நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பேராசை!...


ன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

ம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

றுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவலிருந்ததே!

வ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்

மீண்டும்

ன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை...

இக்கவிதை  திண்ணையில் வெளிவந்துள்ளது
நன்றி திண்ணை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

24 கருத்துகள்:

 1. ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா இதை பத்தி கேட்டா. நீங்க இங்க கவிதையா எழுதி விட்டீர்கள்


  நலம்தானே ?

  பதிலளிநீக்கு
 2. இன்னொரு முறை
  இருளுக்குள்
  இருந்து பார்க்க ஆசை!

  இம்சைகளில்லா
  இன்பங்களுக்குள்
  இருந்து பார்க்க ஆசை!

  அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்...
  அமையாதே என்ன செய்வது

  வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. எல் கே கூறியது...

  ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா இதை பத்தி கேட்டா. நீங்க இங்க கவிதையா எழுதி விட்டீர்கள்.//

  அதற்கு என்ன சொன்னீங்க கார்த்தி..


  //நலம்தானே ?//

  சற்று நலக்குறைவுதான் . இருந்தாலும் நலம் கார்த்தின் நீங்க திவ்யா அண்ணி அனைவரும் நலமா?

  கருத்துக்கும் நலம் விசாரித்தமைக்கும் மிக்க நன்றி கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 4. // isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்...
  அமையாதே என்ன செய்வது.//

  அதுக்குதான் பேராசையின்னு சொல்லிட்டேனே. நடக்காது ஒன்று ஏங்கி அடம்பிடிப்பதுதானே மனிதமனம்..அதில் நான்மட்டும் என்ன விதிவிலக்கா?

  //வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காஜா..

  பதிலளிநீக்கு
 5. அந்த கதகதப்பான் அறையில்
  கண்மூடி கிடப்பதுவும்.
  தாய் பேசும் பேச்சும்,மூச்சும்
  புரியாமல் ரசிப்பதுவும்.
  அவள் நடக்கையில்
  மேகத்தில் தூக்கி வைத்ததுபோல் இருப்பதுவும்
  உணர்வுகளால் அறிந்தும்
  உன்மையை அறியாத அந்த தினங்களும்
  மருபடியும் வந்தால்
  வாழ்வில் மருபடியும்
  மருபடியும் அந்த நிலையைதான் இதயம் வேண்டும்.
  நடக்காத ஒருவித விசயமெனினும்
  நினைக்கையில் மனதில்
  ஒருவித பதட்டத்துடன் ஓடும் இன்ப உணர்வு
  தாய்மையின் மகத்துவம் சொல்லும்.

  பதிலளிநீக்கு
 6. சலாம் மலிக்கா...,அழகான வரிகளோடு அற்புதமான கவிதை...
  ரசித்து படித்தேன்...அந்த இன்பத்தினை அப்படியாவது பெருவோமே என்றுதான்.

  அன்புடன்,
  அப்சரா.

  பதிலளிநீக்கு
 7. நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 8. பேராசை
  பெரும்நஷ்டம்.
  உங்களின் பேராசையோ
  யாவருக்கும்
  பெரும் இஷ்டம்!
  கரு வறை போல
  ஒரு அறை ஏது?

  நல்ல கவிதை
  வாழ்த்துகள் சகோதரி!

  பதிலளிநீக்கு
 9. அவ்விருளை
  அனுபவித்து ரசிக்க
  அன்னையின் கருவறையில்

  ”மீண்டும்”

  இன்னொரு முறை
  இருந்து பார்க்க ஆசை//

  சற்றுநேரம் அப்படி இருந்துபார்த்தேன் கண்மூடி.
  என்ன ஒரு கற்பனை சிந்தனை அடிச்சி தூள்கிளப்பிட்டீங்க மல்லிகா

  பதிலளிநீக்கு
 10. பேராசை அல்ல.
  நியாயமான ஆசை தான். எனக்கும் கூட அதுபோலவே ஓர் ஆசை உண்டு !

  அழகான வரிகள்
  அற்புதமான கற்பனை
  அன்பான வாழ்த்துக்கள்
  மனமார்ந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 11. இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//
  ஆழ்ந்த அருமையான நேசிக்கும் கருப்பொருள் தாங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. // isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்...
  அமையாதே என்ன செய்வது.//

  அதுக்குதான் பேராசையின்னு சொல்லிட்டேனே. நடக்காது ஒன்று ஏங்கி அடம்பிடிப்பதுதானே மனிதமனம்..அதில் நான்மட்டும் என்ன விதிவிலக்கா?

  //வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காஜா..

  13 மார்ச், 2011 12:58 pm
  நீக்கு
  பிளாகர் crown கூறியது...

  அந்த கதகதப்பான் அறையில்
  கண்மூடி கிடப்பதுவும்.
  தாய் பேசும் பேச்சும்,மூச்சும்
  புரியாமல் ரசிப்பதுவும்.
  அவள் நடக்கையில்
  மேகத்தில் தூக்கி வைத்ததுபோல் இருப்பதுவும்
  உணர்வுகளால் அறிந்தும்
  உண்மையை அறியாத அந்த தினங்களும்
  மறுபடியும் வந்தால்
  வாழ்வில் மறுபடியும்
  மறுபடியும் அந்த நிலையைதான் இதயம் வேண்டும்.
  நடக்காத ஒருவித விசயமெனினும்
  நினைக்கையில் மனதில்
  ஒருவித பதட்டத்துடன் ஓடும் இன்ப உணர்வு
  தாய்மையின் மகத்துவம் சொல்லும்.//

  தாய்மையினை உணர்ந்து எழுதப்பட்ட வரிகளுக்கு மகிழ்ச்சி சகோ..

  பதிலளிநீக்கு
 13. // apsara-illam கூறியது...

  சலாம் மலிக்கா...,அழகான வரிகளோடு அற்புதமான கவிதை...
  ரசித்து படித்தேன்...அந்த இன்பத்தினை அப்படியாவது பெருவோமே என்றுதான்.

  அன்புடன்,
  அப்சரா.//

  ரசித்து படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அப்சரா..


  // ஆயிஷா அபுல். கூறியது...

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆயிஷா.

  பதிலளிநீக்கு
 14. // ஹேமா கூறியது...

  நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !//

  நினைத்தபோது சிலிர்த்ததைதான். பேராசைப்பட்டு எழுதினேன் தோழி..

  பதிலளிநீக்கு
 15. நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !

  // sabeer.abushahruk கூறியது...

  பேராசை
  பெரும்நஷ்டம்.
  உங்களின் பேராசையோ
  யாவருக்கும்
  பெரும் இஷ்டம்!
  கரு வறை போல
  ஒரு அறை ஏது?

  நல்ல கவிதை
  வாழ்த்துகள் சகோதரி!//

  ஆமாம் சகோ அவ்வறையில் நினைத்த மாத்திரத்தில் போய் இருக்கமுடிந்தால் எவ்வள நன்றாக இருக்கும். கவலைகளை மறந்து கண்மூடிகிடக்க..

  மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 16. // இராஜேந்திரன் கூறியது...

  அவ்விருளை
  அனுபவித்து ரசிக்க
  அன்னையின் கருவறையில்

  ”மீண்டும்”

  இன்னொரு முறை
  இருந்து பார்க்க ஆசை//

  சற்றுநேரம் அப்படி இருந்துபார்த்தேன் கண்மூடி.
  என்ன ஒரு கற்பனை சிந்தனை அடிச்சி தூள்கிளப்பிட்டீங்க மல்லிகா.//

  ஒவ்வருவருக்கும் ஆசைதான் முடியாத ஒன்றுக்கு ஏங்குவதுதானே மனிதமனம்..

  மிக்க நன்றி சார்..

  //1 அன்னு கூறியது...

  malikakka,

  superb lines . pretty :)//

  மிக்க நன்றி அன்னு ..

  பதிலளிநீக்கு
 17. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  பேராசை அல்ல.
  நியாயமான ஆசை தான். எனக்கும் கூட அதுபோலவே ஓர் ஆசை உண்டு !

  அழகான வரிகள்
  அற்புதமான கற்பனை
  அன்பான வாழ்த்துக்கள்
  மனமார்ந்த பாராட்டுக்கள்.//

  வயது வித்தியாசங்களில்லை மனதுக்கு தனக்கு ஆறுதல்தரும் அவ்விடத்தை அடையநினைக்க.

  வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 18. // இராஜராஜேஸ்வரி கூறியது...

  இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//
  ஆழ்ந்த அருமையான நேசிக்கும் கருப்பொருள் தாங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.//

  வாங்க இராஜராஜேஸ்வரி தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு. மிக்க நன்றி...  //சே.குமார் கூறியது...

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சே.குமார்..

  பதிலளிநீக்கு
 19. // மாதேவி கூறியது...

  அருமை. வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மாதேவி

  பதிலளிநீக்கு
 20. வந்துவிட்டார் வ்.வ.ஸ்ரீ.! புதிய கட்சி: மூ.பொ.போ.மு.க. உதயம்!! பகுதி-3 படித்தீர்களா?

  பின்னூட்டம் கொடுங்கள்.

  அப்போது தான் பகுதி-4 நாளை வெளியிட எனக்கு ஒரு எழுச்சி ஏற்படும். அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது