மிக அருமைங்க.//

    மிக்க நன்றிங்க கருணா..

    //S Maharajan கூறியது...
    //அன்புடன் மலிக்கா கூறியது...
    //S Maharajan கூறியது...
    ஐ நான் தான் பர்ஸ்ட்//

    இல்லையே இல்லையே!//


    வடை போச்சே!.//

    அச்சோ அச்சோ..

    பதிலளிநீக்கு
  18. seemangani கூறியது...
    //கண்ணுக்குள் தோன்றிய காதல்
    கண்ணீரோடு கரைந்துவிடாமல்
    காலமுழுதும் காதலுடன் வாழ//

    மனசுக்குள்ள மருகிகிட்டு இருக்குறத அப்புடியே கவிதைல சொல்லிபுட்டீங்க!!!
    மல்லி அக்கா...கவிதைக்கு லீட் மச்சான் கொடுத்தாகளா...!!
    எனக்கும் அன்போடு விருது கொடுத்து இருக்கீங்க...நன்றி மல்லி கா//

    ஆகா அப்ப வெட்ட வெளிச்சமாக்கிட்டனோ கனி. மருகாம மனச ப்ரியாவிடுங்க.. எல்லா சரியாகிவிடும் ஓகே..

    சொல்லுவீகளே அதெல்லாமில்லை நானே நானேதான்..

    மிக்க நன்றி கனி..

    பதிலளிநீக்கு
  19. ஹேமா கூறியது...
    வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கலக்குங்க.உங்கள் திறமைக்குக் கிடைத்த் பரிசு இது.

    நன்றி நன்றி விருதுக்கு.//

    மிகுந்த சந்தோஷம் தோழி.
    மிக்க நன்றி




    //அஹமது இர்ஷாத் கூறியது...
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களுக்கும்//

    மிக்க நன்றி மிக்க நன்றி.நீங்க தந்தீக நானும் வச்சிக்கிட்டு பிறருக்கும் கொடுத்துட்டேன் சரியா..

    பதிலளிநீக்கு
  20. ஜெய்லானி கூறியது...
    வாழ்த்துக்கள் விருது கொடுத்த உங்களுக்கும் அதை பெற்ற வர்களுக்கும்.

    கவிதையுடன் விருது அருமை//

    மிக்க நன்றி அண்ணாத்தே!

    பதிலளிநீக்கு
  21. ஜெய்லானி கூறியது...
    //கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..
    ஒன்னு தெரியுமா கவிதை 3. அல்லது5 நிமிசத்தில் எழுதிவிடுகிறேன். ஆனா இந்த போட்டோக்களை தேட குறைஞ்சது 1 மணிநேரங்கூட ஆகிவிடுகிறது //

    இதுக்குதான் நான் யாராவது சுட்டதை சுட்டு பிரி சூடு பன்னிக்கிறது . இப்ப உங்க முகப்பு படத்தையும் சுட்டுட்டேன்.ஹி..ஹி..//

    ஆகா ஆட்டய்போடுரதுதான் உங்கவேலை. ஓகே ஓகே நடத்துங்க1 எங்கிட்டும் நல்லாயிருந்தா கண்ணக்குத்தாது..



    // ஜெய்லானி கூறியது...
    //அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..

    ஓகோ அப்படியா. செய்திட்டாப்போச்சி அதுக்கு முன்னாடி எனக்கு சிபாரிசு செய்யுங்க //

    அடுத்த சொந்த விருது பிராசஸ்ல இருக்கு . குடுத்துட்டா போச்சி.//

    ஹைய்யா சொந்தமா பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதா. எப்போ ரெடியாகும்..

    பதிலளிநீக்கு
  22. காஞ்சி முரளி கூறியது...
    முதலில் "விருது"க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... //

    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி முரளி.

    //அதனை உள்ளன்போடு மற்றவர்க்கு தாங்கள் வழங்கியமைக்கும்...

    தாங்கள் வழங்கி.. விருது பெற்றவர்க்கும் பாராட்டுக்கள்.....//

    மிக்க நன்றி.


    ////வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல... காதல்மட்டும் போதாதென்பதால்.... காசைத்தேட கடல்தாண்டி நானும்.... கானகத்தில்!
    கண்ணுக்குள் தோன்றிய காதல்... கண்ணீரோடு கரைந்துவிடாமல்... காலமுழுதும் காதலுடன் வாழ.... கண்மணியே!////

    "நான் பொய் சொல்லமாட்டேன் முடிந்தவரை..." என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக நினைவு... அது உண்மை என்பதை மேலே குறிப்பிட்ட வரிகளில் சொல்லிவிட்டீர்கள்... //

    வாழ்வியலில் காதலுக்கு காதல் மட்டும் போதாது... காசும் வேண்டும் எனும் எதார்த்தத்தை சொல்லி...//

    காதலில் பொய் அழகாம் ஆனால் அது கல்யாணத்திற்க்கு அழகல்லவே!
    காசே வாழ்க்கையல்ல ஆனால்
    காசும் வாழ்க்கை. இல்லையா! அதான் இப்படிச்சொன்னேன்..


    "///காத்திருப்பாயா! சிலகாலம்.... காசோடு சேர்த்து.....காதலுடன் வருகிறேன்/// காலமுழுதும் காதலுடன் வாழ காத்திருத்தல்... அதுவும் காசுக்காக... கலங்காமல்.. அதாவது இன்பமாய் வாழ....

    யதார்த்தமான...
    அழகான....
    நிழலுடன் நிஜம் கலந்த
    அருமையான கவிதை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    எதார்த்தம்தானே வாழ்க்கை அதில் ஏன்
    போலியாய் வாழவேண்டும். நிஜமாய் வாழ்திடலாமேன்னுதான்.
    அன்பான கருத்துக்கும் பாசமான வாழ்த்துக்கும்,,,

    மிக்க நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  23. //செ.சரவணக்குமார் கூறியது...
    மிக்க நன்றி சகோதரி//

    ரொம்ப சந்தோஷம் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  24. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    கவிதையும் விருதும் அழகுற அம்சம். மலிக்காவுக்கும் விருதுபெற்றோருக்கும் வாழ்த்துகள்.//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி ஷேக்..




    /ஜெய்லானி கூறியது...
    //இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம்//

    நா அப்பவே லிங்குடன் கமெண்ட் போட்டேனே பாக்கலியா !!
    http://niroodai.blogspot.com/2010/05/blog-post_30.html//

    பார்த்தேன். இருந்தாலும் நானும் போடமுல்ல அதேன் போட்டேன்.

    பதிலளிநீக்கு
  25. அமைதிச்சாரல் கூறியது...
    விருது பெற்றதற்கும், பகிர்ந்தளித்ததுக்கும் வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்..

    பதிலளிநீக்கு
  26. //தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.
    ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]///


    உஸ்..... அப்பா இது வேறயா
    (வாழ்த்துக்கள் )

    பதிலளிநீக்கு
  27. நன்றி நன்றி நன்றி நன்றி............

    மல்லிக்கா

    முதல் முத்தம்
    முதல் மழை
    முதல் வலி
    முதல் விருது

    எல்லாம் என்னுல் நான்
    கொண்ட‌ வ‌ச‌ந்த‌ காலங்கள்

    அருமையான‌ வரிக‌ள் ம‌ல்லிக்கா

    கண்ணுக்குள் தோன்றிய காதல்
    கண்ணீரோடு கரைந்துவிடாமல்
    காலமுழுதும் காதலுடன் வாழ
    கண்மணியே!

    காத்திருப்பாயா!சிலகாலம்
    காசோடு சேர்த்து
    காதலுடன் வருகிறேன்
    கைகோத்து இருவரும்
    கலங்காமல் வாழ்ந்திட.....




    இன்னும் நாலு வ‌ரிக‌ள் இருக்கும் என‌ ப‌டித்துக்கொண்டே கிழே வ‌ந்தேன்

    கிழே நான் ப‌டித்த‌ இர‌ண்டு வ‌ரி
    அன்புடன் மலிக்கா
    இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது