நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விதைத்தாலும் முளைக்காது! முளைத்தாலும் நிலைக்காது..!


விஷவிதைகளை விதைப்பதாய் எண்ணி

வில்லங்கத்தை காசாக்கிப்பார்க்க
விஷப்பரீட்சைகளை நடத்தும் 
விஸ்வரூப வேடதாரிகளே!

உங்கள் வெறியடங்க விளையாடுங்கள் 
வேடிக்கையாய் 
விளையாட்டுக் காட்டுங்கள் - அனைத்தும், உங்கள் 
வேஷங்கள் கலையும்வரைதான்..!

வீணர்கள் விதைக்கும் விதைகள்யாவும்
விதைத்தாலும் முளைக்காது,
முளைத்தாலும் நிலைக்காது
வெற்று விதைகள் மண்ணையே முட்டாதபோது
வேரூன்றி நிற்பதெங்கே..!

உன்னைபோல் ஒருவன், உலகநாயகனாகி,
ஹேராம் பாடிக்கொண்டே, குருதிப்புனலெடுத்து
விஸ்வரூப தோட்டாக்கள்கொண்டு 
துளைத்தெடுக்க நினைத்தாலும்
தூளாகிடுமா?தூயவனின் தூயமார்க்கம்!

உலக மனிதர்களை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கமிது
பிறர்உணர்வுகளை மதிக்காது
நெறிதவறி வாழும் உம்மைப் போன்றோரையும்
மனமுவந்து மன்னிதருளும் நேர்மை மார்க்கமிது!

உலகின் ஒட்டுமொத்த ஆன்மாக்களும் ஒன்று திரண்டு வரும் 
இஸ்லாமிய மார்க்கத்தையா இழிவுபடுத்த எண்ணுகிறீர்..?
ஓடி வருகிறார்கள் - தினம் தினம் 
இக்லாஸெனும் தூய்மையை நாடி வருகிறார்கள்!

உங்களைப்போன்றோர்
எதிர்க்க எதிர்க்கத்தான்
ஏகனின் வழியில்வர ஏகமனதோடு
ஆவல் கொள்கிறார்கள்!

கேளிக்கை கொண்டாட்டதினுள்
வேடிக்கையாய்
வினைகளை புகுத்துவது
கோடிகள் குவிக்கவா?

நீங்கள் வெட்டவெட்டத்தான் இன்னும்
வேக வேகமாக வளர்கிறது இஸ்லாம்
நிறுத்தாமல் வெட்டினாலும்
நிமிர்ந்து நின்றே வளரும்

விதவித கோணங்களில் வௌ;வேறு ரூபங்களால்
வேரறுக்க வந்தாலும் -வீழ்வது என்னவோ
உங்களதும் உங்களைப் போன்றோரின்
விஷரூபங்களாகத்தானிருக்கும்..குவைத்தில் வெளியாகும் ”வசந்தம்” இம்மாத இதழில் எனது கவிதை..
 குவைத் வசந்தம் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

14 கருத்துகள்:

 1. விஷவிதைகளை விதைப்பதாய் எண்ணி
  வில்லங்கத்தை காசாக்கிப்பார்க்க
  விஷப்பரீட்சைகளை நடத்தும்
  விஸ்வரூப வேடதாரிகளே!
  //

  ஆரம்பமே அசத்தல்ங்க. வாழ்த்துகள் குவைத்தில் உங்க கவிதை வெளியானவைக்கு.

  பதிலளிநீக்கு
 2. சலாம் மலிக்கா. அருமையான கருத்துக்கள்! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தாலும் புரியாததுபோல் நடிக்கவே செய்வார்கள். அதனால் நஷ்டம் நமக்கில்லை.

  //விதைத்தாலும் முளைக்காது! முளைத்தாலும் நிலைக்காது..!//

  தலைப்பே ஆயிரம் கருத்துக்களைத் தாங்கி நிற்கிறது. வாழ்த்துக்கள் மல்லி!

  பதிலளிநீக்கு
 3. கேள்வி கேட்போர் சங்கம்3 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:22

  உன்னைபோல் ஒருவன், உலகநாயகனாகி,
  ஹேராம் பாடிக்கொண்டே, குருதிப்புனலெடுத்து
  விஸ்வரூப தோட்டாக்கள்கொண்டு
  துளைத்தெடுக்க நினைத்தாலும்//

  நீங்க யார சொல்லுறீங்கன்னு புரியுது. அவர் மட்டுமா இதுபோல சினிமா எடுத்தார்? எவ்ளோபேர் எடுத்திருக்காக அப்பவெல்லாம் எங்க போனிங்கக்கா..

  பதிலளிநீக்கு
 4. கேள்வி கேட்போர் சங்கம்3 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:24

  கேள்வி கேட்ட
  உடனே ஓடி வருவாங்களே உங்க கூட்டம். நீங்க பதில் தருவீங்க தானே!

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான ஆக்கம்.
  வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 6. vivoth கூறியது...
  விஷவிதைகளை விதைப்பதாய் எண்ணி
  வில்லங்கத்தை காசாக்கிப்பார்க்க
  விஷப்பரீட்சைகளை நடத்தும்
  விஸ்வரூப வேடதாரிகளே!
  //

  ஆரம்பமே அசத்தல்ங்க. வாழ்த்துகள் குவைத்தில் உங்க கவிதை வெளியானவைக்கு.//

  தங்களின் அன்பான கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 7. அஸ்மா கூறியது...
  சலாம் மலிக்கா. அருமையான கருத்துக்கள்! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தாலும் புரியாததுபோல் நடிக்கவே செய்வார்கள். அதனால் நஷ்டம் நமக்கில்லை.
  //

  புரியும் அக்கா. எப்படி எப்படியெல்லாமோ இஸ்லாத்தைப்பற்றி ஏசி வாழ்ந்தவர்கள்கூட இஸ்லாத்தை புரிந்து தம்மையதில் இணைத்துகொண்டார்கள். தமது வாழ்நாட்களை அதனைகொண்டு தெளிவாக்கிகொண்டார்கள். அதுபோல் இப்படியானவர்களும் வெகுசீக்கிரம் உனர்வார்கள்

  //விதைத்தாலும் முளைக்காது! முளைத்தாலும் நிலைக்காது..!//

  தலைப்பே ஆயிரம் கருத்துக்களைத் தாங்கி நிற்கிறது. வாழ்த்துக்கள் மல்லி//

  மிகுந்த சந்தோஷம் அஸ்மாக்கா! தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 8. கேள்வி கேட்போர் சங்கம் கூறியது...
  உன்னைபோல் ஒருவன், உலகநாயகனாகி,
  ஹேராம் பாடிக்கொண்டே, குருதிப்புனலெடுத்து
  விஸ்வரூப தோட்டாக்கள்கொண்டு
  துளைத்தெடுக்க நினைத்தாலும்//

  நீங்க யார சொல்லுறீங்கன்னு புரியுது. அவர் மட்டுமா இதுபோல சினிமா எடுத்தார்? எவ்ளோபேர் எடுத்திருக்காக அப்பவெல்லாம் எங்க போனிங்கக்கா..//

  எங்கேயும் போகலமா. இங்கேதானிருந்தோம் அப்போது எழுதும் திறமையில்லை, எடுத்துசொல்லும் பக்குவமுமில்லை.

  அவர்மட்டுந்தான் எடுத்துள்ளாரென சொல்லவில்லை, நன்றாக மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.அவரைபோன்று நிறைய எடுத்துள்ளார்கள். அவரே நிறைய நிறைய குறைகளை எடுத்துள்ளார். இனி இதுபோன்று மற்றமனங்களை சிதைப்பதுபோல் எடுக்கும்போதாவது சிந்தித்து எடுக்கவேண்டுமென்றுதான் சொல்கிறோம், இதில் தவறேதுமுண்டா கேள்வி கேட்கும் சங்கமே!

  ஓ நீங்க கேள்வி மட்டும்தான் கேட்பீங்கள்ல..

  பதிலளிநீக்கு
 9. கேள்வி கேட்போர் சங்கம் கூறியது...
  கேள்வி கேட்ட
  உடனே ஓடி வருவாங்களே உங்க கூட்டம். நீங்க பதில் தருவீங்க தானே!//

  நான் தந்துவிட்டேன் பதிலை.

  எங்க கூட்டம் எல்லாதுக்கும் வராதுங்க. அநீதியை மட்டும்தான் ஏன்னு கேட்கும். அந்நசசரியா கேள்வி கேட்பதற்கெல்லாம் வராது..

  பதிலளிநீக்கு
 10. Jaleela Kamal கூறியது...
  மிக அருமையான ஆக்கம்.
  வாழ்த்துக்கள் மலிக்கா//

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா..

  பதிலளிநீக்கு
 11. அங்கு தவறுகள் மட்டுமே காண்பிக்க படவில்லையே அவர்கள் படும் கஷ்டங்கள் தான் அதிகம் கான்பிதுள்ளதாக தெரிகிறது
  தவறுகள் ஒரு பக்கம் மட்டுமில்லை சிந்தனைகளில் தான் குழப்பங்கள் புத்திசாலி தனத்தில் தான் எல்லா பக்கமும் குழப்பங்கள்
  எல்லாம் புகழும் இறைவனுக்கே என்றால் இதுவும் கடந்து போகும்
  கவிதை நடை நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு
 12. அங்கு தவறுகள் மட்டுமே காண்பிக்க படவில்லையே அவர்கள் படும் கஷ்டங்கள் தான் அதிகம் கான்பிதுள்ளதாக தெரிகிறது
  தவறுகள் ஒரு பக்கம் மட்டுமில்லை சிந்தனைகளில் தான் குழப்பங்கள் புத்திசாலி தனத்தில் தான் எல்லா பக்கமும் குழப்பங்கள்
  எல்லாம் புகழும் இறைவனுக்கே என்றால் இதுவும் கடந்து போகும்
  கவிதை நடை நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு
 13. Pirarai naam evvitauilum nokatikkakodatu. Mika arumaiyai sollirukiga sis. Valttukal

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது