நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னது மீண்டுமாஆஆஆ!


அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க. நலமா?
சுகமா? செளக்கியமா?

நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த சற்று நேரத்தில் உங்களுடன் உறவாட ஓடோடி வந்துவிட்டேன்.அன்பு நெஞ்சங்கள் அனைவரும் இறைவனின் உதவியால் நலமோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?. வலையுலகம் ஒரு தனியுலகமாக இயங்குவது சந்தோசமே!

கடந்த இடைப்பட்டகாலத்தில்  உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே  தேங்கமடைந்ததும்  . சற்று மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சூழல்களை அனுசரி்க்கும்,நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! அதனை சரிவர செய்துமுடித்த திருப்தியோடு மீண்டும் உங்கள் முன். 

என்னது மீண்டுமாஆஆஆ. யாருப்பா அது அதிர்ச்சி அடைவது சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க இதையும் அப்படியே நெனச்சிகீங்களேன்.
ஹா ஹா ஹா..

நெஞ்சத்தின் சில அதிர்வுகளை
நிலைகொள்ள பலநிகழ்வுகளை
நித்தம் நடக்கும் நிகழ்வுகளை
எண்ணத்தால் கோத்து
எழுத்து வடிவில் ஏட்டில்
விரல்வழியே வடிக்க
விரைவில் வருகிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

22 கருத்துகள்:

 1. மலிக்காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் --

  மீண்டும் வந்துட்டீங்களா.!! (அக்கா இது மகிழ்ச்சி :-)) ) நல்ல நலமுடன் இருக்கிறீர்களா.??

  தாங்கள் இல்லாமல் ஏங்கியிருந்தோம் திரும்ப வந்து மகிழ்ச்சியை திருப்பி தந்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. சாருக்கா எப்படியிருக்கீங்க. பசங்க அண்ணன் வீட்டில் அனைவரும் நலமா? மிக்க நன்றிக்கா.

  பதிலளிநீக்கு
 3. வாங்க தம்பி. தங்களின் அன்பான பாசத்துக்கு மனமார்ந்த நன்றிகள் பல..

  பதிலளிநீக்கு
 4. இனிய நல்வரவு மலிக்கா சகோ..

  நீரோடையில் கவி வெள்ளம் பெருகட்டும்...

  பதிலளிநீக்கு
 5. அன்பே நட்பே வருக வருக. தங்களின் வரவு என்னை மிகவும் மகிழ்விக்கிறது. உங்களின் கவிகடலில் மூழ்கியவனின் நானும் ஒருவன்.தொடருங்கள் உங்களை தொடர்ந்துவருகிறோம் குடும்பத்தோடு.கவிதைகடலில் மூழ்க.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 6. வாங்க வாங்க... கடமையைச் செவ்வனே முடித்து வெற்றி வீராங்கனையாக வந்திருக்கீங்க... உங்க அனுபவங்களையும் பதியுங்க..

  பதிலளிநீக்கு
 7. வருக, வருக ! பதிவுகள் பலவும்
  தருக, தருக !! அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் இங்கே பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி :-)
  மீண்டு , மீண்டும் நீரோடையின் இன்னிசையை இங்கே காண ஆவல் , :-)))

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும். மீண்டும் வந்த கவிதை வசந்தம், இனி அசத்தும்.மகிழ்சி பெருகும்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. //அன்புள்ளங்களே!
  அனைவரும் எப்படியிருக்கீங்க?//

  கொஞ்சம் கொழுத்து போயி இருக்கோம்க்கா.

  //நலமா?
  சுகமா? செளக்கியமா? //

  எல்லாம் ஒன்னுதானே?

  //உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?//

  ஆமை மாதிரி போகுதுக்கா.

  //கடந்த இடைப்பட்டகாலத்தில் உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.//

  சந்தோசப்படுங்கள் அக்கா.

  //நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! //

  ஆமா..ஆமா..பொருப்பு ரொம்ப முக்கியம்க்கா.

  //யாருப்பா அது அதிர்ச்சி அடைவது //

  நான்தான்க்கா அந்நியன்.

  //நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே தேங்கமடைந்ததும் //

  கோடை காலத்தில் இது சகஜம்தானே?

  //சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க//

  பின்னே...இது இல்லாட்டா பூமியில் வாழ முடியுமா?

  மடையை திறந்து விடுங்கள் அக்காள்,பாத்திரத்தில் பிடித்துக் கொள்கிறோம்.

  ஊரில் எல்லோரும் நலமா?
  உங்கள் கையில் இருப்பது பேரீச்ச பழமா?


  தொடருங்கள் தொடர்கிறோம்.....

  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 12. வருக...!
  வருக.....! என
  வரவேற்கும்......!

  காஞ்சி முரளி.........!

  பதிலளிநீக்கு
 13. வாங்க, நல்வரவு மலிக்கா.
  விடுமுறை அனுபவ பகிர்வுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. வாங்க வாங்க ரொம்ப ஜந்தோஷம்

  ஹிஹி
  மெயிலுக்கெல்லாம் பதில காணுமே
  இன்னும் நெட் கனெக்‌ஷன் வரலயாக்க்குமுன்னு நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 15. வாங்க மலிக்கா,மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.இனி தொய்வில்லாமல் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும்.

  வாங்க வாங்க...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 17. என்னை அன்போடு வரவேற்று பாசத்தோடு விசாரித்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  கொஞ்சநாளைக்கு அடிக்கடி வரயிலாது நேரம்கிடைக்கும்போது வந்துசெல்கிறேன்.

  அக்காமார்களுக்கு எனது அன்பு சலாம்.

  இறைவனின் சாந்தியும் செல்வமும் நம் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்க வல்ல இறைவன் அருளவேண்டுகிறேன்..

  அனைவரின் அன்புக்கு மீண்டும் எனது நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 18. இந்த அநியாத்த கேட்க யாருமே இல்லையா...!

  //////////அன்புடன் மலிக்கா கூறியது...

  அக்காமார்களுக்கு எனது அன்பு சலாம். ////////

  ஜெய்லானி...!
  அக்காமாருக்கும் மட்டும்தான் சலாமா...?
  உங்களுக்கு கிடையாது..!

  உங்களுக்கே இல்லாதபோது
  எனக்குகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகுகு................!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது