நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரித்துபோன ”மனிதம்”
ஓர் நூற்றாண்டின் முடிவில்
பிறந்து
ஓர் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
மரிக்கப் போகிறவர்கள்

பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சியின்
உச்சத்தில்
உருவான நிகழ்வுகளில்
வாழ்க்கிறவர்கள்
வாழ்கிறார்கள்..

அக்காலத்தில்
வாழ்ந்தவர்களை
விஞ்சிவிட்டார்கள்
இக்காலத்தவர்கள்
விண்ணையே!
மண்ணிடம்
மண்டியிட வைத்த
வியத்தகு அறிவியல்
மாற்றங்களால்..

வீட்டில் விளக்கில்லாமல்
விடிய விடிய
இருளிலேயே கழித்த
இரவுகளிருந்தது அன்று

இரவுகளை பகலாக்கும்
வெளிச்ச விளக்குகள்
விழுங்குறது
இருளையே இன்று..

வெளிச்சங்கள் மட்டும்
விரிந்திருதென்ன பயன்
இன்றுள்ள
மனிதர்களின்
மனங்களிலோ
இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
இதயங்களில்
இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...

இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து”.
அதில் சில வரிகளையும். சில மாற்றங்களையும் செய்தது என் சிந்தனைகள்..

இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

26 கருத்துகள்:

 1. புறம் இருளாய்
  இருந்தது - அகம்
  வெளிச்சமாய் இருந்தது...

  புற இருள் அகல
  அகல - அகத்தில் இருள்
  கூடியது

  பதிலளிநீக்கு
 2. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அக்கா... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு கோடியில் வெளிச்சம்.
  மறு கோடியில் இருள் கவ்வும் தேசம்.
  ஒரு புறம் வாழை இலை விருந்தும்.
  மருபக்கம் எச்சில் இலையில் உணவுக்காய் போராட்டம்.
  காலம் மாறினாலும் ஏற்றமும் ,தாழ்வும் எக்காலத்திலும் தொடரும் சாபம்.
  மரித்து போன மனிதம் அதேவேளை என்றும் சாகா வரம் பெற்ற பாகுபாடு.

  பதிலளிநீக்கு
 4. வெளிச்சங்கள் மட்டும்
  விரிந்திருதென்ன பயன்
  இன்றுள்ள
  மனிதர்களின்
  மனங்களிலோ
  இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
  இதயங்களில்
  இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..  ..... வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
 5. //வெளிச்சங்கள் மட்டும்
  விரிந்திருதென்ன பயன்
  இன்றுள்ள
  மனிதர்களின்
  மனங்களிலோ
  இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
  இதயங்களில்
  இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..//


  நச்...............................

  பதிலளிநீக்கு
 6. ///////இரவுகளை பகலாக்கும்
  வெளிச்ச விளக்குகள்
  விழுங்குறது
  இருளையே இன்று..
  //////

  மறுக்க இயலாத ஒன்றுதான் . சிறப்பான படைப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமு அழைக்கும்

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. //இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து //

  அட, இது இன்னொரு ஒலியின் ஓசை மாதிரியே இருக்கே..!!

  யாரெங்கே ..!! கொண்டு வாருங்கள் அந்த மீதம் பனை ஓலைகளை ..அட..ச்சை..பனை ஓசைகளை..

  ம்..ஆகட்டும் ..ரம்பை மேனகை நாட்டியம்...இனி இந்த நீரோடையில் அதையும் ருசிப்போம் ..அட..ச்சை..ரசிப்போம் ...!! :-))


  கவிதை சூப்பர் :-))

  பதிலளிநீக்கு
 9. மனிதன் தேடும் படலமென ஆழமான கவிதை !

  பதிலளிநீக்கு
 10. ஸலாம் சகோ..
  உண்மையை தான் சகோ சொல்லி இருக்கிறீர்கள்...
  மனங்கள் மறத்துப் போய்
  மனிதம் மரித்துதான் போய்விட்டது

  மனிதம் தழைக்க முயல்வோம்...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 11. அருமை அருமை
  நீதி நூலகள் கோடி இருந்து என்ன பயன்
  ஒழுக்கமில்லாதவன் வீட்டில்
  அதேபோல் மனவெளிச்சம் இல்லாதவன் வீட்டில்
  சூரியனே இருந்தாலும் என்ன பயன்
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. மனித நேயத்தை மீண்டும் வரவேண்டும்.அதற்கான தூண்டலில் உங்கள் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 13. மரத்துப்போன மனங்களினால்
  மரித்துப்போன மனிதம்
  மனிதம் விரைவில்
  உயிர்த்தெழட்டும்.

  பதிலளிநீக்கு
 14. //வேடந்தாங்கல் - கருன் கூறியது...

  மனிதம் வளா்ப்போம்...//

  நிச்சயமாக வளர்போம்..


  //எல் கே கூறியது...

  புறம் இருளாய்
  இருந்தது - அகம்
  வெளிச்சமாய் இருந்தது...

  புற இருள் அகல
  அகல - அகத்தில் இருள்
  கூடியது//

  உண்மைதான் கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 15. //crown கூறியது...

  ஒரு கோடியில் வெளிச்சம்.
  மறு கோடியில் இருள் கவ்வும் தேசம்.
  ஒரு புறம் வாழை இலை விருந்தும்.
  மருபக்கம் எச்சில் இலையில் உணவுக்காய் போராட்டம்.
  காலம் மாறினாலும் ஏற்றமும் ,தாழ்வும் எக்காலத்திலும் தொடரும் சாபம்.
  மரித்து போன மனிதம் அதேவேளை என்றும் சாகா வரம் பெற்ற பாகுபாடு.//

  அனைத்து நிலைகளையும் கடந்துகொண்டிருக்கிறானே மனிதன். தனனைமறந்தும் தன்நிலை மறந்தும்.

  மிக்க நன்றி சகோ..

  //சே.குமார் கூறியது...

  கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அக்கா... வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்ளுக்கு மிக்க நன்றி சே.குமார்.

  பதிலளிநீக்கு
 16. றியது...

  வெளிச்சங்கள் மட்டும்
  விரிந்திருதென்ன பயன்
  இன்றுள்ள
  மனிதர்களின்
  மனங்களிலோ
  இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
  இதயங்களில்
  இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..  ..... வேதனையான விஷயம்.//

  வேதனைப்படத்தான் நம்மால் முடியும் வேறென்ன செய்ய மனிதத்தை வளர்க்க முயற்சியாவது செய்வோம்..

  பதிலளிநீக்கு
 17. //MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //வெளிச்சங்கள் மட்டும்
  விரிந்திருதென்ன பயன்
  இன்றுள்ள
  மனிதர்களின்
  மனங்களிலோ
  இருட்டுகளின் ஆக்கிரமிப்பு
  இதயங்களில்
  இரக்கமில்லா உயிர்த்துடிப்பு..//


  நச்...............................//

  ஓகோ அப்படியா. மிக்க நன்றி மனோ..

  பதிலளிநீக்கு
 18. // !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...

  ///////இரவுகளை பகலாக்கும்
  வெளிச்ச விளக்குகள்
  விழுங்குறது
  இருளையே இன்று..
  //////

  மறுக்க இயலாத ஒன்றுதான் . சிறப்பான படைப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி.//

  வாங்க பனித்துளி நெடுநாளைக்கப்புறம் வருகை புரிந்தமைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. //ஆயிஷா அபுல். கூறியது...

  அஸ்ஸலாமு அழைக்கும்

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்குகளுக்கு மிக்க மகிழ்ச்சி ஆயிஷா..

  // Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

  நல்லாயிருக்கு!//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிக்குமார்

  பதிலளிநீக்கு
 20. //ஜெய்லானி கூறியது...

  //இந்த கவிதை சகோ காஞ்சி முரளி அவர்களின் ”பனை ஓசையிலிருந்து //

  அட, இது இன்னொரு ஒலியின் ஓசை மாதிரியே இருக்கே..!!//

  அதேதான்

  //யாரெங்கே ..!! கொண்டு வாருங்கள் அந்த மீதம் பனை ஓலைகளை ..அட..ச்சை..பனை ஓசைகளை..//

  யாரும் வரமாட்டாங்க சகோவா கொண்டுவந்தாதான்

  //ம்..ஆகட்டும் ..ரம்பை மேனகை நாட்டியம்...இனி இந்த நீரோடையில் அதையும் ருசிப்போம்
  ..அட..ச்சை..ரசிப்போம் ...!! :-)) .//

  என்ன யாராந்த அம்பை மோனகை ஓ உங்க கனவுல வாரவுகளா..மச்சீஈஈஈஈ இங்க பாத்தீகளா ரசிக்க ருசிக்கன்னு என்னவோ பிதற்றுராங்க அண்ணாத்தே..
  //கவிதை சூப்பர் :-))//

  சொல்லனுமே சொன்னதுபோல்ல் தெரியுது..

  பதிலளிநீக்கு
 21. //ஹேமா கூறியது...

  மனிதன் தேடும் படலமென ஆழமான கவிதை !//

  தேடும் படலம் தொடர்கதையாக.
  மிக்க நன்றி தோழி

  // RAZIN ABDUL RAHMAN கூறியது...

  ஸலாம் சகோ..
  உண்மையை தான் சகோ சொல்லி இருக்கிறீர்கள்...
  மனங்கள் மறத்துப் போய்
  மனிதம் மரித்துதான் போய்விட்டது

  மனிதம் தழைக்க முயல்வோம்...

  அன்புடன்
  ரஜின்/

  இன்ஷா அல்லாஹ் அதற்கும் இறைவன் நாடுவான் முயல்வோம்..

  பதிலளிநீக்கு
 22. //Ramani கூறியது...

  அருமை அருமை
  நீதி நூலகள் கோடி இருந்து என்ன பயன்
  ஒழுக்கமில்லாதவன் வீட்டில்
  அதேபோல் மனவெளிச்சம் இல்லாதவன் வீட்டில்
  சூரியனே இருந்தாலும் என்ன பயன்
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்.//

  அருமையான எடுத்துக்காட்டு இருக்க வேண்டியதை தொலைத்துவிட்டு இல்லாத ஒன்றுக்கு அலையும் மனக்களாக ஆகிவிட்டது.

  மிக்க நன்றி சார் தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

  பதிலளிநீக்கு
 23. //குறட்டை " புலி கூறியது...

  மனித நேயத்தை மீண்டும் வரவேண்டும்.அதற்கான தூண்டலில் உங்கள் கவிதை அருமை.//

  ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி தாங்களின் வ்ருகைக்கும் கருத்துக்கும்..

  பதிலளிநீக்கு
 24. //இராஜராஜேஸ்வரி கூறியது...

  மரத்துப்போன மனங்களினால்
  மரித்துப்போன மனிதம்
  மனிதம் விரைவில்
  உயிர்த்தெழட்டும்.//

  உயிர்தெழவேண்டி கண்ணீரை
  உதிர்த்து வேண்டுவோம் இறைவனிடம்.

  மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது