மனமுடுக்கெங்கும்
புல்லாங்குழலில் புஷ்பராகம்
ஏன் ஏனிந்த மாற்றம்...
உணர்வுகளுக்குளெங்கும்
ஊதக்காற்றினை மீறிய உஷ்ணம்
ஏன் ஏனிந்த மாற்றம்...
உயிருக்குள் அடிக்கடி
ஊடுருவி அசைத்தாட்டும் பூகம்பம்
ஏன் ஏனிந்த மாற்றம்...
நேர்நோக்கு பார்வையெல்லாம்
கீழ்நோக்கி கோலம்போடும்
ஏன் ஏனிந்த மாற்றம்...
எங்கெதில் நோக்கினும்
என்னெதிரில் தெரிவதெல்லம்
உன்னுருவத் தோற்றம்
ஏன் ஏனிந்த மாற்றம்...
உலவும் என்னுடல் கூடு மட்டும்
உயிரெங்கோ உனை நாடியே சுற்றும்.
ஓஓஒ
உன்னால்தான் என்னில் மாற்றம்
காதல் தந்த மன மாற்றம்
கனவெல்லாம் நினைவுகளின் பூந்தோட்டம்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வணக்கம்
பதிலளிநீக்குஅற்புதமான வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சூப்பர்... மேடம்...
பதிலளிநீக்குநீரோடைக்கு வந்து ரொம்ப நாளாச்சில்ல...