நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்புத்தி பின்புத்தி.


எத்தனை பட்டாலும் புத்திவராதா?
இன்னும் எதிலெதில்தான் ஏமாறுவாய்?
ஏமாறுகிறாயா?
இல்லை மற்றவரை ஏமாற்றுகிறாயா?

சினிமாமோகத்தில்
சிட்டாய் பறந்துவரும் பெண்ணே!
யாரும்காண தேகத்தை
கைகுட்டை அணிந்து காட்டவா?
யாருக்கும் தெரியாமல் ஓடிவருகிறாய்!
பாழ்பட்டு போவதற்கா
பாசங்களை இழந்து
படிதாண்டி வருகிறாய்?

நெஞ்சடைக்கும் செய்திகள்
நாளேடுகளில் கண்டும்
நெஞ்சழுத்தக் காரியாய்
நம்பியோரைவிட்டு வெளியேறுகிறாய்!
தரங்கெட்டவளாகி
தலைப்பு செய்திகளில் வருகிறாய்!

நயவஞ்சத்தோடழையும்
குள்ளநரிகளுக்கு மத்தியில்
நீயே சென்று சிக்குவது சரியா?
கலைத்தெரியப்படுமே மானம்
அதைதான் விரும்புகிறாயா?

பெண்புத்தி பின்புத்தியென்ற
பலமொழியை உண்மையாக்கி
பட்டும் திருந்தாமல்
பரிதவிப்பது முறையா?

சீரழிவது சுலபமடி!
சீரழிந்த பின்னே-கண்ணீர்
சிந்தியும் லாபமில்லையடி!
சிலகால சொகுசிற்காக
சிறந்த பெண்மையை
சீர்கெடுப்பது பாவமடி!

சீரழிந்து கிடக்கிறதென
சமுதாயத்தின்மேல் பழியெதற்கு
சீரழிவது சமுதாயமல்ல
சீர்கெடுப்போரின்
நெறிமுறையற்ற வழிகேடுகளால்தான்
நெறிபடுத்த மகான்கள் வேண்டாமடி
நெறிதவறா நன்நடத்தை போதுமடி..

டிஸ்கி// இன்றைய செய்தியாக 6 பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததாம் சினிமாவில் நடிப்பதற்காக! நடிக்கவைப்பதாககூறி அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக.முதன்மைச்செய்திகள். இப்படி தினம் தினம் செய்திகள் வெளியாகியும் ஏன்? இப்படி இளம் பெண்கள் சீரழிந்து போவதற்காக முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என புரியாத புதிராகவே உள்ளது .
இசெய்தியை படித்ததும் மனவேதனைமேலிட எழுதியது தான் மேலே உள்ள வரிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

 1. செய்திகளைக் கேட்கும்போது மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.

  பெண்கள் நாட்டு நடப்புகளையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு சற்று உஷாராகத்தான் இருக்க வேண்டியுள்ளது.

  பெண் புத்தி PIN புத்தியாக மிகவும் SHARP ஆக இருக்க வேண்டும்.

  நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. எதனை பட்டாலும் திருந்தமாட்டான்களா ?

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமைஇன்றைய நிலையில்
  சினிமா மோகத்தால் வெளிச்சம் தேடிப்போய்.
  விட்டில் பூச்சிகள் போல்
  தங்களை மாய்த்துக்கொள்ளும்
  சகோதரிகளுக்கென நீங்கள் படைத்துள்ள
  கவிதை அற்புதம்
  நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய பதிவு
  தொடரவாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சொல்ல வேண்டிய கருத்தை
  சொல்ல வேண்டிய முறைப்படி
  சொல்ல வேண்டிய நேரத்தில்
  சொல்ல வேண்டி யவர்களுக்கு
  எடுத்துச்
  சொன்ன சகோதரிக்கு
  வாழ்த்துக்கள்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. நல்ல சமுதாய விழிப்புணர்வை தூண்டும் பதிவு
  கவிதைகளில் வார்த்தைகளை ரத்தினமாய் சேர்த்திருக்கும் விதம் அருமை சகோதரி ,

  பதிலளிநீக்கு
 6. supper pathivu...
  arputham.....
  yathaarththa unmaikaLai cholliyirukkiringa...
  vaalththukkal...

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் பாலாய்போன சினிமாக்களின் மோகம்தான். தன்வீட்டு பெண்களை மூடிபார்க்கும் கன்கள். பிரவீட்டுபெண்களை திறந்தேபார்க்க ஆசைபடுகிறது;என்றூ சினிமாக்களின் மோகம் குறையுதோ அன்றூதான் விடிவுகாலம் அதுவரை இவைகல் தொடர்கதைதான்..

  அருமையாய் எழுதியிருக்கீங்க. ஆனா அவங்களுக்கு இதெல்லாம் ம்ம்ஹூஉம்..

  பதிலளிநீக்கு
 8. சரியான சாட்டையடிவரிகள். சவுக்கால் அடிக்கனும் இவர்களையும் இதற்கு துணை போனவர்களையும்..

  சட்டங்கள் கடுமையானால் இதுபோன்ற தவறுகள் குறையும்.நம்ம நாட்டில் ஆயிரம் ஓட்டை சட்டத்தில்.. எங்கே விடியப்போகிறது..

  பதிலளிநீக்கு
 9. சரியான சாட்டையடிவரிகள். சவுக்கால் அடிக்கனும் இவர்களையும் இதற்கு துணை போனவர்களையும்..

  சட்டங்கள் கடுமையானால் இதுபோன்ற தவறுகள் குறையும்.நம்ம நாட்டில் ஆயிரம் ஓட்டை சட்டத்தில்.. எங்கே விடியப்போகிறது..

  பதிலளிநீக்கு
 10. தாங்கள் செய்யும் தவறுகளுக்கு காலத்தின்மேல் பலியைபோட்டு. சமுதாயத்தின்மேல் பலியைபோட்டு
  தான் தப்பிக்கொள்ளப்பார்க்கும் தறுதலைகளாக திரியும் இதுபோன்றவர்களை நினைத்து வேதனைபடுவதா வருத்தபடுவதா? தானாக திருந்தாவ்ட்டால் யாரையும் வேறுயாராலும் திருத்தமுடியாது. பட்டும் புத்தி வராதவர்கள் சிலர் சிலர் படுவதை பார்த்திருந்தும் திருந்தாதவர்கள் பலர். எதுவென்றபோதும் மானம் என்பது பாதுகாக்கதவறிவிட்டால் அப்புறம் மனிதராக வாழ்ந்தும் பயனில்லை..

  உனர்வுகளை பகிர்ந்துகொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் மிகுந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 11. அழகான விளக்கத்துடன் அருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது