நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உருகும் மெழுகு. [தந்தையர்தின வாழ்த்துகள்]

உலகிலுள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

ஒருநாள்போதுமா? இன்றொருநாள்போதுமா? உங்களையெல்லாம் நினைக்க இன்றொருநாள் போதுமா? இருந்தாலும். எல்லாமே பெண்களுக்குத்தான் இருக்கு எங்களுக்கு ஒன்றுமில்லையா? என அன்னையர் தினத்தன்று கேள்விகள் கேட்டார்கள் சிங்கங்கள்.

அது யாருக்கோ காதில்விழுந்து இன்றைய தினத்தை தந்தையர் தினமாக்கிவிட்டார்களாம் இப்ப சந்தோஷம்தானே
திருப்திதானே! இதைதானே எதிர்பார்த்தீர்கள்.அப்பாடா எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்கள்.தந்தையாகபோகிறவர்களும் சேர்ந்துக்கொள்ளலாம்..[சும்மா சும்மா] தந்தையென்ற தாரக மந்திரம் எந்நாளும் பிள்ளைகள் காதில் ஒலிக்கட்டும்..
.

இது என்றோ எழுதிய கவிதை மீண்டும் தந்தைகளின் சார்பில் பிள்ளைகளுக்கு..
இது எல்லாதந்தைக்கும் பொருந்தும் சில விதிவிலக்கானவர்களைதவிர. அதாவது இ ம வாக இருப்போருகல்ல..



எனது அன்பு மகனே!
அன்னையை மட்டும்
அணைத்து கொள்கிறாய்-இந்த
தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்.

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா!

சிலயிடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா!

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படக்கூடாதே என
என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான்
என்னால் பொறுக்கமுடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை
உன்னை இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக வருந்தாது மெழுகு
தன் உயிரை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நானும்

மகனே நீ உயிர்வாழ
உன் அன்னை தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான் உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப் புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,அறிவாயா?



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

  1. //நான் உனக்காக என் உயிரையே
    உழைப்பாக்கி தந்தேன்
    உணர்வாயா?//

    அருமையான கவிதை வரிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    [என்னதான் சொன்னாலும் அன்னையிடம் போல தந்தையிடம் பாசம் காட்டுவதில்லை, பிள்ளைகள் என்பதே உண்மை, மேடம்]

    பதிலளிநீக்கு
  2. மெழுகின் உருகல் வெளிச்சத்திற்காக ...நல்ல உதாரணத்தோடு கவிதை அருமை ...

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கணவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அன்னையும் தந்தையும் காட்டும்
    அளவுக்கு மீறிய பாசத்தால்
    குழந்தை
    அல்லல்படக்கூடாதே என
    என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!


    ஒரு தந்தையாய்
    என்னை பெருமை படுத்திய கவிதை
    ஆனால் ஒரு
    மகனாய்
    கண்களில்
    கண்ணீர்
    கசிய விட்ட
    கவிதை...........

    மன்னிச்சுடுப்பா.........

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தங்கையே ..தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ..!அப்பா ...தன் பிள்ளைகளிடம் ஒரு சக தோழனைப் போல பழக வேண்டும் .மகன் நல்லா வரவேண்டுமே என ஆதங்கத்தில் ..கொஞ்சம் கண்டிப்புடன் இருப்பது ..அந்த வயதில் அவர்களுக்குப் புரிவதில்லை என்பது நிஜம் !திரு வை . கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல ..தாயிடம் காட்டும் அன்பை விட தந்தையிடம் காட்டும் அன்பு குறைவுதான் ..:-)...அருமையான வரிகள் ..வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  7. சகோ, தந்தையர் தினம் ஏன் உருவாகியது என்பதற்கான காரணத்தினையும், தந்தையின் பெருமையினைச் சிறப்பித்துச் சொல்லும் கவிதையினையும் பகிர்ந்துள்ளீர்கள்.

    //உருகும் மெழுகு- தலைப்பே பிள்ளைகளுக்காக கடின உழைப்பால் தேய்ந்து போகும் தந்தையின் பெருமையினைப் பற்றிப் பேசும் வகையில் அமைந்துள்ளது,

    //அன்னையும் தந்தையும் காட்டும்
    அளவுக்கு மீறிய பாசத்தால்
    குழந்தை
    அல்லல்படக்கூடாதே என
    என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!//

    இவ் வரிகள் பெண் ஒருவரின் உள்ளத்திலிருந்து வருவதால் சிந்திக்க வைக்கிறது தோழி. காரணம் பெண்கள் எப்போதும் அம்மாப் பிள்ளைகளாகவே இருப்பதால்,
    ஏன் ஆண்களும் இக் காலத்தில் தந்தையரோடு நெருங்கிப் பழகுவது குறைவு,
    எல்லோருமே அம்மாவிடம் தான் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கவிதை பாசப் பிணைப்பின் வெளிப்பாடாய் வந்திருக்கிறது,

    உங்களின் கணவனுக்கும் என் உளம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்.
    அருமையான கட்டுரையும் கவிதையும் தந்து எங்களை ஊக்குவித்து ஒரு கட்டரை எழுத வைத்தமைக்கு நன்றி
    தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம் !
    http://nidurseasons.blogspot.com/2011/06/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  9. த‌ந்தைய‌ர் அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

    க‌விதை வ‌ரிக‌ள் அருமையாய் இருக்கிற‌து ச‌கோ..

    பதிலளிநீக்கு
  10. தந்தையே விளக்கி வைத்து பார்க்கும் மகனுக்கு..
    சில இடமும்..சினிமாவும் கூட தந்தையே தள்ளி வைக்குமா?
    செய்தவற்றை (அதை தியாகமென..)கூறி மகனின் பாசத்தை பெரும் அவல நிலையே என் தருகிறாய்..
    உனதருமை தந்தைக்கு.

    பதிலளிநீக்கு
  11. தந்தையின் பெருமை அருமை

    பதிலளிநீக்கு
  12. ஓ நீங்க அன்பான அப்பாவா கிரேட். வாழ்த்துகள்.. சி பி.

    [என்னதான் சொன்னாலும் அன்னையிடம் போல தந்தையிடம் பாசம் காட்டுவதில்லை, பிள்ளைகள் என்பதே உண்மை, மேடம்].

    பலயிடங்களீல் அப்படியிருக்கிறது உண்மைதான். அதற்கு காரணம் என்ன. புரிதல்தான். நாம் குழந்தையை வளர்க்கும்போதே அவர்களுக்கு நமது நிலைபாடுகளை புரியவைக்கதவறிவிடுவதால்தான். இங்கே குறை தாய்மேலும் இருக்கலாம் தன் தந்தை தங்களூக்காகதான் எதற்காக தங்களைவிட்டு பிரிந்து கடல்கடந்து சிரமங்கள் மேற்க்கொள்கிறார்கள் என்பதையும். பாசத்தை பூட்டிவைத்தபடியே தந்தை எதற்காக கொஞ்சம் கண்டிப்போடும்.கொஞ்சம் முரட்டுதனத்தோடும் உலாவருகிரார்கள் என்பதனையும் சிறூவயதுமுதல் சொல்லிதந்துவிட்டால் வளர்ந்தபின் அவர்களுக்கே புரிந்துவிடும் இன்ற நீ நாளைய அப்பா. முடிந்தது. ஆனால் அதை போதிக்கதவரீவிடுவதும் அதேசமயம் அப்போதனைகள் வேரூமாதரியாகவும் இருக்கும்போது பசங்க அப்பாமேல் பாசங்காட்டுவதைவிட பயத்தையே காட்டுகிறார்கள். அதே சமயம் எப்போதும் கண்டிப்போடுதான் இருப்பேன் ஏனெனில் நான் அப்பா என்றெல்லாம் இருந்தால் பிள்ளையும் கிட்டேவரவே பயப்படும்..

    ஆகா அனைத்துமே நம் வளர்ப்பில்தான் சிலசமயம் அதையும் மீறிவது நம்மால் எதுவும் செய்யமுடியா ஒன்று..

    ஏதோ எனக்கு தெரிந்தவைகள். சில [பொருப்பற்ற ]அப்பாக்களுக்கு இது பொருந்தாது.


    ரொம்ப சந்தோஷம் அய்யா தங்களின் கருத்தும் வாழ்த்துகளுகும்.. மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  13. //பத்மநாபன் கூறியது...

    மெழுகின் உருகல் வெளிச்சத்திற்காக ...நல்ல உதாரணத்தோடு கவிதை அருமை ...//



    // காஞ்சி முரளி கூறியது...

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    // எல் கே கூறியது...

    உங்கள் கணவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சகோதரர்களே..

    பதிலளிநீக்கு
  14. A.R.ராஜகோபாலன் கூறியது...

    அன்னையும் தந்தையும் காட்டும்
    அளவுக்கு மீறிய பாசத்தால்
    குழந்தை
    அல்லல்படக்கூடாதே என
    என்பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!


    ஒரு தந்தையாய்
    என்னை பெருமை படுத்திய கவிதை
    ஆனால் ஒரு
    மகனாய்
    கண்களில்
    கண்ணீர்
    கசிய விட்ட
    கவிதை...........

    மன்னிச்சுடுப்பா.........//

    தங்களின் கருத்தை படித்ததும் ஒருவித நெகிழ்வு. அதெல்லாம் அப்பா மச்சிடுவார்.. மிக்க நன்றி அண்ணா..

    பதிலளிநீக்கு
  15. ஒப்பிலான் பாலு கூறியது...

    வணக்கம் தங்கையே ..தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ..!அப்பா ...தன் பிள்ளைகளிடம் ஒரு சக தோழனைப் போல பழக வேண்டும் .மகன் நல்லா வரவேண்டுமே என ஆதங்கத்தில் ..கொஞ்சம் கண்டிப்புடன் இருப்பது ..அந்த வயதில் அவர்களுக்குப் புரிவதில்லை என்பது நிஜம் ..:-)...அருமையான வரிகள் ..வாழ்த்துக்கள் !

    //

    வாங்க பாலுண்ணா.

    உண்மைதான் அண்ணா. அவர்களுக்கு புரியும் விதத்தில் புரியவைக்கவேண்டும் அதுதானே நமது கடமை.

    //!திரு வை . கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல ..தாயிடம் காட்டும் அன்பை விட தந்தையிடம் காட்டும் அன்பு குறைவுதான்.//

    இதற்கான விளக்கம் மேலே சொல்லியுள்ளேன் அண்ணா..

    தங்களின் முதல் வருகைக்கும். அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி பாலுண்ணா.. தொடர்ந்து தங்களின் வருகையை எதிர்பார்க்கும் அன்புத்
    தங்கை

    பதிலளிநீக்கு
  16. இவ் வரிகள் பெண் ஒருவரின் உள்ளத்திலிருந்து வருவதால் சிந்திக்க வைக்கிறது தோழி. காரணம் பெண்கள் எப்போதும் அம்மாப் பிள்ளைகளாகவே இருப்பதால்,
    ஏன் ஆண்களும் இக் காலத்தில் தந்தையரோடு நெருங்கிப் பழகுவது குறைவு,
    எல்லோருமே அம்மாவிடம் தான் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.//

    அதற்கான காரணம் என்ன அதை முதலில் நாம் புரிந்து அதற்கு தகுந்தார்போல் நம்மையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளனும் தாய்தான் பாசத்தை அளவுகடந்து ஊட்டனும் என்றில்லை. தந்தையும் காட்டலாம். அதே சமயம் அதற்க்கும் ஓர் வரையரை வகுத்துக்கொள்வதும் சிறந்ததுதான்.

    ஒன்றைச்சொல்லவா சகோ என் வீட்டில் என்னிடம் எப்படியிருப்பார்களோ அதேயளவு தந்தையிடம் பிள்ளைகள் மிக அன்பாக நெருக்கமாக நானே ஆச்சர்யப்படும் அளவிற்க்கு இருப்பார்கள்.

    அதற்க்கு காரணம் சிலவேளை நானாகவும் இருக்கலாம். எங்களின் இன்பம் துன்பம் இதற்கானது இன்னதற்கானது என்பதை விளக்கிவிடுவோம். ஏன் அப்பா சிலவேளை சிடு சிடுன்னு இருக்காங்க.சிலநேரம் சில்லுன்னு இருக்காங்க என ஒவ்வொன்றையும் புரியவைத்து வளர்த்தால் பிரச்சனையேயில்லை . அன்னையிடம் போல் தந்தையிடமும் தவப்புதல்வர்கள் நெருக்கமாக அனைத்தையும் பகிர்ந்துக்கொள்வார்கள் என்பது எனது கருத்து..

    தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ நிரூபன்..

    பதிலளிநீக்கு
  17. nidurali கூறியது...

    வாழ்த்துக்கள்.
    அருமையான கட்டுரையும் கவிதையும் தந்து எங்களை ஊக்குவித்து ஒரு கட்டரை எழுத வைத்தமைக்கு நன்றி
    தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம் !
    http://nidurseasons.blogspot.com/2011/06/blog-post_19.html//

    வாங்க தந்தையே தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

    // நாடோடி கூறியது...

    த‌ந்தைய‌ர் அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்..

    க‌விதை வ‌ரிக‌ள் அருமையாய் இருக்கிற‌து சகோ//

    மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  18. sherkhan கூறியது...

    தந்தையே விளக்கி வைத்து பார்க்கும் மகனுக்கு..
    சில இடமும்..சினிமாவும் கூட தந்தையே தள்ளி வைக்குமா?
    செய்தவற்றை (அதை தியாகமென..)கூறி மகனின் பாசத்தை பெரும் அவல நிலையே என் தருகிறாய்..
    உனதருமை தந்தைக்கு.//

    வாங்க சகோ. என் எழுத்துகள் முகநூலில் இருக்கும் சகோதரர்களையும் எந்தளத்திற்கு வரவழைத்துள்ளதை நினைத்து சந்தோஷம் ..

    சினிமாக்களின் ரொம்ப ஓவரா அப்பாக்களை அவன் இவன் என்றும் வாடாபோடா என்றும் மரியாதையே இல்லாமல் அப்பா என்றால் இப்படிதான் என்ற ஒரு மாயையை உருவாக்கிவருகிரார்கள். நாளை வளர்ந்து அவனும் அந்த அவஸ்தைகளை அனுப்பவிக்கவேண்டிவரும் என்பதுபோல் சித்தரிக்கிறார்கள்..

    வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..தொடர்ந்து வருகைதரவும் சகோ..


    // S Maharajan கூறியது...

    தந்தையின் பெருமை அருமை//

    மிக்க நன்றி மகா..

    // Jaleela Kamal கூறியது...

    உருகும் மெழுகு அருமை.//

    வாங்கக்கா மிக்க நன்றிக்கா..

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள்..உண்மை...அருமையாக இருக்கு...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது