நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதுவும் நடக்கலாம்

அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்

காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்

அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்

பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்

அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்

அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி

அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி

அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்

சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்

எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி

எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை

இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

  1. சோகத்தை கவிதையாய்! சகோதரி, மனம் கஷ்டமாயிருக்கிறது படித்து முடித்தபின்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  2. உங்க வோட்டையும் போடுங்க...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  3. //எப்போதும் எதுவும் நடக்கும்
    என்பதே இயற்க்கை//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். கவிதை நன்று! :)

    பதிலளிநீக்கு
  4. இயற்கைக்கு முன்பு அறிவியல் கண்டுபிடிப்புக்கள் எல்லாமே தூசுதான் தோழி.பஞ்ச பூதங்களை அடக்கும் சக்தி கடவுளைத்தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.

    பதிலளிநீக்கு
  5. இயற்கை செய்யும் சதியுமுண்டு
    சிலசெயற்கை வியாதிகளாலும் நடப்பதுண்டு..

    அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  6. அதிரையில ஒரு கவிப்பதிவுலகமே இருக்கும்போல...

    பதிலளிநீக்கு
  7. எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
    ஏங்கி அழுதே மனம்குமுறி
    //

    எனவே நீ வாழாதே
    என்றும் பாதை தவறி....
    உன் பாதை தவறி

    இப்பிடி கூட இந்தக் கவிதைய முடிக்கலாம்ல... :-)

    பதிலளிநீக்கு
  8. ஐஈஈஈஈஇ...

    உங்களுடைய வார்ப்புறு (template) முதன் முதலில் நான் வைத்திருந்தது..

    எனக்கு மிகவும் பிடித்தது.. :-)

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருக்கு.. தொடர்ந்து வர்றேன்..

    உங்க்ள தொடர ஆரம்பிச்சுட்டேங்கோவ்.. பாத்து எழுதுங்க.. :-)

    பதிலளிநீக்கு
  10. /பிரபாகர் கூறியது...
    சோகத்தை கவிதையாய்! சகோதரி, மனம் கஷ்டமாயிருக்கிறது படித்து முடித்தபின்.

    பிரபாகர்./

    மிக்க நன்றி பிரபாகரண்ணா..


    /பிரபாகர் கூறியது...
    உங்க வோட்டையும் போடுங்க.../

    பிரபாகர்.

    அண்ணா யாருக்கு ஓட்டு போட உங்களுக்கா எனக்கா.புரியலண்ணா,,

    பதிலளிநீக்கு
  11. கவிதை நன்று என்று சொல்ல தடை விதிக்கிறது அதில் வழிந்தோடும் சோகம். தக்தீர் என்றாலும் ஜீரணிப்பது கடினம்தானே.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது