நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்ணே நீயும்

அடி ஞானப்பெண்ணே!

பெண்ணுக்கு
பெண்ணே எதிரி
இதைப் பார்க்கும்போது
கதறுது மனம்
பதறி

வயிற்றில்
சுமையில்லையென
வஞ்சிமனதில் வருத்தத்தை
சுமத்துவதா

வம்சம்
விருத்தியாகவில்லையென
வாழவந்தவளை
வதை செய்வதா

பெண்ணுக்கு
குழந்தையில்லையெனில்
 மலடி என்றபெயர்
ஆணுக்கு
குழந்தையில்லையெனில்
??????? பெயர்

மருமகளுக்கு
குழந்தையில்லையெனில்
மகனுக்கு மறுமணம்

மகனுக்கு
குழந்தையில்லையெனில்
அது அவள்
வாங்கிவந்த வரமா

பெண்ணுக்கு
பெண்ணே சமமாகாமல்
ஆணுக்கு பெண்
ஆகுமா சரி சமம்

கூடிக்கூடி
குடும்பம் நடத்தியும்
குதூகலமாய்
தாம்பத்தியம் நடத்தியும்
இறைவன்
கொடுக்க நினைத்தால்தான்
குழந்தை

எல்லாம்
புரிந்திருந்தும் புரியாமல்
நடப்பவர்களைக்கண்டு
புண்படுகிறது
மனது

பெண்களே பெண்களுக்கு
ஆதரவாய் இருந்தால்
பெண்ணுலகமே
பொன்னாய் மின்னிடும்

அதனோடு ஆணினமும்
சேர்ந்திணைந்தால்
இப்பூலோகமே
பூத்துக்குலுங்கிடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

29 கருத்துகள்:

 1. மீ த 1 ??

  //ண்ணுக்கு
  குழந்தையில்லையெனில்
  மலடி என்றபெயர்
  ஆணுக்கு
  குழந்தையில்லையெனில்
  ??????? பெயர்
  //

  சாட்டையடி.. ஆனால் எல்லோர் மனதில் இந்தக் கேள்வி இருந்தாலும் ஆணாதிக்க சமூகத்தில் இதுக்கு விடை கிடைக்குமா???

  பதிலளிநீக்கு
 2. //பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்
  பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்..//

  கரைட்டா சொன்னீங்க.. அப்டி இருந்தாதான் நல்லாருக்குமே....

  கவிதை நல்லாருக்குங்க...

  பதிலளிநீக்கு
 3. //பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்
  பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்..//

  மல்லிக் இன்னும் அழுத்தமாச் சொல்லுங்க.புரியட்டும் எல்லாருக்கும்.ஆண்களுக்கும்தான்.

  பதிலளிநீக்கு
 4. //பெண்ணுக்கு
  பெண்ணே சமமாகாமல்
  ஆணுக்கு பெண்
  ஆகுமா சரி சமம் //

  ஒரே சிந்தனை.

  என்ன செய்யிறது வருத்தப்பட மட்டுமே முடிகிறது.

  பதிலளிநீக்கு
 5. கவிதை மிகவும் அருமை மலிக்கா

  நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 6. ரைட்
  கவிதை நல்லாருக்கு கலக்குங்க

  //சாட்டையடி.. ஆனால் எல்லோர் மனதில் இந்தக் கேள்வி இருந்தாலும் ஆணாதிக்க சமூகத்தில் இதுக்கு விடை கிடைக்குமா???//

  //மல்லிக் இன்னும் அழுத்தமாச் சொல்லுங்க.புரியட்டும் எல்லாருக்கும்.ஆண்களுக்கும்தான்.//

  நாங்கெல்லாம் அப்பாவிங்க

  பதிலளிநீக்கு
 7. நாங்கெல்லாம் அப்பாவிங்க//

  me too சகோதரி::))

  பதிலளிநீக்கு
 8. சகோ நல்லா சொன்னீங்க...!

  ஆனாலும் நீங்களும் மாமியார் ஆனப்பிறகு உங்கள் மருமகளின் கதி???

  சும்மா கேட்டேன்...!

  :))

  பதிலளிநீக்கு
 9. //பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்

  அதனோடு ஆணினமும்
  சேர்ந்திணைந்தால்
  இப்பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்..//
  கட்டாயம் நடக்கும்.. அனைத்து வரிகளும் ஆழமாக இருக்கு அக்கா

  பதிலளிநீக்கு
 10. பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்

  அதனோடு ஆணினமும்
  சேர்ந்திணைந்தால்
  இப்பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்..
  ..................Super!தெளிவா விஷயங்களை சொல்லும் கவிதை.

  பதிலளிநீக்கு
 11. அழகாய் தெளிவாய் இருக்கின்றது.

  பின்னூட்டங்கள் வேறு பக்கம் திருப்புவது போல் தோன்றுகிறது

  என்ன செய்ய ...

  பதிலளிநீக்கு
 12. அருமையான கவிதை சகோதரி. கடந்த ஒருவாரமாய் மலடி என்று பெயர் சூட்டிய பெண்களின் ஆதங்கத்தை பதிவிடலாம் என யோசித்துக் கொண்டு இருந்தபோது உங்களின் கவிதை வந்துள்ளது. மிக்க அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. சரியான நெத்தியடி. அழகிய வர்த்தை உபயோகம்.

  சொல்லுங்கள் சொல்லிக்கொண்டேயிருங்க அனைத்தைப்பற்றியும் கொஞ்சம்பேர் காதிலிலாவது விழாமலாபோகிவிடும்
  தங்கலீன் நல்நெஞ்சத்துக்கும் வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. பிரியமுடன்...வசந்த் கூறியது...
  சகோ நல்லா சொன்னீங்க...!
  ஆனாலும் நீங்களும் மாமியார் ஆனப்பிறகு உங்கள் மருமகளின் கதி???

  I upjection your honour!
  Eppadi oru mamiyar kidaika antha marumakal koduthu vaithirukkanum!

  பதிலளிநீக்கு
 15. பெண்ணுக்கு
  குழந்தையில்லையெனில்
  மலடி என்றபெயர்
  ஆணுக்கு
  குழந்தையில்லையெனில்
  ??????? பெயர்

  - Good Question!

  பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்

  - 100% Correct!


  மலிக்கா! நீங்களும் ஞானப்பெண்ணே!

  பதிலளிநீக்கு
 16. பெண்ணுக்கு
  பெண்ணே எதிரி
  இதைப் பார்க்கும்போது
  கதறுது மனம்...

  சாட்டையடி!

  பதிலளிநீக்கு
 17. அருமையா நல்ல கருத்துடன் கவிதை படைத்துள்ளீர்கள் நல்லாயிருக்கு வாழ்த்துகள் சகோதரி

  பதிலளிநீக்கு
 18. \\எல்லாம்
  புரிந்திருந்தும் புரியாமல்
  நடப்பவர்களைக்கண்டு
  புண்படுகிறது
  மனது\\\
  இன்றெய மருமகள் ,நாளைய மாமியார்-நல்லவேளை ஆண்கள் தப்பித்தார்கள்.((இது பெண்கள் குடிமிப்பிடி சண்டை))

  பதிலளிநீக்கு
 19. ///பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்

  அதனோடு ஆணினமும்
  சேர்ந்திணைந்தால்
  இப்பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்///

  அழகான கவிதை. ஆழமான நல்ல கருத்துக்கள். ரொம்ப நல்லா இருக்கு தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 20. நவாஸண்ணா. நீரோடையில் புதிய டிசைன் கொண்டுவந்தேன் எல்லாம் சரியாவிட்டது ஆனால் தமிழ்மணம் வரவில்லை.

  தமிழிஸ்கூட எடுத்துவைத்துவிட்டேன்

  ஆனால் தமிழ்மணம் பிளாக்கருக்கான ஓட்டுப்பட்டை வரவில்லை
  அங்கே சென்று அவர்கள் கொடுததுபோல் செய்தாலும் வரவில்லையே?????

  திரும்ப எப்படி கொண்டுவருவதுதென்று தெரிந்தால் சொல்லுங்கள்?

  அங்கே சென்று அவர்கள் கொடுததுபோல் செய்தாலும் வரவில்லையே

  பதிலளிநீக்கு
 21. தமிழ்ப்பெண்கள்

  Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
  http://www.tamilpenkal.co.cc/

  பதிலளிநீக்கு
 22. நீரோடையில் புதிய டிசைன் நல்லா இருக்கு
  ஆனாலும்
  பழைய டிசைன் - தவழும் குழந்தை போல
  புதிய டிசைன் - பால்ய பருவ குழந்தை போல..............

  கவிதை வரிகள் கருப்பு கலர் வேண்டாமே........
  லைட் கலர் இருக்கலாம் என்பது எனது எண்ணம்.....

  - நட்புடன் காஞ்சி முரளி..............

  பதிலளிநீக்கு
 23. Anbu Thankachikku...

  Siruthunerathirkumun Kavingnar Jinnah Sherifudeen avarkal intha kavithaiyai mikavum paratti mazhilthar.... Santhosamai irrunthathu....

  Anbuden...
  Syed Anna

  பதிலளிநீக்கு
 24. //பெண்ணுக்கு
  பெண்ணே சமமாகாமல்
  ஆணுக்கு பெண்
  ஆகுமா சரி சமம்//.....
  சரியா சொல்லியிருக்கீங்க‌!

  //பெண்களே பெண்களுக்கு
  ஆதரவாய் இருந்தால்
  பெண்ணுலகமே
  பொன்னாய் மின்னிடும்

  அதனோடு ஆணினமும்
  சேர்ந்திணைந்தால்
  இப்பூலோகமே
  பூத்துக்குலுங்கிடும்..//.....100%

  அழகான கவிதை... வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
  பேணி வளர்த்திடும் ஈசன்
  மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
  மாதர் அறிவைக் கெடுத்தார்.
  கண்கள் இரண்டினில் ஒன்றைக் -குத்திக்
  காட்சி கெடு த்திடலாமோ ?
  பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்
  பேதமை அற்றிடும் காணீர்.

  ------------------------------------------------------------------------------------
  இஸ்லாமிய பெண்ணுக்கு (தங்களுக்கு) இறைவன் இந்த
  ஞானத்தினை தந்தமைக்கு என்றும் தாங்கள் அவனைத்
  தொழுது வர துவா செய்கின்றேன்.
  -அன்புடன் -
  அன்பு சகோதரர் முகம்மது அலி ஜின்னா,

  தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,

  இஸ்லாமிய ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
  து

  பதிலளிநீக்கு
 26. http://marumagal.blogspot.com/
  உங்களை உங்களின் கணவர் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவினர்களின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற இந்திய சட்டங்களில் உள்ள வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே இந்த பதிவுத்தளம் இந்திய மருமகள்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது