நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
facebook. கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
facebook. கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நதியலையில் ஆடும் நிலவு


நன்றி கூகிள்
வான்நதியில் உலாவரும்
வெண்ணிலாவே-நீ
வலம்வரும் வேளையில்

பெண்ணிலவோடு உனக்கென்னடி
போட்டி

நீ உலாவரும் வானில்
நான் விழாக்காண வந்ததால்
நான் நீராடும் நதியில்
நீ் குளித்தாட வந்தாயோ!

எட்ட நின்றே
எட்டிப்பார்பதெதற்கு!

பூவுலகைச் சுற்றிவருவதால்
வந்த களைப்பா! -இல்லை
பாவை எனைப்பார்த்தும்
ஏற்பட்ட வியப்பா!

உன் ஒளிக்கதிரில்
எனை நீராட்டவா-இல்லை
என் முக அழகை -நீ
ஒட்டிக்கொள்ளவா!

ஆணினமென்றால் அப்படியே
அனுப்பியிருப்பேன் -நீ
என்னினமென்பதால்தான்
அனுமதிக்கிறேன்

வா வா வான்நிலவே
வந்து என்னோடு நீராடு
இருமுகமும்
இணைத்து சேர்ந்தாடு்

பகலில்கூட பளபளக்கும்
பட்டு நிலவே-என்
பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த

பாவையுள்ளம் பளபளக்கட்டும்

வெண்ணிலவும் பெண்ணிலவும்
ஒன்றிணைந்து
வெள்ளை நதிக்கு
விளையாட்டுக் காட்டட்டும்

நாளை முகநூலில் முகப்பில்
நம்மிருவரைப்பற்றியே
நளினத்தோடு பேச்சிருக்கும்
நதியலையில் ஆடும் நிலாக்களென்று..

//டிஸ்கி//இந்த தலைப்பில் முகநூலில் கவிதையெழுத சொன்னாங்க.
அதேன் இஸ்டத்து அள்ளி விட்டாச்சி சும்மா சும்மா.[எப்புடிக்கீது]
நம்மவூட்டுல நெட்பிராப்ளம் இருந்தாலும் அடிச்சி புடிச்சி அடுத்தாதிலிருந்து ஒரு கவுஜைய கிறிக்கிட்டோமுல்ல!
முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அம்மாவிற்கே! அம்மா.[முகநூல் கவிதைகள்]

அம்மாவிற்கே!



கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண


வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக


அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை


அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை


அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???


அம்மா.



ன்பின் அஸ்திவாரம்
னந்தத்தின் ஆணிவேர்
ன்பத்தின் நிழற்கொடை
கையின் உதாரணம்
ண்மையின் உறைவிடம்
ஞ்சலின் தாலாட்டு
தார்த்தத்தின் நிதர்சனம்
கன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ற்றைப்பூவில் உலகவாசம்
ர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.

இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!


டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் மனசு

[facebook. கவிதைகள்.]

                                                              /நன்றி கூகுள்/

என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவிட்டது

இனி

என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய் ஓடியது

என்மனசும் உன்னிலும்
உன்மனதும் என்னிலும்...

டிஸ்கி// என்மனசு அல்லது என் மனது. தலைப்புக்கு கவிதை எழுதச்சொன்னார்கள். நாம ரெண்டையும் இணைச்சு எழுதியிருக்கோம்
சரியா?. சும்மா சொல்லிட்டுப்போங்க எப்புடி இருக்குன்னு. சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

facebook கவிதைகள்..[ஓமனிதா! முகம்!!]

ஓ மனிதா
















நீ சிந்தித்ததென்ன
சிந்திக்கப்போவதென்ன!
நீ சாதித்ததென்ன
சாதிக்கப்போவதென்ன!

மயிலிறகாய்
கிடைத்திருக்கும் வாழ்க்கையை
மாயவலையில் மாட்டிவிட்டு-நீ
மதிமயங்கிவிடவா!-இல்லை
மரபுகளென்னும்
மதிப்புமிகுந்த சோலையில்
மணவீசி-உன்
மனம் சிறக்கவா!

சிந்தனையை சிற்பியாயிருந்து
செதுக்கி வடிவமை
உன் வாழ்க்கையை
சாதனைகள்
வசந்த சிற்பமாய் வந்து
உன் வாசல்தட்டும்
உன் வாழ்வும் செழிக்கும்..

முகம்















முகம்
அகத்தின் கண்ணாடி
சிலவேளை
அதுவே
மாயக்கண்ணாடி!

மனதை வாசிக்க
முகம்வழியே முயற்சிப்பது
முடியுமென்பது சிலநேரம்
முடியாதென்பது பலநேரம்

அதன்
உள்ளுணர்வை
வெளிச்சமாய் காட்டிவிட்டு
வெளியுணர்வை
உள்ளடக்கிக்காட்டும்

முகக்கண்ணாடி
அதுவே
மாயக்கண்ணாடி..

கிளிக் கிளிக் இங்கே

//டிஸ்கி// இது facebook கவிதைகள். கவிதை முகம் மென்னும்  //facebook இன் தமிழ்க் கவிஞர்களுக்கான ஒரு தேடல்// வாரம் ஒரு கவிதையை ஒரு தலைப்புகொடுத்து எழுத்தசொல்றாங்க. கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது