நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அழுகிய பரிசு!

தன்னிநிலை மறந்து
தீய வழியை
தேடிப்போகும் உடலுக்கு
தனக்குத்தானே கிடைக்கும்
தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
தேடிய திரிந்த இன்பத்திற்கு
இறைவன் தந்த பரிசு
திக்குமுக்காட வைக்கும்
தீராவியாதி

மாற்றான் தோட்டத்து
மல்லிகையில்
தேனெடுக்க சென்ற
மதியிழந்த வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்

தான்பெற்ற இன்பத்திற்கு
தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
துன்பத்தைதரும்
திட்டமிட்ட சதிவாதியே!

தவறென்று தெரிந்தும்
தத்தித்தாவி
தித்திப்பென்று தீங்கில் விழுந்து
தீயில் கருகும் மதிகளே!

உயிருள்ளவரை
உள்ளச்சத்துடன் வாழுந்து
உங்களை நம்பியுள்ளோர்களையும்
உருக்குழையாமல் வாழவிடுங்களேன்...

டிஸ்கி// ஏற்கனவே பரிசு என எழுதிய கவிதைதான் இது.
 கூடுதல் வார்தையோடு தற்போது மீண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

26 கருத்துகள்:

 1. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க .எங்கவீட்டு பக்கத்துவீட்டு அண்ணாவுக்கு இதுபோலிருந்து மறைத்து திருமணம் செய்து. இப்போ அவங்களுகும் குழந்தைக்கும் இது தொத்திக்கிச்சம் பாவம் குழந்தை. இந்த குழந்தையை பார்க்குபோது அதன் நினைவு வந்துவிட்டது.

  இவ்ர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் திருந்துவார்களா இவர்களைபார்த்து மற்றவர்கள்..

  பதிலளிநீக்கு
 2. என்னங்க சொல்லறது... இதே எல்லாம் மாறனும்...

  பதிலளிநீக்கு
 3. //மாற்றான் தோட்டத்து
  மல்லிகையில்
  தேனெடுக்க சென்ற
  மதியிழந்த வண்டுக்கு
  அந்த மல்லிகை தந்த பரிசு
  அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்//

  இருட்டில் எனக்கு வழி தெரியவில்லை
  கூட்டிப் போனது மல்லிகை வாசம்
  இதனால் எனது வாழ்க்கை ஆனது நாசம்

  தவறான வழியில் செல்லும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி உங்கள் கவிதை ஒரு சவுக்கடி !
  பாவம் இந்தக் குழந்தையின் நிலைமையைக் கண்டு என் மனம் அழுகிறது தயவு செய்து இப்படிப்பட்ட குழந்தையின் போட்டோவை போடாதிர்கள்.

  பதிலளிநீக்கு
 4. படமும் கவிதையும் பாரமாய் இருக்கு அக்கா...

  பதிலளிநீக்கு
 5. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்கரான்களே

  கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 6. தன்னோடு சேர்த்து 3 உயிர்களுக்கு நாசம் விளைவிக்கும் இந்த வியாதியைதேடிபோகும் மனிதர்களே
  சிந்தித்துப்பார்க்கமாட்டீர்களா!
  இப்படிஒருகொடுமையை நீங்களும் அனுபவித்து உங்கள் சந்ததிக்கும் கொடுப்பது பாவமில்லையா.

  இச்சைக்காக இருப்பதையே இழக்கும் மனிதா. உனக்கு வெட்கமில்லைஆ.

  என்னவெல்லாமோ கேட்கதோனுது சகோ ஆனா இதுபொது தளம் அதான் கொஞ்சம் அடக்கிவசிக்கிறேன்

  நட்புடன்
  அன்புநாதன்.என்னும்
  ஜெயதேவ்

  பதிலளிநீக்கு
 7. தான்பெற்ற இன்பத்திற்கு
  தன்துணைக்கும் தன்வாரிசுக்கும்
  துன்பத்தைதரும்
  திட்டமிட்ட சதிவாதியே//

  சவுக்கடி கொடுத்தாலும் திருந்தமாட்டாங்க பயபுள்ளைக.

  நல்ல எழுத்துவளம் உன்னிடம் இருக்கு. அதை இதுபோன்ற சமுதாயபணிகளுக்காகவும் நீ பயன்படுதுவதுதாம்மா. உன்பக்கம் அனைவரையும் ஈர்க்கிறது.

  இன்னும் நல்ல சிந்தனை உன்னிடமிருந்து எதிர்பார்கிறேன்.
  கடவுளிடம் உனக்காக பிராத்திக்கிறேன்.

  ராஜராஜன்
  வாத்தியார்குடியிருப்பு..

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையா கவிதை.
  இரக்கமென்பது இல்லாதுபோகும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்.
  இச்சைகளுகு தீனிபோட இம்சைகள் வந்து மாட்டிக்கொள்ளும் அதையுணராத கூட்டத்திற்க்கு நம்புதிமதியல்லாம் தூசி..

  நானும் எழுத உள்ளேன் இதுபோன்று நிறைய ..

  பதிலளிநீக்கு
 9. சுகந்தி கூறியது...
  மிக அருமையாக சொல்லியிருக்கீங்க .எங்கவீட்டு பக்கத்துவீட்டு அண்ணாவுக்கு இதுபோலிருந்து மறைத்து திருமணம் செய்து. இப்போ அவங்களுகும் குழந்தைக்கும் இது தொத்திக்கிச்சம் பாவம் குழந்தை. இந்த குழந்தையை பார்க்குபோது அதன் நினைவு வந்துவிட்டது.

  இவ்ர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் திருந்துவார்களா இவர்களைபார்த்து மற்றவர்கள்..//

  என்ன செய்ய சுகந்திமா. நாம் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நம் தலைமுறைக்கும் அது நன்மையாக அமையும் என்பதை மறந்தவர்கள் செய்யும் வேலைதான் இது.
  அவர்களின் சுயநலத்தில் அவரோடுள்ளவர்களை சீரழிதுவிடுகிறார்கள் சீக்கின்மூலம்..

  நன்றிமா தங்களின் பகிர்விற்க்கும்..

  //வினோ கூறியது...
  என்னங்க சொல்லறது... இதே எல்லாம் மாறனும்...//

  மாறனும் கண்டிப்பாக..

  பதிலளிநீக்கு
 10. Mohamed Ayoub K கூறியது...
  //மாற்றான் தோட்டத்து
  மல்லிகையில்
  தேனெடுக்க சென்ற
  மதியிழந்த வண்டுக்கு
  அந்த மல்லிகை தந்த பரிசு
  அழுகவைக்கும் இந்த எய்ட்ஸ்//

  இருட்டில் எனக்கு வழி தெரியவில்லை
  கூட்டிப் போனது மல்லிகை வாசம்
  இதனால் எனது வாழ்க்கை ஆனது நாசம்.//

  இருட்டில்போகும்போது வெளிச்சம் வேண்டுமென்பதில்லை. மனதுணிச்சலிருந்தால் போதும். மண்டிக்கிடக்கும் இருளிலும் நல்மதியோடு நல்மனமிருந்தால் வென்றுவரலாம்..

  //தவறான வழியில் செல்லும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி உங்கள் கவிதை ஒரு சவுக்கடி !
  பாவம் இந்தக் குழந்தையின் நிலைமையைக் கண்டு என் மனம் அழுகிறது தயவு செய்து இப்படிப்பட்ட குழந்தையின் போட்டோவை போடாதிர்கள்.//

  இருவருக்கும் மனக்கட்டுபாடு அவசியம். அதையிழக்கும்போது ஏற்படும் விளைவே இதுபோன்ற நாசம்..

  இந்த போட்டோ பார்த்தாவது மனமிறங்குவாங்கன்னுதான்..


  // சீமான்கனி கூறியது...
  ஐ பஸ்ட்டு.../

  இல்லையே இல்லையே..

  பதிலளிநீக்கு
 11. மாற்றம் எல்லா இடத்திலும் அவசியம்

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப நல்லா இருக்கு

  http://marumlogam.blogspot.com/2010/09/blog-post_4189.html

  இதே போல நான் எழுதிய கவி ஒன்று சற்று படித்துப்பாருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 13. திணை விதைத்தால்...திணை விளையும்...!
  வினை விதைத்தால்... வினை விளையும்..!

  இவர்கள் விதைத்தது... விதைப்பது... மரணத்தை...!

  விளைவு...!

  "மாதா செய்தது மக்களுக்கு" என முன்னோர் சொன்னதைப் போல...
  பாவம் ஓரிடம்... பழி ஓரிடமாய்..
  அவன் தன்
  சந்ததிக்கே
  சமாதியெழுப்பிவிடுகிறான்....!

  சமூகத்தின்மீது அக்கறையுள்ள...

  வழக்கம்போல் மலிக்காவின் எதுகைமோனையுடன்....

  சமூகச்சாடலுடன் அருமையான கவிதை....!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 14. ப‌ட‌த்தை த‌விர்த்து இருக்கலாம்..க‌விதை ந‌ல்லாயிருக்கு..

  பதிலளிநீக்கு
 15. akka...

  unmaiyai vuraikkum vali niraintha kavithai....

  padam vethanaiyai thundum vithamaaga irukkirathu...

  nallaa irukku akka.

  பதிலளிநீக்கு
 16. மிகமிக நல்ல கவிதை தங்கச்சி!

  - திருச்சி சையது, துபாயிலிருந்து.

  பதிலளிநீக்கு
 17. இறைவனின் பயம் என்று இல்லதவர்களை என்ன சொல்லியும் / செய்தும் திருத்த முடியாது மலிகாக்கா. கவிதை படித்தவுடனேயே நெஞ்சு கனக்கிறது. இதில் எந்த தவறும் செய்யாத பிஞ்சுக்குழந்தைகளும் மாட்டும்போது மனம் வெந்து போகின்றது. அல்லாஹ்வே இவர்களுக்கு தக்க தண்டனை தரவேண்டும்!!

  பதிலளிநீக்கு
 18. அருமையான கருத்துள்ள கவிதை..
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 19. மிக நல்லா சொல்லியிருக்கிங்க மலிக்கா அக்கா..

  பதிலளிநீக்கு
 20. பொது நலன் விறும்பி வெளியிடுவது
  நீரோடை ஆசிரியர்.

  பதிலளிநீக்கு
 21. எனக்கு CHES என்ற ஒரு NGO வில் ஈடுபாடு இருந்தது. அங்கு வரும் பெண்கள் விபச்சாரத்தை தொழிலாய் செய்பவர்கள், அவர்களே அறிவுரை கூறியும் (எனக்கு எய்ட்ஸ் உள்ளதென்று) கேட்காத மடையர்கள் இந்த உலகத்தில் உண்டு. திருமணதிற்கு முன் இதை சாதனையாக கருதும் முண்டங்களும் உண்டு. என் இப்படி என புரிந்து கொள்ள முடியாத மனிதனின் மனம்.

  இந்த கவிதை அவர்களை சிந்திக்க வைக்கவில்லை என்றால் அவர்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது