நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நதியலையில் ஆடும் நிலவு


நன்றி கூகிள்
வான்நதியில் உலாவரும்
வெண்ணிலாவே-நீ
வலம்வரும் வேளையில்

பெண்ணிலவோடு உனக்கென்னடி
போட்டி

நீ உலாவரும் வானில்
நான் விழாக்காண வந்ததால்
நான் நீராடும் நதியில்
நீ் குளித்தாட வந்தாயோ!

எட்ட நின்றே
எட்டிப்பார்பதெதற்கு!

பூவுலகைச் சுற்றிவருவதால்
வந்த களைப்பா! -இல்லை
பாவை எனைப்பார்த்தும்
ஏற்பட்ட வியப்பா!

உன் ஒளிக்கதிரில்
எனை நீராட்டவா-இல்லை
என் முக அழகை -நீ
ஒட்டிக்கொள்ளவா!

ஆணினமென்றால் அப்படியே
அனுப்பியிருப்பேன் -நீ
என்னினமென்பதால்தான்
அனுமதிக்கிறேன்

வா வா வான்நிலவே
வந்து என்னோடு நீராடு
இருமுகமும்
இணைத்து சேர்ந்தாடு்

பகலில்கூட பளபளக்கும்
பட்டு நிலவே-என்
பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த

பாவையுள்ளம் பளபளக்கட்டும்

வெண்ணிலவும் பெண்ணிலவும்
ஒன்றிணைந்து
வெள்ளை நதிக்கு
விளையாட்டுக் காட்டட்டும்

நாளை முகநூலில் முகப்பில்
நம்மிருவரைப்பற்றியே
நளினத்தோடு பேச்சிருக்கும்
நதியலையில் ஆடும் நிலாக்களென்று..

//டிஸ்கி//இந்த தலைப்பில் முகநூலில் கவிதையெழுத சொன்னாங்க.
அதேன் இஸ்டத்து அள்ளி விட்டாச்சி சும்மா சும்மா.[எப்புடிக்கீது]
நம்மவூட்டுல நெட்பிராப்ளம் இருந்தாலும் அடிச்சி புடிச்சி அடுத்தாதிலிருந்து ஒரு கவுஜைய கிறிக்கிட்டோமுல்ல!
முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வைர-முத்து



மண்ணுக்குள் கிடைக்கும் வைரம்
சிப்பிக்குள் கிடைக்கும் முத்து
இவையிரண்டும் இணைந்து அதிசயமாய்
பெண்ணுக்குள்
உருவானது உயிராய்-அது
பேனா பிடித்து எழுதியது
முத்தமிழையும் கலந்த கவிதையாய்

கரிசல்காட்டு மண்ணையும்
கஞ்சி சுமந்த பெண்ணையும்
கல்லூரி கதையையும்
காதல் நெகிழ்வையும்
கவிக்குள் அடக்கும் திறன்
கவிப்பேரரசு என்ற
கருப்பு வைரம்

சங்கத்தமிழும் சிந்துபாடும்
சமுத்திர நதியும் சிணுங்கியோடும்
தங்குதடையின்றி
தண்ணீராய் வந்துவிழும்
தமிழ் வார்த்தைகளின் சரளம்
தங்கத்தமிழனாய்
தாய்மண்ணில் ஊர்வலம்

முத்தமிழும் கலந்த தமிழ்வித்து
தமிழ்தாய் பெற்றடுத்த வைரமுத்து..




டிஸ்கி//  இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு, தமிழர்களை மட்டுமல்ல மற்ற மொழிக்காரர்களுடன் உடனே ஒட்டிக்கொள்வதும் தமிழ்மொழிதான்.அன்னைத்தமிழை அடுத்தவர் அழகாய் பேசும்போதும் அதை
அணு அணுவாய் ரசிப்பதில் ஓர் அலாதி இன்பம்தான்..//
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அம்மாவிற்கே! அம்மா.[முகநூல் கவிதைகள்]

அம்மாவிற்கே!



கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண


வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக


அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை


அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை


அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???


அம்மா.



ன்பின் அஸ்திவாரம்
னந்தத்தின் ஆணிவேர்
ன்பத்தின் நிழற்கொடை
கையின் உதாரணம்
ண்மையின் உறைவிடம்
ஞ்சலின் தாலாட்டு
தார்த்தத்தின் நிதர்சனம்
கன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ற்றைப்பூவில் உலகவாசம்
ர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.

இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!


டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது