நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடைகுளிருமா -வாடை வருடுமா

வாழ்வைத்தேடி வயல்வரப்புகளை
விற்றுவிட்டுவந்த நாங்கள்
வறுமையைபோக்க வாலிபத்தை
தொலைத்து வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!


கோடைவெயில் கொடூரமாய்
கொழுந்துவிட்டு எறிய –அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா
[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,
என பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

பாலைவனமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்,,
எதிர்பார்த்திருக்கிறோம்!!!
கோடை என்றாவது குளிருமென்றும்
வாடை என்றாவது வருடுமென்றும்...
 
[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை! அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்] 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

28 கருத்துகள்:

  1. //கொழுந்துவிட்டு எறிய –அதன்
    கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
    குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
    கட்டிடம் கட்டும் எங்களுக்கு
    கோடையென்ன வாடையென்ன!//

    உண்மைதான்...

    //கோடை என்றாவது குளிருமென்றும்
    வாடை என்றாவது வருடுமென்றும்...//

    வரும்...

    மேடையில் வாசித்த கவிதை நல்ல விதை...

    பதிலளிநீக்கு
  2. [b]உங்கள் கற்பனைக்கு கோடையென்ன வாடையென்ன!...

    பதிலளிநீக்கு
  3. உணர்ச்சிகரமான கவிதை. கீழ்நிலைத் தொழிலாளிகள் படும் அவஸ்த்தையை நன்கு சித்தரித்திருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமை. தொழிலாளர்களின் மனதை படம்பிடித்துகாட்டியதுபோல்...

    பதிலளிநீக்கு
  5. அர்த்தமுள்ள கவிதை..தொழிலாளி ஒருவன் இந்த கவிதைய படித்தால் மகிழ்வான்.

    பதிலளிநீக்கு
  6. Tholilala Tholarkalin kayankalukku mayilerakal marunthai thadaviyamathiri intha kavithai avarkalukku ethamum... aruthalum tharum... powerful kavithai comprate!

    Sukankali mattume kavithai eluthuvathu elithu... But aduthavarkalin kastankalai padibalan vunarthu... avarkalukku aruthalai ilakkiyem payenpadupoothu mulumaiadaikirathu...

    Nichayam kavithai ilakiyathil unkal pathivu nilaithirukkum.

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  7. Dubai Thamzhil Their Book relaese functionil muthal muthalai neenkal kambeeramai vasitha muthal kavithaiya muthaippai irrunththu... Madayila unkalai paratta ninaitheen....

    Appo nan sollar ninaitha parattai eppo enka sollividukiren :

    Tholilarkalin mana wunarwukalai padam piditha wunarwu poorvamana kavithai ithu.

    Congratulations.

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  8. //கண்ணுக்கெட்டிய தூரம்வரை
    கானல்நீர் கரைபுரண்டு ஓட
    உச்சிமுதல் பாதம்வரை
    உதிரம் வியர்வைகளாய் நனைய
    சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
    களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
    கோடையென்ன! வாடையென்ன!//

    நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இடுக்கை....உண்மையில் இவர்களுக்கு கோடையென்ன...வாடையென்ன...

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவு பெரிசா...! எனக்கு இப்பவே கண்ண கட்டுது...!
    நல்லா இருக்கு..! நண்பரே...!

    பதிலளிநீக்கு
  10. அருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.

    பாலைவமணலிலே!
    புழுதிபறக்கும் அனலிலும்
    உறையவைக்கும் குளிரிலும்
    ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
    கோடையென்ன! வாடையென்ன!//// அருமை..

    FYI நானும் கராமாவில் நாலு வருடம் இருந்தவன் தான்.

    பதிலளிநீக்கு
  11. "பாலைவமணலிலே! "
    ஒரு எழுத்து விட்டுருக்கு சேத்துருங்க அல்லது ஒரு எழுத்து எடுத்துடுங்க. ஓட்டு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  12. அது எப்படிங்க அனுபவமே இல்லாமல் எங்கள் அனுபவத்தை அனுபவிச்சமாதிரி அழக எழுதிறிகீங்க.

    (கொழப்பிட்டேனோ)

    சூ...........................ப்பர்

    பதிலளிநீக்கு
  13. தொகுத்து அளித்த விதம் அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. /க.பாலாசி கூறியது...
    //கொழுந்துவிட்டு எறிய –அதன்
    கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
    குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
    கட்டிடம் கட்டும் எங்களுக்கு
    கோடையென்ன வாடையென்ன!//

    உண்மைதான்...

    //கோடை என்றாவது குளிருமென்றும்
    வாடை என்றாவது வருடுமென்றும்...//

    வரும்...

    மேடையில் வாசித்த கவிதை நல்ல விதை..


    மிக்க நன்றி பாலாஜி தொடர்ந்த ஊக்கத்திற்க்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  15. /Sivaji Sankar கூறியது...
    [b]உங்கள் கற்பனைக்கு கோடையென்ன வாடையென்ன!...
    //

    அதுவும் சரிதான் ...

    பதிலளிநீக்கு
  16. /S.A. நவாஸுதீன் கூறியது...
    உணர்ச்சிகரமான கவிதை. கீழ்நிலைத் தொழிலாளிகள் படும் அவஸ்த்தையை நன்கு சித்தரித்திருக்கின்றீர்கள்./


    மிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா.உற்சாக டானிக் அனைவருக்கும் நீங்க..

    பதிலளிநீக்கு
  17. /பூங்குன்றன்.வே கூறியது...
    அர்த்தமுள்ள கவிதை..தொழிலாளி ஒருவன் இந்த கவிதைய படித்தால் மகிழ்வான்./

    மிக்க நன்றி பூங்குன்றன்..

    பதிலளிநீக்கு
  18. /வாசமுடன் கூறியது...
    மிகவும் அருமை. தொழிலாளர்களின் மனதை படம்பிடித்துகாட்டியதுபோல்...
    /

    மிக்கமகிழ்ச்சி.. வாசமுடன்...

    பதிலளிநீக்கு
  19. மலர்வனம் கூறியது...
    Tholilala Tholarkalin kayankalukku mayilerakal marunthai thadaviyamathiri intha kavithai avarkalukku ethamum... aruthalum tharum... powerful kavithai comprate!

    Sukankali mattume kavithai eluthuvathu elithu... But aduthavarkalin kastankalai padibalan vunarthu... avarkalukku aruthalai ilakkiyem payenpadupoothu mulumaiadaikirathu...

    Nichayam kavithai ilakiyathil unkal pathivu nilaithirukkum.

    - Trichy Syed/

    மிகுந்த சந்தோஷம் மலர்வனம் மலர்வனத்தைபோல் உங்கள் கருத்துக்களும் வாசனைவீசுகிறது...

    பதிலளிநீக்கு
  20. /புலவன் புலிகேசி கூறியது...
    //கண்ணுக்கெட்டிய தூரம்வரை
    கானல்நீர் கரைபுரண்டு ஓட
    உச்சிமுதல் பாதம்வரை
    உதிரம் வியர்வைகளாய் நனைய
    சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
    களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
    கோடையென்ன! வாடையென்ன!//

    நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இடுக்கை....உண்மையில் இவர்களுக்கு கோடையென்ன...வாடையென்ன.../

    கோடையிலும் வாடையிலும் இவர்கள் படும்பாடு அப்பாப்பா சொல்லிலடங்காது,,

    நன்றி தோழனே..

    பதிலளிநீக்கு
  21. /sakthi கூறியது...
    இவ்வளவு பெரிசா...! எனக்கு இப்பவே கண்ண கட்டுது...!
    நல்லா இருக்கு..! நண்பரே...!/

    என்னான்னு ஒன்னும் புரியலையே நண்பரே...

    பதிலளிநீக்கு
  22. /butterfly Surya கூறியது...
    அருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.

    பாலைவமணலிலே!
    புழுதிபறக்கும் அனலிலும்
    உறையவைக்கும் குளிரிலும்
    ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
    கோடையென்ன! வாடையென்ன!//// அருமை..

    FYI நானும் கராமாவில் நாலு வருடம் இருந்தவன் தான்.//


    ஓ அப்படியா.. முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி வண்ணத்துப்பூசியான சூர்யாவே...

    தொடர்ந்துவாருங்கள்...

    பதிலளிநீக்கு
  23. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_10.html/


    என் பிரியமன சகோதரா.. என்னை வலைப்பூவில் அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி, இத்தோடு இரண்டாம் முறையாக அதுவும் சகோவினால் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி..

    மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  24. /அண்ணாமலையான் கூறியது...
    "பாலைவமணலிலே! "
    ஒரு எழுத்து விட்டுருக்கு சேத்துருங்க அல்லது ஒரு எழுத்து எடுத்துடுங்க. ஓட்டு போட்டாச்சு/

    அதன்படியே செய்தாச்சு மிக்க நன்றி. கருத்தும் ஓட்டும் போட்டமைக்குமிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  25. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_10.html//


    மன்னிக்கவும் வலைப்பூவென்று வந்துவிட்டது....வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.. பிரியமான சகோதரா

    பதிலளிநீக்கு
  26. /ராஜவம்சம் கூறியது...
    அது எப்படிங்க அனுபவமே இல்லாமல் எங்கள் அனுபவத்தை அனுபவிச்சமாதிரி அழக எழுதிறிகீங்க.

    (கொழப்பிட்டேனோ)

    சூ...........................ப்பர்/

    கஷ்டங்களை அனுபவிக்கவேண்டுமென்பதில்லை இதை பார்க்கும்போதும் கேட்கும்போதும் மனம் உணர்கிறது அதுவாகவே மாறி.. அதான் அப்படியே எழுதினேன் ..

    கரெக்ட்தானே ராஜவம்சம்..

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  27. /SUFFIX கூறியது...
    தொகுத்து அளித்த விதம் அருமை, வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது