நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நட்பின் வலிமை


ப்ரியம் சமைத்த
பசுமை நிறைந்த
புல்வெளியில்
பனித்துளிபோல்,

பிரியமென்றாய்
பாசம்கொண்டேன்
அதீதப் பிரியமென்றாய்
அன்புகொண்டேன்!
நட்பானதால்.

துன்பம் வந்துன்
தோள் தொடுமுன்
கண்முன் வருவேன்
உன்தோள்தாங்கி
நிற்பேன்!
நட்பானதால்.

பேராசைகளோடு
பேரன்புகொண்டால்
வேண்டாமென்பேன்
கோபத்தோடு
கைகோத்து நின்றால்
கூடாதென்பேன்!
நட்பானதால்.

உன்னைச் சுற்றி
சோதனைகள்
சூழ்ந்ததென்றால்
சோகம்
என்னைத்தேடி
வாட்டும்
நட்பானதால்.

நீ
தவறிழைக்கும்போது
தட்டிக்கொடுக்கமாட்டேன்
ஏன் செய்தாயென
தட்டிக்கேட்பேன்
நட்பானதால்.

நீ
சாதித்து நிற்கும்
வேளையிலும்
இதுவெல்லாம்
போதாதென்பேன்
நட்பானதால்.

உன்னை
வருத்தம் வருத்தும்
வேளையில்
வருந்தாதவாறு
வருட வருவேன்
வசந்தமாய்
நட்பானதால்.

நீ
விலகிச்சென்றாலும்
வெறுத்துச்சென்றாலும்
வருவேன் கூடவே
நிழலோடு நிழலாய்!

ஏனென்றால்!!

படைத்தவன் கொடுத்த
என்
உள்ளக் கூட்டுக்குள்
உன்னை
பத்திரப்படுத்திக்
கொள்வேன்
என்னுயிரில் கலந்த
நட்பாய்................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


[அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாத இதழுக்காக நான் எழுதிய கவிதை  [இம்மாத தலைப்பு நட்பின் வலிமை]

35 கருத்துகள்:

 1. அழகான கவி வரிகள்
  நட்பை சொன்ன விதம்
  அழகு அழகு அழகு ..

  பதிலளிநீக்கு
 2. //பிரியமென்றாய்
  பாசம்கொண்டேன்
  அதீதப் பிரியமென்றாய்
  அன்புகொண்டேன்!
  நட்பானதால்.//

  புரியுது !!
  புரியல !!!
  நட்பானதால்.!!!

  பதிலளிநீக்கு
 3. நீ
  தவறிழைக்கும்போது
  தட்டிக்கொடுக்கமாட்டேன்
  ஏன் செய்தாயென
  தட்டிக்கேட்பேன்
  நட்பானதால்.]]

  மிக(ச்)சரி

  நண்பன் ஒரு கண்ணாடி போல் நபிகள் சொன்னது.

  முகத்தில் வடு இருந்தாலும் அப்படியே காட்டும் கண்ணாடி

  பதிலளிநீக்கு
 4. படைத்தவன் கொடுத்த
  என்
  உள்ளக் கூட்டுக்குள்
  உன்னை
  பத்திரப்படுத்திக்
  கொள்வேன்
  என்னுயிரில் கலந்த
  நட்பாய்..

  என் நட்புக்கிடைக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். சூப்பர்மா இன்னும் அசத்து..

  பிரோஷாபானு..

  பதிலளிநீக்கு
 5. மலிக்கா நட்பை சொன்ன விதம் அருமை . பெண்கள் தின வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 6. நானாக நானிருக்க
  நட்பே...
  நீ எனக்கு
  நட்பாக வேண்டும்..

  பதிலளிநீக்கு
 7. நட்பு இப்படித்தான் வலிமையோடு இருக்க வேண்டும். நல்லா எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 8. //தவறிழைக்கும்போது
  தட்டிக்கொடுக்கமாட்டேன்
  ஏன் செய்தாயென
  தட்டிக்கேட்பேன்//

  இதுதான் நல்ல நட்பு.

  உங்க பிளாக் ஸ்க்ரோல் செய்யும்போது சிரமமா இருக்கு; சில பட்டைகள், விட்ஜட்ஸும் சேந்து ஸ்க்ரோல் ஆகுறது குழம்புது. ;-))

  பதிலளிநீக்கு
 9. துன்பம் வந்துன்
  தோள் தொடுமுன்
  கண்முன் வருவேன்
  உன்தோள்தாங்கி
  நிற்பேன்!
  நட்பானதால்.//

  மிகவும் சூப்பர்மா நல்ல நல்ல வரிகளில் எழுதியுள்ளாய் நட்புகள் நீளட்டும் வாழட்டும்..

  மகளிர்தின வாழ்த்துக்கள் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 10. நீரோடை , பேருக்கு ஏத்த மாதிரி கவிதா .. சே கவிதை ஊற்றெடுகிறதே, (நான் போன வாட்டி சொன்னது மாதிரி மாங்காடு அம்மன் கோவிலுக்கு இன்னும் போகலையா )
  மேடம் நமக்கு இந்த கவிதை, சீரியஸ் ரைட்டிங் எல்லாம் கொஞ்சம் வராது (என்ன வெங்காயம் வராது தெரியாதுன்னு சொல்லு ) எனி வே கவிதை சூபர் மேடம் .

  பதிலளிநீக்கு
 11. நட்பின் சிறப்பை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. /மலிக்கா அவர்களுக்கு...
  இந்த "நட்பின் வலிமை"...

  சூபெர்ப்...
  நட்பின் வலிமை மேலுங்கூட
  வாழ்த்துக்கள்........


  நட்புடன்....

  காஞ்சி முரளி.........//

  காஞ்சி முரளி அவர்களுக்கு.
  மிக்க நன்றி.

  இரு கருத்துக்களாக போட்டால் அதில் ஒன்றை வெளியிட்டலாம். இல்லையென்றால் இப்படி நானே ஒரு பகுதியை தனியாக காப்பி பேஸ்ட் செய்வதுபோலாகிவிடும்.

  தாங்களின் நட்பான கருத்துக்கள் அனைத்தும் மிகுந்த சந்தோஷம். நட்பை தட்டிக்கொடுப்பது.தட்டிக்கேட்பதும்.
  சிறந்தவைகளே! மிக்க மகிழ்ச்சி

  நட்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 13. நினைவுகளுடன் -நிகே- கூறியது...
  அழகான கவி வரிகள்
  நட்பை சொன்ன விதம்
  அழகு அழகு அழகு..//

  நிகே. வாங்க அழகுக்கு அழகுசேர்த்த கருத்துக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. ஜெய்லானி கூறியது...
  //பிரியமென்றாய்
  பாசம்கொண்டேன்
  அதீதப் பிரியமென்றாய்
  அன்புகொண்டேன்!
  நட்பானதால்.//

  புரியுது !!
  புரியல !!!
  நட்பானதால்.!!!//

  ஆகா புரிந்தும் புரியலையா! அதுதான் நட்பு ஹ ஹா ஹா

  பதிலளிநீக்கு
 15. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  மிக அழகாய் இருக்கிறது, கவிதை.//

  மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா ...

  பதிலளிநீக்கு
 16. நட்புடன் ஜமால் கூறியது...
  நீ
  தவறிழைக்கும்போது
  தட்டிக்கொடுக்கமாட்டேன்
  ஏன் செய்தாயென
  தட்டிக்கேட்பேன்
  நட்பானதால்.]]

  மிக(ச்)சரி

  நண்பன் ஒரு கண்ணாடி போல் நபிகள் சொன்னது.

  முகத்தில் வடு இருந்தாலும் அப்படியே காட்டும் கண்ணாடி..

  /நபிகள் சொன்னது/ நிச்சியமான உண்மை.

  அருமையான கருத்து ஜமால்காக்கா

  பதிலளிநீக்கு
 17. நட்புக்கு சமர்ப்பனமாய்....//

  ஆம் அப்படியே நண்பா.  /பிரோஷாபானு கூறியது...
  படைத்தவன் கொடுத்த
  என்
  உள்ளக் கூட்டுக்குள்
  உன்னை
  பத்திரப்படுத்திக்
  கொள்வேன்
  என்னுயிரில் கலந்த
  நட்பாய்..

  /என் நட்புக்கிடைக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். சூப்பர்மா இன்னும் அசத்து..

  பிரோஷாபானு..//

  உங்க நட்பும்
  கிடைக்க நானும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
  தோழியின் துணையிருந்தால் துன்பங்களைகூட துரத்தியடிக்கலாமாம்.
  .மிக்க நன்றி பிரோஷா..

  பதிலளிநீக்கு
 18. உங்க பிளாக் ஸ்க்ரோல் செய்யும்போது சிரமமா இருக்கு; சில பட்டைகள், விட்ஜட்ஸும் சேந்து ஸ்க்ரோல் ஆகுறது குழம்புது. ;-))//

  என்ன செய்ய ஹுசைன்னம்மா. ஏன்னு தெரியலையே@ யாராவது தெரிந்தவங்க இருந்தா இந்த பிரச்சனைகு ஒரு வழியச்சொல்லுங்களேன்...

  பதிலளிநீக்கு
 19. miga alagana varigal.
  en kaloori tholizal mattumthaan enaku miga nerukamana nanbargal.
  uggal varigal,antha alagana natkalai nenaiuku konduvarukirathu.

  பதிலளிநீக்கு
 20. அன்புடன் மலிக்கா அவர்களுக்கு...

  இந்த 'நட்புடன்' வார்த்தைகளுக்கு
  மதிப்பளித்தமைக்கு
  மிக்க நன்றி....!
  (நட்புக்குள் நன்றி, மன்னிப்பு formalities வேண்டாமென்று
  தாங்கள் சொன்னாலும்...
  நன்றி சொல்வதும், மன்னிப்பு கேட்பதும் என் கடமை...)

  இனி தனியே கருத்துரைக்கெனவும்...
  தங்கள் பார்வைக்கும் தனி கருத்து.......

  நன்றி...!

  நட்புடன்....
  காஞ்சி முரளி........

  பதிலளிநீக்கு
 21. sarusriraj கூறியது...
  மலிக்கா நட்பை சொன்ன விதம் அருமை . பெண்கள் தின வாழ்த்துக்கள் மலிக்கா//

  மிக்க நன்றி சாருக்கா நமக்குள் இருக்கும் நட்பைப்போல் இல்லக்கா..
  உங்களுக்கும் வாழ்த்துக்களக்கா.

  பதிலளிநீக்கு
 22. S Maharajan கூறியது...
  நானாக நானிருக்க
  நட்பே...
  நீ எனக்கு
  நட்பாக வேண்டும்.

  கவிதைக்கே கவிஎழுதி அசத்திட்டீங்க நட்பு வாழ்க. நன்றி மகாராஜன்

  பதிலளிநீக்கு
 23. SUFFIX கூறியது...
  நட்பு இப்படித்தான் வலிமையோடு இருக்க வேண்டும். நல்லா எழுதியிருக்கீங்க.//

  மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா../

  /
  /ஹுஸைனம்மா கூறியது...
  //தவறிழைக்கும்போது
  தட்டிக்கொடுக்கமாட்டேன்
  ஏன் செய்தாயென
  தட்டிக்கேட்பேன்//

  இதுதான் நல்ல நட்பு./

  சரிதானே ஹுசைன்னமா நன்றி..

  பதிலளிநீக்கு
 24. சாரதாவிஜயன் கூறியது...
  துன்பம் வந்துன்
  தோள் தொடுமுன்
  கண்முன் வருவேன்
  உன்தோள்தாங்கி
  நிற்பேன்!
  நட்பானதால்.//

  மிகவும் சூப்பர்மா நல்ல நல்ல வரிகளில் எழுதியுள்ளாய் நட்புகள் நீளட்டும் வாழட்டும்..

  மகளிர்தின வாழ்த்துக்கள் மலிக்கா.//

  சந்தோஷமும் மகிழ்ச்சியும் எனக்கு கிடைத்திறுக்கும் நட்புகளுக்கு இறைவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும். அன்னையாய் கிடைத்த நட்பு உங்களூடையது மிக்க நன்றிமா.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  8

  A.சிவசங்கர் கூறியது...
  நட்ட்புடன் வந்து போகிறேன்.

  சந்தோஷம் சிவசங்கர்
  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 25. மங்குனி அமைச்சர் கூறியது...
  நீரோடை , பேருக்கு ஏத்த மாதிரி கவிதா .. சே கவிதை ஊற்றெடுகிறதே, (நான் போன வாட்டி சொன்னது மாதிரி மாங்காடு அம்மன் கோவிலுக்கு இன்னும் போகலையா )
  மேடம் நமக்கு இந்த கவிதை, சீரியஸ் ரைட்டிங் எல்லாம் /கொஞ்சம் வராது (என்ன வெங்காயம் வராது தெரியாதுன்னு சொல்லு ) எனி வே கவிதை சூபர் மேடம் .//


  வாங்க மங்குனி. வெங்காயம்கூட தெரியாத ஒரு அமைச்சர் சரி சரி போகட்டும் விடுங்க அதெல்லாம் தெரிந்து என்னா ஆவப்போவுது இல்ல.

  நீ எனக்காக நல்ல வேண்டிக்கோங்க மங்குனி, மாங்காட்டு அம்மன்கிட்ட..

  நான் உங்களூக்காக இறைவன்கிட்ட வேண்டிக்கிறேன். அமைச்சருக்கு மங்குனிக்கு பதில் வெங்காயத்தை வைக்கச்சொல்லி ஓகேவா? [சும்மா]

  தாங்களின் வருகைக்கும் அய[ழ]கான கருத்துக்கும் நொ[ரொ]ம்ப சந்தோஷம்.. மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 26. Chitra கூறியது...
  நட்பின் சிறப்பை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.//

  மிக்க நன்றி சித்ரா தோழி..

  பதிலளிநீக்கு
 27. Kanchi Murali கூறியது...
  அன்புடன் மலிக்கா அவர்களுக்கு...

  இந்த 'நட்புடன்' வார்த்தைகளுக்கு
  மதிப்பளித்தமைக்கு
  மிக்க நன்றி....!
  (நட்புக்குள் நன்றி, மன்னிப்பு formalities வேண்டாமென்று
  தாங்கள் சொன்னாலும்...
  நன்றி சொல்வதும், மன்னிப்பு கேட்பதும் என் கடமை...)//

  மிக்க மகிழ்ச்சி. தாங்களுக்கு திருப்தியெனில் சரியே....

  இனி தனியே கருத்துரைக்கெனவும்...
  தங்கள் பார்வைக்கும் தனி கருத்து.......

  நன்றி...!

  நட்புடன்....
  காஞ்சி முரளி........//


  சந்தோஷம் முரளி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 28. /sabira கூறியது...
  miga alagana varigal.
  en kaloori tholizal mattumthaan enaku miga nerukamana nanbargal.
  uggal varigal,antha alagana natkalai nenaiuku konduvarukirathu/

  ஓகோ அப்படியா! இனி எங்களையும் நட்பு வட்டத்துக்குள் இணைத்துக்கொள்ளுங்கள் தாங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 30. அருமையோ.........அருமை........


  நம்ம பக்கமும் வாங்க........

  பதிலளிநீக்கு
 31. நகுதற் பொருட்டன்று நட்டார் மிகுதிக்கண் எனும் அய்யனின் வாக்கு நினைவுக்கு வருகிறது.எல்லாமுமாக இருப்பதுதான் உண்மையான நட்பு

  பதிலளிநீக்கு
 32. அருமை மலிக்கா உன் கவிதை அருவி போல் கொட்டும் உன் கவிதை பார்க்கும் எங்கல் மனசை திருடி கொள்ளூதே

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது