நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏழெட்டு கேள்விக்கு எனது பதில்!கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் முகநூலில் ஒரு சகோ என்னிடம் கேட்டார்கள், அவைகளுக்கான பதில்கள்தான்,கேள்விக்கு கீழே கூறியுள்ளவைகள்.
----------------------------------

 உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”

யாரும் உதவின்னு கேட்டால், முடியாத சூழ்நிலை என்றபோதும்
என்னாலானவைகளை செய்வதும், செய்ய நினைப்பதும்.
செய்ய முடியாதுபோனால் அதற்காக பெரிதும் வருத்தப்படுவதும்.


“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”

 என்னை வேண்டாமென ஒதுக்குவோரையும் சேர்த்து!
யாரையும் ஒதுக்காமல் எல்லோரிடமும் அன்புகொள்ளவேண்டும் என எண்ணுவது.


“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
உயிரை உருக்குலைத்து வதை செய்யும் வக்ரம்
உயிரோடிருக்கும்போதே நடைபிணமாக்கும் கொடூரம்
இது யாருக்கும் வரக்கூடாதென்பதே எனது எண்ணம்.

“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”

இறைவனுக்கு மட்டுமே அடிமையான மனிதரை,
இன்னொரு மனிதர் அடிமையாக்குவதும்,
இன்னொரு மனிதரிடம் அடிமையாய் கிடப்பதும். மடமைத்தனம்.


“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”

தவறெனத் தெரிந்தும், தொடர்ந்து தவறின் பக்கம்போகும் எண்ணங்களை!
பிறரை எரித்து அதில் குளிர்காய நினைக்கும் உள்ளங்களை!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித்திரியும் பொய்முகங்களை..


“உங்களுக்கு விருப்பமான தொழில்?”

பிறரை ஏமாற்றாமல் தா[நா]னும் ஏமாறாமல்
ஆகுமாக்கப்பட்டவைகளாய் செய்யும் எத்தொழிலும்.

“உங்களுக்கு விருப்பமான நிறம்?”

கிரீம்.வித் பீக்காக் புளு.அதாவது, வெண்மை கூடிய சந்தன நிறமும்.
[மயில் கழுத்திலிருக்கும்] ஊதா கலந்த பச்சை நிறமும்.

-------------------------------------------------------
இத்துடன் இன்னொரு சகோ மெசேஜ் மூலம் கேட்ட கேள்வி?

உங்கள் வாழ்க்கை நிறைவாக உள்ளதா?

நிறைவு என்பது எதிலிருக்கிறது மனதில்தானே! அது நிறைவாகவேயிருக்கிறது , குறைகளென்பது அப்பப்ப கூடிக்கலையும் மேகம்போல, நிறைகளென்பது கூடிகலைவதை வேடிக்கைப்பார்க்கும் வானம்போல, 
நிறை குறையும் சமயங்களிளெல்லாம் 
நிவர்த்திசெய்து நிறைவாக்கிகொள்கிறேன்.
நிறைவடைந்து 
நிறைவடையச் செய்கிறேன்..
 

என்னிடம் கேள்விகள் தொடுத்து, என்னக்குளிருப்பவைகளை எனக்கும் தெரியவைத்த,  இரு சகோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

 1. நன்றி சகோதரி... இந்த கேள்விகள் காரல்மார்க்சிடம் கேட்கப்பட்டவை காரல் மார்க்ஸ் தம்பதிக்கு ஜென்னி, எலியனோரா, லௌரா, பிரான்சிஆகா என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.

  அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராகத் திகழ்ந்த காரல் மார்க்ஸ், தமது ஓய்வு நேரத்தை தமது குழந்தைகளுடன் விளையாடுவதிலும், கொஞ்சி மகிழ்வதிலும் செலவிட்டார். அவர்களோடு விளையாடும்போது காரல் மார்க்ஸூம் குழந்தையாக மாறிவிடுவார்.

  ஒருவர் வினாத் தொடுக்க, மற்றவர் அதற்குப் பதில் சொல்லும் ‘வினா – விடை’ என்ற விளையாட்டு காரல் மார்க்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  இந்த விளையாட்டை குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த போது மார்க்ஸூம் அதில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் காரல் மார்க்ஸிடம் கேட்ட வினாக்களும் அதற்கு அவர் சொன்ன விடைகளும்…

  “உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”
  -எளிமை
  “உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”
  -உறுதியான நோக்கம்
  “சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
  -போராடுவது
  “அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”
  -அடங்கி நடத்தல்
  “நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”
  - அடிமை புத்தி
  “உங்களுக்கு விருப்பமான தொழில்?”
  -புத்தகம் படித்தல்
  “உங்களுக்கு விருப்பமான நிறம்?”
  -சிவப்பு.

  பதிலளிநீக்கு
 2. ////“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”

  இறைவனுக்கு மட்டுமே அடிமையான மனிதரை,
  இன்னொரு மனிதர் அடிமையாக்குவதும்,
  இன்னொரு மனிதரிடம் அடிமையாய் கிடப்பதும். மடமைத்தனம்.///

  மிக தெளிந்த கருத்து வாழ்த்துகள்

  நபியவர்கள் நடந்து வந்தபோது மரியாதைக்காக எழுந்தவரை தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்து மரியாதை நிமித்தம் எனக்காக எழுந்து நிற்பது கூட கூடாது என உபதேசம் செய்தார்களே அவ்வழி நடப்போம்

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான பதில்கள்
  இதில் நான் நினைத்துள்ளதும் அடங்கி உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”

  என்னை வேண்டாமென ஒதுக்குவோரையும் சேர்த்து!
  யாரையும் ஒதுக்காமல் எல்லோரிடமும் அன்புகொள்ளவேண்டும் என எண்ணுவது.//

  மிக மிக அருமை. நீங்கஅப்படிதான்னு உங்கள் எழுத்திலேயே தெரியுதுப்பா.
  நல்ல உள்ளம்,உங்களை யாரும்
  வெருப்பாங்களா?

  நான் உங்க ரசிகை தெரியுமா..

  பதிலளிநீக்கு


 5. தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான உங்கள் பதில்கள்

  நெஞ்சில் நின்றன சகோதரி...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது