விசா பறவைகள்!!
விழிநிறைய கனவுகளோடு
விமானமேறிய விசாபறவைகள்
விபத்துக்குள்ளாவது அறியாது
வானத்தில் சென்றன
எத்தனை எத்தனை கனவுகள்
எத்தனை எத்தனை நினைவுகள்
எண்ணங்களுக்கு
சிறகடித்துப் பறந்திருக்கும்
எல்லாம் முடிந்திருக்கும்
விமானம்
வெடித்து சிதறி-வீசி
எரியப்பட்டபோது
நாடுவிட்டு நாடுவந்து
நாடோடிகளாய்
நாமிருக்கும் வேளையில்
நாளை நடப்பதை நாமறியோம்
வயிறுப் பிழைப்புக்கும்
வசதிக்கும்
வழிபோக்கர்களாய் வெளிநாடு
வந்திருக்கும் நாம்
வீடு திரும்பும்வரை
வியர்வை வழிய உழைத்து
விழிகள் வலிக்க அழுது
விடியலிலும் தொழுது
இப்படி
எதிர்பாராமல் வரும்
இன்னலையும் இரங்கல்ளையும்
எதிர்கொள்ளமுடியாமல் தவித்து
விசா பறவைகளாய்
வீட்டைவிட்டு வெளியேறி
வேலை தேடிவரும்
மனிதப் பறவையாய்
மர நிழலென்னும்
தன்கூடுக்குள் திரும்பும்வரை
மனதிலும் நிம்மதியில்லாமல்
தன்னுள்ளதிலும் உணர்வில்லாமல்
பெற்றது பாதி
பெறாதது மீதியென
புறப்பட்டு போகும் வழியில்
பறந்துவரும் விமானம்
விதிவசத்தால் விபத்துக்குள்ளாகி
விகாரமாய் வீசியெறிப்படும்போது
விதவிதமாய் கண்ட கனவுகள்
விழிநிறைந்த விஸ்வரூப நினைவுகள்
எல்லாம்,,,, எல்லாம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணெதிரே களைந்து
எரியப்பட்டு உயிர்களைனத்தும்
காற்றோடு கலக்கப்படுகின்றன
விசயம் அறிந்ததும்
வீறிட்டு அழுது
விம்மி வெடிக்கிறது
உள்ளம்
மரணத்தை தழுவியவர்கள்
முகமறியாதவர்கள் என்றபோதும்
மனதுக்குள் வந்து சென்றதுபோல்
நினைவைத் தருகிறது சோகம்
எதிர்பார்ப்புகளோடு வந்தவர்கள்
எதிர்பாராமல் இயற்கை
எய்திவிட்டார்கள் -இருகரம்
ஏந்தி
இறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....
//மங்களூர் விமானவிபத்து இன்று செய்திபார்த்தேன்.
மனம் தாங்கமுடியவில்லை
இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறுவழியில்லை.
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம்படும்பாடு.
சிலநேரம் சுகமோடு சிலநேரம் சோகத்தோடு.
இறைவா!
உன்னாலே உயிர்பெற்றோம்.
உன்னிடமே திரும்பவருவோம்.
எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
ஆமீன் ஆமீன் ஆமீன்..//
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:-(((((((((((((((((((((((
பதிலளிநீக்குenna solla sagothari. manam miga valikirathu
பதிலளிநீக்குஉறவுகளை எதிர்பார்த்து போனவர்கள் எத்தனைப் பேரோ. , வழிமேல் விழி வைத்து எதிர் பார்த்தவர்கள் எத்தனைப் பேரோ , வந்தவர்களை வரவேற்க்க காத்திருந்தவர்கள் எத்தனைப்பேரோ
பதிலளிநீக்குநினைக்கும் போதே..............
இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ...
பதிலளிநீக்குஅவர்கள் தங்கள் ஆறுதலை அடையட்டும் ...
அன்பு மலிக்கா ...
உங்கள் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன் ...
இழந்தவர்களின் மனம் சாந்தியடைய வல்ல ஏகன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன் ...
பதிலளிநீக்குநினைவுகள் தடுமாறுகின்றன இவ் விஷயத்தை நினைக்கின்றபொழுது....
பதிலளிநீக்குமனம் கனக்கிறது..அவர்களது ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குபடக்காட்சிகளை, தொலக்காட்சியில் கண்டு.... கஷ்டப்படும் என் மனதிற்கு என்னாலே ஆறுதல் சொல்ல முடியவில்ல....
பதிலளிநீக்குஅபுதாபியிலிருந்து....
மனம் கனக்கிறது..அவர்களது ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்கு///இருகரம் ஏந்தி
பதிலளிநீக்குஇறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....//
vedhanaiyana.. aaruthal solla mudiyatha nikazchi...
thangal varigalile...
en prarthanaiyum...
venduthalum....
natpudan...
kaanchi murali..
//எல்லாம்,,,, எல்லாம்
பதிலளிநீக்குகண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணெதிரே களைந்து
எரியப்பட்டு உயிர்களைனத்தும்//
நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது...
என்ன சொல்வதென்றே தெரியல,மனமெல்லாம் கனக்குது.
பதிலளிநீக்குஆண்டவன் எல்ல்லோருக்கும் நல்பதவியை அளிக்கட்டும்
கனத்த மனதுடன் வேலை செய்தேன் காலையில் செய்தி கேட்டதில் இருந்து
பதிலளிநீக்கு//இறைவா!
உன்னாலே உயிர்பெற்றோம்.
உன்னிடமே திரும்பவருவோம்.
எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
ஆமீன் ஆமீன் ஆமீன்..//
நம் அனைவரின் பிராத்தனைகளும் இறந்தவர்களுக்கு சென்று சேரட்டும்.
பதிலளிநீக்குநம் ஆறுதல்கள் அனைத்தும் அவர்களின் உறவுகளுக்கும். சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் சென்று சேரட்டும்...
//எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
பதிலளிநீக்குஆமீன் ஆமீன் ஆமீன்..//
//எதிர்பார்ப்புகளோடு வந்தவர்கள்
பதிலளிநீக்குஎதிர்பாராமல் இயற்கை
எய்திவிட்டார்கள்//
ஆமாம், இறைவனின் நாட்டம்.
நம்மால் செய்யக்கூடியது,
இறந்தவர்களுக்கு நமது அஞ்சலி!
நாடுவிட்டு நாடுவந்து
பதிலளிநீக்குநாடோடிகளாய்
நாமிருக்கும் வேளையில்
நாளை நடப்பதை நாமறியோம்
....... true. We are at the Lord's mercy.
இருகரம் ஏந்தி
பதிலளிநீக்குஇறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....//
வேதனையான.. ஆறுதல் சொல்ல முடியாத நிகழ்ச்சி...
தங்கள் வரிகளிலே...
என் பிரார்த்தனையும் ...
வேண்டுதலும்....
நட்புடன்...
காஞ்சி முரளி....
உண்மைதான் மல்லிக்கா
பதிலளிநீக்குஎத்தனை எதிர்பார்ப்புகலுடன்
ஏறி இருப்பான்
என் வயது தோழ(ழி)ர்கள்
இரவும் பகலும்
இழைப்பாரம்ல் உழைத்து
நாளைய விடியல் என் தாய் மடியில்
என்ற ஏகாந்த சுவாசத்தில்
மனம் கனக்கிரது...
எல்லா வரிகளுமே அருமை...
பதிலளிநீக்குஅவர்கள் குடும்பங்களுக்கும் இறைவன் பொருமையையும் ஆறுதலையும் கொடுக்கட்டும்....
My Deep condolence
பதிலளிநீக்குமரணம்
பதிலளிநீக்குநான் இருக்கிறேன் நான் இருக்கிறேன்
எப்போது? எப்படி? எதனால்? ஏன்? என்ற எந்த கேள்விக்கும் விடை சொல்லாமல் நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன்
என்றுமட்டும்
அடிக்கடி நொடிக்குநொடி
நியாபக்கதை ஏற்படுத்துகிறது.
இறந்தவர்களுக்காக இன்று
இருப்பவர்கள் இறைஞ்சுவோம்
நாளை இறக்கப்போகும்
நமக்காக அன்று
இருப்பவர்கள் இறைஞ்சட்டும்...
நன் அனைவரின் பிராத்தனைகளும் துஆக்களும் இறைவன் ஏற்றுக்கொள்வானாக!ஆமீன்
மனது வலித்தது மலிக்கா! கவிதையின் கரு அவர்கள் கண்ட கனவு கண்ணிமைக்கும் நேரத்தில் அழிந்ததையும், காத்திருந்தவர்கள் கண்முன்னே அவர்கள் கரிக்கட்டையாய் மாறியதும் சேர்ந்து உங்கள் கவிதையும் அழுகிறது. இறைவனின் எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்றாயிருக்க இனியாவது இறைஞ்சும் ஏகனிடம். இரங்கல் கவிதைக்கு என் இதயம் கணிந்த நன்றி..
பதிலளிநீக்குநட்புடன்..,
நிஜாம் கான்
சின்ன திருத்தம்: விசா தான் சரி. விஷா அல்ல..மாற்றினால் மகிழ்ச்சி.