நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நதியலையில் ஆடும் நிலவு


நன்றி கூகிள்
வான்நதியில் உலாவரும்
வெண்ணிலாவே-நீ
வலம்வரும் வேளையில்

பெண்ணிலவோடு உனக்கென்னடி
போட்டி

நீ உலாவரும் வானில்
நான் விழாக்காண வந்ததால்
நான் நீராடும் நதியில்
நீ் குளித்தாட வந்தாயோ!

எட்ட நின்றே
எட்டிப்பார்பதெதற்கு!

பூவுலகைச் சுற்றிவருவதால்
வந்த களைப்பா! -இல்லை
பாவை எனைப்பார்த்தும்
ஏற்பட்ட வியப்பா!

உன் ஒளிக்கதிரில்
எனை நீராட்டவா-இல்லை
என் முக அழகை -நீ
ஒட்டிக்கொள்ளவா!

ஆணினமென்றால் அப்படியே
அனுப்பியிருப்பேன் -நீ
என்னினமென்பதால்தான்
அனுமதிக்கிறேன்

வா வா வான்நிலவே
வந்து என்னோடு நீராடு
இருமுகமும்
இணைத்து சேர்ந்தாடு்

பகலில்கூட பளபளக்கும்
பட்டு நிலவே-என்
பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த

பாவையுள்ளம் பளபளக்கட்டும்

வெண்ணிலவும் பெண்ணிலவும்
ஒன்றிணைந்து
வெள்ளை நதிக்கு
விளையாட்டுக் காட்டட்டும்

நாளை முகநூலில் முகப்பில்
நம்மிருவரைப்பற்றியே
நளினத்தோடு பேச்சிருக்கும்
நதியலையில் ஆடும் நிலாக்களென்று..

//டிஸ்கி//இந்த தலைப்பில் முகநூலில் கவிதையெழுத சொன்னாங்க.
அதேன் இஸ்டத்து அள்ளி விட்டாச்சி சும்மா சும்மா.[எப்புடிக்கீது]
நம்மவூட்டுல நெட்பிராப்ளம் இருந்தாலும் அடிச்சி புடிச்சி அடுத்தாதிலிருந்து ஒரு கவுஜைய கிறிக்கிட்டோமுல்ல!
முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

22 கருத்துகள்:

  1. ஐ.. வட எனக்குதான்...!

    வாழ்த்துக்கள்

    கஞ்சி முரளி

    பதிலளிநீக்கு
  2. ஆகா வடபோச்சேன்னு இப்ப ஜெய்லானிவந்து முரளிய கும்மப்போறாங்க..

    இல்லயில்லை கள்ளஓட்டுப்போடப்போறாங்க.
    எப்படியோ ஓட்டு [வி]வுழுந்தா சரி

    பதிலளிநீக்கு
  3. அடுத்த‌ ஆத்துல‌ இருந்தும் இவ்வ‌ள‌வு சோக்கா க‌விதை எழுதுறீங்க‌ளா?.... ம்ம்ம்ம்ம் ந‌ட‌க்க‌ட்டும் ந‌ட‌க்க‌ட்டும்..

    பதிலளிநீக்கு
  4. வட போச்சி. அருமையான கவிதை மலிக்கா
    //உன் ஒளிக்கதிரில்
    எனை நீராட்டவா-இல்லை
    என் முக அழகை
    நீ ஒட்டிக்கொள்ளவா! //

    அருமை

    பதிலளிநீக்கு
  5. //பூலோகைச் சுற்றிவருவதால்
    வந்த களைப்பா! -இல்லை
    பாவை என்னைப்பார்த்தும்
    ஏற்பட்ட வியப்பா!//

    .இருக்கலாம்....

    //பகலில்கூட பளபளக்கும்
    பட்டு நிலவே-என்
    பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த
    பாவையுள்ளம் பளபளக்கட்டும்//

    ஆஹா..
    //முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
    நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே.//

    கோவம் தான் அதுக்கும் ஒரு கவிதை
    எழுதி கொடுத்து விடுங்கள்..
    இல்லையின்னா கோவம் அதிகரிக்கும்
    ஆமா சொல்லிபுட்டேன்...

    பதிலளிநீக்கு
  6. வெண்ணிலாவோடு.... ஓர்
    பெண்ணிலாவை வைத்தே
    கவிதையா...?
    பேஷ்... பேஷ்.. நன்னாயிருக்கு...!

    வெண்ணிலவைவிட இப் பெண்ணிலவு அழகா என்ன..?
    ஏனெனில்... "எட்டிப்பார்பதர்க்கும்... முகவழகை ஒட்டிக்கொள்ளவும்" என்ற வரிகளை வைத்துச் சொல்கிறேன்....


    பெண்ணினத்திற்கே உரிய 'அழகின் ஒப்பீடு' (பொறாமை என்பதைத்தான் டீசண்டா சொல்றேனுங்கோ) வெண்ணிலவிடமுமா..?

    அதனால்தான் அப்பெண் "என் பட்டுக் கன்னம் தொட்டு மீட்டு... இந்த பாவையுள்ளம் பளபளக்கட்டும்" என்ற வார்த்தையில்....

    இறுதியாய்...

    வெண்ணிலவையும்
    பெண்ணிலவையும்
    இணைத்து
    இக்கவிநிலவு
    வார்தைஜாலத்தால்
    எதுகைமோனையுடன்
    வடித்த
    அழகு கவிதை....

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  7. அடுத்தாத்திலிருந்தே இப்புட்டு அழகா நிலவ பற்றி ம்ம்ம்ம் சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. நீ உலாவரும் வானில்
    நான் விழாக்காண வந்ததால்
    நான் நீராடும் நதியில்
    நீ் குளித்தாட வந்தாயோ!



    ......அழகு.... அழகோ அழகு..... ரொம்ப ரசித்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சீக்கிரமே சினிமாவுக்கு பாட்டெழுத உங்களை கூபிடுவாங்கன்னு நினைக்கிறேன்...

    இந்த வரிகளை இசை அமைத்து பாடினால் செறிவாக இருக்குமென்றே நம்புகிறேன்...

    பதிலளிநீக்கு
  10. அட நீங்க
    பேணாவைத்தொட்டாலே
    கவிதையாகத்தான்
    பிறக்கிறது
    உங்கள்
    எழுத்துக்குழந்தைகள்
    எங்களுக்கும்
    சொல்லித்தாருங்கள்
    முடிந்தால்...

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பாருங்க மக்கா!! வடைக்கு ஆசப்பட்டு வரி வரியா எழுதக் கூடிவர் ரெண்டே வரியில் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.

    வடைதான் போச்சே அடுத்து சட்னியாவது கிடைக்குமா ? பாக்கலாம்..

    பதிலளிநீக்கு
  13. வானில் உலா வரும் வெண்ணிலா

    வெண் நீரில் குளிக்கும் பெண்ணிலா

    இதை(யும்) கவிதையாக வடிக்கும் கவிதை நிலா..

    பதிலளிநீக்கு
  14. //ஆண் நிலவென்றால் அப்படியே
    அனுப்பியிருப்பேன் -நீ
    என்னினமென்பதால்தான்
    அனுமதிக்கிறேன்//

    எல்லாத்தையும் மொத்தமா குத்தககைக்கு
    எடுத்திட்டிங்கபோல

    நிலா,வானவில்,தென்றல்,அலை,பூமி{அன்னை பூமி},நாடு {தாய் நாடு},
    இப்படியே நிறையா சொல்லிக்கிட்டே போகலாம்

    எங்களுக்குன்னு என்னா இறுக்குன்னு தான் தெரியல

    எல்லாம் பென் ஆதிக்கதனம்......
    .......

    பதிலளிநீக்கு
  15. //இல்லை
    பாவை என்னைப்பார்த்தும்
    ஏற்பட்ட வியப்பா!//

    நிச்சியமாய் அப்படித்தானே இருக்க வேண்டும் அக்கா...எனக்கு பிடித்த நிலாக்கவிதை அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  16. கவிதை முழுதும் அழகு நிலா மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  17. பூலோகைச் சுற்றிவருவதால்
    வந்த களைப்பா! -இல்லை
    பாவை என்னைப்பார்த்தும்
    ஏற்பட்ட வியப்பா!

    உன் ஒளிக்கதிரில்
    எனை நீராட்டவா-இல்லை
    என் முக அழகை
    நீ ஒட்டிக்கொள்ளவா!

    அற்புதமான வரிகள். அழகான வரிகள். வரிகளைப் பார்த்து வியந்தேன். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. // ஜெய்லானி கூறியது...

    வானில் உலா வரும் வெண்ணிலா

    வெண் நீரில் குளிக்கும் பெண்ணிலா

    இதை(யும்) கவிதையாக வடிக்கும் கவிதை நிலா..///


    டேய் ஜெய்லானி உனக்கேன் இந்த விசபரிச்சை

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப பொறாமையா இருக்குங்க , நமகெல்லாம் கவிதை ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம் ,என்னா யோசிச்சாலும் வரமாட்டேன்கிது

    பதிலளிநீக்கு
  20. ஹய்... ஹய்... ஜெய்லானி கும்மளையே மலிக்கா...!


    நன்றி... ஜெய்லானி...!
    மலிக்கா சொன்னமாதிரி எங்க கும்மப்போரிங்களோன்னு நினைச்சேன்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  21. // காஞ்சி முரளி கூறியது...

    ஹய்... ஹய்... ஜெய்லானி கும்மளையே மலிக்கா...!


    நன்றி... ஜெய்லானி...!
    மலிக்கா சொன்னமாதிரி எங்க கும்மப்போரிங்களோன்னு நினைச்சேன்...//

    தேவையே இல்லையே நண்பா , பாருங்க அவசரத்தில காஞ்சிய கஞ்சியா ஆக்கிட்டீங்களே.(முதல் கமெண்ட் ) ஹி...ஹி.. கிடைச்ச வடையும் ஊசிப்போன வடையா ?

    பதிலளிநீக்கு
  22. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி. நல்ல தொரு சிந்தனை. நான் 25 வருடதிற்கு சற்று முன்னே எழுதியது.
    ஏ நிலவே!
    உன் முகத்திற்கு முக்காடு இட்டுகொள்.
    என்னவள் இவ்வுலகில் இருக்கும் வரை
    உனக்கு ஓய்வு நாட்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது