நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதலிடம்! இது நியாயமா?


என்ன தலைப்பை பார்த்ததும் என்னவோன்னுதானே வந்தீங்க. வந்ததுதான் வந்தீங்க முழுவதையும் படிச்சிடுங்க..

கடந்த மாதம் தடாகம் சர்வதேச மட்டத்தில் முக நூல் மூலமாக கவிதைப் போட்டி ஒன்றை ஆரம்பம் செய்து வைத்தது
இப்போட்டியில் சர்வதேச மட்டத்தில் இருந்து சுமார் (29) கவிதைகள் எமக்கு வந்து சேர்ந்தது
கவிதைகள் அனுப்பிய அத்தனை கவிஞர்களுக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகள்

தெரிவுக்குழுவினால்கவிதைகள் தெரிவு செய்யப் பட்டது இதில்
இந்தியாவை சேர்ந்த பெண் கவிஞர் திருமதி மல்லிக்கா பாருக் வெற்றி பெற்று உள்ளார் அவருக்குக்கும் எங்களின் வாழ்த்துக்கள்


அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் அனுமதியோடு..
ரமாலன் தீன்
தகவல் பிரிவு
தடகம் கலை இலக்கியவட்டம்..


முதலிடம் பிடித்த எனது கவிதை


இது நியாயமா?


குற்றம் செய்பவனைவிட
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று

சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!


தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்

தண்டிப்பதேயில்லையே!

குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!


பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்!

அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்!


”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!

தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!


தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!

நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை.............
 
எனக்கு எழுத்தறிவித்தவன் இறைவனே! அவனுக்கே புகழனைத்தும்.. என் கவிதையை முதன்மையாக தேர்வுசெய்த, அன்பின் சகோதரி ஹிதாயா ராத்தாவுக்கும்.தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பினர்களுக்கும் எனது நெஞ்ச்சார்ந்த நன்றிகளை சொல்லிகொள்கிறேன். எழுத்து என்பது இறைவன் கொடுத்த வரம், வரத்தை வசந்தமாக்கவே விரும்பும் எம்போன்றோருக்கும், வாஞ்சையாய் தோள்தரும் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.. 

உச்சியிலிருந்து உருண்டுவிழுந்து, உலக்கு நீர்கொடுத்து. உழவுக்கு உயிர்கொடுத்து, இயற்கைக்கு குளிர்கொடுத்து, கொஞ்சும் சதங்கைகளை சத்தமிட்டபடியே சலசலத்து ஓடும் அருவியென்றாலே காண்போருக்கே ஆனந்தம், அந்த அருவியையே எமக்கு பட்டமாகளித்ததால் அளவில்லா ஆனந்தம். எல்லாம் எம் இறைவனின் எமக்களித்த பேரானந்தம்.. கவியருவி! பட்டத்தை வழங்கியஉள்ளங்களுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

மீண்டும் தடாகம் கலை இலக்கிய வட்டத்திற்க்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..


அன்புடன் மலிக்கா ,
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

17 கருத்துகள்:

  1. maasha allah!

    allahu akbar!
    allahu akbar!

    melum vazhara ezhutha en
    nenjaarntha vaazhthukkal!

    ezhuthiya kavithaiyum nalla karukalam kondathu...!

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ். இறைவன் இன்னும் உங்கள் திறமைகளை சிறப்பாக்கித் தருவானாக.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் மலிக்கா.

    உங்களுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமேயில்லை..

    கவிதை செம சுரீர்..


    வாழ்த்துகிறேன் நேசத்தோடு

    நிலவன்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்
    JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
    "Allah will reward you [with] goodness."

    பதிலளிநீக்கு
  5. சலாம் மலிக்கா.

    ஒவ்வொரு பாராவும் இன்றைய நடப்பின் உண்மையைச் சொல்லுது எனதன்புத் தங்கையே.. கூடவே அறிவுரைகளும்.. :) மாஷா அல்லாஹ்!

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :-) இதன் மறுமைப் பரிசினையும் இறைவன் உனக்கு தந்தருள்வானாக!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.... இப்பரிசினைத் தட்டிச்சென்றதற்கும் மென்மேலும் பல பரிசுகளை வெல்லவும்....

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் சகோ..
    இன்னும் பலப்பல பரிசுகள் வாங்கி குவிக்க இறைவன் துணை புரிவானாக...

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி! உன்னுடைய கவிதையும் பளீர்னு நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்தியது! பரிசுக்கு மிகமிக நியாயமான கவிதை மற்றும் நிறைய வெற்றிகளைக் குவிக்கத் தகுதியானது உன்னோட தமிழ். இன்னும் நிறைய நிறைய வெற்றிகள் குவியட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன்மா.

    பதிலளிநீக்கு
  9. அன்புத் தங்கையே நான் உன்னை அழைப்பது கவியரசி என்று காரணம்: மலிக்கா என்னும் அறபுச் சொல்லுக்கு அரசி என்னும் பொருளாம். நீயோ கவியாய்ப் பிறந்து கவியாய் வாழ்பவள் அதனால் கவி+அரசி= கவியரசி என்பேன். ஆயினும் இன்று கிடைத்துள்ள பட்டம் சாலப் பொருதம். ஆம். இக்கவியருவியின் நீர்வீழ்ச்சிகளின் ஓடையாக உன்றன் வலைத்தளமும் நீரோடை என்றாகி விட்டது என்னே பொருத்தம்!

    பதிலளிநீக்கு
  10. masha allah valthukal akka... innum neraya parisuhal ungalai vanthu adaiya vaalthukal

    பதிலளிநீக்கு
  11. நியாகக் கருத்தை மேலேற்றி நிறுத்தி இருக்கிறீர்கள் மலிக்கா, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. Anbana malikkauokku eppattam mika poruttamanatutan. Valttukkal malikka.ennum kadakkavendiyatu erukku.kadantu sikaram todu. toduvay. Iraivan uotaviyaal.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் நெஞ்சங்களாய், பாசத்தின் உள்ளங்களாய், எனது உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் எந்நாளும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    இறைவன் தந்த திறமையை சரிவர பயன்படுத்தி, அதனின் நின்றும் வரும் புகழுக்கு மயங்கிவிடாமல் என்னை பாதுகாத்து, மென்மேலும் சிறப்பாக எனது எண்ணங்களை எழுதுகளாய் வடிவமைக்கவும் துஆ[பிராத்தனை] செய்யுங்கள்..

    என் உளப்பூர்வமான நன்றிகள் உங்கள் அனைவருக்கும்.நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகின்றேன். மேலும் பரிசுகள் வெல்ல இறைவன் துணை புரியட்டும்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது