நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்பு உள்ளங்களுக்கு!

வாழ்க்கையில் சில வெற்றிகள் சிலதோல்விகள் வந்துபோகும். வருவதெல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாவிட்டாலும் என்ன செய்யனும் என்பதை புத்தியில் தீட்டிவைக்கலாம், அதனை செயல்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்குபோது பயன்படுத்திக்கொள்ளலாம். சில சமயம் சந்தர்ப்பம் நம்மைத்தேடிவரும் சிலசமயம் நாம்தான் அதைத்தேடிப்போகனும். எதற்க்கும் மனம் தளர்ந்துவிடாமல் இறைவனின் நினைவோடும் அவனின் துணையோடும் உங்கள் வாழ்க்கைபயணத்தை தொடருங்கள். நடப்பது எல்லாம் நம் நன்மைக்கே!

என்ன தத்துவமா அப்படினெல்லாம் கேட்கக்கூடாது. 
பாலைவன வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லும் நாள் இன்று. இறைவன் நாடினால் மீண்டும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு..

ஓகே நான் ஊருக்கு போகிரேன் ஊருக்கு போறேன்.
இன்று மதியம் கிளம்புகிறேன்..அப்பாடா போயிட்டு வாம்மா நாங்க கொஞ்சநாளைக்கு நிம்மதியாயிருக்கோம் கவிதைங்கிறபேர்ல திணராமா அப்படினெல்லாம் நெனப்பிங்களோ! ச்சே சே நினைக்கமாட்டீங்க.. மச்சான் கொஞ்சம் லேட்டா வருவாங்க அவங்களை பத்திரமா அனுப்பிவைங்கப்பா.

கொஞ்சநாளைக்கு நீரோடை மற்றும் உங்கபக்கமெல்லாம் வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நேரம் கிடைக்கிறப்ப வந்து உங்க எல்லாரையும் எட்டிப்பார்த்துவிட்டுபோவேன். நீங்களும் நம்மள மறந்துடாதீங்கோ..

அன்பைகொண்டு இவ்வுலகம் சுழலுமாயின் எம்மனிதரின் உள்ளமும் அழுக்கடையாது ஆனந்தத்தில் திழைத்திருக்கும்..
நான் பலநேரம் தாங்களின் கருத்துரைகளுக்கு பதிலளிக்காதிருந்திருப்பேன் நேரமின்மை காரணமாக அதையும் பொருந்திக்கொள்ளவும் எவ்வகையிலாவது உங்கள் மனம் சங்கடப்படும்படியோ! வருத்தப்படும்படியோ நடந்திருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவரின் நினைவுகளிலும் அன்பிலும் பிராத்தனையிலும் எனக்கான பங்கு எந்நாளும் இருக்கட்டும்...

இறைவா! 
எங்களின் பயணத்தை எவ்வித சிரமமும் இன்றி உனது துணையோடு அமைத்துதருவாயாக!
உலகிலுள்ள அனைவருக்கும் சாந்தியையும் அருளையும் தந்தருள்வாயாக!!!
உங்கள் அனைவரின் ஆசிகளும். வாழ்த்துகளும். எந்நாளும் எதிர்பார்ர்க்கும்
உங்கள் அன்பு மலிக்கா
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

34 கருத்துகள்:

  1. இறைவன் உங்கள் பயணத்தை பொருந்திக்கொள்வானாக கவிதைப்பாதையில் உங்களாலன மட்டும் சென்றுவிட்ட திருப்தியில் எதிர்காலத்திலும் அடைந்த உறவுகளை நினைத்து சந்தோசத்தில் திழைத்திடவும்
    சாந்தியுடன் சகல திருப்தியையும்
    இறைவன் அளித்திடட்டும்

    பிரார்த்தனைகள் பாராட்டுகள் வாழ்த்துகள்
    என்றும் சகோ
    நேசமுடன் ஹாசிம்

    பதிலளிநீக்கு
  2. நா வந்த நேரம் நீங்க போறேன்னு சொல்றீளே?????????

    நல்லபடியா போய்ட்டு வாங்க... அல்லாஹ் துணையிருப்பான்

    பதிலளிநீக்கு
  3. பிரார்த்தனைகள்...
    பாராட்டுகள்...
    வாழ்த்துகள்...

    நல்லபடியா போய்ட்டு வாங்க...

    பதிலளிநீக்கு
  4. இன்ஷா அல்லாஹ், எல்லாம் நலவாய் நடந்தேரும் ...

    பதிலளிநீக்கு
  5. /////////வாழ்க்கையில் சில வெற்றிகள் சிலதோல்விகள் வந்துபோகும். வருவதெல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாவிட்டாலும் என்ன செய்யனும் என்பதை புத்தியில் தீட்டிவைக்கலாம், அதனை செயல்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்குபோது பயன்படுத்திக்கொள்ளலாம். சில சமயம் சந்தர்ப்பம் நம்மைத்தேடிவரும் சிலசமயம் நாம்தான் அதைத்தேடிப்போகனும். எதற்க்கும் மனம் தளர்ந்துவிடாமல் இறைவனின் நினைவோடும் அவனின் துணையோடும் உங்கள் வாழ்க்கைபயணத்தை தொடருங்கள். நடப்பது எல்லாம் நம் நன்மைக்கே!/////////

    பாலைவனப் பேரரசியின் (மலிக்கா) தத்துவம் 10778 .....!

    என்ன பண்றது....!
    நீரோடைல
    நீங்க சொல்லணும்
    நாங்க கருத்துரை போடணும்...!

    இது சரிவாதிகார சாம்ரானியின் கட்டளை....!

    சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...!

    வாழ்த்துக்கள்...! மலிக்கா....!
    வாருங்கள்....!

    தங்களின்
    தாயகத்திற்கு....!

    எந்த ஊருக்கு ராஜாவாய் இருந்தாலும்
    தன் தாய்க்கு அவன் மகன்தான் போல....!

    நீங்கள்
    எங்கே சென்றாலும்
    தாய் தமிழகத்தின் மகள்தான்....!

    வருக...!
    உங்கள் பயணம்
    நலமாயும்...
    மகிழ்வுடனும்...
    பாதுகாப்புடனும் அமைய வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பயணமும் விடுப்பும் சுகமாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள் ......

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பயணமும் விடுப்பும் சுகமாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. அன்பு உள்ளங்களுக்கு! சென்று வருகிறேன்.. »
    மனதை நெகிழ வைக்கும் இமைகளில் நீர் சுரக்கும் கட்டுரை.அல்லாஹ்உங்களுக்குகொடுத்தஆற்றல். வாருங்கள் எங்கள் ஊருக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு வாருங்கள் என அன்போடு வரவேற்கின்றேன். நோன்பை பிறந்த ஊரில் வைத்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. இந்தியாவுக்கு தானே வரீங்க,வாங்க வாங்க...உங்கள் பயணம் சிறப்பாக அமைய பிரார்தனைகளும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நல்லபடி போயிட்டு வாங்க மலிக்கா!உங்க பயணம் சந்தோஷமானதாக அமைய இந்த தோழியின் துஆ உங்களுக்குண்டு. வீட்டில் அனைவருக்கும் என் சலாம் சொல்லுங்கள். உங்களுக்கு முடியும்போது வந்து எட்டிப் பார்க்க மறந்துடாதீங்க :)

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. யக்காவ்வ்வ்வ்..!!பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!

    எப்படீருந்தாலும் எங்கிருந்தாலும் நீரோடை வற்றாது என்பது தெரியும் . போகின்ற வேலை சிறப்பாக முடிந்ததும் மீண்டும் சந்திப்போம்`இன்ஷா அல்லாஹ் :-))

    பதிலளிநீக்கு
  14. /////ஜெய்லானி சொன்னது. போகின்ற வேலை சிறப்பாக முடிந்ததும் மீண்டும் சந்திப்போம்`இன்ஷா அல்லாஹ் :-)) /////

    ஏய்யா....!
    ஜெய்லானி....!

    மீண்டும் சந்திப்போமா...! ஹி.... ஹி..! ஹி...!
    பதிவ சரியா படிக்கலையா....?
    //////பாலைவன வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லும் நாள் இன்று. இறைவன் நாடினால் மீண்டும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு../////

    அவங்க...! முத்துப்பேட்டைக்கு போறாங்கப்பா...!

    பதிலளிநீக்கு
  15. //ஏய்யா....!
    ஜெய்லானி....!

    ஹி.... ஹி..! ஹி...!
    பதிவ சரியா படிக்கலையா....? //

    ”வதனப்பக்கம்” வாருங்கள் ஐயா..
    வடிவாக கதைக்கலாம் :-))

    பதிலளிநீக்கு
  16. சுகமா போய்ட்டு வாங்க மல்லிக்கா.சந்திக்கலாம் !

    பதிலளிநீக்கு
  17. நல்ல படி போய் நாடிய காரியம் சிறப்புற நிறைவேற வாழ்த்துக்கள் மலிக்கா.மீண்டும் பழைய படியே அமீரக வாழ்க்கை தொடர என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. //அன்பைகொண்டு இவ்வுலகம் சுழலுமாயின் எம்மனிதரின் உள்ளமும் அழுக்கடையாது ஆனந்தத்தில் திழைத்திருக்கும்.///

    அருமையான வார்த்தைகளின் வழியே
    பிரிவை
    பரிவை
    அறிவாய்
    அழகாய் சொல்லிய சகோதரிக்கு
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. தங்கள் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்.

    நல்லபடியா போய்ட்டு வாங்க... அல்லாஹ் துணையிருப்பான்

    பதிலளிநீக்கு
  20. இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பதென்னவென்றால்....!

    கவிஞர் மலிக்கா பாரூக் arrived saftly in Tamilnadu ...!

    டோன்ட் ஒர்ரி...!
    பீ ஹாப்பி...!

    பதிலளிநீக்கு
  21. நல்ல படி போய் நாடிய காரியம் சிறப்புற நிறைவேற வாழ்த்துக்கள் மலிக்கா.மீண்டும் பழைய படியே அமீரக வாழ்க்கை தொடர என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. கவிஞர் மலிக்கா பாரூக் arrived saftly in Tamilnadu ...!

    டோன்ட் ஒர்ரி...!
    பீ ஹாப்பி...!//

    oo ippadiyaa superrrrrrrrrrrrrrrrrrr. vaangka malikka vaangka. ungkalai eppadi kandakt seyvathu..

    பதிலளிநீக்கு
  23. அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக நடந்தேற இனிய வாழ்த்துக்கள் மலிக்கா!
    திரும்பவும் இங்கே சந்திப்போம்!!

    பதிலளிநீக்கு
  24. /////kitha சொன்னது…

    oo ippadiyaa superrrrrrrrrrrrrrrrrrr. vaangka malikka vaangka. ungkalai eppadi kandakt seyvathu..////



    ப்ளீஸ் contact :

    "டபிள்யு.டபிள்யு டபிள்யு மலிக்கா டாட் காம்" க்கு தொடர்பு கொள்ளவும்...!

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் நலமோடு சென்று திரும்ப வாழ்த்துகின்றேன்...
    இறைவன் அருள் புரிவாராக...

    பதிலளிநீக்கு
  26. புனித ரமலான் மாத துவக்கமும்
    நோன்பின் துவக்கமும்...
    நோன்பை கடைபிடித்துவரும் தங்களுக்கும்... மச்சானுக்கும்... தங்கள் குழந்தைகளுக்கும்...
    தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  27. eppadi irukkiingka malli nalaaa ungkalai paarkanumee aavalaaka irukku. naa thnjaiyil ulleen. pls eppadi caandect seyvathu..

    பதிலளிநீக்கு
  28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினருக்கும்
    எங்களுடைய
    மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. எனதன்பு
    இசுலாமிய நண்பர்களுக்கும்...
    அவர்தம் குடும்பத்தாருக்கும்...
    "புனித ரமலான் வாழ்த்துக்கள்"...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள சகோ,

    என் தாமதமான ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  31. "அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது" - குறள்

    வாழ்க....!
    வளமுடன்.....!
    நலமுடன்............!

    advance வாழ்த்துக்களுடன்....!
    காஞ்சி முரளி....!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது