நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இனி ஒரு விதிசெய்வோம்...
விழுந்தாயோ மதியே எழுந்து வா !வா!
வீழ்ந்தே கிடக்காது
வீருகொண்டெழுந்தே வா! வா!
வீணேபொழுதை கடத்தியதுபோதும்
வேர்விட்ட சதியை வேரறுத்திட வா வா

விட்டத்து நிலவை வெறித்ததுபோதும்,,,
வெட்டிப்பேச்சு கொட்டியதுபோதும்,,
தட்டிக் கழித்த தடைகளையெல்லாம்
தட்டி முட்டிட வா வா  வா வா  !!

எட்டிமிதித்த பந்தைபோல்
எங்குநோக்கினும் மிதிகள்வாங்கி
குட்டுப்பட்டே கூனியது போதும்,,
சுவற்றிலடித்த பந்தாய் எம்பி 
சட்டென தாக்கிட வா வா வா வா

பொட்டைகூவி பொழுதெப்போ விடியும்
பாலியலியலுக்கு மோட்சம் கிடைக்குமாயெனவும்
பேசிப்பேசி கழித்ததுபோதும்
செவிடங்காது திறக்காது நாளும்
செயல்முறைபடுத்தி சீராக்கிக் காத்திட
செங்கோலெடுத்து சீறி[வி]ட வா வா

விதியென்ற பேரில் போர்வையை போட்டு
சதிகளின் போரில் மாய்திடுவோரை
சாமர்த்தியங்கொண்டு சாய்த்திட வா வா
மாற்றம்காண மாற்றம்கொண்டு
மமதை போதையில் திரிந்திடுவோரை    
மடமை மாற்றி மனிதம் போற்றிட வா வா வா வா!

  
இனியொரு பிறவி இப்புவியினிலில்லை      
இறை எழுதிய விதியோ அழிவதற்கில்லை!
தலைவிதியிதுவென தட்டுக்கெடுவதை நிறுத்தி
தனக்குளிருக்கும் திடத்தை முறுக்கி
சதியின் விதியை சரித்துப்போட்டு-புது
சரித்திரம் படைத்திட வா வா வா வா விரைவா...


அன்புடன் மலிக்கா
இறைய நேசி இன்பம் பெறுவாய்..

4 கருத்துகள்:

 1. வணக்கம்
  அற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இனியொரு பிறப்பில்லை.... இப்பிறப்பில் இனியொரு விதி செய்வோம்....வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. அருமை அக்கா.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. "பொட்டைகூவி பொழுதெப்போ விடியும்
  பாலியலியலுக்கு மோட்சம் கிடைக்குமாயெனவும்
  பேசிப்பேசி கழித்ததுபோதும்
  செவிடங்காது திறக்காது நாளும்
  செயல்முறைபடுத்தி சீராக்கிக் காத்திட
  செங்கோலெடுத்து சீறி[வி]ட வா வா"
  வரிகள் அருமை அக்கா....இரசித்தேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது