நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வசமானது மனதுசின்னகுயிலின் கானம்
செவியை சிறைப்படுத்தியதுபோல்

சில்லென்றகாற்று செந்தூரமேனியை
சிலிர்ப்பாய் தழுவியதுபோல்

தேன்துளிகள் தெளித்து செவ்வகஇதழை
நனைத்ததுபோல்

சிறைபிடித்த கைகளுக்குள்
சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்

மயக்கம்தந்த விழிகளுக்குள்
மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்

உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய

கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்

வருடிவருடி வார்த்தையால் நீயும்வசபடுத்த
வசம்புக்குழைத்து தேனில் தந்ததுபோல்
வசமாய் காதலும் உன்வசமாகிப்போனது...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

13 கருத்துகள்:

 1. எங்கள் மனமும் கவிதையின் வசமாகிப்போனது.

  நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 2. //சிறைபிடித்த கைகளுக்குள்
  சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்

  மயக்கம்தந்த விழிகளுக்குள்
  மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்

  உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
  ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய

  கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
  இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்//

  ரொம்பவே ரசித்தேன் இந்த வரிகளை.நீங்களும் உங்கள் கவிதையால் எங்களை வருடி கொண்டிருக்கீர்கள் தோழி! கவி மிக அழகு!!!

  பதிலளிநீக்கு
 3. //கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
  இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்
  //

  நல்ல கவிதை மலிக்கா..

  பதிலளிநீக்கு
 4. செவ்வக இதழ் மிக அழகான, இதுவரை நான் கேட்டிராத வார்த்தை

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. சின்னகுயிலின் கானம் poola intha kavikulin kanam manathai mayilirakal varudiyathu!

  Trichy Syed

  பதிலளிநீக்கு
 6. S.A. நவாஸுதீன் கூறியது...
  எங்கள் மனமும் கவிதையின் வசமாகிப்போனது.

  நல்லா இருக்கு/

  மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  /sarusriraj கூறியது...
  மலிக்கா மிகவும் அருமை/

  நன்றி சாருக்கா..

  பதிலளிநீக்கு
 7. /வானம்பாடிகள் கூறியது...
  நல்லாருக்கும்மா. வழக்கம்போல்./

  ரொம்ப சந்தோஷம் வானம்பாடிகள்..  /மலர்வனம் கூறியது...
  சின்னகுயிலின் கானம் poola intha kavikulin kanam manathai mayilirakal varudiyathu!

  Trichy Syed/

  மிகவும் மகிழ்ச்சி மலர்வனமான சகோதரர் திருச்சி சையத்..

  பதிலளிநீக்கு
 8. /பூங்குன்றன்.வே கூறியது...
  ரொம்பவே ரசித்தேன் இந்த வரிகளை.நீங்களும் உங்கள் கவிதையால் எங்களை வருடி கொண்டிருக்கீர்கள் தோழி! கவி மிக அழகு!!!/

  ரசித்து வாசித்தமைக்கும் மிகவும் மகிழ்ச்சி தோழமையே...

  பதிலளிநீக்கு
 9. /ஊடகன் கூறியது...
  ரொம்ப நல்லாயிருக்குங்க...../

  வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஊடகன்...

  /புலவன் புலிகேசி கூறியது...
  //கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
  இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்
  //

  நல்ல கவிதை மலிக்கா../

  மிக்க நன்றி புலிகேசி..

  பதிலளிநீக்கு
 10. /கவிதை(கள்) கூறியது...
  செவ்வக இதழ் மிக அழகான, இதுவரை நான் கேட்டிராத வார்த்தை

  வாழ்த்துக்கள்

  விஜய்/

  தாங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு சகோதரரே. நன்றி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது