நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கெளரவ வாழ்க்கை
உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்

அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்

மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க

வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி

குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்

தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் அடியில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

23 கருத்துகள்:

 1. நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க்கைப்படுகிறார்கள். நிறைய இதுபோன்று நடந்துகொண்டு வெளிவேசம் போடவேண்டியிருக்கு

  அப்பட்டமாய் அழகாய் என்ன அழவைத்துவிட்டீர்கள்..


  பிரேமலதா

  பதிலளிநீக்கு
 2. அன்புடன் மலிக்கா

  // "உள்ளக் குமுறலை
  ஒருவருக்குமறியாமல்
  கொட்டித் தீர்க்க
  இடம் தேடிய மனம்"//

  எதார்த்தமான இந்த வரிகளையும்
  மேலோட்டமாய் படிக்காமல்.......
  ஆழ்ந்து யோசித்தால்....

  கொட்டித் தீர்க்க இடம் தேடிய
  அம்மனதின் தவிப்பு... தேடல்......
  எப்படி பாராட்டுவது.....!


  \\" வேதனைகள் வேர்விட்டு
  வேகமாய் முகம்கறுக்க"// இவ்வரிகளும்.....

  \\"தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென சென்றது
  ஷவரின் அடியில்...// இவ்வரிகளும்

  ரசித்து.... அல்லது
  அனுபவித்து எழுதியதாக
  நான் நினைக்கிறன்.....

  காரணம்....!
  உள்ளக் குமுறலை
  "எது மட்டுமே அறிந்தது என்றும்"
  "யாருமறியாமல் ஷவரில் கரைந்தது " என்றும்

  superb..!
  எமை ஈர்த்த - ~
  ரசிக்கவைத்த -
  திகைக்க வைத்த
  கவிதை......
  ரொம்ப நன்னாயிருக்கு.....!

  வாழ்த்துக்கள்.....
  நட்புடன்.....
  காஞ்சி முரளி..............

  பதிலளிநீக்கு
 3. //தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென
  சென்றது
  ஷவரின் அடியில்..//

  அடடா..அழகு!!

  பதிலளிநீக்கு
 4. சிலசமயங்களில் நானும் இதுபோல் அழததுண்டு,மனம்கிடந்து தவியாய் தவிக்கும்போது,யாரிடமும் சொன்னால் என்னாஅகப்போகிறது
  மனப்பாரம்தீரும்வரை.
  குளியள்ரை குறைதீர்க்குமறை.சரிதானே மலிக்காமா..

  சாராதாவிஜயன்

  பதிலளிநீக்கு
 5. /பிரேமலதா கூறியது...
  நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க்கைப்படுகிறார்கள். நிறைய இதுபோன்று நடந்துகொண்டு வெளிவேசம் போடவேண்டியிருக்கு.//

  பலமனங்களுக்குள் இதுபோன்று நடப்பதுதான்.வாழ்க்கை அதை சிற்சில
  விசயங்களால் சிதறடித்துவிடவேண்டாமே என்ற ஆதங்கத்திலும் இருக்கலாம் இல்லயா?லதா


  அப்பட்டமாய் அழகாய் என்ன அழவைத்துவிட்டீர்கள்..


  பிரேமலதா..//

  அச்சச்சோ இங்குமா மன்னித்துவிடுங்கள் என்னை....

  பதிலளிநீக்கு
 6. Kanchi Murali கூறியது...
  அன்புடன் மலிக்கா

  // "உள்ளக் குமுறலை
  ஒருவருக்குமறியாமல்
  கொட்டித் தீர்க்க
  இடம் தேடிய மனம்"//

  எதார்த்தமான இந்த வரிகளையும்
  மேலோட்டமாய் படிக்காமல்.......
  ஆழ்ந்து யோசித்தால்....

  கொட்டித் தீர்க்க இடம் தேடிய
  அம்மனதின் தவிப்பு... தேடல்......
  எப்படி பாராட்டுவது.....!

  எப்படி முடியுமோ அப்படி ஹ ஹா [சும்மா]


  \\" வேதனைகள் வேர்விட்டு
  வேகமாய் முகம்கறுக்க"// இவ்வரிகளும்.....

  \\"தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென சென்றது
  ஷவரின் அடியில்...// இவ்வரிகளும்

  /ரசித்து.... அல்லது
  அனுபவித்து எழுதியதாக
  நான் நினைக்கிறன்...../

  இரண்டுமாகவே இருக்கலாம்..


  //காரணம்....!
  உள்ளக் குமுறலை
  "எது மட்டுமே அறிந்தது என்றும்"
  "யாருமறியாமல் ஷவரில் கரைந்தது " என்றும் //

  அப்பாடியோ உங்களுக்கு பிறர் மனதையறியும் திறன் உள்ளதோ...

  superb..!
  எமை ஈர்த்த - ~
  ரசிக்கவைத்த -
  திகைக்க வைத்த
  கவிதை......
  ரொம்ப நன்னாயிருக்கு.....!//

  பேஷ் பேஷ் [விட்டுடீங்க]
  மிகுந்த மகிழ்ச்சி

  வாழ்த்துக்கள்.....
  நட்புடன்.....
  காஞ்சி முரளி..............//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நன்றி
  நட்புடன் முரளி..

  பதிலளிநீக்கு
 7. /SUFFIX கூறியது...
  //தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென
  சென்றது
  ஷவரின் அடியில்..//

  அடடா..அழகு!!/

  மிக்க மகிழ்ச்சி ஷபியண்ணா...

  பதிலளிநீக்கு
 8. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  கலக்குறீங்க :))/

  நிஜமாவா..நன்றி பரோட்டோ

  பதிலளிநீக்கு
 9. //மேகம் கூடி
  வலம் வரவில்லை
  மழை வரவும்
  வாய்ப்பில்லை
  என்பதுபோல்
  வெளித்துக் கிடக்க//

  அழகான ஆழமான வரிகள்...

  பதிலளிநீக்கு
 10. சாராதாவிஜயன் கூறியது...
  சிலசமயங்களில் நானும் இதுபோல் அழததுண்டு,மனம்கிடந்து தவியாய் தவிக்கும்போது,யாரிடமும் சொன்னால் என்னாஅகப்போகிறது
  மனப்பாரம்தீரும்வரை.
  குளியள்ரை குறைதீர்க்குமறை.சரிதானே மலிக்காமா..

  சாராதாவிஜயன்//


  பெண்களுக்கு இதுபோன்ற சமயங்கள்
  நிறைய வரும்மா. அதை தாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையாம்மா.

  இது புதுசாயிருக்கே /குறைதீர்க்குமறை/
  சூப்பர்மா..

  தவறாமல் கருத்துக்கள் தரும் அன்னையே மிக்கநன்றி..

  அப்பாவை கேட்டதாக சொல்லவும்..

  பதிலளிநீக்கு
 11. அனைத்து வரிகளும்
  யோசிக்க வைக்கின்றன.
  பராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 12. //வேதனைகள் வேர்விட்டு
  வேகமாய் முகம்கறுக்க
  விதியிதுவோவென
  வெதும்பியபடி//

  அருமை அருமை எங்கிருந்தான் எடுப்பீங்களோ இவ்வள அற்புதமான வரிகளை.. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 13. உள்ளக் குமுறலை
  ஒருவருக்குமறியாமல்
  கொட்டித் தீர்க்க
  இடம் தேடிய மனம்

  .....அழகிய கவிதையாய் கொட்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. தண்ணீரும் கண்ணீரும்....அருமை . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. அன்புடன் மலிக்கா,

  ஆழ்மனதில் உள்ள உள்ளுணர்வுகள், கவலைகள், சோகங்கள் என எத்தனையோ பெண்களின் வாழ்கையிலும் நடப்பதை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்...

  தண்ணியில மீன் அழுதா கரையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போவதைபோல...

  //குளியலறை நோக்கிய
  கால்கள்
  கெளரவமாய் கொட்டியது
  குமுறலைக் கண்ணீராய்//

  இந்த இடத்தில் எனக்கு சற்று தடுமாற்றம் முதலாவதாக படிக்கும் சமயம், வரிகள் சரியாக கோர்க்க பட்டுள்ளதா என்று...

  மீண்டும் வாசிக்கையில் அறிந்தேன்.

  அதை இப்படி வைத்துக்கொள்ளலாமா?

  //குளியலறையை நோக்கியது
  கால்கள்
  குமுறலை கண்ணீராய்
  கெளரவமாய் கொட்டியது
  கண்கள்//  இவன்,
  தஞ்சை.வாசன்

  பதிலளிநீக்கு
 16. ஆஹா..///தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென
  சென்றது
  ஷவரின் அடியில்...
  /// அருமையான வரிகள்!

  பதிலளிநீக்கு
 17. நல்ல கவிதை.......
  நல்ல கற்பனை .........
  பிடிச்சிருக்குங்க.......

  பதிலளிநீக்கு
 18. அருமையான கருத்துகள் கொண்ட கவிதை; வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளது.

  பதிலளிநீக்கு
 19. குளியலறை நோக்கிய
  கால்கள்
  கெளரவமாய் கொட்டியது
  குமுறலைக் கண்ணீராய்

  தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென
  சென்றது
  ஷவரின் அடியில்...

  கனமான தருனங்களில் கற்கண்டு தண்ணிர்தரும் தழுவல் .... சொல்லமுடியாத ஆறுதல்
  மலிக்கா.....

  பதிலளிநீக்கு
 20. குளியலறை நோக்கிய
  கால்கள்
  கெளரவமாய் கொட்டியது
  குமுறலைக் கண்ணீராய்

  தண்ணீர் மட்டுமறிய
  சல சலவென
  சென்றது
  ஷவரின் அடியில்...

  கனமான தருனங்களில் கற்கண்டு தண்ணிர்தரும் தழுவல் .... சொல்லமுடியாத ஆறுதல்
  மலிக்கா.....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது