நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்

உலகக்காதல்களில் முதல்முறையாக புதுமைக்காதல் எங்கள்காதல்
நான் பிறக்கும் முன்பிலிருந்தே பெண்தான் பிறக்கும் என்றநம்பிக்கையில்
என்மீது காதல்கொண்டு எதிப்பார்த்திருந்து
பிறந்தபின்னும் 10 வருடங்கள் எனக்காக காத்திருந்த காதல்.
காதாலாய் கண்களுக்குள் நுழைந்து கணவனாய் நெஞ்சதில் நிறைந்து
உயிராய் உதிரத்தில் கலந்த உன்னத அன்பு...

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பது
என்னைப்பொருத்தவரையில் நிச்சயமான உண்மை.
பெண்பிறக்கும் முன்பே ஆண்பிறந்து அவனுக்கான துணைவேண்டி காத்திருக்கிறான்..

தங்கைக்கு மகள் பிறந்தாள், அதை தன்மகனுக்கு கட்டனும். இது அண்ணன் தங்கை மற்றும் குடும்பம் எடுத்த முடிவு.
எனக்கான வருகைக்கு நான் பிறக்கும் முன்பிலிருந்தே காத்திருக்க  தொடங்கிய காதலும், குடும்பமும்.
பிறந்துவிட்ட புத்தம் புதியமலரை, அள்ளிக்கொடுக்கப்பட்டது காத்திருந்த பதினோறுவயது பிஞ்சிக் கைகளுக்குள். அன்று கண்களுக்குள் ஒற்றிக்கொண்ட காதல் இன்றுவரை கண்களைவிட்டு அகலாமல். எள்ளளவும் இதயத்தைவிட்டு விலகாமல் எனக்கே எனக்காய்.

மார்ச் 17 அன்று. திருமணநாள் இருமனங்கள் இணையும்நாள்..[அதான் பிறக்குமுன்பே இணைந்துவிட்டதே இருமனமும்]
தெருவையே வளைத்து பந்தல். ஊரும் உறவும் கூட மேளதாளம் முழங்க, மாலைமாற்றி மங்களம். அண்ணன் தங்கை கண்களில் நீர்கோலம். என்றோ முடிவெடுத்தது அன்று உறுதிசெய்யப்பட்டது.
கணவன் மனைவி என்றால் என்ன என்றே புரியாத வயது எனக்கு.
மனதில் நின்றெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மச்சான் இவர் என்னுடைய மச்சான் அவ்வளவுதான். இன்றளவும் அதையேதான் மச்சான்.

நிறைய கணவன் மனைவியரை பார்த்திருக்கிறேன். ஈகோ ஏதாவது ஒரு சிறுபிரச்சனைக்கூட சண்டை. மனம் ஒத்துப்போகாமல் அடிக்கடி மனஸ்தாபங்கள்.என விட்டுக்கொடுக்கமனசில்லாமல் ஒருவரையொருவருர் சாடுவது என பிரச்சனையை வளர்த்துகொள்வது அப்போது தோன்றியது.

கணவன் மனைவியென்றால்தானே பிரச்சனைவரும். காலமுழுவதும் மச்சான் மச்சியாகவே இருந்துவிடலாம் காதலுடம் இருந்துவிடலாம் என திருமணத்திற்குபின், என்னங்க இங்க வாங்களேன்,,,,,,,,, போங்களேனெல்லாம் கிடையாது. மச்சான் எதற்கெடுத்தாலும் மச்சான் சாகும்வரை மச்சான் இப்படியே கூப்பிடுவதென முடிவெடுத்து அதையே கடைப்பிடித்துவருகிறேன்.[என்ன நீங்களும் இன்றிலிருந்து கணவன் மனைவியெல்லாம் மச்சான் மச்சி ஆகிவிடுகிறோமுன்னு சபதம் எடுப்பதுபோல் தெரிகிறது அப்படியே ஆகட்டும்]

கணவன் மனையென்றாலே பிரச்சனைதான் என்று, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரவர் வாழும் சூழ்நிலைகள்பொறுத்து. மன நிலையைப்பொறுத்து. விட்டுக்கொடுக்கும் தன்மையைப்பொறுத்து. பிரச்சனைகளும் வரும், வரனும். அப்போதுதான் வாழ்க்கை என்ற வண்டி சுவாரசியமாக ஓடும். இனிப்பே சாப்பிட்டாலும் சரியிருக்காது கசப்பையே சாப்பிட்டாலும் சரியிருக்காது அதனால் இடையிடையே கசப்பான பதார்தங்களையும் சாப்பிட்டால் சுவையுமிருக்கும் உடல் ஆரோக்கியமுமிருக்கும் அதேபோன்றுதான் வாழ்க்கையும் [இவுக பெரியஞானி சொல்ல வந்துட்டாங்க என்ன ஹா ஹா ஹா]

கண் நிறைந்த கணவர் அப்படியென்றால் என்ன? மனம்நிறைந்திருந்தால் கண் ஒளிர்ந்திருக்கும் ஆக மனதை நிறைவடையச்செய்வதால் கண் நிறைவடையும் அப்படித்தானே!!!!!!
ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும். எப்படி நடக்கவேண்டும் என்ற உதாரணம் மச்சானிடம் நிறைய உண்டு. விட்டுக்கொடுக்கும் தன்மை.[ஆகா என்னிடமும் உண்டுங்கப்பா, ஆனாகொஞ்சம் குறைவு] பெண்ணுக்கும்
மனசு உண்டு அதில் ஆசை. எண்ணம். என அனைத்தும் உண்டு அனைத்தையும் நிறைவேற்றமுடியாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு முயற்ச்சி செய்யனும் என நல்ல எண்ணங்கள் நிறைய உண்டு.
அப்புறம் எங்க மச்சானுக்கு சூப்பராக சமைக்கவும் தெரியும். சில ஆண்கள்போல் இதை நீதான் செய்யனும். நீ இதைசெய் அதை நான் செய்கிறேன் அப்படியெல்லாம் இல்லவே இல்லை

ஆண்பாதி பெண்பாதி இருவருமே சரிபாதி என்பதைபோல்.ஆபீஸ்போய்விட்டுவந்து எங்களுக்காக எங்கள் வேலைகளையும் செய்துதருவதில் மச்சானுக்கு ஒரு மனதிருப்தி. மொத்தத்தில் மச்சான் மிகவும் ஒரு நல்லகுணமுள்ள மனமுள்ளமனிதர்.
இவரைபோலவே [அச்சோ இவரையே அல்ல ஆங் அஸ்கு புஸ்கு] அனைத்து பெண்களுக்கும் கணவர்கிடைத்தால் கிடைத்திருந்தால் சந்தோஷமே!
என் எழுத்துக்களுக்கும் சரி. என் எண்ணங்களுக்கும்சரி. என்றுமே எதற்குமே எவ்விததடையும் சொல்லியதில்லை. தடையில்லையே என்பதற்காக நானும் அதை தவறாக பயன்படுத்தியதுமில்லை.

\சிறிய சம்மவம். துபையில் ஒரு பெரியஹோட்டலில் ஃபேம்லி
பார்ட்டி மச்சானின் டிப்பாட்மெண்ட் வைத்தது. அதில் கலந்துகொண்ட அத்தனைபேரும் வசதியிலும் சரி பொருப்புகளிலும் சரி பெரும் பெரும் மனிதர்கள் முக்கியமாக அரபியர்கள். அக்கூட்டத்தில் நாங்களும் எங்களோடு சில இந்தியர்களும்.


எல்லாரும் போய் போய் தானாகவே பெரியவர்களான அவர்களிடன் கைகொடுப்பதும் தன்னை அறிமுகப்படுத்துவதுமாக இருக்கும்போது மச்சான்மட்டும் எங்களோடவே இருந்தார்கள். மனதுக்குள் நினைத்தேன் ஏன் இவர்கள்மட்டும் போகமால் இருக்காங்க என்று, சிறிது நேரத்தில் யார் அங்கே ரொம்ப பெரியவராக கருத்தப்பட்டதோ அவர்களே எங்களருகில்வந்து மச்சானின் முதுகைதட்டிக்கொடுத்து கைகளைப்பிடித்துக்கொண்டு [ஃபாரூக் ஈஸ் வெரி வெரி ஜென்டில்மேன் அன் நைஸ்மேன்] என இங்லீஸில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்தடுத்து மூன்று நான்குபேர்கள் வந்து மச்சானிடம் பேசியவிட்டு எங்களிடமும் இவர்மிகவும் நல்லவர் சிறந்தவர் வேலையில் மிகுந்த கெட்டிக்காரார்..என பாராட்டியபோது எப்படியிருந்திருக்கும் ஒரு மனைவியான எனக்கும். குழந்தைகளான என் பிள்ளைக்கும்.சந்தோஷம் தத்தளித்தது தன்கணவரை பிறர் அதுவும் பெரிய பதவியிலிருக்கும் பெரியப்பெரியமனிதர்களே பாராட்டக்கேட்கும்போது ஆனந்தத்தில் திளைத்தோம். நிறைய பரிசுகளும் வழங்கப்பட வாங்கிக்கொண்டு மனம் நிறைந்து வீடுவந்தோம்./

மனைவியென்பவள் தன்கணவருக்கு சிறந்த மனைவியாக. சேவையில்தாயாக. சிலநேரம் தந்தையாக. நல்ல தோழியாக. பழக்கத்தில் குழந்தையாக. என சகலமுமாக வாழவேண்டும் என நினைக்கிறேன், பலநேரம் நடக்கிறேன். சில நேரம் நானே குழந்தையாக மாறிவிடுகிறேன் பிடிவாதத்தில்..சிறு சிறு சண்டைகள்கூட வேண்டுமென்றே போட்டுக்கொள்வோம் அதிலும் நானிருக்கேனா அப்பாடி சும்மாவாச்சிக்கும் மச்சானை வம்புக்கு இழுத்து தொனதொனவென பேசுவேன் பாவம் மச்சான் இல்லல்லலல.

இதோ இன்றோடு பதினெட்டைக்கடந்து, பத்தொன்பதாம் ஆண்டை வெற்றிக்கரமாக தொடங்கப்போகிறோம். அழகிய அன்பான இரு குழந்தைகளோடும். கனிவான குடும்பத்தோடும்...
வாழும் காலம்வரை மனநிம்மதி, மனசந்தோஷம் மனதிருப்தி. இருந்தால்போதும் எங்களுக்கு.
நிச்சயம் எங்களுக்குள் அது என்றும் நிலைத்திருக்கும்.
இருக்கும்படி செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையில். மீண்டும் இருவரின் கைகளும் இருவர் கைகளுக்குள்ளும். இளமைக்காதல் இதயத்துக்குள்ளும்.


பச்சிளம் வயது பவளம்
பாசம் கொண்டது பருவம்
நிச்சயம் செய்தது குடும்பம்
நினைத்தது நடந்தது குதூகலம்

மாலைப்பொழுதின் வேளை
மாலை சுமந்தாள் மங்கை
மச்சானென்ற கணவன்
மனத்துக்குள் நிறைந்து
கலந்தான் உயிரில்

அன்றுமுதல் இன்றுவரை
உள்ளம் நோகும்படி
ஒருவார்த்தை சொன்னதில்லை
ஊரார் பேசும்படி
ஒருபோதும் நடந்ததில்லை

வேதனைகள் வந்தபோதும்
வருத்தப்பட வைத்ததில்லை
கடிந்து பேசினாலும்
கோபங்கள் கொண்டதில்லை

அணைத்துப்பேசும்போது
அன்னையானான்
அதட்டிப்பேசும்போது
அண்ணனான்

தட்டிக்கொடுக்குபோது
தந்தையானான்
கொ[கு]ட்டிப்பேசும்போது
தங்கையானான்

கொஞ்சி நடிக்கும்போது
குழந்தையானான்
தோளில் சாயும்போது
தோழியானான்

மார்பில் சாயும்போது
மச்சான் ஆனான்

ஆக மொத்ததில் எனக்கு
அனைத்துமானான்
ஆதலால்
மொத்தமாய் நான்
அவனுக்கே அவனுக்கானேன்...

இதோபோன்றதொரு வாழ்க்கையை அமைத்துத்தந்த என் இறைவனுக்கே புகழனைத்தும். அதோடு என்தாய் மாமன் அவர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன் கண்ணீர் வழிய [தற்போது அவர்கள் உயிரோடு இல்லை] என் தாய் தந்தைக்கும் என் தாய்மாமன் அவர்களுக்குக்காவும் நான் என்றென்றும் துஆசெய்யக்கடமைப்பட்டவள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

54 கருத்துகள்:

 1. எனது உள்ளம் நிறைந்த, திருமண நாள் வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்கள்
  இணைந்து வாழவும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இன்று போல்( சந்தோஷத்தில) என்றும் வாழ்க.

  பதிலளிநீக்கு
 3. அன்புமகளே! நீ அனைத்துசெல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!

  உன்வாழ்க்கையில் வளங்கள்நிறைய நிம்மதி பெருக. சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க

  மனமாரவழ்த்தும் அன்பன் இராமநாதன்..

  பதிலளிநீக்கு
 4. என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 5. மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 6. இறைவனின் கருணையால்....
  என்று வாழ்க.... நலமுடன்... வளமுடன்..

  "இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்"

  எல்லோர் வாழ்த்துக்களுடன்
  எனது வாழ்த்துக்களும் இணைந்து....

  நட்புடன்..
  காஞ்சி முரளி..........

  பதிலளிநீக்கு
 7. வல்ல ஏகன் மென்மேலும் நல்லருள் புரியட்டும் உங்கள் மீதும், அனைவர் மீதும் - ஆமின்.

  பதிலளிநீக்கு
 8. ஆகா இப்பத்தானே புரியுது. அம்மனி
  டி.கே.யில் டெயிலியும் மச்சான் மச்சானுன்னு ஏன் புராணாம் பாடினீங்கன்னு. ஹா ஹா இதுக்குதானா.

  நல்ல டெக்குனிக்குங்கோ நாங்களும் இனி மச்சானு கூப்பிடுறோம் ச்ஸ்ஸ்ஸ் ஏன்னா எனக்கும் மச்சானத்தான் கட்டியிருக்கு..எப்புடி

  சந்தோஷமாக இருவரும் நூராண்டுக்குமேல் வாழ துஆசெய்கிறேன் மலிக்கா வாழ்த்துக்கள் மச்சானுக்கும்சேர்த்துதான்....

  பதிலளிநீக்கு
 9. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்.
  ஏகப்பட்ட சந்தோஷம்.
  இன்றுபோல் என்றும் என்றென்றும் வாழ்க!

  அனைத்து செல்வங்களும் பெற்று கணவரின் ஆயுள் நீடித்து உன்னைக்கண்ணுக்குள் வைத்துகாக்கவேண்டிக்கொள்கிறேன் கடவுளிடம்..

  என்னுடைய ஆசியும் அப்பாவுடைய ஆசியும் என்றென்றும் உனக்கு உண்டு..
  இன்று என்ன ஸ்பெசல்...சமையல்

  பதிலளிநீக்கு
 10. இனிய மண நாள் வாழ்த்துகள். இன்றும் போல என்றும் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  அட இப்பத்தான் பிரியானி சாப்பிட்டு முடிக்கல்லை,அதுக்குள்ள இன்னேரு விருந்தா?
  நாங்க சளைக்க மாட்டேம் இல்லை. குடும்பத்தோட வந்துருவேம். ஒரு நாலு சட்டி ரெடி பண்ணீடுங்க....
  வாழ்த்துக்களும், நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
 11. நூறு வருஷம் சேர்ந்து வாழ என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. திருமண நாள் வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு ஆண்டுகள் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள் .

  மீண்டும் வருவான் பனித்துளி !

  பதிலளிநீக்கு
 13. என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. மலிக்கா akka,
  wish you happy married life...
  syed rahman.M,KSA
  convey my wishes to your husband also.....

  பதிலளிநீக்கு
 15. வரம்வாங்கிவந்தாயோ ஏந்திலையே
  தாரமாகி நின்றாயே தங்கப்பைங்கிளியே
  சுகமோடு நலம்சேர்த்து சொர்க்கக்காற்று வீசட்டுமே
  சுகந்தக்காற்றோடு சொந்தங்கள்
  வாழட்டுமே!


  அம்பளும் கவிதை எழுதிபார்த்தோம் வருதான்னு நல்லாகுதா மல்லி..

  வாழ்க அன்புச்செல்லமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு. படித்தவுடன் ஒரு நெகிழ்ச்சி கலந்த சந்தோஷம். திருமண நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. மச்சான், மச்சான்னு ஒரே பாச மழைதான் போங்க!! உங்களுக்கு அவர் வாய்ச்சது கொடுப்பினையா இல்லை அவருக்கு நீங்க வாய்ச்சது கொடுப்பினையா?

  இறைவன் அருளோடும், கருணையோடும் பல்லாண்டு வாழப் பிரார்த்தனைகள்!!

  பதிலளிநீக்கு
 18. ரொம்ப நாள் கழிச்சி வரேன்... வந்த நாளே இனிமையான நாளாயிருக்கு.... காதல் ததும்பும் இடுகை....

  திருமணநாள் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்....

  பதிலளிநீக்கு
 19. அட்வான்ஸ் 100-வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்.
  ரொம்ப ஜாஸ்தியோ... ஓகே...... 75 -வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்

  பதிலளிநீக்கு
 20. தங்கச்சிக்கு...

  அடுத்த பிறவியிலயும் இதே தங்கமான புருஷன் உனக்கு வாய்க்க பிரார்த்தனை செய்கிறேன்.

  பிரியமுடன்
  திருச்சி சையது.

  பதிலளிநீக்கு
 21. இன்னொரு பிறவி எங்களுக்கிருந்தா உங்க பிள்ளையா நாங்க பொறக்கணும்.

  பதிலளிநீக்கு
 22. "கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை வருஷமா மச்சான் மச்சான்னு சொல்லி என் பின்னால சுத்தி இருக்கே. புள்ளைங்க கேக்குதில்ல! இப்ப ஒரு தடவை மச்சான்னு கூப்பிடு". என்று சொன்னால்.....

  "சே. போங்க! உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் வேற வேல இல்ல!" என்று சொல்லி விட்டு ஓடிடுறாங்க.

  இதை ஒரு தடவை படிச்சி காட்டணும். :)

  பதிலளிநீக்கு
 23. "கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை வருஷமா மச்சான் மச்சான்னு சொல்லி என் பின்னால சுத்தி இருக்கே. புள்ளைங்க கேக்குதில்ல! இப்ப ஒரு தடவை மச்சான்னு கூப்பிடு". என்று சொன்னால்.....

  "சே. போங்க! உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் வேற வேல இல்ல!" என்று சொல்லி விட்டு ஓடிடுறாங்க.

  இதை ஒரு தடவை படிச்சி காட்டணும். :)

  பதிலளிநீக்கு
 24. அன்புடன் மலிக்காவிற்கு,

  இன்று போல் என்றும் வாழ்க... மேலும் பல்லாண்டுகள் வாழ்க...

  பதிலளிநீக்கு
 25. இன்று போல் என்றும் வாழ்க:)!

  நெகிழ்வான அருமையான பகிர்வு மலிக்கா.

  பதிலளிநீக்கு
 26. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  எனது உள்ளம் நிறைந்த, திருமண நாள் வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்கள்
  இணைந்து வாழவும் வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றியும் சந்தோஷமும் சைவக்கொத்துப்பரோட்டா.
  ஜெய்லானி கூறியது...
  இன்று போல்( சந்தோஷத்தில) என்றும் வாழ்க.//

  மிக்க நன்றியும் சந்தோஷமும் ஜெய்லானி..

  பதிலளிநீக்கு
 27. இராமநாதன் கூறியது...
  அன்புமகளே! நீ அனைத்துசெல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!

  உன்வாழ்க்கையில் வளங்கள்நிறைய நிம்மதி பெருக. சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க

  மனமாரவழ்த்தும் அன்பன் இராமநாதன்.//

  நன்றிகலந்த மகிழ்ச்சி தாங்களின் ஆசியும் வாழ்த்தும் என்றென்றும் வேண்டும் அப்பா...  சுபா கூறியது...
  என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் //

  முதல்வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி சுபா..

  பதிலளிநீக்கு
 28. அமைதிச்சாரல் கூறியது...
  மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரி.//

  மிக்க நன்றியும் சந்தோஷமும். அமைத்திச்சாரல்


  Kanchi Murali கூறியது...
  இறைவனின் கருணையால்....
  என்று வாழ்க.... நலமுடன்... வளமுடன்..

  "இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்"

  எல்லோர் வாழ்த்துக்களுடன்
  எனது வாழ்த்துக்களும் இணைந்து....

  நட்புடன்..
  காஞ்சி முரளி..//

  மிக்க சந்தோஷமும் மகிழ்ச்சியும்
  நட்புடன் முரளி மிக நன்றி...

  பதிலளிநீக்கு
 29. திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி

  இன்று போல் என்றும் இனிமையாய் வாழ வாழ்த்துகிறேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 30. Chitra கூறியது...
  திருமண நாள் வாழ்த்துக்கள்!
  :-)//

  மிக்க நன்றி சித்ரா மேடம்.


  நட்புடன் ஜமால் கூறியது...
  வல்ல ஏகன் மென்மேலும் நல்லருள் புரியட்டும் உங்கள் மீதும், அனைவர் மீதும் - ஆமின்.
  //

  தாங்களின் துஆக்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்
  மிக்க நன்றி. ஜமால்காக்கா...

  பதிலளிநீக்கு
 31. சித்தி கூறியது...
  ஆகா இப்பத்தானே புரியுது. அம்மனி
  டி.கே.யில் டெயிலியும் மச்சான் மச்சானுன்னு ஏன் புராணாம் பாடினீங்கன்னு. ஹா ஹா இதுக்குதானா.

  நல்ல டெக்குனிக்குங்கோ நாங்களும் இனி மச்சானு கூப்பிடுறோம் ச்ஸ்ஸ்ஸ் ஏன்னா எனக்கும் மச்சானத்தான் கட்டியிருக்கு..எப்புடி

  சந்தோஷமாக இருவரும் நூராண்டுக்குமேல் வாழ துஆசெய்கிறேன் மலிக்கா வாழ்த்துக்கள் மச்சானுக்கும்சேர்த்துதான்..


  அச்சோ சித்தி எனக்கு வெக்க வெக்கமா வருது ஏன்மா இப்படியெல்லாம் .கிண்டல் யாஹூலதான்ன்னா இதிலையுமா.. தாங்கலடியம்மா தாங்கல..

  ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிபா..
  உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 32. சாருமா கூறியது...
  சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்.
  ஏகப்பட்ட சந்தோஷம்.
  இன்றுபோல் என்றும் என்றென்றும் வாழ்க!

  அனைத்து செல்வங்களும் பெற்று கணவரின் ஆயுள் நீடித்து உன்னைக்கண்ணுக்குள் வைத்துகாக்கவேண்டிக்கொள்கிறேன் கடவுளிடம்..

  என்னுடைய ஆசியும் அப்பாவுடைய ஆசியும் என்றென்றும் உனக்கு உண்டு..
  இன்று என்ன ஸ்பெசல்...சமையல்.//

  சாருமா. உங்க ஆசிகள் என்றும் வேண்டும். முகம்கான அன்னையாகவே என்று பார்க்கப்போகிறேனோ அன்று கட்டிக்கொள்வேன் என் அன்னைப்போலவே..

  உடனுக்குடன் பதில் எழுதமுடியவில்லைமா உடல் சிலநேரம் ஒத்துலைப்பதில்லை வருந்தவேண்டாம்..
  வெளீல சொல்லிவிடவேண்டாம் மச்சாந்தான் சமையல் இரண்டுவகைசாதம் ஒன்றுகூட கலைச்சாரலில்போட்டுள்ளேன்..

  மிக்க நன்றிமா

  பதிலளிநீக்கு
 33. பித்தனின் வாக்கு கூறியது...
  இனிய மண நாள் வாழ்த்துகள். இன்றும் போல என்றும் வாழ இறைவனை வேண்டுகின்றேன். //

  மிக்க நன்றி திவாகர்சார் வேண்டுதல்தான் மிகமுக்கியம். அதுகிடைத்துவிட்டால் அனைத்தும் கிடைத்ததுபோல். மிகுந்தமகிழ்ச்சி..

  //அட இப்பத்தான் பிரியானி சாப்பிட்டு முடிக்கல்லை,அதுக்குள்ள இன்னேரு விருந்தா?
  நாங்க சளைக்க மாட்டேம் இல்லை. குடும்பத்தோட வந்துருவேம். ஒரு நாலு சட்டி ரெடி பண்ணீடுங்க....
  வாழ்த்துக்களும், நன்றிகளும்.//

  எத்துனமுற துண்ணாலும் பிரியாணி சலிக்காது லேட்டானாலும் குடும்பதோட என்ன நம்ம பதிவுலகத்தையே கூட்டிவாங்க ஹா ஹா........ நாலுசட்டிபோதுமா ஆளைபார்த்தா 8 பத்துமான்னு தெரியலையே ஹி ஹிஹி

  பதிலளிநீக்கு
 34. S Maharajan கூறியது...
  நூறு வருஷம் சேர்ந்து வாழ என் வாழ்த்துக்கள்..//

  வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி மகராஜன்..


  /♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
  திருமண நாள் வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு ஆண்டுகள் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள் .//

  வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி பனிதுளி..


  //மீண்டும் வருவான் பனித்துளி !//

  வந்துகொண்டேயிருக்க வேண்டுகிறேன்..

  பதிலளிநீக்கு
 35. சே.குமார் கூறியது...
  என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்/

  மிக்க நன்றி குமார்..
  /பெயரில்லா கூறியது...
  மலிக்கா akka,
  wish you happy married life...
  syed rahman.M,KSA
  convey my wishes to your husband also.....//

  தம்பி சையதுரஹ்மான். தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி..

  பதிலளிநீக்கு
 36. பிரோஷாஅஃப்ஷர் கூறியது...
  வரம்வாங்கிவந்தாயோ ஏந்திலையே
  தாரமாகி நின்றாயே தங்கப்பைங்கிளியே
  சுகமோடு நலம்சேர்த்து சொர்க்கக்காற்று வீசட்டுமே
  சுகந்தக்காற்றோடு சொந்தங்கள்
  வாழட்டுமே!//

  வாழ்த்துக்கவிதை அருமையோ அருமை


  //அம்பளும் கவிதை எழுதிபார்த்தோம் வருதான்னு நல்லாகுதா மல்லி..//

  கவித பின்னிட்டீங்க அம்மனி..

  /வாழ்க அன்புச்செல்லமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ//

  நன்றி அதுசரி யாரந்த செல்லம் ராதிகாமேடமா?????????????????

  பதிலளிநீக்கு
 37. //மன்னார்குடி கூறியது...
  அருமையான பதிவு. படித்தவுடன் ஒரு நெகிழ்ச்சி கலந்த சந்தோஷம். திருமண நாள் வாழ்த்துக்கள்//

  வாங்க மன்னார்குடி முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 38. karthik கூறியது...
  have ya nice story s//

  மிக்க நன்றி கார்த்திக்..


  புலவன் புலிகேசி கூறியது...
  மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா...


  மிக்க நன்றி தோழா..

  பதிலளிநீக்கு
 39. ஹுஸைனம்மா கூறியது...
  மச்சான், மச்சான்னு ஒரே பாச மழைதான் போங்க!! உங்களுக்கு அவர் வாய்ச்சது கொடுப்பினையா இல்லை அவருக்கு நீங்க வாய்ச்சது கொடுப்பினையா? /

  இருவருக்குமே கொடுப்பினையாம். எங்கள் வீட்டில் சொல்லுவார்கள். ஹி ஹி ஹி இதில்கூட அங்கிட்டுகூட இங்கிட்டு கொறச்சன்னுகிடையாதுங்கோ...

  //இறைவன் அருளோடும், கருணையோடும் பல்லாண்டு வாழப் பிரார்த்தனைகள்//

  பிராத்தனைகள் பலிக்கட்டும் ஹுசைன்னம்மா மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 40. /க.பாலாசி கூறியது...
  ரொம்ப நாள் கழிச்சி வரேன்... வந்த நாளே இனிமையான நாளாயிருக்கு.... காதல் ததும்பும் இடுகை....
  //

  அதானே ஏன் ஆலையேகாணோம் பாலாஜி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி பாலாஜி

  /திருமணநாள் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.//

  வாழ்த்துக்கு நன்றி மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
 41. /மங்குனி அமைச்சர் கூறியது...
  அட்வான்ஸ் 100-வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்.
  ரொம்ப ஜாஸ்தியோ... ஓகே...... 75 -வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்/

  ரொம்பவல்லாம் ஜாஸ்தியில்ல. ஏன் 25.சை டடாலக்டின்னு கொறச்சிட்டீங்க மன்னரே!

  மங்குனிக்கு மனசில்ல அதேன்ன்ன்ன்ன்ன்ன்..

  நன்றி மங்குனி அமைச்சரே..

  பதிலளிநீக்கு
 42. trichysyed கூறியது...
  தங்கச்சிக்கு...

  அடுத்த பிறவியிலயும் இதே தங்கமான புருஷன் உனக்கு வாய்க்க பிரார்த்தனை செய்கிறேன்.

  பிரியமுடன்
  திருச்சி சையது.//


  அமீன் அமீன் ஆமீன் ஆமீன்.

  சையதண்ணாவின் வாக்கு பலிக்கட்டும்  // Syed கூறியது...
  இன்னொரு பிறவி எங்களுக்கிருந்தா உங்க பிள்ளையா நாங்க பொறக்கணும்//

  இருக்கும் இரண்டோடும் சேர்த்து மூன்றாவதாக ஆண்டவன் அருளட்டும்..

  பதிலளிநீக்கு
 43. சுல்தான் கூறியது...
  "கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை வருஷமா மச்சான் மச்சான்னு சொல்லி என் பின்னால சுத்தி இருக்கே. புள்ளைங்க கேக்குதில்ல! இப்ப ஒரு தடவை மச்சான்னு கூப்பிடு". என்று சொன்னால்.....

  "சே. போங்க! உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் வேற வேல இல்ல!" என்று சொல்லி விட்டு ஓடிடுறாங்க. //

  அச்சோ வெக்கப்படுறாங்களா. கூட்டிக்கிட்டுவாங்க நம்ம மச்சான நாமாகூப்பிடுறத்துக்கு நமக்கெதுக்கு வெக்கம் சொல்லிப்புரியவைச்சிறலாம்..

  //இதை ஒரு தடவை படிச்சி காட்டணும். //

  படிச்சிக்காட்டுங்க மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 44. /தஞ்சை.ஸ்ரீ.வாசன் கூறியது...
  அன்புடன் மலிக்காவிற்கு,

  இன்று போல் என்றும் வாழ்க... மேலும் பல்லாண்டுகள் வாழ்க...//

  மிகுந்த மகிழ்ச்சி மிக நன்றி வாசன்..

  /T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...
  திருமண நாள் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
  ராதாகிருஷ்ணன்..

  பதிலளிநீக்கு
 45. ராமலக்ஷ்மி கூறியது...
  இன்று போல் என்றும் வாழ்க:)!

  நெகிழ்வான அருமையான பகிர்வு மலிக்கா.

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி ராமுமேடம்....

  பதிலளிநீக்கு
 46. /விஜய் கூறியது...
  திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி

  இன்று போல் என்றும் இனிமையாய் வாழ வாழ்த்துகிறேன்

  விஜய்..

  சகோதரரின் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
 47. படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றும் இம்மகிழ்ச்சி நிலைக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்களும், மனமார்ந்த பிராத்தணைகளும்.

  பதிலளிநீக்கு
 48. மலிக்கா இந்த பதிவை இப்ப தான் பார்க்கிறேன்.

  உங்கள் மூச்செல்லாம் மச்சான் தான் என்று கவிதையிலிருந்து தெரியுது, வாழ்த்துக்கள் என்றென்றும் சந்தோஷமாய், உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  லேட்டா வந்துட்டேனா? விருந்து முடிந்து விட்டதா? என‌க்காக‌ எடுத்து வைத்தீர்க‌ளா இல்லை எல்லாத்தையும் சுதாக‌ர் சார் எடுத்துட்டு போய் விட்டாரா?

  கீழே உள்ள‌து ஸாதிகா அக்கா என‌க்கு வாழ்த்திய‌து ரொம்ப‌ பிடிக்கும் என‌க்கு இந்த‌ வாழ்த்து..

  அதை நான் உங்க‌ளுக்கும் வாழ்த்துகிறேன்.

  ர‌ச‌குல்லாவும் ஜீராவும் போல‌
  பிரியாணியும் ம‌சாலாவும் போல‌
  அல்வாவும் நெய்யும் போல‌
  சாம்பாரும் ப‌ருப்பும் போல‌
  லட்டும் சர்க்கரையும் போல.

  நீங்க‌ளும் உங்க‌ள் ம‌ச்சானும் நீடூடி வாழ‌ வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 49. நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
  மனமார்ந்த வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 50. மலிக்கா!
  ஒவ்வொரு வரியையும் ரசித்துப்படிச்சேன்!

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது